ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் வரும் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் முதலாவது மெதடிஸ்த ஆங்கில பாடசாலை என பெருமை பெற்றதும் இலங்கையில் 200 வருடங்கள் பழமைவாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 202வது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு எதிர் வரும் 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார் .
இதன் போது கல்லூரி வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கல்லூரி ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அடிகளாரின் நினைவு தூபியினையும் திறந்து வைக்கவுள்ளார்
இந்நிகழ்வினை முன்னிட்டு மத்திய கல்லூரியின் அதிபர் விமல்ராஜ் தலைமையில் கல்லூரியில் பல முன்னேற்பாட்டு புனர்நிர்மான பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த முன்னேற்பாட்டு புனர்நிர்மான பணி நடவடிக்கைகளில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து முன்னேற்பாட்டு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
0 commentaires :
Post a Comment