இந் நிகழ்வில் விஷேட பிரதம அதிதிகளாக மட்டக்களப்பின் பல்சீரமைப்பு நிபுணத்துவரும் சமூக நலன் விரும்பியுமான வைத்திய நிபுணர் கதிரேசப்பிள்ளை மேகநாதன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான என்.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சுவீஸின் பிரபல திருக்கோணேஸ்வரா நடன ஆசிரியை திருமதி மதிவதனி அவர்களின் மாணவிகளின் பரதநாட்டியம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
அத்தோடு சுவீஸ் உதயத்தின் இளையோர் அமைப்பின் பொது அறிவுப்போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றதுடன் சுவீஸ் ரஞ்சனின் கரோக்கி இசை நிகழ்ச்சி சிறுவர்களின் நடனம் அதிஷ்டசாலிகள் தெரிவு ஏலவிற்பனை என்பன இடம் பெற்றதுடன் மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டதுடன்.
இந்நிகழ்விலே சுவீஸ் உதயத்தின் பொதுச்சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக உதயத்தின் நிருவாகம் விரிவாக்கம் செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அதே வேளை இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட வர்த்தகர்கள் மற்றும் பெரும் உள்ளம் படைத்தோர் அனைவருக்கும் சுவீஸ் உதயம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது
0 commentaires :
Post a Comment