8/25/2016

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்! *மனைவி உடலை 10 கி.மீ., தூக்கிச் சென்ற தலித் மகன்

ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மஜ்கி என்பவரின் மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆகஸ்ட் 23ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. வசதி இல்லாதவர்கள் இறந்தவரின் உடலை இலவசமாக கொண்டு செல்வதற்காக அரசு மருத்துவமனைகளில் மகாபிரயாணா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக மருத்துவமனை உதவியை மஜ்கி நாடி உள்ளார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

இதனால் மனைவியின் உடலை துணியில் சுற்றி, தனது தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் கலெக்டரை தொடர்பு கொண்டு கேட்டதை அடுத்து உடனடியாக மஜ்கிக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிசடங்கிற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தாசில்தாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment