8/17/2016

இலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி

17ஆகஸ்ட், 2016 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பின் வடக்கில் சுமார் 260கி.மீ. தொலைவில் உள்ள செட்டிகுளம் பகுதியில், ஒரு ரயிலில் அடிபட்ட யானையின் உடலை பார்க்க மக்கள் குவிந்தனர்.
இலங்கையில் வணக்கத்துக்குரியதாக கருதப்படும் யானைகள் விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்களில், இலங்கையின் வடக்கில் நடந்த மிகச் சமீபத்திய இந்த சம்பவத்தில், ஒரு பயணிகள் ரயில் மோதி இந்த யானை மற்றும் மூன்று யானை குட்டிகள் கொல்லப்பட்டன.
இந்த யானைக் கூட்டம், காட்டுப் பகுதியின் வழியாக செல்லும், புதிதாக மேம்படுத்தப்பட்ட ரயில் தடம் ஒன்றை தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
இலங்கையில், 1900ல் 12 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை வெறும் 7 ஆயிரமாகக் குறைந்து விட்டது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து இலங்கையின் வனத்துறை இயக்குனர் பத்திரத்ன பேசுகையில், ரயில்வே அதிகாரிகளிடம் யானைகளின் இறப்புகள் குறித்து விவாதிக்கப் போவதாகவும், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ரயில்களில் சிறப்பு காமராக்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment