8/25/2016

மீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்

உலக வங்கி தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் ஜிம் யோங் கிம்மை, நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல்லியூ கூறுகையில், உலக வங்கியின் தலைவராக தனது பதவிக்காலத்தில் பணிகளை திறம்பட செய்தவர் ஜிம் யாங். தற்போது உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ள பல சவால்களை சமாளித்தும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பருவமழை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் ஈடுபட்டார். முதல் பதவிக்காலத்தில், சிறப்பாக பணியாற்றிய ஜிம் யாம் கிம்மை மீண்டும் தேர்வு செய்வதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டு வந்த முக்கிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தத்தங்களை நிறைவேற்ற முடியும் என்றார்.

உலக வங்கியின் தலைவராக, தென் கொரியாவை சேர்ந்த ஜிம் யாங் கிம், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவியேற்றார். உலக வங்கியின் 12வது தலைவராக பதவியேற்று அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது

0 commentaires :

Post a Comment