இலங்கையில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை என்ற கோரிக்கை கிழக்கு மாகாண சபையிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக வியாழக்கிழமை அவைத் தலைவர் சந்திரதாஸ் கலப்பதி தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான கோ. கருணாகரம் இது தொடர்பான பிரேரனையொன்றை முன்வைத்திருந்தார்.
''கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணிக்கு பொறுப்பாகவிருந்த தமிழினி உட்பட 100-க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மர்மமான முறையில் இறந்து கொண்டிருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
சுமார் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு காணப்படும் சுகவீனத்தை மருத்துவ பரிசோதனை மூலம் உண்மை நிலை கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என அவரது அந்த பிரேரனையில் கூறப்பட்டிருந்தது.
தனது பிரேனையை முன் வைத்து உரையாற்றிய அவர், ''புனர்வாழ்வு முகாம்களில் இவர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும் தற்போது பேசப்படுகின்றது . அது மட்டுமல்ல அரசியலாகவும் இது மாறிவருகின்றது

0 commentaires :
Post a Comment