6/01/2016

எது நல்லாட்சி?அதிகரிக்கும் இராணுவ அத்துமீறல்கள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல பிரதேசத்தில் கிராம சேவை அதிகாரியொருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அரசாங்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அந்த பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு இடம் பெற்ற சட்ட விரோத மரக்கடத்தலை தடுத்தமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கிரான் பிரதேசத்திலுள்ள புலாக்காடு கிராம சேவை அதிகாரியான சண்முகம் குரு என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்தும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் . என வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை பிரதேச செயலக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

0 commentaires :

Post a Comment