8/24/2016

மத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்கு பேர் பலி

மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுமேலோட்டமான நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது. பெருஜியாவிற்கு அருகில் உள்ள நோர்சா நகரத்திற்கு அருகில் நில நடுக்கத்தின் மையப்புள்ளி உள்ளது.இத்தாலிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, அருகிலுள்ள அமத்ரைஸ் நகரத்தின் மேயர் பேசுகையில், சில கட்டடங்கள்
சரிந்ததுவிட்டன என்றும் மக்கள் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். பாதி நகரமே சேதமடைந்துவிட்டது என்றார் அவர்.
உள்நாட்டு பாதுகாப்பு முகமையை சேர்ந்தவர்கள் கூறுகையில் நில நடுக்கம் தீவிரமாக இருந்ததாகவும், பல இடங்களில் கட்டடங்கள் சரிந்துள்ளன என்றும் தெரிவித்தனர்.
தொலைவில் உள்ள வெனிஸ் மற்றும் இத்தாலியின் தலைநகர் ரோமிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
பிரதமர் மெட்டையோ ரென்ஸி தனது அரசு நாட்டின் மீட்பு சேவைகளோடு தொடர்பில் உள்ளது என்று கூறினார்.

0 commentaires :

Post a Comment