9/30/2016

சார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு

  காஷ்மீரின் யூரி தாக்குதலை கண்டிக்கும் விதமாக இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அறிவித்தன.
சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இவர்களை சமாதானப்படுத்தி சார்க் மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், பாகிஸ்தானில் மாநாடு நடத்தும் சூழ்நிலை இல்லை எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகப்படுத்தி உள்ளது. சார்க் அமைப்பில் உள்ள 5 நாடுகள் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், சார்க் மாநாடு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சார்க் மாநாடு நடக்கும், இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்.,1) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்

 டக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்புவதைப் பெற்றுக்கொடுக்க முடியாது. அவர் விரும்பும் தமிழீழமோ சமஷ்டி முறையிலான ஆட்சியையோ, புதிய அரசியலமைப்பில் உருவாக்கிவிட முடியாது” என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார். 
இவ்வாறானவர்களின் கருத்துக்களைக் கண்டு அஞ்சி, கலவரமடைய வேண்டாமென, தெற்கு வாழ் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகக் கூறிய அமைச்சர், புதிய அரசியலமைப்புக்கான அங்கிகாரத்தைப் பெற, மக்களிடமே வரவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார். 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 
“எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது, சிறுபிள்ளைத் தனமானது. ஒரு முதலமைச்சராக இருக்கவேண்டியவர் தெரிவிக்கக்கூடிய பொறுப்பான கருத்தல்ல அது.  ஜனாதிபதியின் தலைமையில், இந்நாட்டின் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதானது, தெற்கில் இனவாத அரசியலைப் பயன்படுத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும். அரசியலமைப்புச் சீர்திருத்தமானது, இன்னமும் உருவாக்கப்படவில்லை.
அதற்கு நீண்டதொரு படிமுறையொன்று உள்ளது. அதனைப் பிரயோகிக்காமல், அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, பிரதமரோ அல்லது நானோ விரும்பினாற்போல், அரசியலமைப்பொன்றை உருவாக்கிவிட முடியாது. சமஷ்டிக் கோரிக்கையோ, தமிழீழக் கோரிக்கை கொண்டோ, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், இவ்விரண்டையும் நாங்கள் நீக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்போம். எவ்வாறாயினும், அரசியலமைப்பு விடயத்தின் இறுதியில், மக்கள் தீர்ப்பெற்றதொன்று உண்டு. அது, மக்களின் அபிலாஷைப்படியே நிறைவேற்றப்படும். அதனால், இவ்வாறானவர்களின் கருத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. 
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இரண்டு பிளவுபட்ட கருத்துநிலை காணப்படுகின்றது. ஒரு தரப்பு, நடுநிலையுடன், நாட்டின் நிலைவரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் நடுநிலையுடன் செயற்படுகின்றது. மற்றைய தரப்பு, பிரபாகரனின் தமிழீழம் என்ற இனவாதக் கருத்தினைக் கொண்டு செயற்படுகின்றது. விக்னேஸ்வரனின் கருத்தானது, இரண்டாந்தரப்பினரை மாத்திரமே திருப்திப்படுத்தும். விக்னேஸ்வரனுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கட்சி என்ற வகையில் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்”   என்றார். 
»»  (மேலும்)

'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’

டக்கு - கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி ஏற்றுக்கொண்டிருந்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது, உண்மைக்குப் புறம்பானது.
தலைவர் அஷ்ரப், ஒருபோதும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பது, அவருடன் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பயணத்தில் ஒன்றாக பயணித்த எனக்குத் தெட்டத் தெளிவாக தெரியும்” என, மு.கா.வின் ஆரம்பகால உறுப்பினரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “வடக்கு - கிழக்கு மாகாணங்கள், யாருடைய அனுமதியும் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் மற்றும் பலாத்காரத்தினால், இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியின்றி, இரவோடு இரவாக இணைக்கப்பட்ட ஒன்றாகும். ‘இணைந்த வடகிழக்கை பிரிப்பதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை.
வடகிழக்கை பிரிக்கவே முடியாது’ என்ற நிலைப்பாடும் சூழலும் நிலவிய போதிலும், வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு, தனியான அதிகாரமுள்ள ஒரு முஸ்லிம் மாகாணம் வேண்டும் என்ற கோஷத்தை​யே, தலைவர் அஷ்ரப் முன்வைத்தார். 
அதில், கிழக்கிலே உள்ள முஸ்லிம் பிரதேசங்கள், வடக்கிலே உள்ள மன்னார் முசலி உள்ளிட்ட பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டு தனியான அதிகாரமுள்ள ஒரு முஸ்லிம் மாகாணமாகவே அது அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு, முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில், இணைந்த வடகிழக்கில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார். 
தலைவர் அஷ்ரபுடன் 1989ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் இருந்தேன். 1987ஆம் ஆண்டு தொடக்கம், நாம் இருவரும் மாகாண சபையிலும், வடகிழக்கு பிரச்சினை தொடர்பான சகல பேச்சுக்களிலும் கலந்து கொண்டுள்ளோம். ஆகவே, இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு அதிகாரமுள்ள தனி முஸ்லிம் மாகாணத்தை ஏற்றுக்கொள்கின்ற போது மாத்திரமே, இணைந்த வடகிழக்குக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்தோம்.
தனி முஸ்லிம் மாகாணத்துக்கு தமிழ்த் தரப்பு ஆதரவளிக்குமானால், இணைந்த வடகிழக்கு தொடர்பான நிலைப்பாட்டுக்கு தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார். மாறாக, முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் இல்லாமல் ஒருபோதும் வடகிழக்கு இணைப்பை, தலைவர் அஷ்ரப் ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.  
»»  (மேலும்)

9/29/2016

யாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா

 

யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் அரசியல் கலாசார விழா எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

1. புகைப்படக் கண்காட்சி - இனவாதம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிரான இரு புகைப்படக் காட்சிகள் உள்ளடக்கம்.


2. கார்ட்டூன் - கார்ட்டூன் காட்சிகள்

3. சம உரிமை இயக்கம் நடந்து வந்த பாதை – காட்சிகள்

4. திரைப்பட விழா – சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட சர்வதேச திரைப்படங்கள் உள்ளடக்கம்

5. கவியரங்கம் – சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகள் பற்றிய உரையாடல். ஆண்- பெண் கவிஞர்களின் பங்கேற்றலுடன் நடைபெறும்

6. யுத்தமும் சினிமாவும் பற்றிய உரையாடல் சபை – சினிமாத்துறையை சார்ந்தவர்களின் பங்கேற்புடன் நடைபெறும்.

7. இசை மாலை – தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இசை நிகழ்ச்சி.
»»  (மேலும்)

9/28/2016

இருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து போன திலீபனின் படத்தை வைத்து நீலீர் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

காலிழந்து கையிழந்து ஊனமாக உழைக்க வழியின்றி புகலிட தமிழர்களிடத்தில் கையேந்தும் முன்னாள் போராளிகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளமெங்கும் நிறைந்து காணப்படுகின்றது. நாளுக்கு நாள் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொகை அதிகரிக்கின்றது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 2000 மேற்பட்ட மாற்று திறனாலிகள், அனாதைகள் விதவைகள் முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களைப் பற்றி ஒரு கணம் சிந்திக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் எமது தலைவர்கள் .இவர்களின் வாழ்வுக்கு ஏதும்  உதவி செய்ய   வக்கற்ற தங்கள் நிலையை மறைக்க
 1987ல் இறந்து போன திலீபனின் படத்தை வைத்து நீலீர் கண்ணீர் வடிக்கின்றார்கள். 
»»  (மேலும்)

நல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்பேன் என்று சொன்ன சந்திரிகா எங்கே

Résultat d’images pour hela urumayaமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடிப்போம் இது பௌத்த நாடு - ஞானசார தேரர் எச்சரிக்கை !!
தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியின் போது, வடக்கில் தொடரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், புதிதாக முளைத்துவரும் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
சிங்கள மக்களுக்கு சண்டித்தனம் காட்டினால் தமிழர்கள் அனைவரும் பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்குச் செல்ல தயாராக வேண்டும் என்பதை இங்கு கூறிவைக்க வேண்டும்.
இந்த நிலமையை உருவாக்க விரும்புகின்றீர்களா ? என்று கேட்க விரும்புகின்றோம். சிங்கள மக்களின் பொறுமையின் இறுதி விளிம்பை தட்டிப்பார்க்கும் பரிசோதனையை செய்ய வேண்டாமாம்..
ஆட்சியிலுள்ளவர்கள் இதுதொடர்பில் மௌனம் காத்திருந்தாலும் இந்த நாட்டிற்கும், சிங்கள இனத்திற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அவமானத்தை பௌத்த சமூகத்தின் இளைய தலைமுறையினர் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறான செயல்களை கண்டு ஏன் இன்னும் மௌனமாக உள்ளீர்கள் என சிங்கள இளைஞர்கள் எங்களிடம் வினவுகின்றனர். ஆனாலும் நாங்கள் மௌனமாக இல்லை.
குளமாக இருந்தாலும், கிணறாக இருந்தாலும் அது கலங்கியிருக்கும் போது அதன் ஆழம் தெரியாது. அதேபோலத்தான் நாம், என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுப்பர் ஞானசார தேரர் தெரிவிக்கிறார்..
கொழும்பு கிருலப்பனையில் தமது அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களம் தெரியாதவர்களுக்கு சிங்களத்தை கற்பிக்க ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர்.
அடிபணிந்து நசிந்து போக சிங்கள இளைஞர்கள் தயாரில்லை. சிங்கள இளைஞர்கள் இனத்தின் பெயரினால் ஆயுதங்களை கையில் எடுத்ததால், அதற்கு யார் பொறுப்பேற்பது ?
இப்படி இவர் கூறியுள்ளார்.. சிங்கள நாய்களுக்கு மட்டுமே ஆயுதம் எடுக்க தெரியும்.. நாங்கள் எடுத்து காட்டியது தெரியாது போல..
தமிழர்களை அடுத்த ஆயுத போருக்கு சிங்களமும் சர்வதேசமும் சேர்ந்து தள்ள போகிறார்கள் போல..
»»  (மேலும்)

வீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்

"சக்தி வளம் பற்றி கூறவந்தோம்..." எனும் தலைப்பில் நடைபெற்ற வீதி நாடக போட்டியில் களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். தேசிய மட்டத்திலும் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள். - .
»»  (மேலும்)

நல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி

Résultat d’images pour presidente sri lankaபிரபல பியர் இறக்குமதி நிறுவனம் ஒன்றுக்கு பியர் பானத்தை இறக்குமதி செய்ய சுமார் 600 கோடி ரூபா வரை சுங்கத் தீர்வை விலக்களித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 14 பேருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதியன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட தலைமையிலான‌ இருவர் கொண்ட நீதிபதிகள் குழு இன்று  உத்தரவு பிற‌ப்பித்தது.
பிரபல பியர் பான நிறுவனம் ஒன்றுக்கு நான்கு மாத சுங்கத் தீர்வையில் சலுகைகள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த தீர்மானத்தை உடன் ரத்து செய்து சலுகை தொகையான சுமார் 600 கோடி ரூபாவை பொது மக்கள் நலன் புரி நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுத்த  உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான விசாரணைகள் இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்குலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர், ரத்கம சுமங்கள தேரர், பியகம சிசீல தேரர்,உடுகோமனியே ரதனவங்ஷ தேரர் ஆகிய நான்கு தேரர்கள் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல்கொட, ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் மீளவும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

.
»»  (மேலும்)

9/27/2016

பேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீணாக்காத நல்ல மனிதர் * .சி.மௌனகுரு

நம்பிக்கைத் துரோகம் மலிந்த இக்காலச் சூழலில் மனிதர்மீது வைக்கும் நம்பிக்கை வீணல்ல என்று எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அமைதியான மனிதரை வாழ்த்துவதிலும்,அவர் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதிலும் நான் பெரு மகிழ்வெய்துகிறேன்


கருணை யோகன் என்ற புனைபெயரில் 1960 களில் சின்ன இலக்கியக் கூட்டங்களில் பால்வடியும் முகத்துடன் கவிதை சொன்ன செ.யோகராசா, பேராசிரியர் யோகராசா என்ற பெயரில் இன்று இலக்கிய ஆய்வரங்குகளில் முதிர்ந்த முகத்துடன் கலந்து கொள்கிறார்.
அவர் இல்லாமல் கிழக்கில் இலக்கியக் கூட்டங்களில்லை,அவர் முன்னுரை அவர் முன்னுரை இல்லாமல் புனைகதை நூல்கள் இல்லை என்ற ஒரு நிலையை இன்று அவர் உருவாக்கியுள்ளார்
1960 களில் கருணையோகன் 2000 நடுப்பகுதிகளில் பேராசிரியர்
இந்த வளர்ச்சிக்குப் பின்னனால் ஒரு கடும் உழைப்பும் வரலாறும் உள்ளது
அக்கடும் உழைப்பை நாம் இன்று கௌரவிக்கிறோம்
நண்பர் யோகராசாவை நான் அறிந்தது 1970 களில்.கொழும்புப்பலகலைக் கழகத்தில்
என் துணைவியார் சித்திரலேகாவின் ஒருசாலை மாணாக்கர் அவர்.
அமைதியும்,பரந்த வாசிப்புத் திறனும் கொண்டவர் என்று அவரை எனக்கு சித்திரா அறிமுகம் செய்துள்ளார்
இருவரும் பேராசிரியர் கைலாசபதியின் விருப்பத்திற்குரிய மாணவர்கள்.
ஆட்களின் குணாதிசயங்கள் பற்றி கிண்டலாக நெற்றியடிக் கருத்துக் கூறுவது கைலாசபதியின் குணாம்சங்களில் ஒன்று
யோகராசா பற்றி ஒரு நாள் கைலாசபதி பின் வருமாறு கூறினார்
“எங்காவது ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களை அழைந்தபடி,அவற்றைத் தட்டிப்பார்த்தபடி மசிந்துகொண்டு ஒரு ஆள் நிற்கும் அவர்தான் யோகராசா
இன்றுவரை யோகராசா ஒரு புத்தகக் காதலர்தான்
.புதிய நூல்களை அறிந்து கொள்வதும்,தேடிச்செல்வதுமான அவரது இயல்பு
இந்த இயல்பு அவர் ஓய்வு பெற்ற பின்னும் மாறவில்லை
சில குணாதிசயங்கள் உடன் பிறந்தவை
கைலாசபதியின் மாணவராயிருந்த போதும் அன்றைய முற்போக்கு இலக்கிய முகாமுக்குள் அவர் சென்றுவிடவில்லை
இற்றைவரை கவனமாக அதனைப் பேணிவருகிறார்
பேராசிரியர் யோகராசாவின் வாழ்வு மிகச்சுவையானது.
யாழ்ப்பாணத்தில் கரணவாய் எனும் பாரம்பரிய சிற்றூர் ஒன்றில் பிறந்த இவர், கொழும்புப் பலகலைக் கழகத்தில் தன்பட்டப் படிப்பை முடித்தபின்னர். மகோவில் அஞ்சலகம் ஒன்றில் தபால் அதிபராகக் கடமைபுரிகிறார்
யாழ்ப்பாணம் இருந்து நான் குடும்பத்துடன் மட்டக்களப்புக்கு ரெயினில் வரும் காலங்களில் (1975) மாகோவில் இறங்கி அவருடன் நின்று வருவது வழமை
மாகோ அவரால் எனக்கு அறிமுகமானது
பின்னர் அவர் ஆசிரியராக மலைநாட்டில் கற்பித்துக்கொண்டு இருந்தார்
நாம் யாழ்ப்பாணப் ப்லகலைக் கழகத்தில் கற்பித்த காலங்களில் அங்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கீழ் முதுகலைமானி மாணவராக இருந்தார்
இதனால் 1970 களின் பிற்பகுதியிலிருந்து அவருடனான தொடர்பு தொடர்ச்சியாக இருந்தது
1991ல்; நான் கிழக்குப் பலகலைக் கழகம் வந்தேன். 1992 இல் என்மீது கலைப்பிடாதிபதி பொறுப்புச் சுமத்தப்பட்டது
.கலைப்பீடம் ஆரம்பிக்கப்பட்டபோது அதனை நடத்த சிரேஸ்ட விரிவுரையாளர்கள் இல்லை.பாடத்திட்டங்கள் போட வேண்டிய நிலை விரிவுரையாளர் பற்றாக்குறை .நாட்டு நிலை காரணமாக கிழக்குக்கு வரப் பலர் த்யக்கம் காட்டினர்.
கிழக்கிலே அதற்கானா ஆட்பலமும் இருக்கவில்லை
இந்நிலையில் என் வேண்டுகோளை ஏற்றுத் துணிந்துவந்தனர் பலர்
அதில் அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியிருந்ததாயினும் எனது வேண்டுக்கோளும் இருந்தது
அவர்கள் மீது நான் வைத்த எனது நம்பிக்கையும் இருந்தது
இதனால் .வடக்கிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறேன் என்ற அனாமதேயக்கடிதங்களையும் நான் எதிர் நோக்க வந்தது
அனைவரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தோம்.
வசதியின்மை,
மாலை ஆறுமணிக்குள் ஊரடங்கும் சூழல்.
இராணுவக் கெடுபிடி
மின்சாரத் தடைகள்
தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசல்
இன்னும் பல உள்ளூர்க் கெடுபிடிகள்.
இத்தனைக்கும் மத்தியில் என் அருகிலிருந்து பணிபுரிந்தனர் இவர்கள்
அனைத்துக்கும் அருகிலிருந்து தோள் கொடுத்தவர் நண்பர் யோகராசா
மட்டக்களப்புக்கு வந்த யோகராசா என் வீட்டில்தான் தங்கினார். அவர் குடும்பம் இங்கு வரும்வரைஎமது வீட்டிலேதான் அவருக்குச் சாப்பாடு
.ஆறு மணிக்கு ஊரடங்கிவிடுமாதலால் வீட்டில் அதிக நேரம் இருக்கவும் உரையாடவும் அதிக வாய்ப்புகள் கிடைத்தன
அவரோடு நெருங்கவும் உரையாடவும்,அவர் குணாதிசயங்களை அறியவும் எனக்கு இது ஓர் சந்தர்ப்பமாயிற்று.
நான் இருந்த 9,கொலட் லேன் மிக முக்கியமான ஒரு இடம் அங்குதான் எனது அரங்க ஆய்வுகூடம் 2010 இலிருந்து இயங்கி வருகிறது
யாழ்ப்பானத்திலிருந்து கிழக்குப் பல்கலைக் கழகக் கலைப்பீடத்துக்குத் தெரிவாகிவந்த பல ஆண் விரிவுரையாளர்களும் பெண் விரிவுரையாளர்களும் முதலில் வந்து கால் வைக்கும் தளப் பிரதேசம் 9.கொலட் லேனில் அமைந்திருந்த எமது இல்லமே அதில் கால் பதித்து சிறிது காலம் இருந்த பின்னர் .அங்கிருந்துகொண்டுதான் பலர் வீடுதேடி பின் சென்றனர்.புது வாழ்வு கண்டனர்.
இராசியான வீடு என்பர் ப்லர்
.இதனைப் பலர் அறியார்
யோகராசா வரும்போது நானும்,என் மாமனாரும் மாமியுமே அவ்வீட்டில் இருந்தோம்.
முன் அறையை யோகராசாவுக்குக் கொடுத்தோம்
மாமனார் பி.வீ. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர்.1930 களில் இங்கு வந்து மட்டக்களப்பு மண்ணின் மைந்தனகவே மாறிவிட்டவர். மட்டக்கலப்புக் கலை இலக்கிய முயற்சிகளில் 1940 தொடக்கம் தீவிரமாக ஈடுபட்டவர்.பல தமிழ் அரிஞர்களோடு நெரடித் தொடர்புடையவர்
மட்டக்களப்பு பற்றி தேர்ந்த ஞானம் மிக்கவர்
.யோகராசாவும் வடமராட்சியைச் சேர்ந்தவர்.அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை நான் கேட்பேன்.யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை அவர்கள் கதைக்குள் வரும்
வயதுபோன,என் மாமனாருக்கு யோகரசா பெரும் பேச்சுத்துணையுமானார்.
எனக்கும் பேச்சுத் துணையானார்
.மட்டக்களப்பு பற்றிய பல தகவல்களை ஆரம்பகாலத்தில் யோகராசாவுக்கு வழங்கியர்கள் நானும் என் மாமனாரும் என்றே நான் நினைக்கிறேன்
யோகராசாவை நான் வித்துவான் கமலநாதனுக்கும்,சிவசுப்பிரமணியம் மாஸ்டருக்கும் இன்னும் சிலருக்கும் அறிமுகமும் செய்துவைத்தேன்
எங்கள் வீட்டுக்கு இவர்கள் இருவரும் அடிக்கடி வருபவர்கள்
ஏற்கனவே தேடல் எண்னம் கொண்ட யோகராசாவின் அடிமனதில் மட்டக்களப்பு பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணம் எழ எம் வீடும் தொடர்பும் ஒரு காரணமாயிற்று
ஒரு நாள் என்னை யோகராசா என்னைத் தான் திருமணம் செய்த மண்ராசிக்கு அழைத்துச் சென்றார்.மலை நாட்டின் கடும் குளிரினுள் அதிகாலைப் பொழுதில் நடுங்கிய படி மண்ராசியில் காலடி எடுத்துவைத்தமை ஞாபகம் வருகிறது.யொகரசாவின் மனைவி,மைத்துனிமார் அவர்கள் பிள்ளைகள் அறிமுகமானார்கள் குரு மாமா என்ற அன்பான அழைப்போடு என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள்
யோகராசாவின் மனைவி என்னத் தன் சொந்தச் சகோதரன் போல வரித்துக்கொண்டார் அக்குடும்ப உறவு இற்றை வரை நிலைக்கிறது
1992-1996 வரை கிழக்குப்பலகலைக் கழக கலைப்பிடத்தின் வரலாறு சுவையானதுடன்,சாகஸங்களும் நிறைந்தது
பாடத் திட்டமில்லை, நூல் நிலையம் இல்லை,வகுப்பறைகள் இல்லை,போதிய தளபாடங்கள் இல்லை,கட்டிடங்கள் இல்லை,வாகனங்கள்
இல்லை,
இல்லை,இல்லை ஒன்றுமேயில்லை
அன்று உதயா மோட்டோர்ஸ் என அழைக்கப்பட்ட 50 நியூ ரோட்டில் கல்முனை வீதியில்இருந்தஒரு கராஜில்தான் கலைப்பீடம் இருந்தது.
பல்கலைக் கழகம் என்பதைவிட உதயா மோட்டோர்ஸ் என்றால் அனைவருக்கும் தெரியும்
மண்தோண்டி,பாத்திபிடித்து ,வேலியமைத்துத் த்ண்ணீர் ஊற்றி கலைபீடம் எனும் சிறு செடியை நாங்கள் வளர்த்த காலங்கள் அவை
உடம்பிலே முட்காயங்கள் படிய இரத்தம் வழிய பாதை வெட்டி வழி சமைத்த காலங்கள் அவை
துணை நின்றோர் பலர். .முக்கியமானவர்களுள் ஒருவர் யோகராசா
எனக்கு யோகராச வலதுகரமாக இருந்தார்
பாடத்தயாரிப்பு விரிவுரைகள்,மாணவர்பிரச்சனைகளைத் தீர்த்தல்,வெளியோரைப் பல்கலைக் கழ்கத்துடன் இணைத்தல்,இலக்கியக் கூட்ட ஒழுங்குகள் செய்தல் என்பனவற்றில் யோகராசாவின் அளப்பரிய பங்கு பற்றி விரிவாக எழுத வேண்டும்.அவை பலருக்குத் தெரியாது
வெறும் கை கொண்டு முளம் போட்டோம்
கலைப்பீடாதிபதி என்ற வகையில் காலையில் எழும்போதே பிரச்சனைகள் காத்திருக்கும்.ஆலோசனை சொல்பவராக,உடன் வருபவராக,களத்தில் என்னோடு நிற்பவராக யோகராசா நிற்பார்
அவர் அருகிருப்பு ஒரு பலம் தரும்
இரைந்து பேசத் தெரியாத அவர் இரைந்து பேசும் மாணவர்களை,விரிவுரையாளர்களை பார்த்தபடி இருப்பார்.ஒன்றும் பேசார்.இடைக்கிடை மெதுவாகக் கருத்துரைப்பார்
அவை எனக்குப் பிரசனைகளைத் தீர்க்க உதவும்
பின்னர் சாவகாசமாக உரையாடுகையில் என் பேச்சுகள் செயல்கள் பற்றி தம் அபிப்பிராயங்களைத் தயக்கமில்லாது கூறுவார்.என்னில் அப்படியொரு நம்பிக்கை அவருக்க.
எனக்கு ஒரு மதியூக மந்திரிபோல அவர் இருந்தார். நான் அவ்ரோடு மன்னனாகச் செயற்படவில்லை
பிரச்சனையைத் தீர்க்கும் வழிகள் பல.அவற்றில் ஒன்று அமைதி காத்தல்
யோகராசாவின் வழி அமைதி காத்தல் வழியாகும்
அவர் அமைதி காத்தாலும் அவர் மனம் கொதிக்கும் மனம் என்பது எனக்குத் தெரியும்
ஓரிரு வார்த்தைகளில் அது புலப்படும்.அல்லது கிண்டலாக வெளிப்ப்டும்
கலைப் பீடாதிபதி வெளியூர் செல்கையில் தனக்குப் பதிலாக ஒருவரை நியமித்துச் செல்ல வேண்டும்.
நான் யோகராசசாவை நியமித்துச் செல்வேன்
அது ஒன்றுதான் அவருக்குப் பிடிக்காதது.மிகக் கஸ்டப்பட்டு என் தெண்டிப்புக்காக ஏற்றுக் கொள்வார்
அப்போது திருமலையில் தமிழ் அறிஞர் கனகசுந்தரம் பிள்ளை பற்றிய ஒரு விழாவுக்கு கலைப் பீடாதிபதின் என்ற வகையில் என்னை அழைத்திருந்தனர்.
நான் எனது பிரதிநிதியாக யோகராசாவை அனுப்பினேன்கிழக்கு மாகாண அறிஞர் பற்றிய அவரது தேடல் அன்றிலிருந்து ஆரம்பித்தது என எண்னுகிறேன்
இதனை அவரே என்னிடம் சொல்லியுள்ளார்.
இன்று அத்தேடல் விரிந்து பரந்து மட்டக்களப்பின் இலக்கியங்கள்,பண்பாடுகள் என்பனபற்றி துல்லியமான் தகவல்களை ஆதாரங்களோடு தரும் ஒரு ஆய்வாளராக அவரை மாற்றியுள்ளது
பின்னால் நானும் யோகராசாவும் இணைந்து பல வேலைகள் செய்தோம்
நாடகப்பட்டறைகள்,இலக்கியக் கூட்டங்கள் ஆராய்ச்சி மாநாடுகள்,கண்காட்சிகள்,கருத்தரங்குகள்,உலக நாடகதின விழாக்கள் என அவை பலவகைப்படும்
இத்தனைக்கும் நேரடி சாட்சி அவர்
1992,1993,1994,ஆகிய ஆண்டுகளில் நாம் தயாரித்த கண்னகி குளுர்த்தி ஆற்றுகை,புதியதொருவீடு நாடகம்,கொழும்பில் நாம் ஆற்றுகை செய்த மட்டக்கள்ப்புப் பண்பாட்டறிமுகம் என்பனவற்றுக்கு பாலசுகுமாருடன் இணைந்து பக்கபலமாக நின்று ஊக்கமளித்தவர் யோகராசா
1999,2000,2001,2005 ஆகிய ஆண்டுகளில் நாம் தயாரித்த இன்னிய அணி,இராவணேசன்,கிழக்கிசை,ஆகியவற்றிற்கு பாலசுகுமாருடனும் ஜெயசங்கருடனும் இனஈந்து எனக்கு உற்சாகம் தந்தவர்களுள் முக்கியமனவர் யோகராசா
என் செயற்பாடுகளை ரசித்தும் நட்பு பூர்வமாக என்னை விமர்சித்தும் என்றும் எனக்கு ஊக்கம் தரும் ஒரு பலம் அவர்
நான் ஓய்வு பெற்ற பின்னர் அவரிடம்தான் நுண்கலைத் துறை ஒப்ப்டைக்கப் பட்டது.
அடிக்கடிவந்து ஆலோசனைகள் பெற்றுச் செல்வார்.தன்னால் இயன்றவரை அத்துறையைச் சிலகாலம் ஒழுங்குடன் நடத்தினார்.என்னை அடிக்கடி அழைப்பார்.மாணவர்களூடன் ஊடாட விடுவார்.ஓய்வு பெறாத உணர்வை எனக்குள் என்றும் வைத்துக்கொள்ள வைத்தவர் அவர்
பின்னால் என்னைப் பற்றி ஒரு சிறு நூலையும் என்னைப்பற்றிய நாடகம் தவிர்ந்த பேட்டியினையும் எடுத்து நூலாக வெளியிட்டு என்னை கௌரவப் படுத்தினார்
அவரது ஆய்வுகள் பல நூலாக வெளிவந்துள்ளன.அவர் ஒர் தகவல் களஞ்சியம். எமக்கு எதாவது தகவல்கள் வைப்படின் அவரிடமிருந்து பெறலாம்
தகவல்களை வைத்து கோட்பாடாக மாற்றும் ரச வாதத்தை அவர் செய்திருப்பாராயின் அவர் ஆய்வுகள் இன்னும்ஆழமாகியிருக்கும்.
திட்டவட்டமான தீர்மானம் கூறுபவராக அவர் இருக்கவில்லை
.தவல்களே இல்லாமல் பம்மாத்துப்பண்ணும் தமிழ் பண்பாட்டுச் சூழலில் தகவல்களைத் தேடித் தொகுத்துத் தந்த பேராசிரியர் யோகராசா மிகப் பெரும் மதிப்புகுரியவராகின்றார்
நம்ம்பிக்கையோடு நான் அவரை இங்கு சிபார்சு செய்தேன்,நம்பிக்கையோடு நான் அவரை அழைத்தேன்.நம்பிக்கையோடு அவருடன் இணைந்து செயற்பட்டேன்
அந்த நம்பிக்கையை அவர் என்றும் வீணாக்கியது கிடையாது.
இதற்கான பல உதாரணங்களை நான் தர முடியும்
1970 களிலிருந்து அவரை அவதானித்துவந்துள்ளேன்.எந்த நிலையிலும் வாசிப்பைக்கைவிடாத புத்தகங்களைத் தேடிப்போகின்ற அவர் குணாம்சம் எனக்கு மிகப்பிடித்திருந்தது
அறிவுத் தேட்டம் மிகுந்த அவருக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இடம் கிடைத்தால் நன்றாயிருக்குமே என அன்று நான் எண்ணியதுண்டு
அவ்வெண்ணம் இங்கு சித்தித்தது.
தோற்றம் சிறிது.உரத்துப் பேசார். இவர் என்ன செய்வார் என என்னிணோர் பலர்.
ஆனால் நான் அவர் திறமையை நம்பினேன்.அத் திறமையில் பாரிய நம்பிக்கை வைத்திருந்தேன்
கட்டுரைகள் எழுதினார்.நூல்கள் எழுதினார்,நூல்கள் பதிப்பித்தார்.ஆராய்வு மாநாடுகளில் பங்கு கொண்டார்.இலக்கியக் கூட்டங்களில் பிரதான பேச்சாளரானார். சிரேஸ்டவிரிவுரையாளரானார்.தன் ஆராய்ச்சிகளை முன் வைத்து பேராசிரியர் தகுதியினையும் பெற்றுக் கொண்டார்.தமிழ்த்துறைத் தலைவரும் ஆனார்
அவர் திறமையில் அறிவில் நான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை
நேர்மையும் உண்மையும் நிறைந்த அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து மிக முக்கிய பொறுப்புக்களை அவருக்கு அளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவற்றை ஒருபோதும் அவர் துஸ்பிரயோகம் செய்ததில்லை.
இலக்கியங்களை வாசிக்கும் அவர் மனித மனங்களைப்பற்றி மிக நன்றாக அறிந்து வைத்திருந்தார்
என்னை நன்றாகப் புரிந்துகொண்ட மிகச் சிலர்களுள் முக்கியமானவர் யோகராசா.
புரிந்து கொண்டவர்களுடந்தான் மனம் விட்டுப் பேசலாம்
நான் மனம் விட்டுப் பேசும் சிலருள் அவரும் ஒருவர்
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்
நம்பிக்கைத் துரோகம் மலிந்த இக்காலச் சூழலில் மனிதர்மீது வைக்கும் நம்பிக்கை வீணல்ல என்று எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அமைதியான மனிதரை வாழ்த்துவதிலும்,அவர் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதிலும் நான் பெரு மகிழ்வெய்துகிறேன்
அவரைப் பிற்காலத்தில் இந்நிலைக்குக் கொண்டுவந்ததில் அவர் மனிவிக்கு மிகப் பெரும் பங்குண்டு.அவர் மனைவி திலகிக்கு எனது வாழ்த்துக்கள்.
சமகால உலகை அவருக்கு அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பவள் நல்ல வாசகியும் புத்தி சாலியுமான அவரது மகள் சுவஸ்திகா
அவளுக்கும் எனது வாழ்த்துக்கள்
»»  (மேலும்)

9/26/2016

மலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி

“தொழிலாளர்களுக்கு நிரந்தரமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காது, 2,500 ரூபாய் கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவாக மாற்றிய மனோ கணேசன், வி.இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோரின் கூட்டணியானது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்த கூட்டணியாகும்” என, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பத்தாவது மாநாடு, ஹட்டன் சாரதாஸ் மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
“பெருந்தோட்டத் தொழிலாளர்கள், உழைப்பதற்காக மட்டும் பிறந்த ஜென்மங்கள் என்றே பலரும் எண்ணுகின்றனர். தொடர்ந்தும் இவர்கள் ஒரே அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனில் இவர்களது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும். 
இந்த அவல வாழ்க்கையிலிருந்து விடுபவதா அல்லது தொடர்ந்தும் இதே சாக்கடையில் விழுந்து கிடப்பதா என்பதே தோட்டத்தொழிலாளர் முன் இன்று எழுந்துள்ள கேள்வியாக உள்ளது” என்றார்.
அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவரான வசந்த சமரசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட தீவிராமான போராட்டத்தின் காரணமாகவே, தனியார்துறை ஊழியர்களுக்கும் 2,500 ரூபாய் பெற்றுகொடுக்கப்பட்டது. இக்கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இந்நாட்டிலுள்ள தோட்டத்தொழிலாளர்கள், தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என முதலாளிமார் சம்மேளனம் நினைத்துக்கொண்டிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களை ஜடங்கள் என அவர்கள் நினைக்கின்றனர். இதனால்தான் 2500 ரூபாயை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது எனக் கூறினர். 
தனியார் துறையினருக்கு குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபாய் கொடுப்பனவை நிரந்தரமாக பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் நாடாளுமன்றதில் முன்னெடுக்கப்பட்டு வந்தபோது, மனோ கணேசன், வி.இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகிய மூவரும் இணைந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலைப் பிடித்து, அதனை 2 மாதங்களுக்கான கொடுப்பனவாக மாற்றினர். 
தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டி 2,500 ரூபாய் கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு மட்டுமான கொடுப்பனவாக மாற்றிய மேற்குறிப்பிடப்பட்ட மூவரின் கூட்டணி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்த கூட்டணியாகும்” என்றார்.


»»  (மேலும்)

.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளி வாய்க்கால் வரை’

தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின்  ‘ வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளி வாய்க்கால் வரை’

லங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டத்தோடு சுமார் 30 ஆண்டுகளாகப் பயணித்த ஆயுத வன்முறை பல வடுக்களை இன்னமும் சுமந்து செல்கிறது. கல்வியிலும், கலாச்சார விழுமியங்களிலும் தன்னை ஓர் உயர்ந்த சமூகமாக காட்டிக்கொள்ளும் இக் குழுமம், போராட்டத்தின் போக்கில் காணப்பட்ட ஜனநாயக விரோத, மக்கள் விரோத அம்சங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டித் தடுக்க ஏன் தவறியது? போரின் இறுதிக் காலத்தில் மரணத்தின் விளிம்பில் தத்தளித்த மக்களின் கோர நிலமைகள் குறித்து ஊடகங்கள் ஏன் மௌனித்தன?

ஆயுத வன்முறை என்பது மனித நேயம், மனித உரிமை போன்ற சர்வதேச விழுமியங்களை காலில் மிதித்து மீறிச் சென்றபோது அதன் விளைவுகள் குறித்து ஒரு சில ஊடகங்களே அவ்வப்போது எச்சரித்து வந்தன. ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் பலரும் மௌனித்த நிலையில், வெளிநாடுகளில் செயற்பட்ட ஒரு சில ஊடகங்களே குறிப்பாக சிறு சஞ்சிகைகளும், இணையத்தளங்களும், வானொலி சிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் துன்பங்களை பொது வெளியில் வைத்தன.

அவ்வாறான சிறு சஞ்சிகைகளில் ஒன்றான லண்டனில் வெளியான ‘தேசம்’ துணிச்சலோடு அச் செய்திகளை மக்கள் முன் எடுத்துச் சென்றது. ஓர் ஊடகம் என்ற வகையிலும், காலத்தின் கண்ணாடி என்ற வகையிலும் போரின் போக்கு மக்கள் மேல் சுமத்தி வரும் கொடுமைகள் குறித்த விபரங்களை அச்சமின்றி வெளியிட்டது.

தமிழ்த் தேசியம் வெற்றி கொள்வதாக பீத்தியபடி வன்முறை அரசியலை நியாயப்படுத்தி வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், இணையத்தளங்கள் போன்றன செய்திகளை நிறைத்து உண்மைகளை மறைத்து வந்த வேளையில் போரில் அவதியுறும் மக்களின் துன்பங்களையும், அவர்களைக் கவசமாக்கி நடத்தப்பட்ட தமிழ்த் தேசியவாதத்தின் கோர போலி முகத்தினையும், அவ்வப்போது கிடைத்த உண்மைத் தகவல்களை ‘தேசம்’ பதிவு செய்திருந்தது.

போரின் உண்மைத் தோற்றத்தினை அறிந்து கொள்வதற்கான உண்மைத் தகவல்களை மக்கள் அன்று புரிந்து கொள்வதற்குத் தவறியிருக்கலாம். ஆனால் போர் ஓய்வடைந்த பின்னரும் அம் மக்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்கள் மேலும் மேலும் விரிவடைந்து செல்கையில் போரின்போது ஆதிக்கம் செலுத்திய அதே தமிழ்த் தேசியவாதம் மீண்டும் தனது கோர முகத்தினை வெளிக்காட்டுகிறது.

மக்கள் எச்சரிக்கையோடு செயற்படாவிடில் இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாமல் போகலாம். கடந்த காலத்தை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவது இன்று அவசியமாக உள்ளது. அவ்வாறான முயற்சிக்கான ஓர் உந்துகோலே த. ஜெயபாலனின் ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற செய்தித் தொகுப்பு நூலாகும்.
»»  (மேலும்)

9/25/2016

இருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகுப்புப்பற்றிய, புரிதலும் பகிர்வும்



-அனார்-

// கொஞ்சம் சம்பிரதாயமாக
கொஞ்சம் இடைவெளியோடு
கொஞ்சம் விருப்புக் குறிகளோடு
கொஞ்சம் நடித்தபடி
கொஞ்சம் யாரோ போல
பழகுவதற்கு நாம் பழகலாம் //


இது தர்மினியின் தொகுப்பிலிருக்கின்ற கவிதை. தற்செயலான நிகழ்வுகளை பிரதிபலிப்பனவாக தர்மினியின் பல கவிதைகள் “இருள் மிதக்கும் பொய்கை“ தொகுப்பில் காணப்படுகின்றன.

இலங்கை தமிழ் இலக்கியத்தின் தீவிரப் படைப்பிலக்கியத் தளங்களில் ஈடுபடுகின்ற பெண்களது பங்களிப்பானது பல்வேறு காரணிகளால் முக்கியத்துவங்களை கொண்டமைந்துள்ளது. 80களில் எழுதிய பெண்களை முன்னோடிகளாகக்கொண்டு, 90களில் மிகப் புதிய எழுச்சியோடு தமிழ், முஸ்லீம் பெண்கள் கவிதைத் துறையில் வளர்ந்தனர்.

2000 ஆண்டுகளின் பின்னர் பெண்கள் தங்களின் பல்வேறு வகைமையான சுயம் சார்ந்த சிந்தனைப் போக்குகளை கையாண்டனர். பெண்ணியம், பெண் அரசியல், பெண் உடல் அரசியல் என தங்களது எழுத்து வன்மைகளை நிலை நிறுத்தி வருகின்றனர்.
புலம் பெயர்ந்து எழுதுகின்றவர்களை நாம் இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இங்கே ஆண்கள் புழங்குகின்ற இதே இலக்கியத் தளத்தில்தான் பெண் எழுத்தும் இயங்குகின்றது, சவால்களையும் சந்தித்து வருகின்றது.

இலங்கைப் பெண்கள் தம்முடைய நிலத்தில் இருந்தபடியும் அதற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் சிதறியும் காணப்படுகின்றனர். அவர்களது கவிதைகள் அநீதிக்கு எதிராக, நூதன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகின்றன. ஆயினும் சமகாலப் பெண் கவிதைகள் அனைத்தும் ஒற்றைத் தன்மையான குரலாக நாம் அடையாளப்படுத்திக் காணமுடியாது. ‘சமகாலம்’ என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளில் இருந்து முற்று முழுதாக மாறி, வேறொன்றாக எம்முன் நிற்கின்றது.

// யாவற்றையும்விட
அதிகமாய் நேசிக்கும் உம்மிடம் கேட்கிறேன்
நேரிலொரு நாள் சந்தித்தால்
கைகளைக் குலுக்குவதா?
கன்னங்களில் முத்தமிடுவதா?
கட்டியணைப்பதா?
அல்லது
கசிந்துருகும் இப்பொழுதுகளின் சாறெடுத்து
வாழ்வின் துளியொன்றாக்கி
அதைக் குடித்துவிடலாமா? //
என தர்மினி கேட்கிறார்.

எது ஒரு பெண்ணை எழுத வைக்கின்றது? அவளை இத்தனை வலிமையானவளாய், அபூர்வமானவளாய் மாற்றக்கூடிய எழுத்தை எழுத எது அவளை முன்தள்ளுகின்றது? எத்தகைய ‘கனல்’ பெண்ணுக்குள் இருப்பது? ஏன் அவள் தன்னைக் கொண்டாட விளைகின்றாள் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளை பெண்களது கவிதைகளில் ஒருவர் கண்டுகொள்ளலாம். அதற்கு நிச்சயம் தொடர்ந்த வாசிப்புப் பயிற்சியும், பன்முகத் தேடலும், ஆழமான புரிதலும் அவசியமாகின்றது.

பண்பாட்டுப் பொறிகள் கொண்ட மொழியிலிருந்து தன்னைத் துளைத்து வெளியேற்றுகின்ற பெண்களால் எழுதப்படுகின்ற கவிதைகள் மிகுந்த தாக்கத்தை கொண்டிருக்கின்றன.

தர்மினியின் மற்றொரு கவிதையின் சிறு பகுதி,


// அடையாளங்களற்ற நான்
அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது
தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம்
நாடுமில்லை
இது என் பெயருமில்லை
அடையாளங்களற்ற நான்
அகதியுமில்லையாம்
உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து
படிகளின்றி இறங்க
யாருமற்ற காட்டுக்குள்
என்புகளைப் பாம்புகள் நொறுக்குகின்றன
முன் குவிந்த ஆடைகளிலிருந்து
எதுவொன்றும் அணிய முடியவில்லை
கடிகார முட்களின் வேகம்
குரூரத்தைக் குத்துகிறது
அந்தரித்த நித்திரையில்
அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்
அதுவல்லாப் போதில்
அந்நியம் சுற்றிக்கிடக்கிறது //

கவிதை என்பது வாழ்தல் என்றானபின் அதற்குரிய சவால்களும் தோன்றிவிடுகின்றன. ஒரு ஆண் எதிர்கொள்ளச் சாத்தியமற்ற பல நெருக்கடிகளை எழுதுகின்ற பெண் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. உலகின் முதல் பெண்ணான ‘ஹவ்வா’ வின் முதல் மாற்று அனுபவமே, ‘இப்லீசை’ அதாவது சாத்தானை எதிர்கொண்டதுதான். அது தான் ஒவ்வொரு பெண்ணினதும் அனுபவமுமாகும்.

குறைந்தபட்சம் சாத்தானையேனும் அவள் எதிர்கொண்டே ஆகவேண்டும். இலக்கியத்தில் ஈடுபடுகின்றவள் எனில் அது அதிகபட்சமாகிவிடும். தர்மினியும் இதற்கு விதிவிலக்கல்ல. பரிச்சயமான, இயல்பான மொழியில் அக உணர்வுகள் வெளிப்படும் கவிதைகளை எழுதுகின்றார். அவரது கூண்டு என்றொரு கவிதை இப்படி இருக்கிறது.

// விரிந்த வானத்தின் மிகுதியை
வரைந்து தரக் கேட்கலாம்
கைகளைப் பிடித்துக்
கடலலைகளில் ஏறலாம்
கொட்டுண்ட நட்சத்திரங்களைப்
பொறுக்கவும் கூப்பிடலாம்
அதிசினத்தின் மிருகமொன்றைப் புனைந்து
அவள் இரத்தத்தை ருசிக்கலாம்
எங்கிருந்து வந்தாயென்று
இடைக்கிடை கொஞ்சலாம்
பெருஞ் சண்டை முடிந்த இரவில்
அறியாத் தீண்டலில் நேசமாகிவிடலாம்
இதுவரை எவரிடமும் பேசாத எதையும் பேசலாம்
ஆனாலும்
அவ்வப்போது இளவரசியாய்
நான் மாறிவிடும் காலங்களில்
எவனாவது ஒருவன் பூக்களோடு வருகிறான்
அவனை அறிமுகஞ் செய்யும் போதெல்லாம்
இவனொரு கூண்டை வாங்கி விடுகிறான் //

என்னைப் பொறுத்தவரை இறப்பின் பின்னரும், பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடிய அரூப உயிராக கவிதையைக் காண்கிறேன். சில சமயம் ஐம்பூதங்களும் ஐம்புலன்களும் சங்கமிக்கின்ற செயல்பாட்டு வடிவமாக. மேலும் மொழியின் ஆகச்சிறந்த வெளிப்பாடாக. ஆனால் அதனைக் கையாள்பவர்களிடமுள்ள திறனைப் பொறுத்தே இக்காலங்களில் கவிதைக்குரிய கணிப்பீடுகளை முன்னெடுக்க முடியும். எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்தவிதமான அளவு கோல்களையே முழுமையாக செயலிழக்கச் செய்வதுதான் கவிதையாகும்.
தர்மினியின் கவிதை ஒன்றின் தலைப்பு,

// தற்செயலான நம்சந்திப்பின் புள்ளியை பெரிதாக்கலாம் // – என்பதாகும்.
இந்த சபைக்கும் அதனையே என் நம்பிக்கையாக முன்வைக்கிறேன்.




»»  (மேலும்)

கட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த?

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர்Résultat d’images pour mahindaதலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்ஷ காத்திருக்கிறார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியின் பெயர், சின்னம், நிறம் என்பன தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் ஆனாலும், அவை பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
எது எவ்வாறாயினும், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில், மூன்றாவது பெரிய தரப்பாக களத்தில் குதிக்கவுள்ளது கூட்டு எதிரணி.
உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்குவது என்று கூட்டு எதிரணி எப்போதே அறிவித்து விட்டது. ஆனால் எந்தக் கட்சியில்? எந்தச் சின்னத்தில்? களமிறங்கப் போகிறது என்பதை அறிவிக்கவில்லை.
கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியின் சின்னத்தில் அல்லது புதிய கட்சியை உருவாக்கி, அதன் சின்னத்தில் போட்டியிடும் தெரிவுகள் தான் மகிந்த அணிக்கு இருக்கிறது.
கூட்டு எதிரணியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்தாலும், அதன் தலைவராக அவர் இல்லை. தினேஸ் குணவர்த்தன தான் தலைவராக இருக்கிறார். எனினும், மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்தியே அவரது ஆலோசனைகளின் படியே கூட்டு எதிரணி செயற்படுகிறது.
எதற்காக மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் தலைவராகச் செயற்படத் தயங்குகிறார்? ஏன் அவர் அதன் தலைமைப் பதவியை ஏற்கவில்லை? என்ற கேள்விகளுக்கான விடை இந்தப் பத்தியின் இறுதியில் கிடைக்கும்.
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணி போட்டியிடப் போகும் கட்சியின் பெயரையோ? சின்னத்தையோ? வெளியிட முடியாத நிலையில் தான் மஹிந்த அணி இருக்கிறது. 
புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதானால், இப்போது அது நடக்காது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தான் புதிய கட்சிகளின் பதிவுகள் இடம்பெறும். அதனால், புதிய கட்சியையோ அதன் சின்னத்தையோ வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கலாம்.
புதிய கட்சி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடங்கப்படும் என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் கூறினாலும், புதிதாக உருவாக்கப்படும் கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன.
இதுவரையில் கூட்டு எதிரணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக உருவாக்கப்படும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் கனவு இருக்கிறது. 
மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். புதிய கட்சியை உருவாக்குவதற்கு நாட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கின்ற உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
ஆனாலும், புதிய கட்சி ஒன்றைத் தான் உருவாக்கப் போவதாகவோ, தனக்கு அத்தகைய உரிமை இருப்பதாகவோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயம்.
அதாவது புதிய கட்சியை உருவாக்கும் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மிக நிதானமாகவே இருக்க முனைகிறார். தன்னை மையப்படுத்தியே புதிய கட்சியை உருவாக்கினாலும், அதனை விட்டு விலகி இருக்கவே ஆசைப்படுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே பொது அரங்கில், சில வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். அதில் முக்கியமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தான் பிளவுபடுத்த மாட்டேன் என்பதாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே போய், தனிக்கட்சி தொடங்குவதன் மீது உள்ள நம்பிக்கையீனத்தினால் இந்த வாக்குறுதியை அவர் கொடுத்தாரா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தன்னைப் பிடித்து வெளியே தள்ளிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? என்று தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியே வருவதற்கு நிறையவே பயம் இருக்கிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஐ.தே.கவில் இருந்து விலகி, புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவைத் தவிர, வேறெவரும் கட்சியைப் பிளந்து, புதிய கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்த வரலாறு இல்லை.
ஐ.தே.கவில் இருந்து காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்ற வலுவான தலைவர்கள் தனித்துச் சென்று, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. 
அதிகாரத்தைப் பிடிக்க முடியாமலே லலித் அத்துலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார். வேறு கதியின்றி மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து, 1994 இல் சந்திரிகா குமாரதுங்கவை எதிர்த்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காமினி திசநாயக்கவும் குண்டுத் தாக்குதலுக்குப் பலியானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து காலத்துக்குக் காலம் பிரிந்து சென்றவர்களாலும் கூட,அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அரசியலில் மோசமான நிலையில் உள்ளவராக மஹிந்த ராஜபக்ஷ இல்லாது போனாலும், அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவு நிறைவேறாது போனால் எல்லாமே பாழாகி விடும் என்ற கலக்கம் அவருக்கு இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தனித்துச் செயற்படவும் முடியாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணங்கிச் செயற்படவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதற்கு அவரது இந்தக் குழப்பமான மனநிலையே காரணம்.
தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற தளத்தில் இருந்து மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதில் மஹிந்தவுக்கு இன்னமும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
தற்போதைய சூழல் அதற்குச் சாதகமானதாக இல்லா விட்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரேனும் தனக்கு வாய்ப்பான சூழல் உருவாகலாம் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் அவரிடம் இருக்கிறது.
அந்த நம்பிக்கை தான், மஹிந்த ராஜபக்ஷவை இன்னமும் தனிக் கட்சியைத் தொடங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. தனித்து வெளியே சென்று விட்டால், தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால்த்தான் அவர் ஆகக்கூடுதலான பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னைப் பிடித்து வெளியே தள்ளி விட்டால், அந்த அனுதாப அலையை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம், புதிய கட்சியை ஆரம்பித்தாலும் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.
அதற்காக அவர் சுதந்திரக் கட்சித் தலைமைக்கு பலமுறை சவால் விட்டுப் பார்த்தார்; அதனுடன் முரண்பட்டார்; போட்டிக் கூட்டங்கள், பேரணிகளை நடத்தினார். ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையோ அவர் எதிர்பார்க்கும் முடிவை எடுக்கத் தயாராக இல்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்தைப் புரிந்து கொண்டு நழுவலாகச் செயற்பட்டு வருகிறார் மைத்திரிபால சிறிசேன. மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்களை செயற்படுத்த விடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்து வருகின்ற நிலையில், எப்படியாவது உள்ளூராட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் ஆசையாக இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றுவது கூட மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பது தான் அவரது திட்டம். அதாவது ஐ.தே.கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவே என்று அவரால் நம்ப வைக்க முடியும்.
தான் உள்ளே இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்தை, சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்படுத்த முடியும். அது சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலுவான நிலையை அடைவதற்கு துணையாக இருக்கும்.
உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனியாகப் போட்டியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாலும், புதிய கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புக் குறைவு.
ஏனென்றால், அவ்வாறு புதிய கட்சியை அவர் உருவாக்கினால், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவரால் நுழைய முடியாது போகும். மஹிந்த மீண்டும் சுதந்திரக் கட்சியில் தொற்றிக் கொள்ளும் கனவில்த்தான் இருக்கிறார் என்றால், அவர் ஒருபோதும் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் துணியமாட்டார்.
அந்தப் புதிய கட்சிக்காகப் பிரசாரங்களைச் செய்வார்; அதன் வெற்றிக்காகவும் பாடுபடுவார். எனினும், ஒருபோதும் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்கமாட்டார். 
ஏனென்றால், அவ்வாறு தலைமைப் பதவியை மஹிந்த ஏற்றுக் கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தளத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் வாய்ப்பை அவர் இழந்து விடுவார்.
எனவே, உள்ளூராட்சித் தேர்தல் மஹிந்தவின் அரசியல் நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டப்போகிறது. அவர் எங்கே நிற்கப் போகிறார் என்பதை அதுவே வெளிப்படுத்தப் போகிறது.


»»  (மேலும்)

9/24/2016

இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்

Résultat de recherche d'images pour "கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார்"கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவர சூழல் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டபோதும், பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். போலீஸார் இருந்தும் இந்து முன்னணியினரின் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை. அதோடு, மசூதிகளின் மீதும் இஸ்லாமியர்களின் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான பின்னணி
சசிகுமார் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் அவர் பெண்ணின் சமூகத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையை திசை திருப்பி, தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்து முன்னணி, பாஜக போன்ற இந்துத்துவ கட்சிகள் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
»»  (மேலும்)

கனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்குடியேற்ற வீடுகள் கையளிப்பு!


காரைதீவு நிருபர் சகா*

 
னடா பாடும்மீன்கள் அமைப்பினரால் மட்டக்களப்பு பெரியபுல்லுமலை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக நிருமாணிக்கப்பட்ட வீடுகள் இன்று 24ஆம் திகதி சனிக்கிழமை காலை9மணிக்கு பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.Résultat d’images pour batti hous
புல்லுமலையில்பிறந்து கனடாவில் தற்போது வாழும் சமுகஆர்வலர் தம்பிராஜா பாபு வசந்தகுமார் மற்றும் த.நித்திசிவானந்தராஜா ஆகியோர் கனடாவில் மேற்கொண்ட நிதிசேகரிப்பினால் பெற்ற 25லட்சருபாவைக்கொண்டு 5வீடுகளை நிருமாணித்துவந்தனர். அவை தற்போது நிறைவுற்றுள்ளன.அவைகளே சனியன்று திறந்துவைக்கப்படவுள்ளன.

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பாடும்மீன்களின் இரவு எனும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்து அங்குள்ள எம்மவர்களின் பங்களிப்பில் இந்த 25லட்சருபாவைத்திரட்டியதாக ஏற்பாட்டாளர் பாபுவசந்தகுமார் தெரிவிக்கிறார்.

இவ்வீடுகள் மிகவிரைவில் 4விதவைகளுக்கும் ஒரு குடும்பஸ்தருக்கும் கையளிக்கப்படவிருக்கிறது என அவர் மேலும் சொன்னார்.
இதேவேளை அங்கு 32லட்சருபா செலவில் ஒரு பிள்ளையார் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் புல்லுமலையைச்சேர்ந்த வைத்தியகலாநிதி டாக்டர் தம்பிராஜா நந்தகுமார் 22லட்ச ருபாவை வழங்கினார்.இலங்கை அரசாங்கம் 8லட்சருபாவை வழங்கியிருந்தது. ஊர்மக்களிடம் 2லட்ச ருபாவைச் சேகரித்து ஆலய கும்பாபிசேகமும் நடாத்தி தற்போது ஆலயம் தினப்பூஜையுடன் வழிபாட்டிலுள்ளது.
மொத்தத்தில் பெரிய புல்லுமலை மீள்குடியேற்றத்திற்குத் தயாராகவுள்ளது.
»»  (மேலும்)

மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை

சட்டங்கள் புத்தகங்களில் அடக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைச் செய்யும் சட்டத்தைச் சொல்லலாம். 1993 ஆம் ஆண்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. 2000ஆம் ஆண்டைக் கடந்த போதிலும் கையால் மலம் அள்ளுவது வடமாநிலங்களில் தீவிரமாகவே தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தன்னார்வலர்கள், தனிநபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்’ என்கிற புதிய சட்டம் 2013-ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இந்தச் சட்டம் திருத்தங்களுடன் 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 2016-ல்தான் நடைமுறைக்கு வந்தது.
இவ்வளவு நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னும் அடுத்தவரின் மலம் மிதக்கும் குழிக்குள் சக மனிதன் இறங்குவதைத் தடுக்க அரசுகள் முனையவில்லை. சமூகமும் அதுகுறித்து வெட்கப்படுவதில்லை.  தன் வீட்டின் அடைப்பை நீக்க, மலக்குழிக்குள் இறங்கி உயிரை விட்டவரை தியாகி ஆக்குவதில்லை இந்தச் சமூகம்; விலங்கினும் கீழாகவே அவர் உயிர் அங்கே மதிக்கப்படுகிறது. கடக்கக்கூடிய சாகவாகவே அது இருக்கிறது.
இத்தகையதொரு சமூக-அரசியல் சூழலில் மலக்குழிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் கதைகளைத் தேடி ஆவணமாக்கிக் கொண்டிருக்கிறார் திவ்ய பாரதி. சமூக செயற்பாட்டாளராக அறியப்பட்ட திவ்யபாரதியின் இந்த முயற்சி, சுயபரிசோதனையைப் போன்றது. ஏனெனில் சுயமான முனைப்பின் பேரில், துப்புரவு பணியாளர்களின் மேல் உள்ள அக்கறையின் பேரில் அவர் இதைச் செய்துகொண்டிருக்கிறார்.
திவ்யபாரதியுடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இங்கே:
ஆவணப்பட முயற்சியை எப்படித் தொடங்கினீர்கள்?
“சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் எட்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் துப்புரவுப் பணியாளர்களின் அவல வாழ்க்கையை கவனித்ததே கிடையாது. நான் சார்ந்த இயக்கத்திலும்கூட தொழிற்சங்கங்களால் இவர்களை அணிதிரட்ட இயலவில்லை. 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் இரண்டு பேர் மலக்குழிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி இறந்தார்கள். அவர்கள் இருவரும் மாநகராட்சி பணியாளர்கள், அவர்களை இந்தப் பணியைச் செய்யச் சொன்னது மாநகராட்சி நிர்வாகமே.
ஆனால், இந்த மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தார்கள். பணி நிர்பந்தம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நான் சார்ந்த அமைப்பு (சிபிஐ ம லே (விடுதலை)) உள்ளிட்ட 7 அமைப்புகள் சேர்ந்து மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் பிணங்களை வாங்காது போராட்டம் செய்தோம். முதல் கோரிக்கை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். இரண்டாவது 2014ல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மலக்குழியில் இறங்கி உயிர்விட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவது கோரிக்கை சட்டத்துக்கு புறம்பான பணியைச் செய்யச் சொன்னவர்களை கைது செய்ய வேண்டும். மூன்று கோரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசர அவசரமாக பிணங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.
மலக்குழிக்குள் சிக்கி, மூன்று நாள் பிணவறையில் கிடந்து உடல்கள் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிட்டன. வேறு வழியில்லாமல் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்கிக் கொண்டோம். ஈமச் சடங்கு செய்யக்கூட அந்தக் குடும்பத்தினரிடம் பணம் இல்லை.  தோழர்களிடம் இருந்ததை எடுத்துக் கொடுத்து சடங்குகளை முடித்தோம். இந்தக் குடும்பத்தினருடன் இறுதிச் சடங்கு வரை இருந்தது நான்கைந்து பேர் மட்டுமே. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில் ஒருவரின் இளம் மனைவி, அவர் பெயர் மகாலட்சுமி. அவர் புறண்டு புறண்டு அழுததை என்னால் மறக்க முடியாது. இன்னும் அந்தக் காட்சி என் கண்களில் இருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து சென்னை தலப்பாகட்டு கடையில் நடந்த தொழிலாளிகளின் மரணம். ஊடகங்களில் வராத நடுவில் ரெண்டு, மூன்று சம்பவங்கள்.
இப்படி மலக்குழி மரணங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இந்த மரணங்களை பின் தொடர வேண்டும் என அப்போது தீர்மானித்தேன்.
ஆவணப் பட அனுபவங்கள் எப்படி இருந்தன?
மதுரை, தலப்பாகட்டு, நெய்வேலி போன்ற இடங்களில் நடந்த ஒரு சில மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் பதிவாயுள்ளன.  அக்டோபரில் தொடங்கி இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து 16 மலக்குழி மரணங்கள்.  மறைக்கப்பட்ட மரணங்கள் இன்னும் இருக்கலாம். ஒவ்வொரு மரணத்தின் பின்னணியையும் படமாக்கும் பொருட்டு 15 மாவட்டங்களுக்குப் பயணமானோம். மலக்குழி இறப்புகளை மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதையும் செய்திருக்கிறோம்.
இந்த ஆவணப்படமாக்கலில் நாங்கள் அறிந்த முக்கியமான விஷயம், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளில் உள்ளவர்களுக்கே துப்புரவுப் பணியாளர்கள், மலக்குழி மரணங்கள் குறித்த சரியான அறிதல் இல்லை. ஆனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் தகவல்கள் இருக்கின்றன. எல்லோரிடமிருந்தும் கருத்துகளை பெற்றிருக்கிறோம். இவர்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனத்தையும் வைத்திருக்கிறோம்.
மலக்குழி அடைப்பு நீக்கும் பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்துவது போய், வட இந்திய தொழிலாளர்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. வட இந்திய தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கேட்பதற்கு நாதியில்லை என்பது அவர்களை பணிக்கு அமர்த்துபவர்களுக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது.  சமீபத்தில் விருதுநகரில் இறந்த வட இந்திய தொழிலாளர்களை மறுநாளே எரித்துவிட்டார்கள்.
மலக்குழிக்குள் இறங்கும் தொழில் வேண்டாம் என்றால் வேறு என்ன தொழில் செய்வது என்பது குறித்து யாருக்குமே ஒரு மாற்றுத்திட்டம் இல்லை. தலித் சாதிகளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வசைபாடுவதுதான் அதிகமாக இருக்கிறது.
ஏன் தொழிற்சங்கங்களாலும் இவர்களைத் திரட்ட முடியவில்லை. சம்பள உயர்வு, வேலை நிரந்தரம் இதைத் தவிர, மலக்குழியில் இறங்கும் தொழிலாளர்கள் நிலையை அவர்களும் கவனத்தில் எடுக்கவில்லை. இதையெல்லாம் ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி...
படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி…
ஆவணப்படத்துக்கான நிதியுதவி யார் செய்கிறார்கள்? 
நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும்.  இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள். கிடைத்ததை சாப்பிட்டோம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்றிருக்கிறீர்களா?
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை ஒரு வியாபாரமாகத்தான் பார்க்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏகப்பட்ட தொண்டு நிறுவனங்கள் துப்புரவு தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதை ஒரு ‘புராஜெக்ட்’ஆக காசு கொழிக்கும் தொழிலாகத்தான் பார்க்கிறார்கள். எங்களை ஒரு தொண்டு நிறுவனம் அணுகி, எடுத்தவரை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என விலை பேசினார்கள்.  மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை தனது இணையதள தலைப்பில் வைத்திருக்கும் அந்த நிறுவனத்திடம் விலைபோக நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் இதை ‘சிம்பதி’ ஆக மாற்றுவார்கள். ஆனால் நாங்கள் அரசியாக்கப் பார்க்கிறோம். மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கவே இந்த என் ஜி ஓக்கள் என்பது என் கருத்து.
ஆவணப்பட வேலை எதுவரைக்கும் வந்திருக்கிறது..?
படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இப்போது எடிட்டிங் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். இசைகோர்வை சேர்க்கும் பணியும் டிவிடியாக மாற்றும் பணியும் செய்ய ரூ. 30 ஆயிரம் வரைக்கும் தேவைப்படுகிறது. இசைக்கு, இசைக்கோர்வை சேர்க்கும் ஸ்டுடியோவுக்கு பணம் தர வேண்டும். அடுத்து குறைந்தபட்சம் ஆயிரம் டிவிடியாவது போட வேண்டுமென்றால் ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுவரைக்கும் தனிநபர்களின் உதவிகளை வைத்துத்தான் ஆவணப்பட வேலைகளைப் பார்தேன். இனியும் அப்படித்தான். தனிநபர்களின் உதவிகளை வரவேற்கிறேன், இந்தப் பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறேன்.
இந்த ஆவணப்படம் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். 16 பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆவணமாக்கியிருக்கிறோம் இதில். இதைவிட நேரத்தை குறைப்பது கடினம்தான். அதற்கும் முயல்கிறோம்.
இந்தியா முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றி 15 வருடங்களாக ஆய்வு செய்து பாஷாசிங், அதை நூலாக்கியிருக்கிறார். விடியல் பதிப்பகம் அதை ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். இந்த ஆவணப் பட பயணத்தின் போது நான்கூடவே எடுத்துச் சென்றது இந்த நூலைத்தான். எனக்கு கள வழிகாட்டியாக இருந்தது இந்த நூல். ஆவணப்பட வெளியீட்டுக்கு இவரை அழைத்திருக்கிறேன். நீதிபதி அரி பரந்தாமன் போன்றவர்களையும் அழைத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்.
திவ்யாவின் உழைப்பும் போராட்டமும் நம்பிக்கை அளிக்கிறது. ஆவணப்பட வேலைகளோடு நின்றுவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றம், போராட்டங்கள் மூலமாக நீதியைப் பெற்றுத் தருவதையும் தனது பணியின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார். 

நன்றி *டைம்ஸ் தமிழ்
»»  (மேலும்)

இந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கொளுத்தப்பட்ட காவல் துறை வாகனம்கோவையில் இந்து அமைப்பு ஒன்றின் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து நகரின் பல பகுதிகளில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார் என்பவர் நேற்று இரவு பத்தரை மணியளவில் அவரது வீட்டிற்கு சிறிது தூரத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது
இதையடுத்து அதிகாலையிலிருந்தே கோவைமுழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. மையப் பகுதிகள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்ததால் 11 மணியளவில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த தனியார் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
காலை முதலே சசிக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினருக்கும் குவிக்கப்பட்டனர். டவுன்ஹால் பகுதியில் பதினோரு மணியளவில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டதால் காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தது.
பிற்பகலில் சசிகுமாரின் இறுதி ஊர்வலம் சென்ற பாதையில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கோட்டை மேடு என்ற பகுதிக்குச் செல்லும் சாலைகள் சீல்வைக்கப்பட்டன. வழிபாட்டுத் தலம் ஒன்றின் அருகில் ஊர்வலம் சென்றபோது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த இறுதி ஊர்வலம் சென்ற வழியெங்கும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை வாகனம் உட்பட ஐந்து வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.
கொலையாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சசிகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து சிறுபான்மையினர் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.
»»  (மேலும்)

9/23/2016

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்


மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: 'நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?'

எழுக தமிழ் என்ற தமிழ் மையவாத நிகழ்வினைப் பற்றிக் கேள்விப்பட்ட போதும் அது தொடர்பான பதிவுகளைப் பார்த்த போதும் எனது கண் முன்னே அந்த முஸ்லீம் பெரியவர் தான் முதலிலே தோன்றினார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கிப் பலர் ரிசாத் பதியுதீன் தானே முஸ்லீம்களுக்கு இருக்கிறார் என்று சொல்வதும் எனக்குக் கேட்கிறது. ரிசாத் பதியுதீன் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதனை நான் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. அவர் செய்வது பிழையாகவேயும் இருக்கட்டும். தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும், வடமாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் இந்த முஸ்லீம் பெரியவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எமது பொறுப்பு. எமது அரசியல் சிந்தனை எவ்வாறு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினுள் சிக்கிப் போய் இருக்கிறது என்பதற்கு அந்த முஸ்லீம் பெரியவரின் கேள்வி ஒரு எடுத்துக்காட்டு.
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டிலே வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் ஏன் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் சில தரப்புக்களுக்குக்கும் (காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள்) பொதுவான பிரச்சினைகள் சிலவற்றினைத் தமிழ்த் தேசியவாதம் என்ற வில்லையினூடாக சமூகத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடு. இதனால் சமூகங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளப் போவது இல்லை. சமூகங்கள் மேலும் துருவப்படும் நிலைமையினையே இது உருவாக்கும். இதனையே எழுக தமிழ் (பெயரிலேயே தெரிகிறது இந்த அரசியல்) என்ற நாளை நடைபெறப் போகும் நிகழ்வு செய்யப் போகிறது. இது அரசு எவ்வாறு தனது அடக்குமுறைகளைப் பல தரப்பட்ட வழிகளிலே மேற்கொள்கிறது என்பதனை மறைக்கும் ஒரு செயற்பாடு. இது எமது விடுதலைச் சிந்தனையின் போதாமைகளையே வெளிக்காட்டுகிறது.

எழுக தமிழ்ப் பேரணியிலே பல நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
காணாமற் போனோர் தொடர்பாக, பௌத்த மயமாக்கம் தொடர்பாக, இராணுவ மயமாக்கம், நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக, சமஸ்டித் தீர்வு தொடர்பாக -
ஆனால் இவை எல்லாவற்றினையும் ஒரு குறுகிய தமிழ்த் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் ஊடாக ஏற்பாட்டாளர்கள் முன்வைப்பதனை நாம் இங்கு நோக்க வேண்டும்.

இந்தியாவிலே தலித்துக்கள் முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு எதிராகச் செயற்படும் விஸ்வஹிந்து பரிசத் போன்ற தீவிரமான இந்துத்துவ பாசிச சிந்தனையினைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்துத்துவத்தினைத் தனது ஆசிரியர் தலையங்களிலே கக்கி எழுதும் வலம்புரிப் பத்திரிகை, 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையிலே அரசினாலும் இராணுவத்தினராலும் மட்டும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றிய பகுதிகளை மட்டும் (அதனுடைய அர்த்தம் விடுதலைப் புலிகள் பற்றியவற்றை அல்ல) தாம் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்ட, கடந்த காலம் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் சுயவிமர்ச்னம் எதனையும் முன்வைப்பதனை ஊக்குவிக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இலங்கையின் வரலாற்றினையும், இலங்கையிலே தமிழ் அடையாளம் தோன்றிய முறை பற்றியும் எந்த விதமான புரிதல் இல்லாமல் தமிழர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேசமாகவும், வடகிழக்கினைத் தாயகமாகவும் கொண்டிருக்கிறார்கள் எனப் பிரசாரங்களில் ஈடுபடுவோரும், அறிக்கைகள் வெளியிடுவோரும், சர்வேதச சக்திகள் தமது நவதாராளவாத, நவ காலனித்துவ நலன்களை முன்னிறுத்தி எமது பிரச்சினைகளைக் கையாள்கிறார்கள் என்பதனைப் பற்றிப் புரிதல் அற்ற வகையில் சர்வதேசமே எமக்கு விடுதலையைத் தரும் என்று சொல்வோரும் இந்தப் பேரணியினை ஏற்பாடு செய்வதிலே முன்னணியில் இருக்கிறார்கள். இந்தப் பேரணி குறித்தும், இதனை ஏற்பாடு செய்வோரின் அபாயகரமான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.

எழுக தமிழ்ப் பேரணியிலே முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை நாம் ஏற்றேயாக வேண்டும். இது தொடர்பான அரசியல் முன்னெடுப்புக்களையும், போராட்டங்களையும் சிறுபான்மையினர் மத்தியிலும், நாடு பூராவும் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகள் முன்னெடுக்க வேண்டும். இதனுடைய அர்த்தம் இடதுசாரிகள் எதுவும் செய்யவில்லை என்பது அல்ல. (உதாரணம் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அரசியற் கைதிகளின் விடுதலை பற்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்). மாறாக நாம் மேலும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது மௌனமும் செயற்றிறன் குறைவும் அபாயகரமான, குறுகிய தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சக்திகளும், இனங்களுக்கு இடையில் பிளவுகளைக் கூர்மைப்படுத்த முயலும் சக்திகளும் அரசியல் வலுப்பெறுவதனையே ஊக்குவிக்கும்

நன்றி முகநூல் *மகேந்திரன் திருவரங்கன்
»»  (மேலும்)

எழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் தமிழகத்து ஈழவியாபாரிகள் முன்னிலையில்

*யாழ்.சின்மயமிஷன் 
*யாழ்.கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதானக்குழு
*வீணாகான குருபீடம்
*சைவமகாசபை
*யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், 
*யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், 
*யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள்
*இலங்கை ஆசிரியர் சங்கம்,
*இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
*தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
*தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
*அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
*ஜனநாயக மக்கள் காங்கிரஸ்
*ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
*தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
*வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் 
*வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சம்மேளனம்.
*வலிவடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு சங்கம், 
*முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்
*யாழ் மாவட்ட மரக்காலை உரிமையாளர் 
*கூட்டுறவு சங்கம், 
*சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம்
*திருநெல்வேலி பொதுசந்தை வியாபாரிகள் சங்கம்
*மல்லாவி வர்த்தகர் சங்கம்
*தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, 
*தமிழ் சிவில் சமூக அமைப்பு 
*யாழ்.மாவட்ட பிரஜைகள் குழு
*வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
*மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு
*மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் 
*அரசியல் மனித உரிமைகளுக்கான தமிழ்  சட்டத்தரணிகள் அமைப்பு 
*வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒருங்கிணைப்பு குழு
*தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு
*வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தொழிற்சங்கம்
*மகளிர் அமைப்புகள்
*வடபகுதியில் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்ட பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கம், 
*வடகிழக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒன்றியம்
*மக்கள் சக்தி அமைப்பு,
*தமிழக வாழ்வுரிமைக் கட்சி 
*மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்
*திராவிடர் விடுதலைக்கழகம், 
*தமிழ்த் தேசிய பேரியக்கம், 
*சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்
*இந்து மக்கள் கட்சி 
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
*தந்தை பெரியார் திராவிடர் கழகம் 
(மேலதிக பேரணி ஆதரவுகள் நாளை) (செ-9)
»»  (மேலும்)

எழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் சதித்திட்டம்! (விழிப்பாக இருக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு)

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற இருக்கும் “எழுக தமிழ்" மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எந்தவித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடத்தப்படும் இப்பேரணியானது, நல்லூர் கந்த சுவாமிகோவில் முன்றலில் இருந்தும் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை சென்றடையும்.

இப் பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டிகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருவோர் பேரணியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் உணவுச் சாலைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள் என்பவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களை பூட்டி பேரணியின் வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் இப்பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத் தனமான பிரசாரங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் எம்மால் அறியமுடிகின்றது. 
குறிப்பாக ஒரு சில ஊடகங்கள் இவ்வாறான உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிடவுள் ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை கூட்டுப்பேரணி என்ற வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 
இத்தகைய சுவரொட்டிகளை யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை ஆயினும், இச் சுவரொட்டிக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள் கின்றோம்.

அதேவேளை, தமிழ் மக்களின் நலன்சார்ந்து பேரவையால் முன் மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் இப்பேரணியில் கலந்து கொள்ளமுடியும்.
எனினும் இப்பேரணி அரசி யல் கட்சி சார்பற்றது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தமிழ்மக்களின் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் இப்பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்கு மாறும் கேட்டுநிற்கின் றோம்.          
»»  (மேலும்)

மாவைக்கு வழிகாட்டும் வலம்புரி

அன்புக்குரிய மாவை சேனாதிராசா அவர்களுக்கு அன்பு வணக்கம். 
முன்பும் இரு தடவை தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலை வேறு. தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்தில் தங்களின் வகிபங்கு மறப்பதற்குரியதல்ல.

நம் சிறுவயதில் என் ஊரில் பெரிய வரவேற்பு நிகழ்வு. சிறை மீண்ட மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசிஆனந்தன் ஆகியோருக்கு வரவேற்பு என்று பெரியவர்கள் பேசிக்கொண்டனர். 

பட்டாசு வெடிகளின் மத்தியில் ஓடி ஓடிப் பார்த்தேன். விபரத்தை அப்போது விளங்கிக் கொள்ளமுடிய வில்லை. பின்னாளில் தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டம்; அதன் காரணமாக தாங்கள் சிறை சென்ற வரலாறுகளை அறிந்து கொண்டேன். 

இவை ஒரு சிறு முற்குறிப்பு. நாம் இக்கடிதம் எழுத முற்பட்டதன் நோக்கம் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வட மாகாணத்திலுள்ள அத்தனை பொது அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு அகிம்சை வழியில்-ஜனநாயக முறையில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இந்தப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவிக்காது என்பது போல ஒரு தகவல் வெளிவந்துள்ளது.  இந்தத் தகவலில் உண்மை இருக்க முடியாது என்பது நம் உறுதியான நம்பிக்கை. 
அதிலும் மாவை சேனாதிராசாவை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி அப்படியொரு முடிவுக்கு வராது என்பதே நம் நம்பிக்கையின் ஆதாரம். 

இருந்தும் தங்களையும் சிலர் திசை திருப்பலாம். இப்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையில் யார் எந்தப் பக்கம் என்பது கூடத்தெரியாமல் இருப்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

அகிம்சை வழியில் பேரணி நடத்துவது இப்போது உகந்ததல்ல. தீர்வு விபரங்கள் நடந்து கொண்டிருப்பது போல தங்கள் கட்சியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீர்வு விரைவில் வரு மாக இருந்தால், அது நல்லது. 

ஆனால் அந்தத் தீர்வை பேரணி எப்படி தடை செய்யும் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
தீர்வை விரைவு படுத்துங்கள் என்பதுதான் பேரணியின் அதி உச்சமான கோரிக்கை. ஏனைய கோரிக் கைகள் வடக்கில் புதிதாக பெளத்த விகாரைகளை அமையாதீர்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்கள் மீள் குடியமர உதவுங்கள். காணாமல்போனவர்களின் விடயத்தில் விரைந்து கரிசனை காட்டுங்கள். எங்கள் கடல் வளத்தை எங்களுக்கே உரியதாக்குங்கள் என்ற கோரிக்கைகளே முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கைகள் தவறானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

அப்படியானால் அண்மையில் கிளிநொச்சியில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எதிராக நடந்த பேர ணியில் நீங்கள் ஏன் பங்கேற்றீர்கள்? பேரணி நட த்துவதென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதில் வெற்றி பெற்றவர்களும்தான் செய்ய வேண்டுமா? தேர்தலில் தோற்றவர்கள் முன்னெடுக்கும் பேரணி என்று நாக்கூசாமல் சொல்வோரில் எத்தனை பேரின் தேர்தல் வெற்றி உண்மையானது. 

தேர்தலில் வென்ற சம்பந்தன் ஐயா உட்பட சிலர் முன்னைய தேர்தலில்   தோற்றது மறதிக்குரியதாயி ற்றா? இதுபோன்ற கேள்விகள் எழுவது நியாயமானதே. எனவே தமிழ் மக்கள் பேரவை நடத்துகின்ற பேரணி தமிழ் மக்களுக்கானது. அந்தப் பேரணியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளே கவனிக்கப்பட வேண்டிவை. 

இந்தப்  பேரணியில் தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக பங்கு பற்றுவர். அவர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாக கணிக்கப்படும் போது நிச்சயம் நல்லாட்சியில் காலம் கடத்தப்படும் தீர்வுகள் மேலெழும் என் பதே உண்மை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்

*நன்றி வலம்புரி
»»  (மேலும்)

வழித்தேங்காய் தெருப்பிள்ளையார்



     வடபுலத்தான்
Afficher l'image d'origine“இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்“ என்று ஆச்சி சொல்லுவா. இதை ஏன் சொல்கிறா எண்டு  எனக்கு அப்ப புரியிறதில்லை. ஆனால், இப்பொழுது இதற்கு என்ன பொருள் என்று நல்லா விளங்குது. எல்லாம் காலம் செய்யும் கோலம்தான்.
சங்கதி இதுதான்.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டதல்லவா! அந்தத் தீவிபத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகர்களுக்கு கரைச்சிப் பிரதேச சபை, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து தலா 20.000 ரூபா நிதியை  உடனடி உதவியாக வழங்கியது. இந்த முடிவை பிரதேச சபையின் செயலாளர் க. கம்ஸநாதன் தற்துணிவாகவே எடுத்திருந்தார். இந்தத் தகவலை பிரதேச சபையின் செயலாளர் கே. கம்ஸநாதனே தெரிவித்துமிருக்கிறார்.
இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான ஆயத்தங்களைச்செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, எரிந்த சந்தையைப் பார்வையிடுவதற்காக அங்கே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வந்திருந்தார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடனும் பிரதேச சபையின் செயலருடனும் பேசினார். அப்போது “உடனடி உதவியாக, பிரதேச சபையின் நிதியிலிருந்து தலா 20 ஆயிரம் ரூபா வீதம் கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம்“ என்று பிரதேச சபையின் செயலர் கம்ஸநாதன் முதலமைச்சரிடம் சொன்னார். பிறகென்ன? காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த மாதிரித்தான்.
இதனையடுத்து, பதவி நிமித்தமாகச் சம்பிரதாய புர்வமாக அந்த நிதியை வழங்கி வைத்தார்  விக்கினேஸ்வரன். வெறுங்கையோடு வந்தவருக்குப் பலகாரப் பார்ஷல் கிடைத்த மாதிரி, சந்தோசமாகக் காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார்.
இந்த நிகழ்வு முடிய, விக்கினேஸ்வரன் சென்று விட்டார். இதற்குப் பிறகு அங்கே இந்த விசயம் வேறு விதமாக மக்களிடம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சர் கொடுத்த 20 ஆயிரம் ரூபா கட்சிக் காசு என்றும் கட்சி நிதியிலிருந்து இதை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சொன்னது மட்டுமல்ல, அப்படித்தான் வர்த்தகர்கள் நம்பவும் வைக்கப்பட்டுள்ளனர். இதைச் செய்ததும் செய்து கொண்டிருப்பதும் கரைச்சிப்பிரதேச சபையைக் கட்டியாண்ட முன்னாள் உறுப்பினர்களும் சிறிதரன் எம்பியின் வலது கையானுமாகிய வேழமாலிகிதனும்தான்.
அப்படியென்றால், இது எந்தக் கட்சியின் நிதி? தமிழரசுக்கட்சியின் நிதியா? அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிதியா? கட்சியின் நிதியில் இருந்து இந்த உடனடி உதவி வழங்கப்பட்டிருந்தால், எதற்காக பிரதேச சபை தன்னுடைய நிதியைக் கொடுத்ததாகக் கூற வேண்டும்?  அல்லது கரைச்சிப் பிரதேச சபை கட்சிக்கு நிதியை அன்பளிப்புச் செய்திருக்கிறதா? அப்படியானால், அது எந்தக் கட்சிக்கு இந்த நிதியைக் கொடுத்தது? அப்படிக் கொடுப்பதற்கு பிரதேச சபைக்கு விதிமுறையும் அனுமதியும் உண்டா?
இப்ப கேள்வி என்னெண்டால்,  கம்ஸநாதன் பொய் சொல்கிறாரா? இதற்குப் பிரதேச சபையின் பதில் என்ன? முதலமைச்சர். இதைப்பற்றி என்ன சொல்கிறார்? இந்தக் கட்டுக்கதைகளைப் பரப்பியது, பிரதேச சபையில் முன்னர் உறுப்பினராக இருந்த சிலர் என்று பகிரங்கமாகத் தெரிந்து கொண்டும் இதைப்பற்றி சிறிதரனும் விக்கினேஸ்வரனும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

வேற ஒன்றுமில்லை,  மீண்டும் தாமே பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்காகவே ஓசிக்காசில் இந்தப் பரப்புரையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தை எரிந்த கவலை ஒருபக்கம். பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். இதற்குள்ளும் ஓசிக் காசில் அரசியல் ஆதாயம் தேடும் கேவலம்.
என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்? இது எந்த வகையான அரசியல் நாகரீகமாகும்?

 வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும் கலை நன்றாகத்தானிருக்கிறது. இதைப்பற்றி தமிழ் “வெற்றி“ (Win) இணையத்தளத்தின் பதில் என்னவாக இருக்கும்?

 இதைத்தான் உடையாரின் திருவிழாவில் சடையர் வாணம் விட்ட கதை என்று சொல்வதா? அரசாங்கக் காசில் கட்சிப்பணி....

 ஆஹா அருமையாகத்தான் உள்ளது தமிழ்த் தேசியத்துக்கான அரசியற் பண்பாடு.

 வழித்தேங்காய் தெருப்பிள்ளையார்
நன்றி தேனீ



»»  (மேலும்)

9/22/2016

எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். படகில் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் ஹார்ன் ஆஃப் ஆஃப்ரிக்கா எனப்படும் ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை சேர்ந்தவர்கள்.
மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து 42 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், 160 பேரை மீட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர் காக்கும் மிதவை யாருக்கு வேண்டுமோ அவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருந்ததாக என்று பிபிசியிடம் மீடக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எகிப்திலிருந்து அதிகளவில் வெளியேறும் குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நிறுவனமான ஃப்ரான்டெக்ஸ் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

எழுகதமிழுக்கு முட்டுக்கட்டை போடுவேன்! சீறினார் சுமந்திரன்!!

யாழ் வர்த்தகர் சங்க தலைவர் ஜெயசேகரம் வீட்டில நடந்த கூட்டத்தில – பேரணிக்குத் தாம் வரவும் மாட்டோம் தமது ஆதரவும் இல்லை என்று தமிழரசுக் கட்சியினர் சொல்லிய பின்னர் கூட்டம் முடிந்து கடைசியாக விடைபெறும் போது, மருத்துவர் லக்ஸ்மன் கூட்டத்திற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா சிறிதரன் சுமந்திரன் ஆகியோரிடம் ஓரு கோரிக்கையை முன்வைத்தார்.எழுகதமிழுக்கு முட்டுக்கட்டை போடுவேன்! சீறினார் சுமந்திரன்!!
“சரி, நீங்க ஆதரவு தராதுவிட்டாலும் பரவாயில்ல. மக்களுக்காக நாங்க செய்யுற இந்த பேரணிக்குத் தயவுசெய்து முட்டுக்கட்டைகள் ஏதும் போடாமலாவது விடுங்கள்” என்று கேட்டார் லக்ஸ்மன்.
“நான் முட்டுக்கட்டை போடுவன். நாங்கள் வரமாட்டோம், எமது ஆதரவும் இல்லை என்றால், நாங்கள் இதை விரும்பேல்லை என்று தானே அர்த்தம். அதனால – நான் எல்லா முட்டுக்கட்டைகளும் போடுவன்!” சுமந்திரன் எல்லோரையும் பார்த்து சொன்னார்.
நாட்டில் உள்ள தற்போதைய நிலைமைகளை மக்களுக்கு மூடிமறைத்தும் எழுகதமிழ் நடத்தினால் சமஸ்டி தீர்வு கிடைக்காது என்றும் மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்கின்றார்களே என தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வேதனையோடு இக்கருத்தை பகிர்ந்துகொண்டார்
»»  (மேலும்)

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி

Untitled-1 copy2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, டெல்சித் தோட்டம், லேன்ஸ்கேப் பிரிவிலும், தெனியாய பகுதியிலும் 2014ம் ஆண்டு அக்டோம்பர் மாதம் 23ம் திகதி வெகு கோலாகலமாக அன்றைய பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இன்றைய தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமாகிய கௌரவ மகிந்த சமரசிங்ஹ அவர்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டபோதும், அத் திட்டத்திற்கு அமைய இதுவரை அம்மக்களுக்கு எவ்வித வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது. என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களிடம் நேற்றைய தினம்  (21.09.2016) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றினார்
»»  (மேலும்)

சிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி

மன்னார் அடம்பன் வாமன் தேவபுரம் கிராமத்தில் நண்பர்களின் தேவை நற்பணி மன்...றத்தின் ஏற்பாட்டில் கணனிப் பயிற்சி தொடக்க விழா நேற்று (14.05.2026) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரசார செயலாளருமான கணேஸ் வேலாயுதம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வெளிநாட்டுக் கிளைகளுக்கான இணைப்பாளர் கீரன் நகுலேந்திரன், பிரான்ஸ் நாட்டிற்கான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இணைப்பாளர் நித்தியானந்தன், சமாதான நீதவன், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்,
பல புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் இந்தவருட இறுதிப் பகுதியில் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. இத் திட்டங்களுக்காக வெளிநாட்டு வங்கிகள் உதவிகளை வழங்குகின்றன. மிக விரைவில் கிராம மட்டத்திலான வீதிகள் பலவும் புனரமைக்கப்படும் என தெரிவித்தார்
மேலும், இதே போன்று இவ்வாறான கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவன் அறக்கட்டளை நிறுவனம் போன்ற அமைப்புக்கள் வழிகாட்டியாக திகழ்கின்றமை மகிழ்ச்சிக்குரியது. என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதில் சிவன் பவுன்டேசன் ஓர் எடுத்துக்காட்டு. இந்த பிரதேசத்தில் எமது ஏழை மாணவர்களின் கணனிக் கல்வியறிவை உயர்த்துவதற்கு கணனிகளையும் மேலும் உதவிகளையும் நண்பர்களின் தேவை நற்பணி மன்றத்தினூடாக வழங்கியிருக்கிறார். ஏனைய பல பிரதேசங்களிலும் விசேடதேவையுடையோருக்கான உதவிகள், மருத்துவ உதவிகள், கல்வித்துறைக்கான உதவிகள், விளையாட்டுத் துறையினருக்கான உதவிகள் என பலவிதமான சேவைகளைச் செய்து வருகிறனர். இவர்களைப்போல்தான் நாம் எல்லோரும் சேவையாற்றவேண்டும். இந்த தன்னலம் அற்ற சேவையை வழங்கி மக்கள் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழும் சிவன் பவுன்டேசன் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும், அந்தக் கிராமத்தில் கட்டப்பட்டு குறையாக விடப்பட்டிருந்த பொது மண்டபம் ஒன்றினை பூர்த்தி செய்வதற்காக தனது நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபா வழங்குவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சிவன் நிறுவனத்தின் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் தெரிவிக்கையில், நாம் பல வருடங்களுக்கு முன்னால் ஆயுதப்போராட்டத்தை மேற்கொன்டோம். ஆனால் அது இப்போது தேவையற்றது. இப்பொழுது எமக்கு கல்விப்போராட்டமே தேவையாகவிருக்கிறது. அதனையேதான் நாம் மும்முரமாக செய்து வருகிறோம். நல்ல கல்விமிக்க நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்புவதே எமது அமைப்பின் நோக்கமாகும். நீங்கள் கல்வி கற்பதற்காக எந்தவிதமான உதவியை செய்வதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வெளிநாட்டு கிளைகளுக்கான இணைப்பாளர் கீரன் நகுலேந்திரன் உரையாற்றும்போது,
எமது பிள்ளைகளுக்கு கல்வியினை வளர்த்தெடுப்பதற்கு எமது ரெலோ அமைப்பு முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. அதற்கான வேலைத்திட்டங்கள் பல்வேறு இடங்களில் மேற்கொண்டுவருகிறோம். அதற்காக வெளிநாட்டில் உள்ள எமது ஆதரவாளர்களும் சிவன் பவுன்டேசன் போன்ற நிறுவனங்களும் உதவும். மாணவர்கள் ஒவ்வாருவரும் நன்றாக படித்து முன்னேறுவதே பிரதான கடமை என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரான்ஸ் நாட்டின் இணைப்பாளர் நித்தியானந்தம் அவர்கள் மாணவர்களின் கல்வியின் மீது நாம் அதீத அக்கறை கொண்டுள்ளோம். அவர்களுக்கு எம்மால் கொடுக்கக்கூடிய அழியாச் சொத்து இந்தக் கல்வி மட்டுமே. அதனால் எவ்வகையிலேனும் இந்த மாணவர்களின் கல்விக்காக ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருப்போம் என்றார்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அந்தக் கிராமத்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில், உயர்தர வகுப்பு கற்கைகளுக்காக உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக கணேஸ்வரன் வேலாயுதம். தெரிவித்தார்.
இந்தக் கணனி வகுப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தினால் மூன்று கணனிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)