8/31/2016

முன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் நடுவீதியில் கைது

கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமை(30) பிற்பகல் 3 மணியவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் பின் புறமாக விளங்கிட்டு கைது செய்யப்பட்டு, வானில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி - தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26) என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (30) வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால், ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விளங்கிட்டு கைது செய்யப்பட்டு வானில் ஏற்றிச்செல்லப்பாட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காது செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வித நடைமுறைகளும் இன்றி இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 commentaires :

Post a Comment