6/19/2016

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!

நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் கையளிக்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்துள்ளார்....
இந்நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்றையதினம் (18) நடைபெற்றது. முன்பதாக நிகழ்விடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்தார்.


தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிழ்விடத்திலும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி காணொளியூடாகவும் புனரமைக்கப்பட்ட அரங்கை விளையாடடுதுறை சார்ந்தோரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
7 கோடி ரூபா இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கில் முதன்மை நிகழ்வாக ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவ மாணவிகள் கூடியிருந்து உலகின் இரண்டாவது யோகாசன தின நிகழ்வில் கலந்துகொண்டனர். சமநேரத்தில் இந்தியாவின் புதுடில்லியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் ஒன்றுகூடி யோகாசன நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதைத்தொடர்ந்து காணொளியூடாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சிங்ஹா, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிரமாணப்பணிகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டதுடன் இதற்காக அடிக்கல்லையும் நாட்டிவைத்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு விளையாட்டுத்துறைசார்ந்தோர், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment