6/29/2016
| 0 commentaires |
கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன?
| 0 commentaires |
இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 36 பேர் பலி
தற்கொலை தாக்குதல்தாரிகள், தங்களின் மீதிருந்த தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்பு, துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர் என துருக்கிய பிரதமர் பிலானி யில்டிரிம், தெரிவித்துள்ளார்.
இதில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என்றுன் அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
6/28/2016
| 0 commentaires |
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்
குறித்த மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு மேற்கொண்ட பகுடிவதை காரணமாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய மாணவர்களை பகுடிவதை செய்யக்கூடாது என்ற பல்கலைக்கழகத்தின் முடிவை பல்கலைக்கழகத்தின் 5 பீடங்களில் 4 பீட மாணவர்கள் ஏற்றுக்கொண்டபோதும் முகாமைத்துவ பீட மாணவர்கள் மாத்திரம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
புதிய மாணவர்ளை பகுடிவதைக்கு உட்படுத்துவது தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ள நிலையிலேயே பல்கலைக்கழகத்தில் பகுடிவதை மேற்கொள்ளக்கூடாதென பல்கலைக்கழகம் அறிவுறுத்தியதெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுளைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
6/27/2016
| 0 commentaires |
சி.எஸ்.காந்தி காலமானார்
நுவரெலியா மாவட்டத்தின் வட்டகொடை, மடகொம்பரை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். ஆங்கில புலமை நிறைந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே நேற்றுக் காலமானார்.
இவர், வீரகேசரி மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில், மொழிப்பெயர்ப்பாளராகவும் உதவியாசிரியராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
6/26/2016
| 0 commentaires |
வாழும் போதே வாழ்த்துவோம்
தொலைபேசியில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்.
மேமன்கவி-
6/25/2016
| 0 commentaires |
VAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.
| 0 commentaires |
மட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கலைஞன்நாகமணிப்போடி அண்ணவியார் சிலை
மட்டக்களப்பு தென்மோடிக் கூத்தினை வலையிறவு சீனித்தம்பி அண்ணாவியாரிடமிருந்து கற்று படுவான்கரை எங்கணும் பரப்பியதில் நாகமணிப்போடியாருக்கு பெரும் பங்குண்டு...தனது 90ஆவது வயதில்
இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.தென்மோடிக் கூத்தின் ஒரு பொக்கிஸமாக அவர் விளங்கினார்.மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் அவர் படம் தொங்கவிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் மெளனகுரு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிற்பக் கலைஞர் சுமன்ராஜ் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். விரைவில் மட்டக்களப்பின் நகரப்பகுதியில் நிறுவுவதற்கான முன்னேற்பாடுகளில் அரங்க ஆய்வுகூடத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
6/24/2016
| 0 commentaires |
'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்
அப்படி தாமதிப்பது ஸ்திரமின்மையை நீடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவு குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய தலைவர்களே இவ்வாறு கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூலஸ், ஐரோப்பிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டி ஆகியோருடன் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு குறித்து தாம் வருத்தமடைந்தாலும், பிரிட்டிஷ் மக்களின் முடிவை மதிப்பதாக கூறியுள்ளனர்.
பிரிட்டிஷ் மக்களின் முடிவை அமல்படுத்துவதை பிரிட்டன் முடிந்தவரை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், அது மிகவும் வேதனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும், தேவையற்ற ஸ்திரமின்மையை நீடிக்கச் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
6/23/2016
| 0 commentaires |
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இருந்து கால்நடையாக வந்த வைத்தியபீட மாணவர்களின் பேரணியின் மீது, கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
அத்துடன் மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6/22/2016
| 0 commentaires |
பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை
மருத்துவமனை செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் உள்ள சில சுஃபி வழிபாட்டு தலங்களை தற்கொலைப்படை குண்டுதாரிகள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.
| 0 commentaires |
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு -
6/21/2016
| 0 commentaires |
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்
எந்தவொரு கட்சியிலும் தேசிய பட்டியலின் மூலமோ அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லையென பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தான், பயணித்த அரசியல் பயணம் தொடர்பில் பஷீர் சேகுதாவூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளதாகவும் இந்தப் பின்புலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும், அதன் தலைமைகளின் நம்பகத்தன்மையும் கட்சியின் உயிர்ப்பும், தூய்மையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமூக ஈடேற்றம் பற்றி சிந்திக்காது, பதவிகளையும்,சலுகைகளையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் சமூகத்தினால் முன்வைக்கப்படுவதாக பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம், பதவிகளை நாடிய மூன்றாம்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக் கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பிரதிநித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாக பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதிநித்துவ அரசியல்வாதியாக அன்றி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கடை நிலை உறுப்பினராகவேனும் இருந்து கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளராக தனது எஞ்சிய வாழ் நெடுகிலும் இருக்கப் போதவாக அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் தனது ஆசிரியராக திகழ்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மற்றும் மூன்று தடவைகள் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளித்த கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீ்ம், ஈரோஸ் இயக்க நிறுவுனர் மறைந்த இரத்தின சபாபதி, அரசியல்ஆசான் தோழர் பாலகுமார் மற்றும் தான் போட்டியிட்ட 7 தேர்தல்களில் வாக்களித்த மக்களுக்கும் பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்
6/20/2016
| 0 commentaires |
உதயத்தின் நிர்வாகசபை ஒன்றுகூடல்
இதன்போது கடந்த அரையாண்டில் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட உதவித்திட்டங்களில் பயன் அடைந்தவர்கள், மற்றும் பயனடைந்துகொண்டு இருப்பவர்கள், மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் பெற்றுகொண்டு இருப்பவர்கள், மேலும் இந்த ஆண்டில் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ள உதவிதிட்டங்கள் 11 .09 .2016 அன்று நடைபெறவிருக்கும் உதயத்தின் 12வது ஆண்டுவிழா சம்பந்தமான முடிவுகள், அரையாண்டுக்கான வரவுசெலவுகள் என்று பல முடிவுகளுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது
6/19/2016
| 0 commentaires |
தமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையடுத்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா மதுபானக் கடைகளின் நேரம் குறைக்கப்படும் என்றும் 500 கடைகள் மூடப்படும் என்றும் கூறியிருந்தார்.
கடந்த மே மாதம் 24-ஆம் தேதியன்று மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி அளவுக்குக் குறைக்கப்பட்டது.
இந்தக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விரைவில் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக 67 கோடி ரூபாயிலிருந்து 70 கோடி ரூபாய் வரை மதுபானம்
விற்பனையாகிறது.
| 0 commentaires |
இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்
கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
| 0 commentaires |
டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிழ்விடத்திலும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி காணொளியூடாகவும் புனரமைக்கப்பட்ட அரங்கை விளையாடடுதுறை சார்ந்தோரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
7 கோடி ரூபா இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கில் முதன்மை நிகழ்வாக ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவ மாணவிகள் கூடியிருந்து உலகின் இரண்டாவது யோகாசன தின நிகழ்வில் கலந்துகொண்டனர். சமநேரத்தில் இந்தியாவின் புதுடில்லியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் ஒன்றுகூடி யோகாசன நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதைத்தொடர்ந்து காணொளியூடாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சிங்ஹா, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிரமாணப்பணிகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டதுடன் இதற்காக அடிக்கல்லையும் நாட்டிவைத்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு விளையாட்டுத்துறைசார்ந்தோர், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/18/2016
| 0 commentaires |
வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.
தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் இந்தியாவில் வைத்து 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். அந்த கூட்டு படுகொலை இடம்பெற்ற ஜூன் மாதம் 19ஆம் திகதியை ஈழமக்கள்புரட்சிகர முன்னணியினர்(நாபா) அதாவது தற்போதைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் தியாகிகள் தினமாக பிரகடனம் செய்து வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.
ஆயுதமேந்திய அனைத்து தலைமைகள் மீதும் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட விமர்சனங்களும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிமீதும் இருக்கின்றது. குறிப்பாக இந்தியஇராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட காலங்களில் இடம்பெற்ற மக்கள் மீதான வன்முறைகள்,கட்டாய ஆள்பிடி என்னும் பெயரில் இளைஞர்களையும் மாணவர்களையும் கூட அவர்களின் விருப்புகளுக்கு மாறாக பிடித்தெடுத்து வன்முறைக்கும் தள்ளியது போன்ற கடுமையான விமர்சனங்கள் உண்டு.
இந்தகைய விமர்சனங்கள் அனைத்துக்கும் அப்பால் பத்மநாபாவும் அவரது தோழர்களும் தமிழர் அரசியலில் மேலதிக முக்கியத்துவம் ஒன்றினை பெற்றிருக்கின்றார்கள். அதாவது பத்மநாபாவின் அரசியல் சாணக்கியத்தின் பெறுபேறாகவே வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை இனங்கள் இன்றைய மாகாண சபை முறைமையை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றார்கள்.
இலங்கை தமிழர் முன்னெடுத்த போராட்டங்களின் அடிப்படையில் காலத்துக்கு காலம் பல்வேறு விதமான ஒப்பந்தங்களும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் அவை எல்லாமே தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஆனால் விதிவிலக்காகவோ அதிஷ்டவசமாகவோ 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட மாகாண சபை முறைமைகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. அதிலும் மூன்றாம் நாடொன்றின் (இந்திய) நடுநிலைமையுடன் உருவாக்கப்பட்டதும் இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக சட்ட வலுவாக்கம் பெற்றதுமான ஒரே தீர்வு இந்த மாகாண சபை முறைமையேயாகும்.
இந்த மாகாண சபை தீர்வை ஏற்றுக்கொண்டு பின்னர் படிப்படியாக அதனை ஒரு சமஸ்டி அல்லது மாநில அந்தஸ்து நோக்கி நகர்த்தலாம் என்பதே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமைப்புகளின் திட்டமாக இருந்தது. அதன்படி தமிழீழ விடுதலை புலிகள் கூட இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களைப்போல ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனாலும் மாகாண சபைக்கான தேர்தலை விடுத்து தற்காலிக நிர்வாக கட்டமைப்பை தமது தலைமையில் தரவேண்டும் என்னும் கோரிக்கையில் புலிகள் முரண்டு பிடித்தனர். தேர்தலூடான மக்களின் தீர்ப்புகளுக்கு அஞ்சிய புலிகள் மாகாண சபை உருவாக்கத்தை நிராகரித்தனர். அதிகாரத்தை வேறு யாருடனும் பங்கு பகிர்ந்து கொள்வதில் என்றுமே உடன்படாத புலிகள் இந்த மாகாண சபையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்திய இயக்கத்தினரை துரோகிகள் என சித்தரித்தனர்.
இதன்காரணமாக அன்று ஸ்ரீலங்காவில் ஆட்சியிலிருந்த பிரேமதாசா தலைமையிலான அரசுடன் இரகசிய உடன்பாடுகொண்டு மாகாண சபை ஆட்சி முறையை நிர்மூலமாக்கினார்.அரச இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக செயல்பட்டு மாகாண சபை உறுப்பினர்களையும் மாகாண சபைக்கு வந்து செல்லும் மக்களையும் கூட கொன்று வீசினர். இத்தனை இழப்புகளையும் எதிர்கொண்டுதான் தோழர் பத்மநாபா இந்த மாகாண சபைக்கு அத்திவாரமிட்டார்.
இறுதியில் இந்தியாவில் வைத்து தோழர் பத்மநாபாவையும் அவரது தோழர்கள் அனைவரையும் புலிகள் கொன்று குவித்தனர். புலிகளுடன் சேர்ந்து இந்த மாகாண சபைகளை உருவாக்கியவர்களை துரோகிகள் என்றவர்கள்,புலிகளுக்கு ஓத்தூதியவர்கள்,புலிகளால் தமிழீழம் கிடைத்துவிடும் என்று அப்பாவித்தமிழ் மக்களை நம்பச்செய்தவர்கள்,புலிகளை வைத்து கோடிகோடியாக சம்பாதித்த பண முதலைகள்,அனைவருமே இன்று சுமார் இருபத்தைந்து வருடகாலத்துக்கு பின்னர் மீண்டும் இந்த மாகாண சபையைத்தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
1983ஆம் ஆண்டு உக்கிரமடைந்த ஆயுத போராட்டம் வெறும் நாலு ஐந்து வருடங்கள் மட்டுமே நடைபெற்றிருந்த வேளையில் பாரிய உயிரிழப்புகளோ பொருளாதார அழிவுகளோ இல்லாத நிலையில் அந்த தீர்வினை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்பதை இப்போதுதான் பெரும்பாலானோர் உணருகின்றார்கள்.
சுருங்க சொன்னால் பத்மநாபா என்று ஒருமனிதனின் தீர்க்கதரிசனம் மிக்க தற்றுணிச்சல் இல்லாவிடில் இன்று இந்த மாகாண சபைகள் கூட இருந்திருக்காது.
அதேபோன்றுதான் இருபது வருடங்களுக்கு பின்னர் துருப்பிடித்து கிடந்த மாகாண சபைகளுக்கு உயிரூட்டியது கிழக்குமாகாணத்தின் எழிற்சியேயாகும். ஆனால் அப்போதும்கூட கிழக்கு மாகாணசபையை தனித்து உருவாக்கிய சந்திரகாந்தனை நோக்கி சவால்களும் சாபங்களும் மட்டுமே வீசப்பட்டன. அத்தனை பரிகாசங்களையும் செரித்துக்கொண்டு அன்று பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொண்டபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் சேர்ந்து இத்தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அந்த தேர்தலை நிராகரித்தனர்.
ஆனால் தமது அரசியல் குருட்டுத்தனங்களெல்லாம் அம்பலமாகி போன நிலையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியும் வடக்கு மாகாண சபையில் தனித்தும் ஆட்சி செய்கின்றனர்.
ஆனால் இந்த மாகாண சபைகளை உருவாக்கிய, அதற்காகவே தனது உயிரையே தியாகம் செய்த அந்த மனிதனை இவர்கள் நினைத்துப்பார்ப்பதேயில்லை.எதற்கெல்லாமோ தீர்மானம் நிறைவேற்றும் வடமாகாண சபையானது மாகாண சபைகளின் உருவாக்கத்துக்கு அடிகோலிய மனிதனுக்கு ஒரு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதா? தோழர் பத்மநாபாவின் பாசறையில் வளர்ந்தவர்களும் அவரது அரசியல் தொடர்ச்சியில் பதவி பெற்றவர்களுமாக பலர் இந்த மாகாண சபைகளில் அங்கம் வகிக்கின்றனரே? அவர்கள் அவற்றுக்கான முன்முயற்சிகளில் இதுவரை ஈடுபட்டுள்ளனாரா? என்கின்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டியவையாகும்.
எம்.ஆர்.ஸ்டாலின்
17/06/2016
6/17/2016
| 0 commentaires |
துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.
அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
6/16/2016
| 0 commentaires |
இலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு
மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், குறைந்தபட்சம் 25 சதவீதமாக இருக்க வேண்டும் . அதற்கமைய அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்களில் வேட்பு மனுக்களில் 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என அந்த திருத்தம் கூறுகின்றது.
ஏற்கெனவே உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட திருத்தத்தில் பெண்களுக்கு 25 சத வீதம் இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திலும் அது போன்ற திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
தற்போது மாகாண சபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள போதிலும் 5 சத வீதத்திற்கும் குறைவான பெண்களே அங்கத்துவம் பெற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் வழங்க தவறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஒருவர் தான் பெண் உறுப்பினராக அங்கத்துவம் பெற்றுள்ளார் . அதே நிலை தான் 39 உறுப்பினர்களை கொண்ட வட மாகாண சபையிலும் காணகப்படுகின்றது.
வாக்காளர் எண்ணிக்கையில் ஆண்களை போன்று பெண்களும் சம நிலையில் உள்ள நிலையில் அவர்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை .இருந்த போதிலும் பெண்களின் அரசியல் தலைமைக்கு பலமானதாக அமையும் என மகளிர் செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
இதுபோன்ற திருத்தம் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுகின்றது
6/15/2016
| 0 commentaires |
மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா சற்று முன்னர் கொழும்பில் காலமானார்.மேல் மகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான அலவி மௌலானா, இன்று புதன்கிழமை(15) மாலை காலமானார்.1932ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி பிறந்த அலவி மௌலானா, தனது 84ஆவது வயதில் காலமானார்
சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் ஜனவசம நிறுவனத்தலைவராக செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் நீண்ட காலமாக அவர் சுதந்திரக்கட்சிக்கு பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.
அத்துடன் ஏராளமான தொழிலாளர் நலப் போராட்டங்களில் ஈடுபட்டு, இலங்கையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டிருந்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற 80ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றின் போது குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கத்திக்குத்துக்கும் இலக்காகி இருந்தார்.
1994ம் ஆண்டு பதவிக்கு வந்த பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ஊடகத்துறை பிரதியமைச்சராகவும், தொழில் அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
அதன்பின்னர் 2004ம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுனராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.
அண்மையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று புதன் மாலை காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
6/14/2016
| 0 commentaires |
பாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்
அந்த கோஜ்ரா பகுதியை ஒட்டிய கிராமத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுவருகிறது.
இந்த தேவாலயம் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறாரகள்.
தமது இந்த முயற்சி மற்ற சமூகங்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
6/13/2016
| 0 commentaires |
மேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை
| 0 commentaires |
அமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்?
அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வொன்றை விரும்பி நிற்கும் எமது தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும்,
...
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, அதற்கு மேலதிக அதிகாரங்களை/ விசேடமான அதிகாரங்களை/ சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிச் செல்லலாம் என்பதையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆனாலும், அதை சக தமிழ் கட்சித் தலைமைகள் அன்று ஏற்றிருக்கவில்லை. காலம் கடந்தாவது சக தமிழ் கட்சிகள் 13 வது திருத்தச்சட்டம் குறித்து பேசவும் அதன் நடைமுறைகளில் பங்கெடுக்கவும் வந்திருக்கின்றன.
அந்த வகையில், எமது வழிமுறை நோக்கி அவர்கள் வந்ததை நாம் வரவேற்கின்றோம்.
இதேவேளை, கையிலே அமுதசுரபி ஒன்றை வைத்துக்கொண்டு பிச்சைப்பாத்திரம் கொண்டு அலைவது போல்,..
37 அதிகாரங்களை கொண்ட மாகாணசபை அதிகாரத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாமலும்;, முடியாமலும் எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகிறார்கள்.
கையில் கிடைத்திருக்கும் மாகாண சபை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. புதிய அரசியலமைப்பு குறித்து யோசனைகளை முன்வைத்துக்கொண்டு திரிகிறார்கள்.
நாமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வரவேற்கின்றோம்.
அதற்கான எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கிறோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகளை நாம் ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றோம்.
ஆனாலும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும்
| 0 commentaires |
தமிழ் மக்களே எச்சரிக்கை! "தமிழ் அரசு" ஒரு வர்த்தக சின்னமாகிறது.
WTO வின் சர்வதேச வர்த்தக சட்டங்கள் அதற்கு அனுமதிக்கின்றன. வருங்காலத்தில், தமிழீழம், விடுதலை புலிகள் போன்ற பெயர்களும் பேட்டன்ட் உரிமையுள்ள வர்த்தக சின்னமாகலாம்.
ஈழத...்திற்கான விடுதலைப் போராட்டத்தை வலதுசாரி தமிழ் தேசியவாதிகளிடமும், முதலாளித்துவ ஆதரவாளர்களிடமும் ஒப்படைத்தது தமிழ் மக்கள் விட்ட மாபெரும் தவறு. அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி முகனூல்
| 0 commentaires |
பிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்
| 0 commentaires |
அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்
அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.
காயம் அடைந்த மேலும் 53 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை தனியாக நடத்தியுள்ளதாக கருதப்படும் சந்தேக நபர் உள்ளூர் பகுதியை சார்ந்தவர் அல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது
| 0 commentaires |
பதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தரவும் இன்று வரை நடை முறைக்கு வரவில்லை
.
ஆனால் இவர் கையெழுத்து போட்ட எந்த உத்தரவும் இன்று வரை நடை முறைக்கு வரவில்லை.
.
மின்சார கட்டணம் நடைமுறைக்கு வரல போன முறை எப்படி வசூல் செய்தார்களோ அப்படிதான் இந்த முறையும் வசூல் செய்தனர்....
.
500 டாஸ்மாக் கடைகள் இன்னும் மூடப்பட வில்லை.
.
இரண்டு மணி நேர டாஸ்மாக் விற்பனை குறைப்பு சரியாக கடைபிடிக்க படுவதில்லை.
டாஸ்மாக் பார்கள் முன்னாடியே திறந்து வைத்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பகல் கொள்ளை நடக்குது.
.
விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு பயிர் கடன் மட்டும் தள்ளுபடி என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு.
.
சொன்னது எதுவும் செய்யல. பிறகு என்ன அவசரம் அரை மணி நேரத்துல பதவி ஏத்துக்கிட்டு அவசர அவசரமா கையெழுத்து போட்டாங்க என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
6/12/2016
| 0 commentaires |
கவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா
6/11/2016
| 0 commentaires |
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபான சாலைகள் உண்டு- உள்ளம் குமுறும் பிள்ளையான்
சாலைகளுக்கு மேல் உள்ளது.
6/10/2016
| 0 commentaires |
இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? –
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் குறித்த விடயம் தொடர்பான முன்வைத்த உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது –
யாழ் குடாநாட்டில் காணப்படுகின்ற நீர் வளங்களைக் கொண்டு மக்களுக்கு உரிய அளவில் தரமான குடிநீரை வழங்க முடியாதுள்ளது. யாழ் குடாநாடானது நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், அதிகளவான இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையாலும், திட்டமிட்டுக் கட்டப்படாத மலசலக்கூடங்களின் மலக்கழிவுகளினாலும், கழிவு ஒயில் கலப்பினாலும், தேவைக்கதிகமான நீரை விவசாயத்திற்கு எடுப்பதுடன் பம்பிகளை பாவித்து அளவுக்கதிகமான நீரை வெளியேற்றும் போது கடல்நீரானது உள்வந்து குடிநீரானது உவர்நீராவதனாலும் யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் வளமானது மாசடைந்தும், குறைந்தும் காணப்படுகின்றது.
மேலும், எமது மாவட்டத்தின் மழைவீழ்ச்சியானது சராசரியாக வருடத்திற்கு 1200mm ஆகவும் அதன் ஆவியாக்கம் ஆனது 1800 mm ஆகவும் இருப்பதனாலும் போதியளவு நீரினை தேக்கி வைப்பதற்குரிய தரையமைப்பு இன்மையாலும் யாழ் குடாநாட்டு நீர்வளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினாலும், நீர்வளச்சபையினாலும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களினாலும்; நடாத்தப்பட்ட ஆய்வுகளின்படி, யாழ் குடாநாட்டின் குடிநீரானது இலங்கை தர நிர்ணயத்திற்கு அமைவாக குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என பலகாலங்களாகவும் பல மட்டங்களினுடாகவும் தெரியப்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில், யாழ் குடாநாட்டு நிலத்தடி நீரைப் பாதுகாப்பதனையும் யாழ் குடாநாட்டு மக்களின் குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்வதனையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 1985ம் ஆண்டிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு, 2005,2006 ஆம் ஆண்டு சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ் குடாநாட்டின் தற்போதைய சனத் தொகையின் அடிப்படையில் தேவைப்படும் குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என அறியப்பட்டதாகத் தெரியவருகிறது. இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும்.
இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் வழங்கல் சேவையினை மேற்கொள்ளுவதனையும் அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தி;ட்டமானது 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது. இதன் பிரகாரம், இரணைமடுக்குளக்கட்டு 2 அடியால் உயர்த்தப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குளத்தின் கொள்ளளவு அதன் தற்போதைய கொள்ளளவாகிய 106,500 ஏக்கர் அடியிலிருந்து 120,000 ஏக்கர் அடியாக கூட்டப்படுமென்றும், மேலும் IFAD உதவியுடன் அரசாங்கத்தினால் கீழ்க்கால்வாய்கள் அனைத்தும் மீள்கட்டப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நீரை சிறந்த முறையில் நெற்பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்குமென்றும் தெரியவருகிறது. இக் குளத்தின் கொள்ளளவு 120,000 ஏக்கர் அடியாக அதிகரிக்கும் போது மேலதிகமாக கூட்டப்படும் 13,500 ஏக்கர் அடியில் 12,000 ஏக்கர் அடி நீரானது யாழ் குடாநாட்டு மக்களினுடைய குடிநீர்த் தேவைக்கு பாவிப்பதற்கான நோக்கத்தைத் திட்டம் கொண்டிருந்தது. அன்று, விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். எனினும் அதன் பிற்பட்ட காலங்களில் ஒரு சிலரின் சுயலாப அரசியல் காரணமாக இத் திட்டம் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில், இரணைமடு குளத்தைப் புனரமைத்து, கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்களது தேவைகள் போக எஞ்சிய நீரை யாழ் குடாநாட்டு மக்களின் குடி நீர்த் தேவைக்கு கொண்டுவர வேண்டுமென்பது பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே நேரம், மழைக்காலத்தில் இரணைமடுக்குள நீரை யாழ்ப்பாண குடிநீருக்கு பாவிக்க வேண்டும் என்றும் வறட்சி காலத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஒரு சிலரிடம் காணப்படுகிறது. கடந்த 31.05.2016ம் திகதி யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இது காலங்கடந்த ஞானமாக இருப்பினும், இவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்டிருக்கின்ற நிலையில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்திலேயே இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தடைகள் ஏற்படுத்தாது இருந்திருப்பின் இன்றைக்கு இத்திட்டத்தின் மூலமான பயன்களை எமது மக்கள் ஓரளவு பெற்றிருப்பார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு மலக்கழிவு நீரகற்றும் (Sewerage System ) திட்டம் யாழ்ப்பாண நகரில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆயினும் இரணைமடுக்குளத்திலிருந்து நீர் பெறுவதில் ஏற்பட்ட இடர்பாடு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஆயினும் பிரான்சிய நிறுவனமாகிய யுகுனு யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம் நிறைவேற்றப்பட்ட பின்பு, மலக்கழிவு நீரகற்றல் திட்டத்திற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இத் திட்டத்தை அன்றே ஏற்கப்பட்டிருந்தால், சம காலத்தில் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று எமது மக்கள் இதன் பயனை பெற்றிருப்பார்கள்.
மேலும், பூநகரிக்குளத்திட்டம் எனக்கூறப்படும் திட்டத்தினூடாக கொக்குடையான், மாளாப்பு, தேவன்குளம் ஆகிய குளங்களை இணைத்து உருவாக்குவதன் மூலம் அதன் கொள்ளளவை கூட்டுவதன் ஊடாக சேகரிக்கப்படும் மழைநீரை விவசாயத்திற்கும் நீர்வழங்கலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் இரணைமடுக்குளத்திற்கு மேல் கரிபட்ட முறிப்பு என்னும் இடத்தில் வான்கதவு ஒன்றை அமைப்பதனூடாக மழைகாலத்தில் நீரை சேமிக்க முடிவதுடன் வறட்சி காலத்தில் இதனைப் பயன்படுத்த முடியும். ஆயினும், இத்திட்டமானது 2005,2006ஆம் ஆண்டுகளில் நிதி போதாமையினால் கைவிடப்பட்டது.
மண்டைக்கல்லாறு, குடமுருட்டிக்குளம், பாலியாறு ஆகிய புதிய குளங்களை இணைத்து அவற்றின் கொள்ளளவினை பெருக்கி அதனூடாக விவசாயத்தினை அபிவிருத்தி செய்வதுடன் நீர் விநியோகத்திற்கும் பயன்படுத்;தலாம். ஆகவே இத்தகைய வளங்களை மேம்படுத்துவதன் மூலமும் யாழ்ப்பாண குடாநாட்டுக்கான எதிர்கால குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என தெரிவித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா என்பது குறித்து அறியத்தர முடியுமா? என்றும்
அவ்வாறு தடைகள் இருப்பின், இத் திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் என்ன என்பது பற்றி விபரிக்க முடியுமா? தடைகள் ஏதும் இல்லாத நிலையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதனை நிறைவு செய்யக்கூடிய காலகட்டம் குறித்து கூற முடியுமா? இத் திட்டமானது ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டதா அல்லது ஏதும் மாற்றங்களுக்கு உட்பட்டதா என்பது பற்றி கூற முடியுமா? குறித்த திட்டத்துடன் இணைந்த சுகாதாரத் திட்டம் பற்றிய நிலைப்பாடு குறித்தும் கூற முடியுமா? வறட்சி காலங்களில் யாழ் குடாநாட்டுக்கான சுத்தமான குடி நீரை வழங்குவதற்குரிய என்னென்ன மாற்று ஏற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன என்பது பற்றிக் கூற முடியுமா? எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும் மகாவலி திட்டத்தினூடான வட மத்திய மாகாண கால்வாய்த் திட்டத்தின் முதலாம் கட்டம் அனுராதபுரத்தை நோக்கியதாகவும், அதன் இரண்டாம் கட்டம் வடக்கை நோக்கியதாகவும் இருக்கும் நிலையில், இத் திட்டத்தை இரணைமடு உட்பட்ட வடக்கின் பிரதான குளங்களுடன் இணைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது பற்றி கூற முடியுமா? அத்துடன், களுகங்கையை வடக்குடன் இணைக்கும் திட்டத்தை முன்னெடுத்தால், அப் பகுதி மக்களது குடி நீர்த் தேவைகள் மாத்திரமன்றி, இரு போகங்கள் உட்பட்ட உப உணவு உற்பத்திகளுக்கும் வசதியேற்படுவதுடன், இதனூடாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும் என்பதால் இத் திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றனவா என்பது பற்றி கூற முடியுமா? என கெள்வியெழுப்பியிருந்ததுடன் மேற்படி வினாக்களுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
| 0 commentaires |
சென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்
6/09/2016
| 0 commentaires |
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்-எழுத்தாளர் தமயேந்தி
எழுத்தாளர் தமயேந்தி
வருந்துகிறோம் தோழர்களே. வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த விசைப்படகுகள் என்ன தொழிலை மேற்கொண்டன என்ற விபரத்தை நீங்கள் ஏன் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்....? ட்ரோலர்தானே? ட்ரோலராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப் படுவதில் தப்பே இல்லை. அப்படியான நாசகாரத் தொழிலை மேற்கொண்டிருப்பார்களேயானால் அவற்றைப் பறிமுதல் செய்வதே சரியானது. நேற்று முன் தினம் எமது மீனவர்களின் ஆறு படகுகளின் நைலோன் வலைகளை அனலை தீவுக்கு மேற்குக் கடலில் தமிழக ட்ரோலர் படகுகள் அப்படியே அறுத்து நாசம் செய்துள்ளன. தமிழகத்து இந்த நாசகாரத் தொழிலால் ஈழத்து மீனவர்கள் கடன்பட்டு வாங்கிய தமது தொழில்துறை எல்லாவற்றையும் இழந்து குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ட்ரோலர் தொழிலுக்கு தமிழகத்தில் தடை உண்டல்லவா? அப்படியிருக்க 12000க்கும் அதிகமான ட்ரோலர் படகுகள் எப்படி தமிழகக் கரைகளில் இன்னமும் இருக்கின்றன....? இருகரை மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுபவர்கள் இந்தத் தடை செய்யப்பட்ட நாசகாரத் தொழில் பற்றி இதுவரை ஏன் வாய் திறக்கிரார்கள் இல்லை....?
தமிழகத்து இழுவைப் படகுகளை ஒழிக்காமல் இருகரை மீனவர்களின் பிரச்சனை பற்றிப் பேசுவதெல்லாம் சுத்தப் பம்மாத்து.
பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபங்களுக்காகப் பலியிடப்படும் தமிழக மீனவர்களைப் பற்றிய கரிசனை யாருக்குமே இல்லை. அரசியல்வாதிகளுக்கு இருக்கப் போவதில்லை என்பது தெரியும். ஆனால் தமிழகத்து ஊடகக்காரர்களுக்கும் இல்லை என்பதே பெரு வருத்தம். எந்தத் துணிவுள்ள ஊடகக்காரராவது இந்த நாசகாரத் தொழிலைப் பற்றிப் பேசுவார்களா, எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அப்படி யாரும் இதுவரை ஒரு வார்த்தை மூச்சு விட்டதாகத் தெரியவில்லை.
மன்னித்துக்கொள்ளுங்கள் தோழர். இப்படியான நாசகாரத் தொழிலைச் செய்பவர்களை இலங்கை அரசு கைது செய்வதற்கு எதிராக ஈழத்து மீனவர்களால் குரல் கொடுக்க முடியாமலுள்ளது.
தமிழக மீனவர்கள் ஈழக் கடலுக்குள் கைது செய்யப் படுவதையும், கொல்லப்படுவதையும், ஆக்கினை செய்யப் படுவதையும் எதிர்த்து 30வருடங்களுக்கும் மேலாக நாம் கண்டனங்களையும், விசாரணைக் கோரிக்கைகளையும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
அடுத்த எனது தொகுப்பும் இந்த இருகரை மீனவர்கள் காணாமல்ச் செய்யப் பட்டதற்கான விசாரணையை கோரித்தான் வெளிவருகின்றது.
ஆனால் தமிழக மீனவர்களைக் கூலிகளாக வைத்து இழுவைப் படகுத் தொழிலைச் செய்யும் பெருமுதலாளிகள் தமது இலாபங்களிலெயே கரிசனையாக இருந்து, தமிழகத்து அப்பாவி மீனவர்களைப் பலியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக ஊடகங்களும் இந்த முதலாளிகளின் நாசகாரத் தொழிலை மூடி மறைத்து, கைது, கடலில் கொலை, நடுக்கடலில் அட்டூழியம் என்று பிரச்சாரித்துக்கொண்டு மறுபக்க உண்மைகளை மறைத்து, நாசகாரப் பெரு முதலாளிகளுக்கு ஊழியம் செய்கிறார்களே ஏன்...?
தோழர்களே, உங்களிடம் நான் கேட்கிறேன், அத்தனை ஈழத்து மீனவ உறவுகள் சார்பாகக் கேட்கிறேன்.
தமிழகத்திலுள்ள ட்ரோலர் படகுகள் எத்தனை, அவை யார் யாருக்குச் சொந்தமானவை, தடையுத்தரவு இருந்தும் இவை இன்னமும் ஏன் பாவனையில் உள்ளன.... இவற்றை உங்களால் எழுத முடியுமா?
நீங்கள் பணியாற்றும் ஊடகங்கள் இவற்றைப் பிரசுரிக்குமா?
(இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் ட்ரோலர் படகுகளின் படங்களையே வெளியிடுகின்றன. எவ்வளவொரு விவஸ்த்தையற்ற ஊடகத்தனம். இதிலிருந்து என்ன விளங்குகின்றது...? படு கோமாளித்தனம் என்பது இதைத்தான்)
நன்றி முகனூல்
| 0 commentaires |
பௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல்லாட்சியில் பள்ளிவாசலுக்கு தடை
அந்த பகுதியிலுள்ள பௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தெகிவளை - கல்கிசை மாநகர சபையினால், பள்ளி வாசல் விஸ்தரிப்புக்கு, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்த அனுமதியை ரத்து செய்யும் வகையிலான உத்தரவொன்றை மாநகர முதல்வர் அறிவித்துள்ளதோடு அதன் பிரதியை போலீசுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் கூறுகின்றது.
இந்த தடை பற்றி பொலீசாராலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
புனித ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கா உட்பட உரிய தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அனுமதியை மாநகர முதல்வரால் ரத்து செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புதன்கிழமை இரவு அமைச்சர்களான ரிஸாத் பதியுதின் , ஹபீர் ஹாஸிம் , எம். எச் அப்துல் ஹாலீம்ச்டி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரும் பள்ளிவாசலுக்கு நேரடியாக சென்று இந்த தடை குறித்தும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஏற்கனவே கண்டியில் பள்ளிவால் கோபுர நிர்மாணப் பணிகளுக்கு பெளத்த கடும்போக்காளர்களின் எதிர்ப்பை அடுத்து, அந்தப் பணிகளுக்கு அதிகாரிகள் கடந்த வாரம் தடை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
6/08/2016
| 0 commentaires |
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளராக போட்டியிட 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நிலையில், தேவையான ஓட்டுகளை பெற்று வெற்றக பெற்றதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகியுள்ளார். முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கபட்டு விட்டார். இதனையடுத்து அடுத்த அதிபர் பதவியை கைபற்ற ஹிலாரி, டிரம்ப் இடையே போட்டி நடைபெறவுள்ளது.
6/05/2016
| 0 commentaires |
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேராசிரியயை சித்திரலேகா மௌனகுரு
வுள்ளது. நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் தலைவராக இடது சாரி செயல் பாட்டாளர் மனோரி முத்தெட்டுவேகமவும் .செயலாளராக பாக்கியசோதி சரவணமுத்துவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சித்திரலேகா குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத செய்திகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.மற்றும் சூரியா பெண்கள் நிலையத்தின் முன்னணி செயற்பாட்டாளரராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பல பெண்ணியவாதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவருமாவார்.
யுத்தம் இடம்பெற்ற காலங்களில் நடைபெற்ற குழந்தைகள்,பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும்,புனர்வாழ்வு,மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளிலும் பலவிதமான அனுபவங்களை கொண்டவர். அவரது அனுபவங்கள் இந்த பணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
உலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார்
அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னளவில் புரட்சிகர மனிதனாக வாழ்ந்த முகமத் அலி 1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் எனும் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சுன்னி முஸ்லிமாக மாறினார். மல்கம் எக்ஸ்,பிடல் கஸ்ரோ போன்றோருக்கு ஆதரவாக இயங்கினார்.1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் . குத்துச்சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார் .
அமெரிக்காவை சேர்ந்த இவர், குத்துச்சண்டையில் பங்கேற்ற 61 போட்டிகளில் 56 முறை வெற்றி பெற்றவர். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக மரண போராட்டத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சுவாசக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.
இவர் 1981 ம் ஆண்டில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்றார். தி கிரேட்டஸ்ட், பீப்பிள் சாம்பியன் போன்ற பட்டங்களை பெற்றவர் முகம்மது அலி.
முகமது அலியின் மறைவு உலக குத்துச்சண்டை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரம்பு மண்டல பாதிப்பு; அவர் கடந்த 2014-ல் நிமோனியா காய்ச்சல் மற்றும் 2015-ல் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்கின்சன்'ஸ் நோய் ஏற்பட்டதான் காரணமாக மீண்டும் முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பார்கின்சன்'ஸ் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடலின் தசைகள் விறைப்பு ஏற்படும் விதமான நோய் .
6/03/2016
| 0 commentaires |
மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்
இதன் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை (03) 25பேரும் நாளை சனிக்கிழமையன்று (04) 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர். ஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் நாளையும், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தவர்களில், இராணுவத்தின் பிரிகேடியர் ஒருவரும், லெப்டிணன் கேணல் ஒருவருமாக, உயரதிகாரிகள் பலர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்படுவதை அடுத்து, பிரமுகர் பாதுகாப்புக்காக விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய 50பேரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
| 0 commentaires |
எம்முடன் இமயம் என நின்றிருந்தவர்
-சுகு-
| 0 commentaires |
கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர சபையின் கணக்காளர் றஷீட் பதவி உயர்வு!
காரைதீவு நிருபர் சகா
கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராக மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
...
கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இலங்கை கணக்காளர் சேவையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த இவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களத்தின் அம்பாறை- மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் என்பவற்றில் கணக்காளராகவும் கிழக்கு மாகாண சபையின் கல்முனைப் பிராந்திய பிரதி கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் 2014ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றி வருகின்றார்.
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணி பட்டப்படிப்பையும் இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் எம்.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஹச்சு முஹம்மத்- ஆஷியா உம்மா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் அவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி கடமை நிமித்தம் திருகோணமலை செல்லும்போது இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பி, பலத்த காயங்களுடன் கால் ஒன்றும் முறிவடைந்த நிலையில் பல மாதங்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, முழுமையாக சுகமடையாத போதிலும் கல்முனை மாநகர சபை அலுவலகத்திற்கு சென்று தனது கடமைகளை சிறப்பாக மேற்கொண்டு, தனது விவேகமான செயற்பாடுகள் காரணமாக மாநகர சபையின் நிதி நிலைமைகளை மேம்படுத்தியுள்ளார்.
அவர் கடமையாற்றிய அனைத்து அலுவலகங்களிலும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் மனங்களை வென்று, அவர்களது நன்மதிப்பை பெற்றுள்ளதுடன் ஒரு தலைசிறந்த நிர்வாகியாகவும் தடம்பதித்துள்ளார்.
நன்றி தகவல் முகனூல்