தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் விடுதலையானார். அரசியல் பழி வாங்கல் காரணமாக பொய் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்கட்சியின் (TMVP) தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் அரசியல் பழி வாங்கல் காரணமாக ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் தொடர்பு படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இருவரின் கைதுகள் காரணமாக மந்த கதியில் இருந்த கட்சியின் செயல்பாடுகள் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பூ.பிரசாந்தனின் விடுதலையை ஒட்டி தீவிரமாக முடுக்கி விடப்படுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவரது விடுதலையின் காரணமாக மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடும் கட்சி போராளிகளும்,உறுப்பினர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மட்/ வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமையகத்தில் கூடிவருகின்றனர்.

0 commentaires :
Post a Comment