9/04/2016

இது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி

Résultat de recherche d'images pour "G20 2016 obama"பீஜிங்: ஜி20 மாநாட்டிற்காக ஒபாமா சீனா வந்திறங்கிய போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இது எங்கள் நாடு என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பீஜிங்: ஜி20 மாநாட்டிற்காக ஒபாமா சீனா வந்திறங்கிய போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இது எங்கள் நாடு என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் ஜி20 மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வந்த ஒபாமாவை, அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி பென் ரைஸ் ஆகியோர் கூட நெருங்க முடியவில்லை.

முன்னதாக, அமெரிக்க அதிபருடன் வந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள், விமான நிலையத்தில், ஒபாமாவை நெருங்க முயன்றனர். ஆனால், சீன பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்க அதிகாரி ஒருவர், சீன அதிகாரிகளிடம் வந்திருப்பது அமெரிக்க விமானம் எனவும், அதில் வந்தவர் அமெரிக்க அதிபர் எனவும் கூறினார். இதனையடுத்து சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இது எங்கள் நாடு. இது எங்களது விமான நிலையம் என ஆங்கிலத்தில் கத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 commentaires :

Post a Comment