அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னளவில் புரட்சிகர மனிதனாக வாழ்ந்த முகமத் அலி 1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் எனும் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சுன்னி முஸ்லிமாக மாறினார். மல்கம் எக்ஸ்,பிடல் கஸ்ரோ போன்றோருக்கு ஆதரவாக இயங்கினார்.1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் . குத்துச்சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார் .
அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் .
0 commentaires :
Post a Comment