8/17/2016

பிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தமிழீழத்துக்கான வரைப்படம் ஆகியவற்றுடன் கூடிய ரிசேட்டுகளை, கண்டியில் உள்ள புடவைகடையொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். விற்பனைக்கு எடுத்துவரப்பட்ட ஆடைகள் அடங்கிய மூடைகளிலேயே இந்த ரிசேர்ட் இருந்துள்ளது. இது தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த புடவைக்கடைக்கு விரைந்த பொலிஸார், கடை உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன-இந்த ரி சேர்ட்டுக்கள் பிரான்சில் தயாரிக்கப்படடவையாகும் என தெரிய வருகின்றது.

0 commentaires :

Post a Comment