7/11/2016

இலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அண்மையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாட் வரி (மதிப்பு கூட்டப்பட்ட வரி) அதிகரிப்பினை உடனடியாக நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Résultat d’images pour vimal veeravansa


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வாட் வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஸ்ரீபவன் உட்பட முன்று நீதிபதிகள் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட வரி அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானதென்று தீர்ப்பளித்தனர்.
இதன்படி உடனடியாக சம்பந்தப்பட்ட வரி அதிகரிப்பினை நிறுத்துமாறு நீதிமன்றம் அசரசாங்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்தது.
இந்த மனு மீதான மேலதிக விசாரணை வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

0 commentaires :

Post a Comment