பஸ் கட்டணங்களை ஜூலை -மாதம் முதல் அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேயரட்ண நேற்று(01) தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நிலவும் அதிக வாகன நெரிசலுக்கு ஒரு மாதக்காலத்துக்குள் அரசு உரிய தீர்வொன்றினை பெற்றுதராவிடின் அதனால் ஏற்படும் எரிபொருள் விரய செலவீனமும் பஸ்கட்டண அதிகரிப்புடன் சேர்த்து அறவிடப்படுமென அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடலின் பின்னரே யூலை மாதமுதல் பஸ்கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய போக்குவரத்து திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக இறிவிக்கப்பட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு வேண்டுக்கோள் விடுத்திருந்தோம். ஆனால் தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கடந்த கால செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிப்பதாக இல்லை. அதனால் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடலுக்கு வருமாறு அறிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை நடாத்தியுள்ளோம்.
வாகன உதிரிப்பாகங்களின் விலையேற்றம், லீசிங் தவணைக் கட்டணங்களின் ஏற்பட்ட அதிகரிப்பு, வாகனத்துக்கான மாதாந்த வாரந்த செலவுகள், என்பவற்றை கருத்திற் கொண்டே பஸ் கட்டணங்களை யூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்தோம். அதுமட்டுமின்றி, வாகன நெரிசல் காரணமாக வருமானத்தை விட வாகனத்துக்கான செலவுகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகவே பஸ்கட்டணங்களுடன் சேர்த்து வாகன நெரிசலுக்கான ஒரு புதிய கட்டணத்தையும் சேர்த்து அறவிட தீர்மானித்துள்ளோம்.
அதற்கு அரசாங்கம் தடைகளை விதிக்குமானால் நீதியின் உதவியை நாட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment