9/01/2016

ஓராயிரம் இணையத் தளங்களை போல் "உண்மைகள்" பிழைப்புவாத இணையத்தளமல்ல.

Thayagam

அண்மையில் "லண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவிழா பகிஷ்கரிக்கப்படுகின்றது? "என்னும்தலைப்பில் எமது இணைய தளத்தில் செய்தியொன்று வெளியாகி இருந்தது.

அதில் குறிப்பிட்ட விடயங்களில் எதுவும் உண்மைக்கு மாறானது என இதுவரை யாரும் மறுத்துரைக்கவில்லை. அச்செய்தியை வெளியிடும் போது அச்செய்தியின் மையப்பொருளான பவளவிழா மலர் தலைப்பில் "சாதிபாராட்டும்" சொல்லாடல் பற்றிய விடயங்களையே பிரசுரித்தோம். தவிர ஏனைய அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அல்லது சம்பந்தப்படக்கூடிய விடயங்கள் என  கருதிய இரு விடயங்களை நாம் பிரசுரிப்பதை தவிர்த்தோம்.

அதாவது பத்மநாபனுடைய தற்கொலை முனைப்பு,அவரது மகளுடைய திருமணவிடயம் போன்றவற்றை நாம் வெளியிடவில்லை. இவையெல்லாம் மலர் தொகுப்பாளர்களில் ஒருவரான ஓவியர் கிருஸ்ணராஜா அனுப்பிய தகவல்களை சோபாசக்தி தனது முகநூலில்  பதிவிட்டபின்பே  பகிரங்கமாகமானது.

இந்த நிலையில் தாயகம் இணையதளம் பத்மநாதபனுக்காக கொடுக்கு கட்டிக்கொண்டு களமிறங்கிய சாதியவாதி அன்புலிங்கனுக்கு களம் கொடுத்ததன் ஊடானாக தனக்கே களங்கத்தை தேடிக்கொண்டுள்ளது.

தாயகத்தில் களமிறங்கிய வேகத்தில் அன்புலிங்கன்" / “உண்மைகள்” எனும் இதழ் பல வேளைகளில் “பொய்களை” விநியோகித்து வருவது. இதனது பதிவுகளில் இந்தத் தகவலைக் காணலாம். /"  என்று எடுத்த எடுப்பில் சேறடித்து விட்டு சென்றுள்ளார்.ஆனால் அவர் இந்த செய்தியில் எங்கே பொய் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து பேசவில்லை. அத்தோடு எப்போது எந்த செய்தியில் இதுவரை பொய்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என வரிசைப்படுத்தவில்லை.

'" “பொய்களை” விநியோகித்து வருவது"' என்கின்ற வார்த்தை பிரயோகங்கள் எங்களை ஊடக வியாபாரிகளாக சித்தரிக்கும் உள்நோக்கம் கொண்டது.  நாம் மேலே குறிப்பிட்டுள்ளதை போல "செய்திகளை விநியோகிப்பதற்கு"   ஓராயிரம் இணையத் தளங்களை போல் "உண்மைகள்"  பிழைப்புவாத இணையத்தளமல்ல. யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் பல்லாயிரம் பொய்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் விடயங்கள் சார்ந்த உண்மைகளை உரத்துச்சொல்லும் ஒரே தளமாகும்.
எனவே "தாயகம்"தனது பொறுப்புணர்ந்து எமது உண்மைகள் இணையத்தளம் மீதான சேறடிப்புக்கு உரிய தன்னிலை விளக்கத்தை அளிப்பது அதன் கடமையாகும்.





2 commentaires :

Anonymous said...

இந்தக் குறிப்பில் “யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் பல்லாயிரம் பொய்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் விடயங்கள் சார்ந்த உண்மைகளை உரத்துச்சொல்லும் ஒரே தளமாகும்.” ஓர் அரசியல் குறிப்பில் மாகாணம் நல்லது, பிற மாகாணம் கெட்டது சொல்லுதல் “உண்மைகள்” அறிவரி வகுப்புக்குப் போதல் என்பதின் உண்மை. எமது எழுத்துகள் பிரிவுகளை நக்குதல் என்பதே கொடூரம்.

Anonymous said...

“அறிவரி” என்பதல்ல “அரிவரி” என மாற்றப்படவேண்டும்.

Post a Comment