8/29/2016

கிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரிவு

292பேர் தமிழர்முஸ்லிம்கள் : 98பேர் சிங்களவர்கள்


காரைதீவு நிருபர் சகா


Résultat de recherche d'images pour "கிழக்கு மாகாணப்பாடசாலைகளில்"கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் நிலவும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமுகமாக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
...
கணித விஞ்ஞான ஆங்கில பட்டதாரிகளையும் ஆங்கில டிப்ளோமாதாரிகளையும் ஆசிரியசேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் மொத்தமாக 390பேர் சித்திபெற்றுள்ளனர்.
இவர்களில் 292பேர் தமிழ்மொழிமூல தமிழ்மற்றும் முஸ்லிம்களாகவும் 98பேர் சிங்களவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதிய ஆசிரியர்பிரமாணக்குறிப்பின்படி மற்றுமொரு பிரயோக பரீட்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதன்பின்னர் அதிலும் சித்திபெறுபவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(அ) தரம் 3-1(இ) ஆகிய ஆசிரியர் பதவிகளில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
விஞ்ஞானப்பட்டதாரிகள் 157பேர்:
விஞ்ஞானப்பட்டதாரிகள் 157பேர் தெரிவாகியுள்ளனர். இவர்களில் தமிழ்மொழிமூலம் 116பேரும் சிங்களமொழிமூலம் 41பேரும் தெரிவாகியுள்ளனர்.
அதிலும் தெரிவான தமிழ்மொழிமூல 116பட்டதாரிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 59பேரும் அம்பாறை மாவட்டத்தில் 37பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 20பேரும் தெரிவாகியுள்ளனர்.
கணிதப்பட்டதாரிகள் 66பேர்:
கணிதப்பட்டதாரிகள் 66பேர் தெரிவாகியுள்ளனர்.இவர்களில் தமிழ்மொழிமூலம் 56பேரும் சிங்களமொழிமூலம் 10பேரும் தெரிவாகியுள்ளனர்.
அதிலும் தெரிவான தமிழ்மொழிமூல 56பட்டதாரிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14பேரும் அம்பாறை மாவட்டத்தில் 35பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 07பேரும் தெரிவாகியுள்ளனர்.
ஆங்கிலஆசிரியர்கள் 167பேர் தெரிவு:
ஆங்கில பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 167பேர் தெரிவாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆங்கிலமொழிமூலமே தோற்றியிருந்தனர்.ஆங்கிலமொழிமூலமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் இனரீதியாகப்பார்க்கின்றபோது 47சிங்களவர்களும் 120தமிழ்முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
கணித விஞ்ஞான பட்டதாரிகள் அனைவரும் கிழக்குமாகாணத்தைச்சேர்ந்தவர்களாகவிருந்தபோதிலும் ஆங்கில மொழிமூலம் தோற்றிய தெரிவானோரில் சிலர் வெளிமாகாணத்தைச்சேர்ந்தவர்களுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment