9/12/2016

பெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-144 தடை உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது கலவரகாரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெங்களூரில் நடந்த கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்தனர்.

சித்தராமையா வீடு மீது கல்வீச்சு


தமிழகம் மற்றும் கர்நாடக இடையே காவிரி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் பெங்களூரில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மைசூரில் உள்ள வீடு மீது கலவரகாரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவர் பலி


இந்நிலையில் பெங்களூரில் கலவரகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட மகடி பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். பெங்களூரில் நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்து அம்மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.


நயன்தரஹள்ளி பகுதியில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவனத்தை சேர்ந்த, ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 லாரிகளும் எரிக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகா தலைநகர் பெங்களூரூவில் இன்று வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக வாகனங்கள் , நிறுவனங்கள மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  அங்கு சட்டம்,ஒழுங்கும் சீர்கெட்டு, பதட்டம் ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக பெங்களூரூ நகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

0 commentaires :

Post a Comment