இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்று சுவிஸ்லாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மே .1 ஆம் திகதி பி.ப. 1 மணிக்கு Gemeinschafts zentrum Tell ,Ginxewg .12 5000 Aarau எனும் இடத்தில் சமூகசேவையாளர் சுந்தரலிங்கம் ,பற்றாளர் பரமேஸ்வரன்மூர்த்தி ,நல்லுள்ளம் படைத்த இந்திரா அம்மையர் ஆகியோரின் மங்களவிளக்கு நிகழ்வுடன் உயிர்நீத்த உறவுகளுக் காக அகவணக்கத்துடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுவீஸ் உதயத்தின் தலைவர் தேவசகாயம் அங்கு உரையாற்றுகையில்
.இன்று நடைபெறும் இளையோருடனான மாபெரும் ஒன்று கூடலானது எமது மண்ணுக்கும் இனத்திற்கும் பெருமை தரும் ஒருவிடயமாக இருக்கின்றது இன்றை இளைஞர்களே நாளைய தலைவர்கள் அந்த அடிப்படையில் இளையோரான உங்களது கரம் எமது மண்ணுக்கும் எமது உறவுக்கும் உதவும் என்பதில் பெருமையடைகின்றோம் என்றார்
சமூகசேவையாளரும் மூத்த உறுப்பினருமான சுந்தரலிங்கம் ஐயா அங்கு உரையாற்றுகையில் அன்று சுவீஸஉதயத்தின் உதவியானது மட்டுப்படுத்தப்பட்டநிலையில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் முன்னெடுத்து வந்தது இன்று இந்த உதவிகள் விஸ்தரிக்கப்பட்டு கிழங்கிலங்கை முழுதும் சுவீஸ் உதயத்தின் உதவிமேலோங்கி வருகிறது இது ஒரு பரினாமம் மற்றையது இளையோர்களை ஒன்றிணைத்து அவர்களின் கையிலே அப்பொறுப்பை ஒப்படைக்கின்றோம் அதேவேளை இளையோரி அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் சுவீஸ் உதயம் ஒரு வழிகாட்டியாக இருந்துகொண்டிருக்கும் என்றார்
சுவீஸ் உதயத்தின் பொருளாளரும் சமூகசேவையாளருமான க.துரைநாயகம் உரையாற்றுகையில்.எமது மண்ணையும் மக்களையும் நேசித்து சுவீஸ் நாட்டில் வாழும் நாம் பல்வேறு உதவிகளை தாய் நாட்டு மக்களுக்காக முன்னெடுத்துவருகின்றோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக எமது மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் அதனை மாற்றியமைக்கவேண்டும். அதற்கான பலம் இளையோரான உங்கள் கைகளிலே தங்கியுள்ளது அத்தோடு 2015 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையும் பொருளாளரால் இளையோர்களுக்கு கையளிக்கப்பட்டது
வீஸ் உதயத்தின் செயலாளரும் சமூகசேவையாளருமான வே. ஜெயக்குமார் உரையாற்றுகையில்
சுவீஸ் உதயமானது எமது நாட்டின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் இன்று பல உதவித்திட்டங்களை முக்னெடுத்து வருகின்றது அதிலும் குறிப்பாக கல்வி மேம்பாடு யுத்தத்தில் பாதிக்கப்ட்டோர்களுக்கான உதவி விதவைகளின் வாழ்வாதாரம்,விசேடதேவையுடையோருக்கான உதவி பல்கலைக்கழக கல்வியினை முன்னெடுப்பதற்கான உதவி போன்ற பல உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறன மேலும் பல உதவித்திட்டத்தினை தாய்மண்ணுக்குச் செய்யவேண்டும் அதனைச் செய்வதற்காக இன்று இளையோரான நீங்களும் எம்முடன் இணைந்துள்ளீர்கள் உங்கள் மூலம் மேலும் பல உதவித்திட்டங்களை முன்னெடுத்து செய்வதற்கு இளையோராகிய உங்களது பலமும் எம்முடன் இன்று இணைந்துள்ளமை பெருமையாக இருக்கின்றது.இறுதியாக அங்க வருகைதந்த இளையோர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்குக் வருகைதந்த இளையோர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றம் சமூகசேவகர்கள் சுவீஸ உதயத்தின் பிரமுகர்கள் அனைவருக்கும் ;உதயத்தின் செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்
இந்நிகழ்வின் போது கலாசார உணவு பரிமாறப்பட்டதுடன் சுவீஸில் பிரபல கரோக்கி பாடகரும் இளையராகங்கள் உரிமையாளருமான ரஞ்சனின் இன்னிசை பாடல்களுடன் இணைந்து இளையோர்களின் ஆடல் பாடல்களும் இடம்பெற்றது.,இளையோருடனான கேள்வி பதில் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது அதேவேளை அவர்களுக்குள் அறிவு பூர்வமான கேள்விகளும் பதில்களும் அவர்களுக்குள் பரிமாறப்பட்டது அதே வேளை பெற்றோர்களுடனான ஆக்கபூர்வமான கலந்தரையாடல் இடம் பெற்றது
0 commentaires :
Post a Comment