சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் கொடி ஏற்றிவைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இன்று நாம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பல நாற்றாண்டுகளி்ல் நாம் சாதித்ததை நினைத்து பெருமை அடைய வேண்டும். இருப்பினும் இன்னும் அதிக பணிகள் நம்முன் உள்ளன. நமது சுதந்திரம் கடுமையான போராட்டத்திற்கு பின் கிடைத்தது. சுதந்திரம், இந்திய மக்களின் தியாகம், தைரியம், விடாமுயற்சி காரணமாக கிடைத்தது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் நம் முன் இல்லை. இருப்பினும், அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்பு நம்முன் உள்ளது. இது அவர்கள் எதற்காக போராடினார்களோ அவற்றின் மதிப்பு, கொள்கைகளை நம்மிடம் விளக்குகிறது.
நமது நாட்டை வழிநடத்தி செல்கிறது. இங்கிலாந்திடமிருந்து பெற்ற சுதந்திரத்தை மட்டும் நாம் கொண்டாடவில்லை. சமநிலையற்றதன்மை மற்றும் பாரபட்சம், நமது வாழ்க்கையை சுதந்திரமாக தேர்வு செய்யவும், அனைத்து வாய்ப்புகள் கிடைக்கும் சமுதாயத்தை உருவாக்கவும் நாம் மேற்கொண்டுள்ள உறுதிமொழியை கொண்டாட வேண்டும். சமீப காலமாக, அடக்குமுறை சக்திகள், நமது சுதந்திரத்திற்கு மிரட்டலாக உள்ளதை நாம் பார்த்து வருகிறோம். சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது.இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமாக வாழவும், கவுரவமாக இருக்கவும், தங்களது கருத்துக்களை வெளிப்படையாககூறவும் உரிமையுள்ளது.
இந்தியாவில் அனைவரும் பயமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது இந்தியர்களாகிய நமது கடமையாகும். பிரிவினை மற்றும் அடக்குமுறை அமைப்புகளுக்கு அடிபணியாமல், நமது கருத்துகளை வெளிப்படையாக உலாவ விட வேண்டும். இவர்களுக்கு நாம் எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன். இந்த உண்மைக்காக எப்போதும் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 commentaires :
Post a Comment