9/11/2016

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி, முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாயும் மகளும் சனிக்கிழமை (10) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்களே இக்கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 commentaires :

Anonymous said...

realy sad news

Post a Comment