அரசாங்க தரப்பினர் உள்ளூராட்சி மன்றதேர்தல் குறித்து தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவில்லை. எனவே உள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் செய்யப்படுதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இவ்வார இறுதிக்குள் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுயாதீன மற்றும் நீதியான தேர்தலுக்கான அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு தரப்பினரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
மேலும், தற்போதைய தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் இன்று நடக்கும் நாளை நடக்கும் என வெவ்வேறு திகதிகளை அறிவித்து வருகின்றமையினால் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தான் தற்போது நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம் என்றார்.

0 commentaires :
Post a Comment