அரசியல் பழி வாங்கல் காரணமாக பொய் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
8/31/2016
| 0 commentaires |
பூ.பிரசாந்தன் இன்று மாலை விடுதலை ஆகி வீடு திரும்பினார்.
அரசியல் பழி வாங்கல் காரணமாக பொய் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
| 0 commentaires |
முன்னாள் போராளி வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் நடுவீதியில் கைது
குறித்த இளைஞன், நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (30) வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால், ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விளங்கிட்டு கைது செய்யப்பட்டு வானில் ஏற்றிச்செல்லப்பாட்டார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காது செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வித நடைமுறைகளும் இன்றி இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
8/30/2016
| 0 commentaires |
இவர் தோழர் திருவுடையான்.
கச்சேரிகளில் பக்திப் பாடல்களைப் பாடிக் கொன்டிருந்தவரை அறிவொளி இயக்கம் ஆகர்ஷித்து முற்போக்குப் பாடகனாக்கியது.
பின்னர் மக்களுக்காக வீதிகளில் பாடினார்.
போராட்டக் களங்களில் பாடினார்.
...
என்ற பாடலை இவர் பெருங்குரலெத்து பாடினால் பாமரருக்கும் மொழியுணர்வு பிறக்கும்.
ஆத்தா ஒஞ் சேல . . . . . பாடினால் தாயின் அன்பு பற்றிய ஞாபகத்தில் அழுகை வரும்.
நான் எப்போது சங்கரன்கோவிலுக்கு போனாலும் கட்சி ஆபிஸ்க்கு போய்விடுவேன். இரவு நேரத்தில் திருவுடையான் வருவார்.
தோழர்கள் திருவுடையான் , முத்துப்பாண்டி ஆகிய இருவரும் அடிக்கும் காமெடிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள்.
திருவுடையான் எங்களுக்காகவே எனக்கும் தம்பி பேச்சிமுத்துக்கும் பாடிக்காட்டுவார்.
தோழர்.நல்லுசாமி வேணுமென்றே அவரது இடுப்பில் விரலால் இடித்து விடும்போது துள்ளிக் குதித்து ஓடுவார்.
இனி சங்கரன்கோவில் கட்சி ஆபிஸ்க்கு போனால், அவர் அங்கு வர மாட்டார். கின்டல், கேலி இருக்காது. பாட்டு சத்தம் கேட்காது. தெத்துப்பல் தெரிய 'ஏ என்னப்பா' என்று என்னை அழைக்கும் அந்த பாசக்குரல் இனி என்னை வாஞ்சையுடன் வரவேற்காது.
ஆம். இன்று திருவுடையான் இறந்துவிட்டார்.
அழுகை வராததுபோல நடித்தாலும் மீறி வெடிக்கிறது அழுகை
நன்றி முகநூல் Prabhu Jeevan.
| 0 commentaires |
மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம்; சட்டசபையில் தீர்மானம்
முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகம் முழுவதும் இதன் மக்கள் வங்க மொழியினர் என்று அறியப்படுவர்; மேலும் எளிமையான பெயரில் வரலாற்று மற்றும் கலாசார அதிர்வுகள் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட பெயர் மாற்றம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
8/29/2016
| 0 commentaires |
கிழக்கில் ஆசிரியர்போட்டிப்பரீட்சையில் 390பேர் தெரிவு
காரைதீவு நிருபர் சகா
கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் நிலவும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமுகமாக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
...
இவர்களில் 292பேர் தமிழ்மொழிமூல தமிழ்மற்றும் முஸ்லிம்களாகவும் 98பேர் சிங்களவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புதிய ஆசிரியர்பிரமாணக்குறிப்பின்படி மற்றுமொரு பிரயோக பரீட்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதன்பின்னர் அதிலும் சித்திபெறுபவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(அ) தரம் 3-1(இ) ஆகிய ஆசிரியர் பதவிகளில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
விஞ்ஞானப்பட்டதாரிகள் 157பேர்:
விஞ்ஞானப்பட்டதாரிகள் 157பேர் தெரிவாகியுள்ளனர். இவர்களில் தமிழ்மொழிமூலம் 116பேரும் சிங்களமொழிமூலம் 41பேரும் தெரிவாகியுள்ளனர்.
அதிலும் தெரிவான தமிழ்மொழிமூல 116பட்டதாரிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 59பேரும் அம்பாறை மாவட்டத்தில் 37பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 20பேரும் தெரிவாகியுள்ளனர்.
கணிதப்பட்டதாரிகள் 66பேர்:
கணிதப்பட்டதாரிகள் 66பேர் தெரிவாகியுள்ளனர்.இவர்களில் தமிழ்மொழிமூலம் 56பேரும் சிங்களமொழிமூலம் 10பேரும் தெரிவாகியுள்ளனர்.
அதிலும் தெரிவான தமிழ்மொழிமூல 56பட்டதாரிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14பேரும் அம்பாறை மாவட்டத்தில் 35பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 07பேரும் தெரிவாகியுள்ளனர்.
ஆங்கிலஆசிரியர்கள் 167பேர் தெரிவு:
ஆங்கில பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 167பேர் தெரிவாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆங்கிலமொழிமூலமே தோற்றியிருந்தனர்.ஆங்கிலமொழிமூலமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் இனரீதியாகப்பார்க்கின்றபோது 47சிங்களவர்களும் 120தமிழ்முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
கணித விஞ்ஞான பட்டதாரிகள் அனைவரும் கிழக்குமாகாணத்தைச்சேர்ந்தவர்களாகவிருந்தபோதிலும் ஆங்கில மொழிமூலம் தோற்றிய தெரிவானோரில் சிலர் வெளிமாகாணத்தைச்சேர்ந்தவர்களுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*நன்றி முகநூல்
| 0 commentaires |
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் விடுதலையானார்
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்கட்சியின் (TMVP) தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் அரசியல் பழி வாங்கல் காரணமாக ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் தொடர்பு படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இருவரின் கைதுகள் காரணமாக மந்த கதியில் இருந்த கட்சியின் செயல்பாடுகள் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பூ.பிரசாந்தனின் விடுதலையை ஒட்டி தீவிரமாக முடுக்கி விடப்படுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவரது விடுதலையின் காரணமாக மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடும் கட்சி போராளிகளும்,உறுப்பினர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மட்/ வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமையகத்தில் கூடிவருகின்றனர்.
8/28/2016
| 0 commentaires |
ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரின் அடாவடித்தனம் முதலமைச்சர் அவமானப்படுத்தப்பட்டார்.
அதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், கட்டடத்தைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர், அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே அங்கு வந்து பலவந்தமாக கட்டடத்தை மக்களிடம் கையளிப்பதற்கு முயற்சித்தனர்.
வாக்குவாதங்களின் பின்னர் அமைச்சர் தயா கமகே கட்டடத்தொகுதியின் பதாகையைத் திறந்து வைத்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற 5 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு, கடதாசியில் மூடப்பட்டிருந்த பதாகையையே திறக்க நேரிட்டது.
| 0 commentaires |
பிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்
8/27/2016
| 5 commentaires |
லண்டன் பத்மநாப ஐயர் என அறியப்படும் பத்மநாபர் பவளவிழா பகிஷ்கரிக்கப்படுகின்றது?
மலர் தொகுப்பாளர்களான மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா இருவரும் "நூலை ஆராதித்தல் பத்மநாபம் 75' என்று பெயர் மலருக்கு பெயரிட்டுள்ளனர்.ஆனால் "நூலை ஆராதித்தல் : பத்மநாப ஐயர் 75' என்று வரவேண்டுமென பத்மநாபர் வாதிட்டுள்ளார். தொகுப்பாசிரியர் இருவரும் "இன்றைய சூழலில் ”ஐயர்” என்று வந்தால் உங்களுடைய பெயர்தான் இலக்கிய உலகில் அடிபட்டுப்போகும், தொகுப்பாசிரியர்களாகிய நாங்கள்தான் பதில் சொல்லவேண்டிவரும்" என்று எடுத்து சொல்லியும் அவர் தனது சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்க வில்லை என தெரிய வருகின்றது.
இதன் காரணமாக "நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75"என்றே பவளவிழா மலர் அச்சாகியுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வை பலர் பகிஷ்கரிப்பதாகவும் தொகுப்பாளர்களான மு.நித்தியானந்தன்,ஓவியர் கே. கிருஸ்ணராஜா இருவரும் விழா நடக்கும் வேளையில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகின்றது. மேலும் அவரது தனிப்பட்ட வாழ்வில் எப்படி அவர் சாதிமானாக வாழ்கின்றார் என்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. ஆனாலும் அவற்றை நாம் தற்போது பிரசுரிக்கவில்லை.
(எமக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இக்குறிப்புக்கள் வெளியிடப்படுகின்றன மாறாக சம்பந்தப்பட்டோர் ஏதாவது திருத்தங்களையோ மறுப்புகளையோ எமக்கு தெரிவித்தால் அவை எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்-*உண்மைகள் நிர்வாகம் )
8/26/2016
| 0 commentaires |
தனிப்பட்ட காரணங்களுக்காக பலிக்கிடாவாக்கப்படும் முஸ்லிம் சமூகம்
செயலாளர் ஹஸன் அலி பொதுவாகவே மக்கள் சார்பான நிலைப்பாட்டை கொண்டவராக செயல்பட்டு வந்ததால் மக்கள் மத்தியில் தவி...சாளர் மீதுள்ள அதிருப்தி அளவுக்கு ஹசன் அலி மீது இருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துக்களில் இருந்து ஒரு விடையம் தெளிவாகியுள்ளது.
மஹிந்தவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு தலைவரின் தனிப்பட்ட காரணங்களே இருந்திருக்கின்றன என்பது அப்பட்டமாக வெளியாகியுள்ளது.
மொத்தத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதில் இருந்து பொது பல சேனையின் அடாவடித்தனங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது வரையான அனைத்துக்கும் தனிநபர்களின் குற்றங்களை மறைப்பதே பிரதான காரணியாய் இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தன்னை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய இனி எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என தலைவர் மேடைகளில் கூறித்திரிந்ததெல்லாம் தவிசாளர் மீது மக்களின் எதிர்ப்பை உண்டுபண்ணுவதற்கே என்பது புலனாகிவிட்டது.
யாரின் மானத்தை காப்பாற்ற யார் சொல்லி மஹிந்தவுடன் இணைய நேர்ந்தது என்பதை தலைவரை சுட்டிக்காட்டி தவிசாளர் உயர்பீட கூட்டத்தில் கேட்டதிலிருந்தே நீண்டகாலமாய் தவிசாளர் மீதிருந்த பழி நீங்க ஆரம்பித்துள்ளது.
என்றாலும் தனிப்பட்ட குற்றங்களை மறைப்பதற்கும் தப்பித்துக்கொள்வதற்கும் முஸ்லிம் சமூகத்தை நெருப்புக்கங்குகளையும் விட மோசமான அரசியல் சூழலுக்குள் தயவின்றி தள்ளிவிடக்கூடிய தலைவர்களை நம்பிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலம் முஸ்லிம்கள் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ முடியும்?
=அரசியன்=
*நன்றி முகநூல்
| 0 commentaires |
தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அந்தக் கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர்.
அங்கு வரும் மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாக அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கேம்பர் கடற்கரையில் போதிய உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விமர்சனம் செய்துள்ளன.
அந்தக் கடற்கரை பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ராதர் கவுன்சில் உறுப்பினர் சாலி ஆன் ஹார்ட் கூறுகிறார்.
| 0 commentaires |
வடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நிதி திரும்பி செல்கின்றது
| 0 commentaires |
ஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகள்
| 0 commentaires |
சிங்களமயமாக்கலைக் கண்டித்து வடக்கில் பேரணி
தமிழ்மக்கள் பேரவை
தமிழர்தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் பொருட்டு புதிய சிங்கள குடியேற்றங்களும் விகாரைகளும் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கண்டனப்பேரணி ஓன்று எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்துவதற்கு தமிழ்மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது. புத்தர் சிலை அமைப்பு, விகாரை நிர்மாணிப்பு, இராணுவக்குடியிருப்புக்கள் என தமிழர் வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் இச்செயற்பாடு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வடமாகாணத்திலும் இவ்வாறான செயற்பாடுகிளில் ஈடுபட்டுள்ளமையானது தமிழ் மொழி, கலாசார பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாடென மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மக்களுக்குத் தேவையானதும் சொந்தமான மக்களின் காணிகளை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருவதில் அரச படைகள் குறியாக உள்ளன, என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் சிங்கள பௌத்த மயமாக்கலினை நிறுத்தக் கோரியும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரியும் இராணுவத்தினரையும் வெளியேற்றுவதற்கான தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்ய்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை நிபந்தணையின்றி விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் ஒரு சமஷ்டி ஆட்சி உருவாகவும் வேண்டி இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.
| 0 commentaires |
கிழக்கிலும் ஒரு கோமாளி சிவாஜிலிங்கம்
கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக வியாழக்கிழமை அவைத் தலைவர் சந்திரதாஸ் கலப்பதி தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான கோ. கருணாகரம் இது தொடர்பான பிரேரனையொன்றை முன்வைத்திருந்தார்.
''கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணிக்கு பொறுப்பாகவிருந்த தமிழினி உட்பட 100-க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மர்மமான முறையில் இறந்து கொண்டிருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
தனது பிரேனையை முன் வைத்து உரையாற்றிய அவர், ''புனர்வாழ்வு முகாம்களில் இவர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும் தற்போது பேசப்படுகின்றது . அது மட்டுமல்ல அரசியலாகவும் இது மாறிவருகின்றது
| 0 commentaires |
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு
மோப்பநாய்கள் சகிதம் அப் பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் சுலைமான் அணிந்திருந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டதுடன், இரத்தக்கரைகள் படிந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இதேவேளை, காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்கவேண்டுமாயின் சுமார் 2கோடி ரூபாவை கப்பமாக தரவேண்டுமென கடத்தல்காரர்கள் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இவர் தொடர்பில் தகவல் தருமாறு அவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்ததுடன், வர்த்தகர்கள் பலரிடமும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்றுப் புதன்கிழமை (24) மாலை, வனெல்ல, ஹெம்மாத்தகம பிரதான வீதியில் இனந்தெரியாத இளைஞனின் சடலமொன்று கிடப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைந்துள்ளது. அவ்விளைஞன், டெனிம் உடுத்தியிருப்பதாகவும், மொஹமட் ஷகீம் சுலைமானின் சடலமாக இருக்கலாம் எனச் சந்தேகித்த பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவித்தனர். சடலமிருந்த இடத்துக்கு வருகை தந்த உறவினர்கள், சடலம் மொஹமட் ஷகீம் சுலைமானது என அடையாளம் காட்டியுள்ளனர்.
8/25/2016
| 0 commentaires |
மீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம்
இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல்லியூ கூறுகையில், உலக வங்கியின் தலைவராக தனது பதவிக்காலத்தில் பணிகளை திறம்பட செய்தவர் ஜிம் யாங். தற்போது உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ள பல சவால்களை சமாளித்தும், ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பருவமழை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் பணியில் ஈடுபட்டார். முதல் பதவிக்காலத்தில், சிறப்பாக பணியாற்றிய ஜிம் யாம் கிம்மை மீண்டும் தேர்வு செய்வதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டு வந்த முக்கிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தத்தங்களை நிறைவேற்ற முடியும் என்றார்.
உலக வங்கியின் தலைவராக, தென் கொரியாவை சேர்ந்த ஜிம் யாங் கிம், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவியேற்றார். உலக வங்கியின் 12வது தலைவராக பதவியேற்று அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது
| 0 commentaires |
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்! *மனைவி உடலை 10 கி.மீ., தூக்கிச் சென்ற தலித் மகன்
இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. வசதி இல்லாதவர்கள் இறந்தவரின் உடலை இலவசமாக கொண்டு செல்வதற்காக அரசு மருத்துவமனைகளில் மகாபிரயாணா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக மருத்துவமனை உதவியை மஜ்கி நாடி உள்ளார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இதனால் மனைவியின் உடலை துணியில் சுற்றி, தனது தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் கலெக்டரை தொடர்பு கொண்டு கேட்டதை அடுத்து உடனடியாக மஜ்கிக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிசடங்கிற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தாசில்தாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
| 0 commentaires |
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் போவதில்லை: இலங்கை அமைச்சர்
இன்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய அதிகாரிகளும், இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் அத்துமீறிய வகையில் இலங்கைக் கடற்பரப்பில் வந்து மீன்பிடிப்பதுடன், இங்குள்ள கடல் வளங்களை அழிப்பதை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 130-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர் படகுகளை நாங்கள் விடுவிக்கப் போவதில்லை என்றார் அமைச்சர் மகிந்த அமரவீர.
இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இருநாட்டு வெளி விவகார அமைச்சர்கள், மீன்பிடித்துறை அமைச்சர்கள் மட்டத்தில் அடுத்த மாதம், புதுடில்லியில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலையும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இரு நாட்டு அரசுகளுக்கிடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மயிலிட்டி துறைமுகம்
கடற்படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகமாகிய மயிலிட்டி துறைமுகத்தை மீளக் கையளிக்குமாறு கோரி மீனவர் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருப்பதை உறுதிபடுத்திய அமைச்சர் மகிந்த அமரவீர, இது தொடர்பாக கடற்படையினரிடம் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மயிலிட்டி துறைமுகத்தை மீளக் கையளிப்பதில் பிரச்சினைகள் இருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருடைய கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தி விரைவில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
| 0 commentaires |
இத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு
இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர்.
மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா , லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலிய செஞ்சிலுவை அமைப்பு 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடிழந்தவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரோம் நகருக்கு வட கிழக்கே, 100 கி.மீ. தொலைவில் புதன்கிழமையன்று அதிகாலை 3.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது
8/24/2016
| 0 commentaires |
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம்- இதுவரை பதின் நான்கு பேர் பலி
உள்நாட்டு பாதுகாப்பு முகமையை சேர்ந்தவர்கள் கூறுகையில் நில நடுக்கம் தீவிரமாக இருந்ததாகவும், பல இடங்களில் கட்டடங்கள் சரிந்துள்ளன என்றும் தெரிவித்தனர்.
தொலைவில் உள்ள வெனிஸ் மற்றும் இத்தாலியின் தலைநகர் ரோமிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
பிரதமர் மெட்டையோ ரென்ஸி தனது அரசு நாட்டின் மீட்பு சேவைகளோடு தொடர்பில் உள்ளது என்று கூறினார்.
8/22/2016
| 0 commentaires |
மரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ஒலிம்பிக் அமைப்பு
ஆனால் இப்போது ஏன் இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்து மற்றும் . தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து உடலுக்கு அளிக்காவிட்டால் கிராம்ப் என்ற தசைப்பிடிப்பு ஏற்படும். அது மட்டுமல்ல.. அதீத நீரிழப்பால் மரணமும் கூட சம்பவிக்கும்.
அதுவும் பிரேசில் போன்ற நீ வெப்பமான இடங்களில் இது விரைவாக நடக்கும். இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள் செய்திருப்பார்கள்.
ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்ககும்.
தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவை உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள். இது அடிப்படை.
ஒலிம்பிக்கிலும் இப்படி இருந்தது. அதாவது மற்ற நாட்டினர் இப்படியோர் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். இந்தியா சார்பில் இந்த அடிப்படை வசதியைக்கூட செய்யவில்லை.
| 0 commentaires |
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
8/19/2016
| 0 commentaires |
'67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை'- கணக்காய்வு திணைக்களம்
67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல், வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 784 மில்லியன் ரூபாய் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.
அதேபோன்று 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இயங்கும் வடமாகாண சபையின் திணைக்களங்கள், அமைச்சு, அமைச்சின் அலுவலகங்கள், என்பன தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 28 கட்டடங்கள் உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப் பட்டு பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ளது.
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி பல தடவைகள் நான் சபை அமர்வில் பேசிய போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதெல்லாம் அவ்வாறு இல்லை என என்னுடன் எதிர்த்து வாதிட்டீர்கள். ஆனால், தற்போது கணக்காய்வு திணைக்கள அறிக்கை சகலதையும் வெளிப்படுத்தி உள்ளது' என தவராசா மேலும் கூறினார்.
| 0 commentaires |
துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும்
அந்த அறிக்கையின் பிரகாரம் நகர அபிவிருத்தி திட்டத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட உள்ள பிரதான பிரதிகூலங்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டிருக்கும்.
துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் முற்று முழுதாக நீதிக்கு முரணான வகையிலேயே உருவாக்கப்பட உள்ளது. மேலும் அரசாங்கத்துக்கு சமுத்திரங்களை உள்ளடக்கி அபிவிருத்திகளை முன்னெடுக்க எந்த விதமான உரிமைகளும் கிடையாது. அது நாட்டின் சுற்று சூழலுக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதே நேரத்தில் கடல் சார் உயிரினங்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் கடலோர பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து 72 முறைப்பாடுகள் நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. எனவே இது தொடர்பாக தெளிவான அறிக்கையொன்று எதிர்வரும் திங்கடகிழமை மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்.
மத்திய வங்கியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிணை முறிகளுடன் தொடர்புடைய பிரதான திருடர்களை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு போதும் நீதி நிலை நிறுத்தப்பட வில்லை. பிணை முறி சம்பவத்துடன் தொடர்புடையவரை விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் மைத்திரி ரணில் இணைந்த தேசிய அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு போதும் நீதி நிலை நிறுத்தப்பட வில்லை. எனவே இது தொடர்பாக உடனடியாக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
யுத்தம் நிறைவுக்கு வந்து 7 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கு மக்கள் சுதந்திரமான சூழ்நிலையை அனுபவிக்க வில்லை. அது மட்டுமல்லாமல் உரியவகையான பாதுகாப்பு வசதிகளும் குறித்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை. கடந்த அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வடக்கு மக்களுக்கு வழங்கியிருந்தது ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒரு வீத வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் வடக்கு மக்களின் வாழ்வில் சுதந்திரமான நிலைமை காணப்பட வில்லை. இன்னமும் வடக்கு மக்கள் பல சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே அந்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும்.
நல்லாட்சி நல்லாட்சி என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒரு சிலர் மார்தட்டிக்க கொள்கின்றனர். ஆனால் வடக்கு மக்களின் பிரச்சினைகள் அவர்களின் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வு காண முன்வராமை கவலையளிக்கிறது. இது நல்லாட்சிக்கான அடையாளம் இல்லை. எனவே உடனடியாக அரசாங்கம் வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
| 0 commentaires |
மைத்ரிபால சிறிசேன முடிவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு எம்.பி. ராஜிநாமா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான டலஸ் அளஹப்பெரும கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த டலஸ் அளஹப்பெரும, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிக்க கட்சித் தலைமை எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இன்று சுதந்திரக் கட்சி தனது முக்கிய கோட்பாடுகளுக்கு மாறாக செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய டலஸ் அலஹப்பெரும, அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே தனது மாவட்ட அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்ய தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
8/18/2016
| 0 commentaires |
கொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் கிடையாது; நல்லாட்சி நாயகன் ராஜித சேனாரட்ன
இல்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நல்லாட்சி நாயகன்
ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தம் கருத்து தெரிவிக்கையில்,
கொக்கிளாய் ஒரு தமிழர் இடம் என்று கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் கிடையாது, அதற்கு காரணம் இந்த விகாரை பல வருடங்களாக இங்குதான் காணப்படுவதாக ராஜித குறிப்பிட்டார்.
கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு கடந்த கால ஆட்சியில் ராஜித சேனாரட்ன தலைமையில் நீர் விநியோகம், பாதை புனரமைப்பு என்பன இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் விகாரையை அகற்ற யாருக்கும் உரிமை கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் இருக்கக்கூடிய சிலர் இவ்வாறான கடின கருத்தினை முன்வைக்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொக்கிளாய் தமிழர் வாழும் இடமாக இருந்தாலும் மத வழிபாட்டுக்குரிய தலம் என்பதனால் இதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.
| 0 commentaires |
பல்லாண்டு வாழ்க
சந்திரகாந்தன் ரணில்-தமிழரசுக்கட்சி கூட்டரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அரசியல் பழிவாங்கல் காரணமாக கடந்த பத்து மாதங்களாக எவ்வித விசாரணையும் இன்றி பிணையும் மறுக்கப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8/17/2016
| 0 commentaires |
வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது- வட. மா.சபை உறுப்பினர் தவநாதன்
| 0 commentaires |
இலங்கையில் ரயில் மோதி 4 யானைகள் பலி
இலங்கையில் வணக்கத்துக்குரியதாக கருதப்படும் யானைகள் விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்களில், இலங்கையின் வடக்கில் நடந்த மிகச் சமீபத்திய இந்த சம்பவத்தில், ஒரு பயணிகள் ரயில் மோதி இந்த யானை மற்றும் மூன்று யானை குட்டிகள் கொல்லப்பட்டன.
இந்த யானைக் கூட்டம், காட்டுப் பகுதியின் வழியாக செல்லும், புதிதாக மேம்படுத்தப்பட்ட ரயில் தடம் ஒன்றை தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
இலங்கையில், 1900ல் 12 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை வெறும் 7 ஆயிரமாகக் குறைந்து விட்டது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து இலங்கையின் வனத்துறை இயக்குனர் பத்திரத்ன பேசுகையில், ரயில்வே அதிகாரிகளிடம் யானைகளின் இறப்புகள் குறித்து விவாதிக்கப் போவதாகவும், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ரயில்களில் சிறப்பு காமராக்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்
| 0 commentaires |
பிரான்சில் இருந்து கண்டிக்கு சென்ற பிரபாகரன் கைது.
| 0 commentaires |
சு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை (17) முற்பகல் இடம்பெற்றது.
புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேருமே ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
- See more at: http://www.tamilmirror.lk/179704/ச-க-அம-ப-ப-ளர-கள-பதவ-கள-ல-ர-ந-த-பலர-ந-க-கம-#sthash.nnU5Cv6q.dpuf
8/16/2016
| 0 commentaires |
துயர் பகிர்வு
,நன்றி முகநூல் *பெளசர்