5/07/2016

ஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் முதல்நாள் அமர்வு நடைபெற்று நிறைவடைந்துள்ளது....
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் எழுச்சி மாநாட்டின் முதலாம் நாள் அமர்வு நடைபெற்றது.
முன்பதாக கட்சிக்கொடியினை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது.
பிரதான மண்டபத்தில் நிர்வாகச் செயலாளர் இராசமாணிக்கத்தின் வரவேற்று உரையுடன் ஆரம்பமான முதலாம் நாள் அமர்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்க்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அத்துடன் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களுடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்திருந்த முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இதனிடையே நாளையதினம் பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய எழுச்சி மாநாட்டில் வெளியிடப்படவுள்ள பிரகடன தீர்மானங்கள் இறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment