காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர். பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் எடுத்துக்கூறினார்.
காஷ்மீரி்ல், 60 பட்டாலியன் துணைப்படையினர் உள்ள நிலையில், கூடுதலாக 800 துணை ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவது காரணமாக, ஆப்ரிக்காவில் பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, தன்னுடன் வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை, இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே அனுப்பி வைத்துள்ளார்.
அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறுகையில், மனித உரிமைகளை இந்தியா மதிக்க வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வானி மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தில் இந்திய ராணுவம் அத்துமீறி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுயமாக உறுதியாக போராட்டம் நடத்தும் ஆயுதங்களின்றி போராட்டம் நடத்தும் மக்களை துன்புறுத்தக்கூடாது எனக்கூறியுள்ளார்.
காஷ்மீர் மக்களை துன்புறுத்தக்கூடாது எனவும், அங்கு இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.இந்நிலையில் ஈழத்தில் போது வாக்கெடுப்பு நடத்த கோரும் தமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரவேண்டும்.
0 commentaires :
Post a Comment