பிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்
புணாணை என்னும் பிரதேசம் கொழும்பு றோட்டு என்று மட்டக்களப்பு மக்களால் அழைக்கப்படும் வாழைச்சேனையில் இருந்து பொலநறுவை நோக்கி செல்லும் ஏ -11 நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.இப்பிரதேசம் ஒருகாலத்தில் சிறுத்தைகள் நிறைந்த அச்சமூட்டும் காடுகளால் நிறைந்திருந்தது. பன்னெடும் காலமாக சேனை பயிர் செய்யும் தமிழ் மக்கள் தமது பூர்வீக பிரதேசமாக இந்த புனைனையை கொண்டிருந்திருக்கின்றனர்.அதுமட்டுமன்றி தமிழ்-பிரதேசங்களின் எல்லையை நிர்ணயிக்கும் பூமியாகவும் இந்த புணானை பிரதேசம் இருப்பது புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
எனவே இந்த புணாணை பிரதேசத்தை தண்டி செல்லும் தமிழ்,சிங்கள பயணிகள் தங்களுடைய பயணம் எவ்வித தங்கு தடைகளுமின்றி, அமைய வேண்டும் என வேண்டி இங்கிருக்கும் ஆலயத்தில் வழிபட்டு செல்வது வழமையாகும். இக்கோயிலானது 1960ம் ஆண்டு காலத்திலிருந்து தொடங்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது..
ஆனாலும் 1983ம் ஆண்டின் பின்னர் உருவான கலவர நிலைமைகளால் இந்த எல்லைபிரதேசமக்கள் பலர் இராணுவத்தாலும் ஊர்காவல் படையினராலும் கொல்லப்பட்டனர்.எஞ்சியிருந்தோர் வாழைச்சேனை பிரதேசம் நோக்கி அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். படிப்படியாக இந்த பிரதேசம் கைவிடப்பட்டு புணாணை எங்கும் இராணுவத்தினர் மட்டுமே குவிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. புணானை இராணுவ முகாம் என்பது கிழக்கு மாகாணத்துக்குள் நுழையும் பயணிகளுக்கு மிகப்பெரும் அச்சமூட்டும் ஒன்றாக காணப்பட்டது.
கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு பிள்ளையான் முதலமைச்சராக வந்த போது
யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு கைவிடப்பட்டநிலையிலும் அழிவின் விளிம்பிலும் பல எல்லை கிராமங்கள் கிடந்தன. அவற்றையிட்டு
தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.புனாணை போன்று பல எல்லை கிராமங்களை மீள கட்டியமைத்தார். புனாணையில் அமைந்துள்ள பாடசாலையை அபிவிருத்தி செய்தார். அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள் இந்த ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்தனர். இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்ற வசதியாக முதலமைச்சரின் திட்டப்படி ஒரு கடைத்தொகுதிகூட கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பிள்ளையானின் ஆட்சிகாலத்தில் புணானை புதுபொலிவு பெற்றதுமக்கள் மீள குடியேறினர்.
ஆனால் தற்போது இவ்வாலையமானது எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டு கிடக்கின்றது. மீண்டும் இப்படி எல்லைகிராமங்கள் கைவிடப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அமைச்சர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருப்பதில் என்ன அர்த்தம், என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆலயத்திற்குள் உள்ள விக்கிரகம் கூட களவாடப்பட்டு விட்டது. இதன்காரணமாக பயணிகள் இப்போது இந்த இடத்தில் இறங்கி செல்வது கிடையாது. புணாணை சோபையிழந்து காணப்படுகின்றது.இந்நிலை தொடர்ந்தால் இப்பிரதேசம் மீண்டும் தமிழர்களின் கையை விட்டு செல்லும்.நாளை மாகாண எல்லைகள் மாற்றப்படும் என்பது உறுதியாகும்.
இவ்வாலயத்தை உடனடியாக புனரமைப்பு செய்து விநாயகர் விக்கிரகம் வைத்து ஆலயத்தை இவ்வீதியால் செல்லும் மக்கள் தங்களுடைய வேண்டுதலை வேண்டி செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்குமாறு வாகரை பிரதேச செயலாளரை ரமண மகரிஷி நற்பணி மன்ற கிளைத் தலைவர் எஸ்.செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்பாதையால் பல அரசியல் வாதிகள் பாராளுமன்றம் மற்றும் ஏனைய இடங்களுக்கு செல்லும் போது பார்வையிட்டு செல்கின்றார்களே தவிர, இதனை புனரமைத்து இந்து மக்கள் வழிபட்டு செல்வதற்கு யாரும் உதவி செய்யவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் அல்லது இந்து சமய ஆர்வலர்கள் இவ்வாலயத்தை புனரமைத்து தருமாறு இப்பாதையால் பயணிக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
0 commentaires :
Post a Comment