சாதிய விடுதலை இன்றி தேசிய விடுதலை இல்லை .ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதிலும் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடும் எமது தமிழ் சமூகம் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலான சாதிய ஒடுக்கு முறைகளையும் பாகுபாடுகளை தன்னுள் கொண்டுள்ளது என்பது வேதனைத்தரும் விடயமாகும்.சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் சாதிய வடிவங்களை பேணி வருகின்ற நம் தமிழர்கள் அதனை புகலிட நாடுகளுக்கும் எடுத்து சென்று பரப்பியதில் பேர் பெற்றவர்கள் ஆகும்.இந்த நிலையில் இந்த ஒடுக்குமுறை சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை கூட அடக்கிவாசிக்கும் நிலையில்தான் தமிழ் சிந்தனை மனோபாவம் இன்று வரை செயல்பட்டு வருகின்றது.
ஆனபோதிலும் குறிப்பாக வடக்கிலங்கையில் இந்த சாதிய கொடுமைகளுக்கு எதிரான ஒரு போராட்ட வரலாறு இருக்கின்றது என்பது முக்கியமானது.ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் ஆயுதம் ஏந்திய வகையில் இந்த சமநீதிக்கான போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இதில் பலர் தங்களது உயிரையே தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு.
இந்த போராட்டங்கள் சார்ந்து இலங்கையில் இதுவரை காலமும் இடம்பெற்றுவந்திருக்கும் சாதிய விடுதலைக்கான முன்னெடுப்புகளின்போதும் தமது உயிர் உடமைகளை இழந்து தம் வாழ்நாள் முழுக்க போராடிய போராளிகளை கெளரவ படுத்தும் முகமாகவும் அவர்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நினைவுகூரும் முகமாகவும் இந்த சமூக விடுதலை போராளிகள் நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.பிரான்சில் முதல் தடவையாக தலித் சமூக மேம்பட்டு முன்னணியினர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 commentaires :
Post a Comment