8/28/2016

பிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் விஜயகாந்த் புகைப்படத்தை ஒட்டியதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த 25ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஊரெல்லாம் போஸ்டர், பதாகை என ஒட்டி அமர்க்களப்படுத்தினர். இந்நிலையில், ஆரணி தே.மு.தி.க அணியினர் வைத்த பதாதை, சர்சையாக உலகம் முழுவதும் வெடித்துள்ளது. விஜயகாந்த் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பதாதை ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இருக்கும் புகைப்படம் ஒன்றில் பிரபாகரன் முகத்தை நீக்கிவிட்டு விஜயகாந்த் புகைப்படத்தை மார்பிங் செய்து வைத்திருக்கின்றனர். இந்த புகைப்படும் ஊடகங்களில் வெளியான நிலையில் உலக தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திருட்டு டிவிடி விவகாரத்தில் இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள பஞ்சாயத்தே ஓயாத நிலையில், தற்போது தேமுதிகவினரால் விஜயகாந்தும் வம்பில் மாட்டியுள்ளார்.

0 commentaires :

Post a Comment