நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேட்சை கட்சிகள் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறன . இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வி கண்டுள்ளனர்
- ஆவடி தொகுதியில் சுயேட்சைக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர்.
- பர்கூர் தொகுதியில் சுயேட்சைக்கு1382 வாக்குகள். திமுக 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
- சிதம்பரம் தொகுதியில் சுயேட்சைக்கு1724. திமுக 1506 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
- கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 3154 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. இந்தத் தொகுதியில் சுயேட்சைக்கு3595 வாக்குகள்.
- காட்டுமன்னார்கோயிலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி. இந்தத் தொகுதியில் சுயேட்சைக்கு1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன.
- கிணத்துக்கடவு தொகுதியில் சுயேட்சைக்கு 3884 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுக 1332 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
- கோவில்பட்டியில் சுயேட்சைக்கு2350 வாக்குகள். திமுக 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
- மொடக்குறிச்சி சுயேட்சைக்கு 2715 வாக்குகள். திமுக 2222 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
- ஒட்டப்பிடாரம் 2612 வாக்குகள் சுயேட்சைக்கு திமுக 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
- பெரம்பூர் 3167 வாக்குகள் சுயேட்சைக்கு . இந்தத் தொகுதியில் 519 வாக்குகளில் திமுக தோல்வி
- பேராவூரணி 1294 வாக்குகள்சுயேட்சைக்கு . 995 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வி.
- ராதாபுரம் சுயேட்சைக்கு 1821. திமுக வேட்பாளர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
- தென்காசி சுயேட்சைக்கு 3391; திமுக 462 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி
- திருப்போரூர் சுயேட்சைக்கு2116. திமுக 950 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
- தி.நகர் சுயேட்சைக்கு 3570. திமுக 3155 வாக்குகளில் வாய்ப்பை இழந்திருக்கிறது.
0 commentaires :
Post a Comment