சமூகமாற்றத்துடன் இணைந்த ஈழவிடதலைக்கு கைமாறு கருதாது உழைத்த மனிதர்.
உயர்ந்த வசிகரமான அந்த மனிதருக்கு ஸ்ராலின் என்று பெயரிட்டவர் ஈ.வெ.ரா பெரியார்.
ஒரு சட்டதரணியான ஸ்ராலின் அண்ணர் 75 முழுதாகவே சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.
மார்க்சியம்;- பெரியாரியம் இரண்டையுமே தனது வழிகாட்டல் கொள்கைககளாக வரிந்த கொண்டவர்.
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி பாரம்பரியத்தைச் சேர்ந்த எமக்கு கும்பகோணம் -தஞ்சாவூர் அதன் சுற்றயல் கிராமங்களில் ஒரு பெரும் ஆதரவுத் தளத்தை ஏற்படுத்தி தந்தவர்.
நீங்கள் ஆயிரம் என்ன பத்தாயிரம் பேர் வந்தாலும் அத்தனைபேருக்கும் இருப்பிடமும் -உணவும்- பாதுகாப்பும் வழங்குவேன் புன்முறுவலுடன் சாதாரண தன்னம்பிக்கையுடன் மலையென நின்று காரியமாற்றயவர்.
இனம்புரியாத வசீகரமும் ஈர்ப்பும் அவரின் வார்தைகளில் கலந்திருக்கும். அவர் தோழரே என அழைக்கும் போதும் அவரது நடைமுறைகளிலும் அது தெளிவாக பிரதிபலிக்கும். மிக மிக எளிமையான மனிதர் அவர்.
அவரது இறுதிப் 10 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடியபடி சமூகப் பணி செய்தார்
அவர் சவால்கள் -நெருகடிகள் -வறுமை என எல்லா நிலைகளிலும் எம்முடன் நின்றவர். தெம்பூட்டியவர். தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர்.
அவரின் குடும்பத்தினர்- உற்ற சுற்றத்தினர்- தோழர்கள்- ஊரவர்கள் எல்லோரும் எம்முடன் தோழமை நட்பு பாராட்டினார்கள்.
கும்பகோணத்தைப் பொறுத்தவரை ஈபிஆர்எல்எப் பாரம்பரியம் “ஊர் கூடி இழுத்த தேர்”;.
“இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோhம”; என்ற உணர்வை ஏற்படுத்தியவர் ஸ்ராலின் அண்ணை.
இன்னொரு நாட்டில் இருந்து அடைக்கலம் புகுந்த எமக்கு தஞ்சை தரணியையே திரட்டி ஆதரவு நல்கியவர்.
தோழர் நாபாவின் ஆத்மார்த்த தோழா-; நண்பர்.
முற்போக்கு-பெரியாரிய பகுத்தறிவு இயக்கம்- எமது போராட்டவரலாற்றின் பிரிக்கமுடியாத பாகம்.
சமூகம் பற்றிய அவரது பார்வை விசாலமானது.
அவரது வாழ்வும் -பணியும் தனியாக பதிவு செய்யப்பட வேண்டியது. பதிவு செய்வோம்
அவரது குடும்பம் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்!
-சுகு-
-சுகு-
நன்றி *தேனீ
0 commentaires :
Post a Comment