5/30/2016

முப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை நீக்கம்

இலங்கையில் முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 20-ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவர் மீது முதலமைச்சர் கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, முப்படைகளின் தளங்களுக்குள் நுழைய கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைகளினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் முப்படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை நீக்கம் பற்றி முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, பிபிசி தமிழோசைக்கு உறுதிப்படுத்தினார்.
இந்த முடிவு ஜனாதிபதி நாட்டில் இல்லா நேரத்தில் முப்படையினரால் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் பின் புலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து எழுதிய கடிதத்திலும், இதனை சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனிடையே, ஜப்பானிலிருந்து தற்போது நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் காலமானார்

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில்
காலமானார். இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்று கொண்டிருந்த அமரர் சிவா சுப்ரமணியம்
நாடறிந்த எழுத்தாளராவார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான அவர், இலங்கையில் பல்வேறு தேசிய பத்திரிகைகளில்
அரசியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கவிதை, சிறுகதை,
இலக்கியங்களிலும் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டவராவார். யாழ். குடாநாட்டிலுள்ள அக்கால
இடதுசாரி முன்னோடிகளுடன் அமரர் சிவா சுப்பிரமணியம் நெருக்கமான அரசியல் தொடர்புகளை
கொண்டிருந்த அதேவேளை, தென்னிலங்கையின் சிங்கள இடதுசாரி அரசியல்வாதிகளுடனும்
நட்புறவை பேணி வந்துள்ளார். சிவா சுப்பிரமணியம் சிறந்த அரசியல், இலக்கிய விமர்சகராவார்.
எழுத்துத்துறை மீதும், பத்திரிகைத்துறை மீதும் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தினகரன்
பத்திரிகையின் இணை ஆசிரியராக இரு தசாப்தங்களுக்கு முன்னர் பிரவேசித்த சிவா சுப்பிரமணியம்
பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2010 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
உள்ளூர், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் ஏராளமான ஆக்கங்களைப்
படைத்துள்ளார்.
தனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் காரணமாக அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்த போதிலும்
மீண்டும் தினகரன் ஆசிரியர் பதவியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் அவரை தேடிவந்தன. ஆனால்,
கொள்கை பிடிப்புக்காரணமாக அவர் அதனை ஏற்க மறுத்தார்.
கொழும்பிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கோண்டாவில் சென்று வாழத்தொடங்கிய அவர்,
தினக்குரல், தினமுரசு உட்பட மேலும் பல ஊடகங்களில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி
வந்தார். சில வருட காலம் உடல் நலம் குன்றி இருந்த போதிலும் அவர் தனது எழுத்துப் பணியை
கைவிடாமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சு வரை எழுத்தை கைவிடாத
ஒருவராக சிவா சுப்பிரமணியம் போற்றப்பட வேண்டியவர்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் கொண்டிருந்த ஆளுமைத்திறன்
பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மும்மொழிகளும் திறமையாக எழுதக்கூடிய அவர், சக
ஊடகவியலாளர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




நன்றி முகனூல் ஈஸ்வரலிங்கம்
»»  (மேலும்)

5/29/2016

ஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர் கைது

ஆப்பிரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இந்திய தலைநகர் டெல்லி காவல்துறை ஐந்து பேரை வியாழக்கிழமை கைது செய்துள்ளது.ஆறு ஆப்பிரிக்க நாட்டவர் காயப்படுத்தப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் காங்கோ குடியரசை சேர்ந்த ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் ஆப்பிரிக்க தூதரகங்கள் மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
ஆப்பிரிக்க குடிமக்களை தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பு இனவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை திங்கள்கிழமை டெல்லியில் நடத்தவுள்ளது.
»»  (மேலும்)

வடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக்கி இருக்கலாம் --ஊடகவியலாளர் தேசம் நெட்-ஜெயபாலன்

    Jeyabalan Thambirajah's Profile Photo
    இந்த வாள்வெட்டும் கத்திக்குத்தும் படுகொலைகளும் யாழ்ப்பாணத்தில் தாண்டவமாடுவதற்கு முன் லண்டன் பாரிஸ் ரொறன்ரோ என்று மேற்கு நாட்டு தலைநகர்களிலெல்லாம் தாண்டவமாடியது. புலம்பெயர் புலிகளும் தேவைக்கு ஏற்ப அதனைப் பயன்படுத்திக் கொண்டனர். லண்டனில் நான் மட்டும் 20 தமிழ் காடையர் குழுக்களின் படுகொலைகளைப் பதிவு செய்துள்ளேன். தும்மினாள் ராஜபக்ச தடக்கினால் டக்லஸ் விக்கினால் கோத்தபாயா என்று காhரணம் சொல்லிக் கொண்டு சாலத்தையோட்டி முள்ளிவாய்க்காலில் அப்பாவிச் சனங்களைப் பணயம் வைத்து படுகொ...லை செய்ததற்கு அமிர்தலிங்கம் 1987இல் பெற்ற மாகாணசபையை அன்றைக்கே ஏற்றுக் கொண்டிருக்கலாம். ராஜபக்ச உருவாக்கிய அதிரடிப்படையை இறக்கி வாள்வெட்டை யாழ்ப்பாணத்தில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இராது.

    விக்கினேஸ்வரனின் முதலமைச்சர் பதவியை தோழர் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ பிள்ளையானுக்கோ கொடுத்திருந்தால் நிச்சயமாக விக்கினேஸ்வரனிலும் பார்க்க சிறப்பாக வடமாகாணசபை இயங்கி இருக்கும். விக்கினேஸ்வரன் காலத்திலேயே வட மாகாணக் கல்வி கடை நிலைக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் கடைத்தனங்கள் தலைவிரித்தாடியது.
    ராஜபக்ச விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களுக்குச் செய்த பெரிய நன்மை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. யுத்தம் முடிவடைந்திருக்காவிட்டால் வடக்கு கிழக்கின் இளம்தலைமுறை குழந்தைப் போராளிகளாகி தமிழர்களின் வம்சமே அளிக்கப்பட்டு இருக்கும். எஞ்சியவர்கள் வடக்கு கிழக்கை கைவிட்டு தெற்குக்கும் மேற்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து இருப்பார்கள் .

    நன்றி முகனூல்

»»  (மேலும்)

5/28/2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில் அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடந்த வாரம் 20.05.2016 சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றவைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கடற்படை அதிகாரி  ஒருவரை திட்டியுள்ளார்.
தேசத்தின் வெற்றிக்காக உழைத்த வீரர்கள் முதலமைச்சர் அவமானம் செய்துள்ளார். முதலமைச்சரின் இச்செயலைக்கண்டித்து  திருகோணமலை பன்சாலை   ஒன்றிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை  இன்று சனிக்கிழமை 28.05.2016 மதியம் 2.00 மணிக்கு  திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தின் முன்னால் நடத்தினார்கள்.

இதில் பொது அமைப்புகளும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிரான கோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி இருந்தனர்.

 முதலமைச்சரின் கொடும்பாவி ஒன்றும ;எரிக்கப்பட்டது.
»»  (மேலும்)

5/27/2016

ஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள் – ஏ.எல்.எம். அதாஉல்லா

இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. இந்த அடிமைச் சாசனத்திலிருந்து மீட்சி பெறவேண்டும் என்பதற்காக தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். வடகிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமான இணைப்பு என்றாலும் அது முஸ்லிம்களுக்குப் போடப்பட்ட பாரியதொரு விலங்கு. இதனை உடைப்பதற்கான போராட்டத்தில் அஷ்ரப் முழு மூச்சான பங்களிப்புகளை செய்து கொண்டுபோனார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். அவருனான நேர்காணலை தொகுத்துத் தருகின்றோம்.
kyuo8
எங்கள் தேசம்: சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சில காலம் அமைதியாக இருந்தீர்கள். தற்போது மீண்டும் செயல்பாட்டு அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இது சம்பந்தமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஏ.எல்.எம். அதாஉல்லா: நாங்கள் அமைதியாக இருந்து செயல்பாட்டு அரசியலுக்கு வந்தபின்னர் எம்மீது ஒரு பார்வை இருந்தாலும் நாங்கள் கட்சி என்ற அடிப்படையில் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் சமூகத்திற்கும் தேவையான விடயங்களை செய்து கொடுத்திருக்கிம். கடைசியாக நடந்த தேர்தலிலே மக்கள் என்னையும் எனது கட்சியையும் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள் என்பதை விடவும் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு சில கட்சிகள் முனைந்து வதந்திகளை கக்கியதன் மூலம் எங்களுடைய வாக்குகளில் குறைவு ஏற்பட்டு பாராளுமன்றத்திற்குப் போகாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் கூட மக்கள் பணியை நாம் விட்டுவிடவில்லை. அரசியலில் மக்களுக்கு சேவை செய்வதற்கு கட்சி என்கின்ற அதிகாரமே போதுமானது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் சில அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்கள் முன்னிலையில் பல வாக்குறுதிகளை முன்வைத்துத்தான் வாக்குகளைப் பெற்றார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் மக்களும் சிலவற்றை நம்பி வாக்களித்தார்கள். வாக்களித்த மக்கள் தமது வாக்குகளைப் பெற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கும் சுமார் ஆறு மாதங்கள் இடைவெளியை வழங்கினோம். இந்தக் காலத்தில் உண்மை எது பொய் எது எங்கே நாங்கள் ஏமாற்றப்பட்டோம் யாருடைய அரசியல் சரியானது என்பதை மக்கள் புரிந்துவருதைக் காண்கிறNhம்.
எங்கள் தேசம்: கடந்த தேர்தல்களில் மஹிந்தவுடன் இணைந்திருந்தீர்கள். தற்போது மைத்திரி அணியுடன் இணைந்துள்ளீர்கள். இதன் மூலமாக நீங்களும் தேசிய காங்கிரஸ்ஸும் மக்களுக்கு சொல்ல முனையும் செய்தி என்ன?
ஏ.எல்.எம். அதாஉல்லா: மைத்திரியின் மே தினக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டது ஒரு ஆச்சரியமான விடயமல்ல. தலைவர் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடைய சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சி என்ற பஸ்ஸில் நானும் ஏறமாட்டேன் முஸ்லிம் சமூகமும் ஏற மாட்டாது என எங்களுக்கு வஸிய்யத் செய்திருந்தார். நான் என்னுடைய தலைவரைப் பின்பற்றும் ஒருவன். 2003 இல் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு போன போது பாரிய முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் சென்ன். அந்த நேரத்தில்தான் நோர்வே ஒப்பந்தம் இடம்பெற்றது. அதில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் இருக்கும் வரை அக் கட்சியுடன் இணைய மாட்டோம்.
தலைவர் அஷ்ரபுடன் இணைந்து சந்திரிக்காவை இரண்டு தடவை ஜனாதிபதியாக்குவதற்கு பொத்துவில் தொகுதியின் பிரதிநிதியாக பாடுபட்டிருக்கின். அதன் பிறகு மஹிந்த ராஜபக்ஷவினுடைய தேர்தல்களில் பிரதிநிதியாக இருந்திருக்கின். கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கூட அவருடைய பிரதிநிதியாக இருந்தேன். க்கஊஅ என்ற கட்சியின் தீர்மானத்தின் கீழ் நான் தொடர்ந்து செயல்பட்டுவந்தேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன க்கஊஅ யிலிருந்து பிரிந்து சென்று ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிட்டார். அவர் பிரிந்து சென்றதினால் இன்னுமொரு கட்சி உருவாகியிருந்து, அந்தக் கட்சி மேடைக்கு நான் போயிருந்தால்தான் இது ஒரு கேள்வியாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் க்கஊஅ இன் மே தினக் கூட்டங்களிலேயேதான் கலந்துகொண்டிருக்கின். கடந்த வருட மே தினத்தில் மீண்டும் க்கஊஅ யினுடைய தலைவராக மைத்திரிபால வந்தபிறகு அந்த மேடைக்கு நான் போயிருந்தேன்.
கட்சியினுடைய கொள்கையின் அடிப்படையில் ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியினுடைய மே தினக் கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. முஸ்லிம்கள் சார்பாக ரிஷாத் பதியுதீனும் றஊப் ஹக்கீமும் ரணிலின் மேடையில் இருந்தார்கள். தலைவர் அஷ்ரபின் வஸியத்தின்படி அங்கே நான் செல்ல முடியாது. ஆகவே, நான் தொடர்ச்சியாக இருக்கின்ற மைத்திரியின் கட்சியினுடைய மே தினக் கூட்டத்திற்கே சென்றிருந்தேன். நாங்கள் தொடர்ந்து க்கஊஅ இல் தான் இருக்கிம். ஜனாதிபதி மைத்திரிதான் கட்சிக்கு வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். மைத்திரிபால சிறிசேனவின் மேடைக்கு சென்றதன் மூலம் எங்களுடைய கொள்கைகளை, அரசியலை மாற்றி இருக்கிம் என்று யாரும் கருத முடியாது. நாங்கள் இருந்த இடத்திலேயே இருக்கிம். மைத்திரிபாலவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் விசுவாசம் உள்ள ஒருவனாக என்னைப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
எங்கள் தேசம்: அண்மையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம் பெரும்பான்மையாகக் கொண்ட தனி மாகாணம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சாத்தியங்களை தெளிவுபடுத்த முடியுமா?
ஏ.எல்.எம். அதாஉல்லா: இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. இந்த அடிமைச் சாசனத்திலிருந்து மீட்சி பெறவேண்டும் என்பதற்காக தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். வடகிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமான இணைப்பு என்றாலும் அது முஸ்லிம்களுக்குப் போடப்பட்ட பாரியதொரு விலங்கு. இதனை உடைப்பதற்கான போராட்டத்தில் அஷ்ரப் முழு மூச்சான பங்களிப்புகளை செய்தார்.
அதனைத் தொடர்ந்து நாங்களும் வடகிழக்கைப் பிரிக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்து வந்தோம். தலைவர் அஷ்ரப், தான் வாழுகின்ற காலத்தில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் கருத்துத் தெரிவிக்கும்போது, வடகிழக்கு இணைவதாக இருந்தால் நிபந்தனையோடு இணையட்டும். அதற்கான பேச்சுவார்த்தைகளை பேசுங்கள் என தமிழர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அறைகூவல் விடுத்தார். ஆனால், கடைசி வரைக்கும் தமிழ் சமூகம் நம்மைத் தனித்தரப்பாக ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், என்னுடைய சமூகம் வடகிழக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்கக் கோரும் என தெரிவித்தார்.
எனவே, இணைப்பு பிரிப்பு என்பதை விடவும் நிரந்தரமாக இணைவதாக இருந்தாலும் வடக்கும் கிழக்கும் என்ன அடிப்படையில் இணைய வேண்டும் என்பதைப் பேசுவதற்காக அல்லது பேசுவதற்கு அடித்தளம் இடுவதற்காகவாவது பிரிந்திருக்க வேண்டுமென்று சில முயற்சிகளை எடுத்தோம். வடக்கு கிழக்கு ஏதோ ஒரு அடிப்படையில் பிரிந்திருக்கிறது. இப்போது வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தனித்தனி மாகாணங்கள். அது பிரிந்தே இருக்கட்டும். இணைக்க வேண்டும் என தமிழர்கள் நினைத்தால் நாங்கள் பேசலாம். அந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியமாக வடமாகாணத்தினுடைய முதலமைச்சர் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல் வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு சுய அலகு தருவதாக கூறுவது போன்ற பூச்சாண்டித்தனமான விடயங்கள் எல்லாம் அங்கு இருக்காது.
சமனான இரண்டு மாகாணங்கள் அங்கு உருவாக்கப்பட வேண்டும். அந்த சமனான இரு மாகாணங்கள் உருவாக்கப்படுவதற்கு ஏற்றவாறு வடகிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களுடைய எல்லைகளும் மீளமைக்கப்பட்டு சில சிங்களப் பிரதேசங்கள் ஊவா, வடமத்திய மாகாணங்களுக்குள் உள்வாங்கப்பட்டு அதாவது, பிபிலை, பொலன்னறுவை போன்ற பிரதேசங்களுடன் இணைக்கப்பட வேண்டும். திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் தமிழ் பிரதேசங்களை வடமாகாணத்தோடு இணைத்து பெரும்பான்மை தமிழ் மாகாணசபையும் பெரும்பான்மை முஸ்லிம் மாகாணசபையையும் உருவாக்குவதன் மூலம் தமிழ் பேசுகின்ற இரண்டு மாநிலமும் தமிழ் பேசுகின்ற இரண்டு முதலமைச்சர்களும் உருவாவதை எல்லோரும் வரவேற்பார்கள் என நினைக்கின். குறிப்பாக, தமிழ் மக்கள் இதனை நிராகரிக்க மாட்டார்கள் என நம்புகின்.
எங்கள் தேசம்: பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள் ஓர் அணியாக இணைந்தால் முஸ்லிம்களின் அடைவு எல்லை வியாபிக்கும் என்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஏ.எல்.எம். அதாஉல்லா: முஸ்லிம் சமூகம் ஒன்றுபடுவதன் மூலம் நாங்கள் சாதிக்கலாம் என்பதற்கு அஷ்ரப் அவர்கள் ஒரு சான்று. அவருடைய முன்னுதாரணம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால், ஒற்றுமைப்படுவது என்பது இஸ்லாமிய முறைப்படி நாங்கள் கருதுகின்ற ஒரு அமீருடைய தலைமையின் கீழ் இருப்பதன் மூலம் அதை சாதிக்க முடியும்.
அஷ்ரப் அவர்களை அவர் ஒரு சட்டத்தரணி மற்றும் அழகானவர் என்பதற்காக நாங்கள் விரும்பவில்லை. சமூகத்தின் முழுப் பொறுப்பையும் தனது தலையிலே சுமந்த ஒருவர். உரிய நேரத்திலே சமூகத்திற்காகக் குரல் கொடுத்து பாரிய திருப்புமுனையை இந்த நாட்டிலே ஏற்படுத்தியவர் என்பதற்காக நேசித்தோம். கட்சி என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. கட்சி என்பது காலத்தின் தேவை. ஒரு நல்ல தலைமையை ஏன் சமூகத்தால் கண்டுபிடிக்க முடியாது? புத்திஜீவிகள் ஒன்றிணைந்து இந்தக் கட்சிகளை வழிநடத்த வேண்டும். அல்லாஹ்வுக்குப் பயந்து, சமூகத்திற்குப் பயந்து, உண்மைக்குப் பயந்து யார் செயல்படுவார்கள் என்பதை அடையாளம் காண வேண்டும். அவ்வாறான தலைமையின் கீழ் அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும்.
எங்கள் தேசம்: வடகிழக்கு பிரிய வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் சொல்கிறது. வடகிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலமாக சொல்லி வருகிறது. இந்த முரண்பட்ட கருத்துக்குக் காரணம் என்ன?
ஏ.எல்.எம். அதாஉல்லா: முஸ்லிம் காங்கிரஸினால் பேசப்படுகின்ற இவ்வாறான விடயத்தினால்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்படுகின்றது. தலைவர் அஷ்ரப் சொன்னார் ரணில் விக்கிரமசிங்கவிற்குப் பின்னால் போகக் கூடாது என்று. ஹக்கீம் அதை உள்வாங்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்திற்குக் கொண்டுவந்து நோர்வேயுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். அதில் நாங்கள் தெளிவாகக் காட்டிக்கொடுக்கப்பட்டோம். முஸ்லிம்கள் என்ற பெயரில் எங்களைக் குறிப்பிடாமல் வடகிழக்கில் வாழுகின்ற சிறு குழுக்கள் என எங்களுக்கு அடையாளம் சொல்லப்பட்டிருந்தது. ஏற்கனவே ஒரு கட்டத்தில் இஸ்லாமிய தமிழர்கள் என எங்களுக்கு முத்திரை குத்தப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் தடுக்கமுடியாமல் போனதால்தான் நாங்கள் வளர்த்த கட்சியை விட்டு தலைவருடைய மக்களாக வெளியேறினோம்.
இப்பொழுதுள்ள பிரச்சினை இதுதான். ஹக்கீமை ஏதோ ஒரு சக்தி ஆட்டிக்கொண்டிருக்கிறது. அன்று நோர்வேயும் அமெரிக்காவும் சேர்ந்துதான் இவ்வளவு சிக்கலை உருவாக்கினார்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிம். இன்றைக்கும் அதே நோர்வேகாரர்களும் அதே விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்களும் கடல் கடந்த புலிகளும் வடகிழக்கு இணைவு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் முஸ்லிம் மக்கள் மீது கொண்ட அக்கறையோ, நாட்டின் மீது கொண்ட அக்கறையோ அல்ல. இவருக்குப் பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள். அந்த எஜமானர்களிடமிருந்து இவரால் விலக முடியாமல் இருக்கிறது என்பதைத் தவிர வேறnhன்றும் இல்லை.
நேர்காணல்: ஐ.எம். இர்சாத்
படம்: எப்.எம். பயாஸ்
»»  (மேலும்)

வடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் தொகை 20% க்கும் அதிகம்

வடக்கிலும், கிழக்கிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 20 சதவீதத்தைத் தாண்டி இருப்பதாகத் தெரிவித்த சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெற்கில் அதனை 4.7 சதவீதமாகக் குறைக்க முடிந்திருப்பதாகவும் கடந்த கால யுத்தமே வடக்கு, கிழக்கில் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து தினகரன், தினமின நாளிதழ்களில் இணைப்பாக சமுர்த்தி இதழின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
»»  (மேலும்)

.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரின் வைபவங்கள் பகிஷ்கரிப்பு

கடற்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரை வைபமொன்றில் வைத்து, பிரமுகர்கள் மத்தியில் திட்டியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் வைபவங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என இலங்கை முப்படை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், முப்படையின் முகாம்களுக்கு நுழைவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
திருகோணமலை, சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவமொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அவ்வைபவத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றதோடு, அதில் முதலமைச்சர் குறித்த அதிகாரியை திட்டும் காட்சி மாத்திரம் உள்ளடங்கியிருக்கின்றது.
 
குறித்த காட்சி தொடர்பில் சமூக வலைத்தளங்களில், பலரும் பலவிதமான (எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும்) கருத்துகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
»»  (மேலும்)

5/25/2016

பிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்


பிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்



புணாணை  என்னும் பிரதேசம் கொழும்பு றோட்டு என்று மட்டக்களப்பு மக்களால் அழைக்கப்படும் வாழைச்சேனையில் இருந்து   பொலநறுவை நோக்கி  செல்லும் ஏ -11 நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.இப்பிரதேசம் ஒருகாலத்தில் சிறுத்தைகள் நிறைந்த அச்சமூட்டும் காடுகளால் நிறைந்திருந்தது.  பன்னெடும் காலமாக சேனை பயிர் செய்யும் தமிழ் மக்கள் தமது பூர்வீக பிரதேசமாக இந்த புனைனையை கொண்டிருந்திருக்கின்றனர்.அதுமட்டுமன்றி தமிழ்-பிரதேசங்களின் எல்லையை நிர்ணயிக்கும் பூமியாகவும் இந்த புணானை பிரதேசம் இருப்பது புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.


எனவே இந்த புணாணை பிரதேசத்தை தண்டி செல்லும் தமிழ்,சிங்கள   பயணிகள் தங்களுடைய பயணம் எவ்வித தங்கு தடைகளுமின்றி, அமைய வேண்டும் என வேண்டி  இங்கிருக்கும் ஆலயத்தில் வழிபட்டு செல்வது வழமையாகும். இக்கோயிலானது  1960ம் ஆண்டு காலத்திலிருந்து தொடங்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது..


ஆனாலும் 1983ம் ஆண்டின் பின்னர் உருவான கலவர நிலைமைகளால் இந்த எல்லைபிரதேசமக்கள் பலர் இராணுவத்தாலும் ஊர்காவல் படையினராலும் கொல்லப்பட்டனர்.எஞ்சியிருந்தோர் வாழைச்சேனை பிரதேசம் நோக்கி அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். படிப்படியாக இந்த பிரதேசம் கைவிடப்பட்டு புணாணை எங்கும் இராணுவத்தினர் மட்டுமே குவிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. புணானை இராணுவ முகாம் என்பது கிழக்கு மாகாணத்துக்குள் நுழையும் பயணிகளுக்கு மிகப்பெரும் அச்சமூட்டும் ஒன்றாக காணப்பட்டது.

 கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு பிள்ளையான் முதலமைச்சராக வந்த போது
யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு  கைவிடப்பட்டநிலையிலும் அழிவின் விளிம்பிலும்   பல எல்லை கிராமங்கள் கிடந்தன. அவற்றையிட்டு
தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.புனாணை போன்று பல எல்லை கிராமங்களை மீள கட்டியமைத்தார். புனாணையில் அமைந்துள்ள பாடசாலையை அபிவிருத்தி செய்தார்.  அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள் இந்த ஆலயத்தை  புனர் நிர்மாணம் செய்தனர்.   இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்ற வசதியாக  முதலமைச்சரின் திட்டப்படி ஒரு   கடைத்தொகுதிகூட  கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பிள்ளையானின் ஆட்சிகாலத்தில் புணானை புதுபொலிவு பெற்றதுமக்கள் மீள குடியேறினர்.


ஆனால் தற்போது இவ்வாலையமானது எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டு கிடக்கின்றது. மீண்டும் இப்படி எல்லைகிராமங்கள் கைவிடப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில்  அமைச்சர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருப்பதில் என்ன அர்த்தம், என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆலயத்திற்குள் உள்ள விக்கிரகம் கூட களவாடப்பட்டு விட்டது. இதன்காரணமாக பயணிகள் இப்போது இந்த இடத்தில் இறங்கி செல்வது கிடையாது. புணாணை சோபையிழந்து காணப்படுகின்றது.இந்நிலை தொடர்ந்தால் இப்பிரதேசம் மீண்டும் தமிழர்களின் கையை விட்டு செல்லும்.நாளை மாகாண எல்லைகள் மாற்றப்படும் என்பது உறுதியாகும்.


இவ்வாலயத்தை உடனடியாக புனரமைப்பு செய்து விநாயகர் விக்கிரகம் வைத்து ஆலயத்தை இவ்வீதியால் செல்லும் மக்கள் தங்களுடைய வேண்டுதலை வேண்டி செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்குமாறு வாகரை பிரதேச செயலாளரை ரமண மகரிஷி நற்பணி மன்ற கிளைத் தலைவர் எஸ்.செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பாதையால் பல அரசியல் வாதிகள் பாராளுமன்றம் மற்றும் ஏனைய இடங்களுக்கு செல்லும் போது பார்வையிட்டு செல்கின்றார்களே தவிர, இதனை புனரமைத்து இந்து மக்கள் வழிபட்டு செல்வதற்கு யாரும் உதவி செய்யவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் அல்லது இந்து சமய ஆர்வலர்கள் இவ்வாலயத்தை புனரமைத்து தருமாறு இப்பாதையால் பயணிக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
»»  (மேலும்)

5/24/2016

எல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் மலையகம்...... # அரசியலுக்கு அப்பால்...... எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திலகர் மனம்திறக்கிறார்

  நேற்றைய நாள் களப்பணியில் உடற்சோர்வை விட உளச்சோர்வே அதிகமாகியது. காலை ...9 முதல் இரவு 9 வரை களத்தில் இருந்தேன். அம்பகமுவ பிரதேசத்தை அண்மித்த வட்டவல (குறுக்குவாடி டம்பல்ஸடோ, குருவத்தை வுட்ஸ்டாக் ) இவை கண்டி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தோட்டங்கள். நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஊவாக்கல மூன்றாம் பிரிவு . அங்கே மக்களின் குற்றச்சாட்டு கூட ஊவாக்கல பிரிவுக்கு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஊவாக்கல 3ம் இலக்க பிரிவுக்கும், வெள்ளிமலை பிரிவுக்கும் வருவதில்லை என்பதாகும். ஊவாக்கல மெராயா நகரை அண்மித்த தோட்டமாயினும் மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மூன்றாம் பிரிவும், வெள்ளிமலையும் மேலே வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள தோட்டங்கள். 

அடுத்தது வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோணபிட்டிய தோட்டம். கோணப்பிட்டிய பிரிவில் மறைந்த அமைச்சர் பெ.சந்திரசேகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத்திட்டம். ஒரு கிராமம் போல காட்சி தரும் இந்த வீடுகள் தற்போது நிலத்தாழிறக்ககத்துக்கு உள்ளாகி மண்சரிவு ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. அதே தோட்டத்தின் இன்னுமொரு பிரிவு மெரிகோல்ட். இந்த பெயருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அமைந்துள்ளது. மண்சரிவு மாத்திரமல்லாது மக்கள் மனதளவிலும் சரிந்தவர்களாகவே உள்ளனர்.
மிகவும் பின்தங்கிய இந்த லயன் குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவை கண்டி மாவட்ட எல்லை (மறுமுனையில்) யில் அமைந்துள்ளன. அதேபோல 'நாடு' ( சிங்கள கிராமங்கள்) களின் எல்லையில் அமைந்துள்ளன. 


இந்த மக்களுக்கான இறுதித் தீர்வும் புதிய தனி வீடுகள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், எல்லைப்புறத்தில் வாழும் மக்கள் என்ற வகையில் பௌதீக தேவைகளுக்காக கடந்து 'உளவள ஆலோசனைகளும்' தேவைப்பாடுகளும் அவசியம் என உணர முடிகின்றது. ஒரு லயன் குடியிருப்பை வேலிகளையும் பற்றைகளையும் விலக்கி கடந்து கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அவர்களது வாழிடமும் தோற்றங்களும் நெஞ்சை கனக்க செய்யுமாப்போல் அமைந்துவிட்டன. மனதளவில் சோர்வடைந்து நடை தளர்ந்தே தங்குமிடம் திரும்பினேன்.
அரசியல் அரங்கில் அடியெடுத்து வைக்குமுன்னர் செயற்பாட்டாளனாக பல்வேறு தளங்களில் பணியாற்றிய அனுபவமுண்டு. அரசியல்வாதிகளை விமர்சனம் செய்ததுமுண்டு. இப்போதும் விமர்சனம் மற்றும் சுய விமரசனத்தினூடாகவே இந்த அரசியலை முன்னெடுப்பவன் என்ற வகையில் அரசியல் வகிபாகத்தினூடாக உள்ள அதிகாரங்களைக் கொண்டு குறைந்த பட்சம் தீர்வுகளை நோக்கி நகரக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த நிலையில் தனியே அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதை மாத்திரம் இலக்காக கொள்ளாது தம்மால் இயன்ற வழிகளில் சமூக ஆற்றுப்படுத்தல், உளவள மேம்படுத்தல், தகவல் திரட்டல். பணிகளை ஆர்வமுள்ள அன்பர்கள் முன்னெடுக்க வெளியொன்று திறந்தே கிடக்கிறது. இந்த பணி ஊடகம் சார்ந்து செயறபடுவோருக்கும் பொருந்தும். இந்த இயக்கச் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படும் உண்மைகளையும் தகவல்களையும் மீண்டும் 'அரசியல் செயற்பாட்டாளர்களை அவதூறு செய்வதற்கு மாத்திரம்' பயன்படுத்தாமல் குறித்த மக்களின் மீட்சிக்கான வழிமுறைகளுக்காகவும் கையாள வேண்டும் எனவும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.


நூறாண்டு கால பிரச்சினைகளை அரசியல்வாதிகள் கையில் மட்டுமே தீர்வுதேடி ஏனையோர் வாளாவிருப்பது எவ்வித்த்திலும் சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்லாது என எண்ணத் தோன்றுகிறது. அது இன்னுமோர் நூறாண்டுகளுக்கு நம் மக்களை பின்னோக்கியே தள்ளும் அபாயத்தைக் காட்டி நிற்பதாக உணர முடிகிறது. இணையமும் முகநூலும் நம் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கு உதவும் அதேவேளை உள்ளூரில் மக்களின் அவலத்தில் இருந்து மீட்க இதே முகநூல் சவாலாக அமைந்துவிடும் சாத்தியங்களும் உண்டு. முகநூலில் கவலைப்பட்டு விடுவதனால் மாத்திரம், விமர்சனம் செய்து விடுவதனால் மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் போவதில்லை என நம்பகரமாக தெரிகிறது. ஏனெனில் இங்கே 'எல்லைப்புறம்' என குறிப்பிடப்படுவது 'காடுகளின்' எல்லைகள் மாத்திரமல்ல 'நாடு' களின் எல்லைகளும் தான் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

*நன்றி முகனூல்
»»  (மேலும்)

எரித்ரியா:25 ஆண்டுகால சுதந்திரம்

மனித உரிமை மீறல்கள் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ள கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா தனது 25ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
நீண்டதொரு உள்நாட்டு போருக்கு பிறகு எரித்ரியா, எத்தியோப்பியாவிலிருந்து விடுதலை பெற்றது.
இதையொட்டி தலைநகர் அஸ்மாராவில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
போரின் தடயங்கள் மறையத் தொடங்கினாலும், அந்த வடுக்கள் மக்கள் மனங்களில் இன்னும் உள்ளன.
நாட்டில் சில சாதகமான அம்சங்கள் தென்படுகின்றன. சர்வதேச முதலீடுகள் வந்துள்ளன, குறிப்பாக சுரங்கத்துறையில். ஆனாலும் பலருக்கும் வாழ்க்கை சவாலாகவே உள்ளது.
»»  (மேலும்)

5/23/2016

பிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவையா?

004இயற்கை சீற்றத்தால்  பல லட்சம் மக்கள் நிலசரிவினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில் பல உழைக்கும் மக்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் இவ்வேளையில் சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கை மக்களுக்காக அவசரகால   தங்களை இடது சாரிகள் என்று ஊழையிடும்  பிளட்  அமைப்பு இவ்வேளையில் தங்களின் மாகாநாட்டை கூடியிருப்பது  akkininews  தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது என அவ்விணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 





மக்களின் பிணங்களின் மேல் யார் குதூகலித்தாலும் அவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளே...பாதிக்கப்பட்ட உன்மை நிலைகளை மீடியாக்கள் தயக்கம் இன்றி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  இருக்கும் வீடுகளே எந்த நேரத்தில் இடிந்து விழும் என்ற ஏக்கம் ஒருபுறம் இருக்க இதில் வேறு இயற்கை அனர்த்தம் எம் மக்களை நடு வீதியில் நாதியற்றவர்களாக்கி வருகிறது, மலையகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள இந்த சோக நிலையை நினைத்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைவிட வேறு எதுவும் செய்ய முடியாத நிலை, ஆங்காங்கே மலையகத்தில் அரசியல் பிரமுகர்கள் மக்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கும் ஆறுதல்களை பார்த்து ஆறுதல் அடைவதைவிட எதுவும் தென்படவில்லை.இதற்குள் பிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவையா? எனவும் அக்கினி இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது  
»»  (மேலும்)

5/22/2016

எம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நபர்களுக்கு’- தலித் சமூக மேம்பாட்டு முன்னணி



தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எம்மீதும் எமது சக ஆதரவாளர்கள்; மீதும் தொடர்ச்சியான அவதூறுகளும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. புகலிடத்திலுள்ள சில சாதிய சமூகமேலாதிக்க மனங்களின் வெளிப்பாடுகளாக மேலெழும் இவவாறான அவதூறுகளை எதிர்கொண்டும், கடந்தும்… தொடர்ந்தும் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எனினும் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்தும் இவ்வாறான அவதூறுகளை பரப்புவது இவர்களது சுயஇன்ப தணிப்பிற்கான செயல்பாடு எனவும் ஒதிக்கிவிட முடியாது. இது யாழ்மேலாதிக்க அதிகாரத்தை காப்பாற்றும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். எமது சமூகத்தில் நிலவும் சாதியம் அதன் தோற்றம் குறித்த நிதானமும், அதில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் வரலாற்றுப் புரிதலையும் எதிர்கொண்டு செயல்பட விளைபவர்கள் நாம். சாதியம் குறித்த எமது பேசுபொருளானது வெறும் அரசியல் முழக்கமல்ல. சமூக பண்பாட்டு வேர்களை அசைக்கும் எத்தனிப்பாகவும் இருக்கின்றது. எமது இவ்வாறான செயல்பாட்டை கண்டு அஞ்சுபவர்களே தொடர்ந்தும் எம்மீதானா அவதூறுகளை புகலிடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் பினாமிகளின் பெயரில் நகைக்கடைகளும், நீச்சல் தடாகத்துடன் கூடிய மாடி வீடுகளும் வைத்திருக்கின்றனர் என்று குளிர்தேசத்தில் தற்போது புதிதான வதந்தி ஒன்றை எம்மீது பரப்பிக் குளிர்காய்கின்றனர். எமது செயல்பாட்டின் மீதோ, கருத்துநிலை மீதோ எவ்வித உரையாடலுக்கும் தயாரற்ற இவ்வாறான ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதற்கான உங்களது நோக்கம் என்ன?

இலங்கையிலும் சரி, புகலிடத்திலும் சரி சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள், அரச கைக்கூலிகள், துரோகிகள், எனும் கருத்தியல் ஆழமாக வேரூன்றப்பட்டு வருகின்றது. இவ்வாறான தொர்ச்சியான செயல்பாட்டை புகலிடத்திலுள்ள சில புதிய தலைமுறையினருக்கும் எடுத்துச்சென்று எமது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பொது எதிரி சிங்கள் அரசு மட்டுமல்ல, சாதியம் குறித்து பேசுபவர்களும் தமிழ்த் தேசியத்திற்கான பொது எதிரிகள்தான் என காட்டுவதற்கான அரசியல் உள்நோக்கம்தான் இது. புகலிடத்தில் உள்ள புதிய தலைமுறையினர் சிலர் விரிவான தேடலும், வாசிப்பும் இன்றி வன்முறைக் கலாசாரத்தையும் காவி வந்து செயல்படுபவர்களாக உள்ளனர். இவர்கள் மத்தியிலே இவ்வாறு எம்மீதான கருத்தியலை விதைப்பதன் உள்நோக்கத்தை நாம் ஒரு கொலை அச்சுறுத்தலாகவே கருதுகின்றோம். நாம் கடந்து வந்த வன்முறைக் கலாசாரத்தில் தேசத்துரோகிகளுக்கான அதிகபட்ச தண்டனை எதுவாக இருந்தது?

ஆனால் பொதுவாகவே இளையதலைமுறை என்பது நிலைஊன்றித் தரித்து நிற்கும் ஒரு சமூகமல்ல. அவர்கள் தேடுகிறார்கள், உரையாடுகிறார்கள். வன்முறை கலாசாரத்தை செரித்து வளர்ந்தவர்கள் அவர்கள். நாம் அவரகள் மீது மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவர்களை யாரும் வழிநடத்த முடியாது.

அவதூறுப் பிரியர்களே, தயவுசெய்து சமூகவளரச்சிக்கான மனித மேம்பாட்டிற்கான அறிவியல் பூர்வமான தேடலுக்கும் உரையாடலுக்குமான வாசலை திறவுங்கள். தொடர்ந்தும் இருளுக்குள் உறைந்து உருகாதீர்கள். வெளிச்சத்திற்கு வாங்கள். அரூபமாக நின்று எதையும் நீங்கள் சாதிக்கப்போவதில்லை. பொதுவெளியில் பேசுவதாக இருந்தால் எதையும் ஆதாரத்துடன் முன்வைக்கவேண்டும் எனும் ‘குறைந்தபட்ச’ அறிவும் அற்ற ‘நபர்களுக்காக’ இதை எழுதுவதை ஒரு அவமானமாக கருதுகின்றோம்.

அவதூறுப் பிரியர்களே, நமது முன்னணி செயற்பாட்டாளர்களிடம் பினாமிச்சொத்து இருக்குமானால் தக்க ஆதாரத்துடன் காலம்தாழ்த்தாது பகிரங்கமாக வெளியிடவும்
.

தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
பிரான்ஸ் -20-05-2016
»»  (மேலும்)

5/21/2016

மாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்

அறநாயக்க மக்கள் ஆறு முகாம்களில் தஞ்சம்:
நேரடியாக களத்தில் எச்டிஓ :கேகாலை உதவிஅரசஅதிபருடன் சந்திப்பு!



காரைதீவு நிருபர் சகா...

கேகாலை அறநாயக்க மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 1604 பேர் 06முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.அவர்கள் மாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் உள்ளனர்.
இவ்வாறு நேற்று வியாழக்கிழமை அறநாயக்க மண்சரிவு பிரதேசத்திற்கு சென்ற மனித அபிவிருத்தித்தாபனத்தின் இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மீரியபெத்த ஞாபகம்!
அவருடன் தாபனத்தின் கேகாலை இணைப்பாளர்களான பாலித மற்றும் கோபாலரெத்தினம் ஆகியேர் சென்றிருந்தனர். நேற்று அப்பிரதேசத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது.இராணுவத்தின் மீட்புவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.எங்கு பார்த்தாலும் மண்குவியல்கள் கற்கள்.மக்களின் அவலக்குரல்கள் .மொத்தத்தில் கொஸ்லந்தவின் மீரியபெத்த சம்பவத்தை நினைவூட்டுவதாக இருந்தது என திரு.ஸ்ரீகாந்த் அங்கிருந்து தெரிவித்தார்.
குழுவினர் கேகாலை மாவட்ட உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கே.சமன்அனுரவைச் சந்தித்தனர். தற்போது மக்களின் நிலைமையும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடினர்.

உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கே.சமன்அனுர கூறுகையில்:
கேகாலை மாவட்டத்தில் 11பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளன.அவற்றில் அறநாயக்க பிரதேசசெயலாளர் பிரிவும் ஒன்றாகும்.இது 112.7 கிமீ. விஸ்தீரணத்தைக்கொண்டது. 61கிராமசேவையாளர் பிரிவுகளைக்கொண்டது.181கிராமங்களைக்கொண்ட அறநாயக்கவில் 66720பேர் வாழ்ந்துவருகின்றனர்.
இங்கு 60226சிங்களவர்களும் 1202 இலங்கைத்தமிழர்களும் 300இந்தியத்தமிழர்களும் 4976முஸ்லிம்களும் உள்ளனர்.
200பேர் மாயம்!



நேற்று ஏற்பட்ட மள்சரிவு அனர்த்தத்தில் அறநாயக்காவில் மட்டும் 66வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.200பேர் காணாமல்போயுள்ளனர்.16பேரின் சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
இன்று அடக்கம் !
அவர்களின் பூதவுடல்கள் நாளை வெள்ளிக்கிழமை கேகாலைக்குகொண்டுசெல்லப்பட்டு பூரணஅரசமரியாதையுடன் சமயகிரியைகளுடன் அடக்கம் செய்யப்படும்.
மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாடசாலை பொதுக்கட்டடம் என 06 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரசசெலவில் தற்சமயம் உணவு வழங்கப்பட்டுவருகின்றது. மக்கள் உடுத்தஉடையுடன் காணப்படுகின்றனர்.வருகின்ற பொதுசமுக அமைப்புகள் அதனைச்செய்தால் வரவேற்கலாம். என்றார்.
மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் குழுவினர் நேற்றுமுகாம்களிலுள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் போத்தலை வழங்கிவைத்தனர்.

*நன்றி முகனூல்
»»  (மேலும்)

திருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வி கண்டுள்ளனர்

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேட்சை  கட்சிகள் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறன . இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன்   மற்றும்  திமுக வேட்பாளர்கள் பலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வி கண்டுள்ளனர்
  1. ஆவடி தொகுதியில்  சுயேட்சைக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர்.
  2. பர்கூர் தொகுதியில்  சுயேட்சைக்கு1382 வாக்குகள். திமுக 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
  3. சிதம்பரம் தொகுதியில்  சுயேட்சைக்கு1724. திமுக 1506 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
  4. கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 3154 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. இந்தத் தொகுதியில்  சுயேட்சைக்கு3595 வாக்குகள்.
  5. காட்டுமன்னார்கோயிலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி. இந்தத் தொகுதியில்  சுயேட்சைக்கு1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன.
  6. கிணத்துக்கடவு தொகுதியில் சுயேட்சைக்கு 3884 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். திமுக 1332 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
  7. கோவில்பட்டியில்  சுயேட்சைக்கு2350 வாக்குகள். திமுக 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
  8. மொடக்குறிச்சி சுயேட்சைக்கு 2715 வாக்குகள். திமுக 2222 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
  9. ஒட்டப்பிடாரம் 2612 வாக்குகள்  சுயேட்சைக்கு திமுக 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
  10. பெரம்பூர் 3167  வாக்குகள்  சுயேட்சைக்கு . இந்தத் தொகுதியில் 519 வாக்குகளில் திமுக தோல்வி
  11. பேராவூரணி 1294  வாக்குகள்சுயேட்சைக்கு . 995 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வி.
  12. ராதாபுரம்  சுயேட்சைக்கு 1821. திமுக வேட்பாளர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
  13. தென்காசி சுயேட்சைக்கு 3391; திமுக 462 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி
  14. திருப்போரூர் சுயேட்சைக்கு2116. திமுக 950 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
  15. தி.நகர் சுயேட்சைக்கு 3570. திமுக 3155 வாக்குகளில் வாய்ப்பை இழந்திருக்கிறது.
16 .விருகம்பாக்கம்  சுயேட்சைக்கு 3897 வாக்குகள்; திமுக 2333 வாக்குகளில் வாய்ப்பை இழந்தது.
 
»»  (மேலும்)

பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்

கால நிலை அனர்தனத்தால் பாதிக்கப்பட்ட, நாட்டின் சில பகுதிகளிலும்- விசேடமாக மலையகத்திலும், பெண்கள் , குழந்தைகளின் விசேட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக பெண்கள் விடுதலை இயக்கம் உதவிப் பணிகளின் ஈடுபட்டுள்ளது . பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோர்வே, சுவிஸ் , லண்டன் மற்றும் பாரிஸ், கனடா தோழர்களின் குடும்பங்கள் ஆரம்ப தேவைக்கான சிறு உதவியை செய்துள்ளனர். மற்ற தோழர்க...ளும் , கருணை கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
உதவ விரும்பும் தோழர்களே , நண்பர்களே புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்களுடன் தொடர்பு கொள்ளவும் .
அல்லது நேரடியாக பெண்ண்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டும் உதவலாம்.
விபரம் :
தொடர்புகளுக்கு :
நிலந்தி -0094717547298
வங்கி விபரம் :
Bank of Ceylon
Maharagama branch-055
A/c- 78846358
Kumudu Munasinghe
Sankha Ramasinghe
»»  (மேலும்)

5/20/2016

தமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்; ஒரு குறிப்பு -1. அ.மார்க்ஸ்



இந்த சட்டமன்றத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்றுள்ள வாக்கு வீதங்கள் இவை.


அதிமுக 40.9%
திமுக 31.3%
காங்கிரஸ் 6.4%
பாட்டாளி மக்கள் கட்சி 5.3%
பிஜேபி 2.8%
தேமுதிக 2.4%
நாம் தமிழர் 1.1%
மதிமுக 0.9%
விடுதலை சிறுத்தைகள் 0.8% சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
தமிழ் மாநில காங்கிரஸ் 0.6%
புதிய தமிழகம் 0.5%
மனிதநேய மக்கள் கட்சி 0.5%
முஸ்லிம் லீக் 0.7
பு.தமிழகம் 0.5%
எஸ்டிபிஐ 0.2%
பகுஜன் சமாஜ் 0.2%


இந்த எண்ணிக்கைகைளை அப்படியே ஒப்பிட்டு கட்சிகளின் பலங்களை மதிப்பிடுவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நாம் தமிழர், பாஜக முதலியன கிட்டத்தட்ட அத்தனை தொகுதிகளிலும் நின்றவை. சீமான் கட்சி 234 தொகுதிகளிலும் நின்றதுதானே. அவற்றை கூட்டணியில் இருந்து வெறும் 20 தொகுதிகளில் நின்ற கட்சியுடன் அப்படியே ஒப்பிட இயலாது. அவர்களுக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் இருந்தது எனச் சொன்னாலும் அப்படியே ஒப்பிட இயலாது.

பாமகவைப் பொருத்த மட்டில் இதுதான் இவர்களின் உச்ச பட்சம். இதற்கு மேல் பெரிய அளவில் அவர்களால் அதிகரிக்க இயலாது. அவர்கள் தங்கள் சாதியினர் அதிகமாயுள்ள ஒரு 20 தொகுதிகளைத் தேர்வு செய்து வேலை செய்தனர். தேர்தலுக்கு முன் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இதில் அவர்கள் 5 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனச் சொல்லி யிருந்தேன். அதே போல இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது 5 தொகுதிகளில் அவர்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து கடைசி நேரத்தில் வீழ்ந்தனர். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் தீவிரமாக வேலை செய்தால் எதிர்காலத்தில் அந்த 5 தொகுதிகளை அவர்கள் பிடிக்கலாம். அவ்வளவுதான்.

ஆனால் பிற அடையாள அரசியல் கட்சிகள், விசிக உட்பட, இந்த அளவுக்குத் தங்கள் ஆதரவுத் தொகுதியை ஒருங்கிணைத்து consolidate பண்ண இயலவில்லை. திருமாவளவன் நின்ற காட்டுமன்னார் தொகுதியெல்லாம் இளைய பெருமாள் காலம் முதல் தலித் தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதி. இன்று திருமா சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்கிறார் .இடையில் ரவிகுமார் வென்று, தொகுதிக்கே போகாமல் இருந்து அவர்களால் விரட்டப்படும் நிலை ஏற்பட்டது திருமாவின் இன்றைய தோல்வியில் ஒரு பங்கு வகிக்கிறது. பா.மக அப்படியெல்லாம் இல்லாமல் தங்கள் தொகுதிகளில் மிகவும் கவனமாக வேலை செய்தார்கள் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். .

மற்றபடி பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட்டு இந்த 2.8 சதத்தைப் பெற்றுள்ளது. தேசிய அளவில் அதிகரித்து வரும் இந்து உணர்வின் வெளிப்பாடு இது. இது கவலைகுரிய ஒன்றுதான். ஆனால் அதுவும் கூட தமிழகத்தில் பெரிய அளவில் செல்லுபடியாகவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டி உள்ளது. கிட்டத்தட்ட எல்லா தொகுதிகளிலுமே அவர்கள் டெபாசிட் காலியாகியுள்ளனர்

நோட்டா 1.3 சதம் விழுந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் இது.அதிகம். இன்னும் கூட பொருளாதாரப் பிரச்சினைகளை எல்லாம் பேசக் கூடிய இக் கட்சிகள், கார்பொரேட் எதிர்ப்பை வெளிப்படுத்தும் இக்கட்சிகள், திராவிடக் கட்சிகள் போல் அல்லாமல் தீண்டாமை ஒழிப்பைப் பேசும் இக்கட்சிகள், ஊழலற்ற கட்சிகள் இப்படி நோட்டா வாக்குகளைவிடக் குறைவாகப் பெற்றிருப்பது உண்மையில் கவலைக்குரிய ஒன்றுதான். ஆனால் இதுதான் எதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் பொருத்தப்பாட்டை இந்திய அளவில் இழந்து வருவது குறித்த என் முந்தைய பதிவு ஒன்று நினைவிருக்கலாம்.

மற்றபடி 'திராவிட' எனும் கருத்தாக்கத்தை எதிர்த்துக் கடந்த ஒரு இருபதாண்டுகளாக இங்கு பார்ப்பன ஆதரவு சக்திகளாலும் தமிழ் இனவாதக் கட்சிகளாலும் செய்யப்பட்டு வரும் பிரச்சாரம் பெரிய அளவில் இங்கு பாதிப்பை ஏற்படுத்த இயலவில்லை என்பது கவனத்துக்குரியது. வரவேற்பிற்கும் உரியது.

பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு வலுவான எதிர்க் கட்சி ஒன்றுடன் இந்த சட்டமன்றம் உருப்பெற்றுள்ளது வரவேற்கத் தக்க ஒன்று. அதை constructive ஆக திமுக பயன்படுத்த வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சிகளே இல்லாத சட்டமன்றம் இது. அவர்கள் மீது என்ன குறைகள் சொன்னாலும் சட்டமன்ற நடவடிக்கைகளில் கவனமாகச் செயல்படக் கூடியவர்கள் எனப் பெயருண்டு. கேடிகே தங்கமணி போன்றவர்களின் பங்களிப்புகளை அத்தனை எளிதில் மறந்துவிட இயலாது. திமுக வினர்தான் இந்த இடத்தை நிரப்ப வேண்டும்.
செய்வார்களா? 

*நன்றி முகனூல்
»»  (மேலும்)

5/19/2016

தொல். திருமாவளவன் அறிக்கை

தேர்தல் முடிவுகள்:
-----------------
எமது நோக்கம் உன்னதமானது!...
எமது பயணம் தொய்வின்றித்
தொடரும்!
------------------------------
2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் !

எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது!
நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்;இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.
அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது! ஊழல் கறை இல்லாதது!
எனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கும் கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!
மேலும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் ( 48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது.எனவே, குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.
அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத
விளிம்புநிலை மக்களுக்குரிய
நலன்களை முன்னிறுத்தும் 'கூட்டணி ஆட்சி' உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்!
இவண்:
தொல். திருமாவளவன்
தலைவர்- விசிக
»»  (மேலும்)

முதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை

1952 முதல் இந்திய கம்யூ., கட்சியும், 1967 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் சில இடங்களைப் பிடித்து வந்த கம்யூனிஸ்டுகள் இம்முறை எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, முதன்முறையாக தமிழக சட்டசபையில் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
»»  (மேலும்)

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...

திமுக கூட்டணியில் போட்டியிட்ட இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.
தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி (4 தொகுதிகள்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (5 தொகுதிகள்) என 9 தொகுதிகளில் போட்டியிட்டன.
இதில் கடையநல்லுார் தொகுதியில் மட்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் தோல்வியடைந்தது. 
»»  (மேலும்)

4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார் ஜெயலலிதா

   நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 4வது முறையாக வெற்றி பெற்று, 6வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் ஜெயலலிதா.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை 8 மணி முதல் தமிழக சட்டசபை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால்
ஓட்டுகள் எண்ணப்பட்டபோது, பல இடங்களில் திமுக முன்னிலை பெற்றது. இதையடுத்து, மற்ற ஓட்டு எண்ணிக்கையிலும் திமுகவே முன்னிலை பெறும் என்ற பேச்சு எழுந்தது.அதற்கேற்ப, முதல் சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டபோது, பல தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது. ஆனால் சுற்றுகள் அதிகரிக்க, அதிகரிக்க அதிமுகவின் முன்னிலையும் அதிகரித்தது.
மதியம் 1 மணி நிலவரப்படி,அதிமுக 136 தொகுதிகளில் முன்னணி பெற்றது. திமுக 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாமக., 1 இடத்திலும் முன்னணியில் இருந்தது.

நேரம் ஆக, ஆக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
மதியத்திற்கு மேல் அதிமுகவின் வெற்றி உறுதியான நிலையிலும், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான இடைவௌி மிகவும் குறைவாகவே இருக்கும் என தோன்றுகிறது. சில தொகுதிகளில்500க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் இருப்பதால், திமுக அணி 100 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, 4வது முறையாக அதிமுக ஆட்சியைப் பிடிக்கிறது. 6வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது.
தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஜெயலலிதா நன்றி: இதற்கிடையே, அமோக வெற்றி பெற வாக்களித்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....

இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று சில வேட்பாளர்கள் 5 முறைக்கு மேல் வெற்றி பெற்றவர்கள் என்ற சாதனையை செய்துள்ளனர். அதில் சிலர் ஒரே தொகுதியிலும் சிலர் தொகுதி மாறியும் வெற்றி பெற்றுள்ளனர்.Tamilnadu Assembly Election News: ''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....

அவர்கள் விபரம்:
ஒரே தொகுதியில் 5 முறைக்கு மேல் வென்றவர்கள்:
துரைமுருகன் (திமுக)
1971 காட்பாடி வெற்றி
1977 ராணிப்பேட்டை வெற்றி
1980 ராணிப்பேட்டை வெற்றி
1989 காட்பாடி வெற்றி
1996 காட்பாடி வெற்றி
2001 காட்பாடி வெற்றி
2006 காட்பாடி வெற்றி
2011 காட்பாடி வெற்றி

சக்கரபாணி (திமுக)
2016 ஒட்டன்சத்திரம் வெற்றி
2011 ஒட்டன்சத்திரம் வெற்றி
2006 ஒட்டன்சத்திரம் வெற்றி
2001 ஒட்டன்சத்திரம் வெற்றி
1996 ஒட்டன்சத்திரம் வெற்றி

பெரியசாமி (திமுக)
1989 ஆத்துார் வெற்றி
1996 ஆத்துார் வெற்றி
2006 ஆத்துார் வெற்றி
2011 ஆத்துார் வெற்றி
2016 ஆத்துார் வெற்றி

செங்கோட்டையன் (அதிமுக)
1980 கோபிசெட்டிபாளையம் வெற்றி
1984 கோபிசெட்டிபாளையம் வெற்றி
1989 கோபிசெட்டிபாளையம் வெற்றி
1991 கோபிசெட்டிபாளையம் வெற்றி
2006 கோபிசெட்டிபாளையம் வெற்றி
2011 கோபிசெட்டிபாளையம் வெற்றி
2016 கோபிசெட்டிபாளையம் வெற்றி
***
ஜெயக்குமார் (அதிமுக)
1991 ராயபுரம் வெற்றி
2001 ராயபுரம் வெற்றி
2006 ராயபுரம் வெற்றி
2011 ராயபுரம் வெற்றி
2016 ராயபுரம் வெற்றி



ஐந்து முறைக்கு மேல் தொகுதிமாறி வென்றவர்கள்

கருணாநிதி (திமுக)

2016 திருவாரூர் வெற்றி
2011 திருவாரூர் வெற்றி
2006 சேப்பாக்கம் வெற்றி
2001 சேப்பாக்கம் வெற்றி
1996 சேப்பாக்கம் வெற்றி
1991 துறைமுகம் வெற்றி
1989 துறைமுகம் வெற்றி
1980 அண்ணாநகர் வெற்றி
1977 அண்ணாநகர் வெற்றி
1971 சைதை வெற்றி
1967 சைதை வெற்றி
1962 தஞ்சை வெற்றி
1957 குளித்தலை வெற்றி

ஜெயலலிதா (அதிமுக)

1989 போடி வெற்றி
1991 பர்கூர் வெற்றி
1991 காங்கேயம் வெற்றி
1996 பர்கூர் தோல்வி
2002 ஆண்டிபட்டி வெற்றி(இடைத்தேர்தல்)
2006 ஆண்டிபட்டி வெற்றி
2011 ஸ்ரீரங்கம் வெற்றி
2015 ஆர்.கே.நகர் வெற்றி (இடைத்தேர்தல்)
2016 ஆர்.கே.நகர் வெற்றி

ஸ்டாலின் (திமுக)

2016 கொளத்துார் வெற்றி
2011 கொளத்துõர் வெற்றி
2006 ஆயிரம் விளக்கு வெற்றி
2001 ஆயிரம் விளக்கு வெற்றி
1996 ஆயிரம் விளக்கு வெற்றி
1989 ஆயிரம் விளக்கு வெற்றி
»»  (மேலும்)

இந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக மக்களின் தொடர்ச்சியான தீர்ப்பு

இந்த தேர்தலில் பாஜ தலைவர்களின் நிலைமை தான் பரிதாபமாக போனது.Tamilnadu Assembly Election News: பரிதாப நிலையில் பாஜ தலைவர்கள்

''மாற்றத்தைத் தாருங்கள்  திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கொடுங்கள்'' என்ற கோஷத்துடன் தமிழக பாஜ, தேர்தலை சந்தித்தது. பிரதமர் மோடியே மெனக்கெட்டு, தமிழகம் வந்து சில பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு சென்றார். இதனால் அவர்களது எதிர்பார்ப்பு அதிகமானது.ஆனால் இன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நிலைமையே தலைகீழ் ஆனது. சென்னை டி.நகரில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா, 4000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 3வது இடத்தில் வந்துகொண்டு இருந்தார்.

அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, விருகம்பாக்கம் தொகுதியில் 10,526 ஓட்டுகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாநில செயலாளர் வானதியும், 11,610 ஓட்டு வித்தியாசத்தில் 3வது இடத்தில் வந்தார். இது அக்கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நாட்டுக்கு வந்து​ பாகிஸ்தான் எதிர்ப்பும் முஸ்லிம் எதிர்ப்பும் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்கின்ற மோடியின் மோட்டுத்தனம் கவலைகிடமாகியுள்ளது.ஆக இது பெரியாரின்  பூமி என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

5/17/2016

பரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.


|                                                      

சுவிசேஷம்-எம்.ஆர்.ஸ்ராலின்-

2009 ஆண்டு இலங்கையில் வெளியான  நல்லுறவு பத்திரிகையில் பிரசுரமான இச்சிறுகதை காலப்பொருத்தம்  கருதி பிரசுரமாகிறது))








அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை.



ஏனென்றால் சுமார் 30 வருடங்களாக அந்த தேசத்தை ஆட்டிப்படைத்த பரமபிதா பரலோகம் அடைந்துவிட்டார். யார் அந்தப் பரமபிதா? அவர் சர்வ வல்லமை கொண்டவர் என மக்கள் நம்பினர். தனக்குத் தானே பரமபிதா என்று பெயரிட்டுக்கொண்டவர் அவர். தன்னை மட்டுமே விசுவாசித்து தன்னையே தினமும் தோத்திரம் செய்யுமாறு ஜனங்களுக்கு அவர் கட்டளையிட்டார். தன்மீது விசுவாசம் வைப்பவன் மட்டுமே இப்பூவுலகில் உயிர்வாழக் கடவர்கள் எனவும், அவர்களுக்கு மட்டுமே தனது பரலோக இராட்சியத்தில் இடம் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார். அவருக்கு விரோதமாகவோ, அவருடைய ராட்சியத்துக்கு விரோதமாகவோ வார்த்தைகளை விதைப்பவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர் என அவர் கண்டார். வடக்கு, கிழக்கு திசைகளில் பரவிக்கிடந்த இராட்சியம் எங்கிலும் யார் யார் நீதிமான்கள் என்பதையும் அவரே தேர்ந்தெடுத்தார். அவரது விசுவாசிகளைப் போலவே அவர் தேர்ந்தெடுத்த அந்த நீதிமான்களும் அவரது இராட்சியத்தை புகழ்ந்தார்கள். அவருடைய வார்த்தை ஒன்றே நித்திய வாழ்வுக்கான ஆகாரம் என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.
நீதிமான்களை மட்டும் அல்ல நியாயப்பிரமாணங்களையும் அவரே போதித்தார். அதற்காக
நீதிமொழிகளையும் கூட அவரே சிருஸ்டித்தார். அவரது இராட்சியத்தில் அவரது விருப்பத்தின்படியே மாவீ ரன், மானிதன், நாட்டுப்பற்றாளன், தேசத்துரோகி என்று மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்களும் பரமபிதாவின் போதனையின்படியே பொதுஜனங்களுக்கு இப்பெயர்களை இட்டு நீதிவழங்கினார்கள். அதன்படியே ஜனங்கள் எல்லாம் அவருடைய வார்த்தைகளுக்கு கட்டுண்டு, விசுவாசித்து அவற்றையே பின்பற்றத் தொடங்கினர். அப்போது அவருடைய இராட்சியம் விசாலம் அடைந்தது. அந்த தனது இராட்சியத்தை பரிபாலிக்க அவர் பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்களை நோக்கி இப்பபூலக ராட்சியத்தின் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு என்னை பின்தொடருங்கள். உங்களை மனிசர்களை பிடிக்கிறவனாக்குவேன் என்றார். அச்சீடர்களும் அவரது பிரசங்கத்தை கேட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது அவர்களிடம் அவர் தனது பரமண்டல ஜெபத்தை மிக ரகசியமாக கற்பித்தார். “தட்டுங்கள் திறக்கப்படும்” “கேளுங்கள் கொடுக்கப்படும்” “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்.
அந்த பரமண்டல ஜெபத்தை அந்த பன்னிரு சீடர்களும் கேட்டு வியாகூலம் அடைந்தனர். அதையே அவர்கள் விசுவாசித்து ஜனங்களிடம் அவர்கள் பிரசங்கிக்க தொடங்கினர். வடதிசை தொடங்கி கீழ்திசை வரைக்கும் தட்டத்தொடங்கினர். தங்கள் பரமபிதாவுக்கு விரோதமானவன் யாரோ அவர்கள் வெகுசீக்கிரமே தட்டப்படக் கடவர்கள் என்று முன்னறிவிக்கும் அளவிற்கு அவர்கள் அன்பானவர்களாய் இருந்தனர். அதே போன்று வடதேசத்தின் நுழைவாயில் கடவையில் நின்றுகொன்டு கேட்கத்தொடங்கினர். ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவரை பரமபிதாவின் சேனைகளுக்காக தேடிப்பிடித்தனர். உங்களை மனிசர்களைப் பிடிக்கிறவனாக்குவேன் எனும் பரமபிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறிற்று.
அவ்வேளை தனது பிரசவ தினத்தை பொதுஜனங்கள் எல்லாம் கொண்டாடும்படியாக பரமபிதா எண்ணம் கொண்டார். அதன்படிக்கு பதினொராம் மாதத்தில் இருபத்தி ஆறாம் நாளை “மரித்தோர்களின் நாள்” என்று அவர் பிரகடனம் செய்தார். அன்னாளிலேயே தனது கட்டளையை கைகொள்ளும்படிக்கு தன் சேனைகளுக்கும் சீடர்களுக்கும், வம்சத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் தனது உபதேசம் நிகழும் என்று பரமபிதா அறிவித்தார். அந்நாளில் நீங்கள் எல்லோரும் எனது விக்கிரகங்களையும், சுரூபங்களையும் உண்டாக்கி என்னை வணங்குங்கள். அதுவே மரித்தோர்களின் நினைவாக நீங்கள் செய்யும் நினைவுகூரலாகும் என தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
பரமபிதாவுக்கு எதிராகவும் வடகிழக்கு தேசத்தின் ஜனங்களுக்கு எதிராகவும் படையெடுக்கும் மேற்றிசை சேனைகளின் அட்டூழியங்கள் அதிகரித்தன. இதனால் பொதுஜனங்கள் அல்லலுற்றார்கள் என்பதை அறிந்த நீதிமான்களுக்கு நிகரான எட்டு ஸ்திரிகள் மேற்திசை சேனைகளுக்கு எதிராக உபவாசம் இருக்கத் தொடங்கினர்.  இதை அறிந்த பரமபிதா உபவாசங்கள் இருப்பதால் மட்டும் பொதுஜனங்கள் மீட்சியடையப் பேவதில்லை. என் வார்த்தைகளைக் கேட்டு அதையே விசுவாசித்து அதன்படியே பின்பற்றுவதனால் மட்டுமே அக்காரியம் நடக்கும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்றார். அதன்படியே அவருடைய சீடர்கள் அந்த ஸ்திரிகள்  உபவாசம் இருக்குமிடம் சென்ற பரமபிதாவின் வர்த்தைகளை அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை பரமபிதாவிடம் கொன்றுசென்றனர். பரமபிதா அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுக்கும் தன் பரமண்டல ஜெபத்தை உபதேசித்தார்.
சில காலத்தின் பின்னர் அந்த ஸ்திரீகளின் ரூபவதியான ஒருத்தியை பரமபிதா அறிந்தார். அதன் காரணமாக அவள் கர்ப்பவதியானாள். ஒரு நாள் நடுநிசியில் பரமபிதாவின் கனவில் தேவதூதன் தோன்றி “மாற்றான் ஒருவனுக்கு மனைவி ஆக வேண்டியவளை நீர் அறிந்ததென்ன?, இது எப்படி கைகூடும்?” என வினவினான். பரமபிதா திடீரென விழித்தெழுந்தார். அந்த ஸ்திரீயை தன்முன்னே நிறுத்தி “நீர் தரிசனங்களால் என்னை ஆலிங்கனம் பண்ணி, சொப்பனங்களால் என்னை கலங்கப்பண்ணுகிறாயோ?” என்றார். அதற்கு அவர் பிரதியுத்தரமாக…..  “பரமபிதாவே என் விசுவாசத்தை சந்தேகம் கொள்வதென்ன? நான் என்னை முழுமையாகவே என் தேவனாகிய உனக்கு ஒப்புக்கொடுக்கத் தயாராய் இருக்கிறேன். இன்னும் கூடவே ஞானத்தையும், விவேகத்தையும் உமக்கு அதிகரித்து உமக்கு முன்னிருந்த ராஜாக்களுக்காகிலும், உமக்கு பின்னிருக்கப் போகும் ராஜக்களுக்காகிலும் இல்லாத ஜஸ்வரியத்தையும், கனத்தையும் உமக்குத் தந்து உமது கோத்திரத்தை இவ்வுலகமெல்லாம் பெருக்குவேன்”  என்றாள். அவள் அப்படிக் கூறிக்கொண்டே பரிமள தைலத்தை எடுத்து தன் இருகைளினாலும் பரமபிதாவின் பாதங்களைக் கழுவினாள். அப்போது பரமபிதா அவளை நோக்கி உன் விசுவாசம் உன்னை மீட்டது. உன் சித்தம் நிறைவேறட்டும் என்றார். அவள் வாக்களித்தபடியே பரமபிதாவுக்கு முப்பது வயதானபோது  அவள் தனது மூத்த குமாரனைப் பெற்றெடுத்தாள். மேலும் ஒரு குமாரத்தியும் இன்னுமொரு குமாரனுமாக பரமபிதாவின் கோத்திரம் தளைத்தது. பரமபிதா தனது மூத்த குமாரனை தனது சேனைகளின் தலைவனாக்கவும், தன் குமாரத்தியை தன் இராட்சியத்தின் இராஜகுமாரியாக்கவும் எண்ணம் கொண்டார். அறிஞர்களையும்  புத்திமான்களையும் அழைப்பித்து தம் குமாரர்களுக்கு  ஞானங்களைப் போதிக்குமாறு கட்டளையிட்டார். தன் குமாரத்திக்கு வண்ண வண்ணமான ஆடை அணிகலங்ளை அணிவித்து பரமபிதா அழகு பார்த்தார். அதன் பின்னர் தன் குமாரர்கள் உலக ஞானங்களைக் கற்றுத்தேறும்படிக்கு அவர்களை  தூரதேசம் அனுப்பி வைத்தார்.
அவ்வேளை அவரது சீடர்களோ வடகீழ் தேசத்தின் எல்லையுள் வாழும் பன்னிரு வயது கடந்த எல்லா குழந்தைகளையும் தம் சேனைகளில் சேர்ப்பித்து அவர்களுக்கு நச்சுக்குப்பிகளை பரிசாகக் கொடுத்தனர். அவற்றை அவர்களின் கழுத்தில் அணிவித்து பரமபிதா சந்தோசம் அடைந்தார். அச்சேனைகளில் இருந்து ஸ்திரீகளை மட்டும் தேர்ந்தெடுத்து இராப்போசன விருந்தளித்து  அவர்களை குண்டுகாவிகளாக மாற்றி மகிழ்வது பரமபிதாவின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிற்று. அந்த ஸ்திரீகளும் பரமபிதாவுடன் விருந்துண்ணும் பாக்கியம் பெற்றதை எண்ணி குதூகலித்தனர். தங்கள் பாவங்கள் எல்லாம் பரமபிதாவின் ஜீவ இரத்தத்தால் கழுவப்பட்டுவிட்டதாக எண்ணி சந்தோசித்தனர். அவ்வேளை  பரமபிதா அவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்பார். நீங்கள் மௌனமாய் இருப்பதென்ன, மக்களுக்காக மரிக்க உங்களுக்கு சம்மதம்தானே? உங்களுக்கான இடம் பரலோக இராட்சியத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பார். அதற்கு பிரதியுத்தரமாக அவர்களும் ஆம் பரமபிதாவே உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்பர்.
அதன் பின்னர் அந்த குண்டுகாவி ஸ்திரீகள் தென் தேசத்து ராஜாவுக்காகிலும், மந்திரிகளுக்காகிலும் சில வேளைகளில் அன்னிய தேசத்து ராஜாக்களை நோக்கியும் புறப்பட்டுப் போவார்கள். இப்படி தென்தேசத்தில் பலரையும், பிற தேசத்தின் ராஜா ஒருவரையும் பரமபிதா கொன்று போட்டார். இப்படியே அவரது சேனைகள் சர்வ வல்லமை பொருந்தியதாக மாறியதை எண்ணி பரமபிதா அகமகிழ்ந்தார்.  புறசமயத்து ஆலயங்களுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கானோரை வெட்டிக்கொல்லவும் பிரமபிதா துணிந்தார். வடதேசத்தில் இருந்து ஒரு லட்சம் புறசமய ஜனங்களை தென்திசை நோக்கி துரத்திவிடுமாறும் பரமபிதா கட்டளையிட்டார்.  ஆனால் சேனைகளோ, சேனைகளின் மேய்பர்களோ கூட பரமபிதாவை நேரடியாக காண்பது அருகிக்கொண்டே வந்தது. அவர் அனேகமாக ஆவியானவராகவே இருந்தார். வருடம் ஒருமுறை மட்டும் அவர் முன்அறிவித்ததைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை பொதுஜனங்களுக்கு வெளிப்படுத்தும் எண்ணத்தில் அவர் காட்சியளிப்பார். அப்போது அவரது சீடர்கள் பரமபிதா மக்கள் முன் தோன்றினார் எனச் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார்கள்.
பரமபிதாவின் முதன்மைச் சீடர்களின் ஒருவன் ஆறாயிரம் பேரைக்கொண்ட பெரும்சேனைக்கு அதிபதியாய் இருந்தான். கீழ்த் திசை தேசத்தில் அதிபதியாய் இருந்த அந்த சீடன் மீது பரமபிதாவுக்கு சந்தேகம் உண்டாயிற்று. அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு மற்றய தமது சீடர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து கீழ்த்திசை சென்று வருமாறு பரமபிதா கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே சென்று அந்த முதன்மைச் சீடனையும், கீழ்த்திசை  நிலவரங்களையும் கண்காணித்து திரும்பினர். நீண்ட பயணத்தின் இறுதியில் அம்முதன்மைச் சீடன் பற்றிய துர்ச்செய்தியுடன் பரமபிதாவின் முன் முழந்தாள் இட்டு பணிந்து அந்த முதன்மைச் சீடனுக்கு விரோதமாக சாட்சி சொன்னார்கள்.
“ஆறாயிரம் பேரடங்கிய அவனிடம் இருக்கும் சேனைகள், பரமபிதாவாகிய உமக்கன்றி அவன் மீதே விசுவாம் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அவனது சேனைகளுக்கு வஸ்திரங்களோ, போஜன பானங்களோ எவ்வித குறைவுமின்றி அவன் காத்துவருகின்றான். கிழக்கில் அவன் விளைவித்திருக்கும் பழத்தோட்டங்களும், தானியங்களும் எண்ணற்றவையாக உள்ளன. எம்மிடம் அப்படி ஏதுமே இல்லை. மேலும் அவற்றிக்கான எந்தவொரு வரவுசெலவு கணக்குகளையும் பரமபிதாவாகிய உம்மிடம் அவன் சமர்ப்பிப்பதேயில்லை. இவையெல்லாம் உமக்கு விரோதமான செயல்கள் அன்றி வேறென்ன?”
பரமபிதா ஆழ்ந்து யோசித்தார். அதன் பின்னர் அந்த கீழ்த்திசை சீடனுக்கு அவசரமாக ஒரு கட்டளை அனுப்பினார். அவனது சேனைகளில் பெரும்பகுதியை  வடக்கு தேசம் நோக்கி பாளயம் இறக்குமாறும், அவனது பொக்கிசங்கள் பற்றிய விபரங்களை தமது காலடிகளுக்கு வந்து ஒப்புக்கொடுக்குமாறும் அவனுக்கு கட்டளையிடப்பட்டது.
தந்திரம் கொண்டவனான முதன்மைச்சீடன் சுதாகரித்துக்கொண்டான். பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக பகிரங்கமாகவே தன் கருத்துக்களை வெளிப்படுத்த தொடங்கினான். அந்த கீழ்த்திசை வீரனின் கீழ் மூவாயிரம் பெண் சேனைகளுக்கு அதிபதியாக இருந்த பெண் ஒருத்தியும் கீழ்த்திசை வீரனுடன் சேர்ந்து பரமபிதாவுக்கு எதிராக கலகம் பண்ணினாள். பரமபிதாவின் சுரூபங்களை தெருக்களில் போட்டு எரிக்குமாறு பொதுஜனங்களைத் தூண்டினாள். இதை கேள்வியுற்ற பரமபிதா மூச்சுத்திணறினார். அந்த கீழ்த்திசை வீரன் சாத்தானின் வார்த்தைகளால் விழுங்கப்பட்டு விட்டதாகவும், அசுத்த ஆவி அவனைப் பீடித்திருப்பதாகவும் பரமபிதா பிரசங்கித்தார். அந்த பெண்சேனைகளின்  தலைவியும் அவனுடன் சேர்ந்துகொண்டு வேசித்தனம் பண்ணினாள் என்றார்.
கீழ்த்திசை நோக்கி தமது சேனைகளை ஏவிவிட்டார். வடக்கில் இருந்து புறப்பட்ட அவரது சேனைகள் ஒரு பெரியவெள்ளி நடுநிசியில் கீழ்திசையின் எல்லையில் உள்ள ஓர் ஏரி அண்டையில் வந்து பாளையம் இறக்கினார்கள். அங்கே மிகப்பெரிய படுகொலை ஒன்று சம்பவித்தது. சுமார் முன்னூற்றிப் பத்து கீழ்த்திசை வீரர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அன்றிலிருந்து எஞ்சிய கீழ்திசை வீரர்களும் அத்தேசத்து ஜனங்களுமாக இணைந்து பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக புரட்சி செய்யத் தொடங்கினர்.
கிழக்கு தேசத்தின் புரட்சியின் காரணமாக பரமபிதாவின் சேனைகள் வடக்கில் மட்டுமே முடங்கிக் கொள்ள நேர்ந்தது. அப்போது பரமபிதாவுக்கு எதிராக படையெடுத்து வடராட்சியத்தை வெல்ல தென்தேசத்து ராஜா திட்டமிட்டான். அதன்படியே யுத்தம் ஆரம்பமாயிற்று. தூயவெள்ளை ஆடையணிந்து சிவப்பு துப்பட்டா போர்த்திய அந்த ராஜா வடதேசத்து ஜனங்களை நோக்கி பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்.   “நானே தேவன், நானே பரமபிதா, நானே உங்களுக்கு சமாதானத்தை தரவல்லவன். தன்னை பரமபிதா என்று சொல்லிக்கொள்ளும் சாத்தானிடத்தில் அகப்பட்டுக்கிடக்கும்  உங்களை மீட்பதற்காகவே உங்களிடம் வருகின்றேன். அவனுக்கு விசுவாசமாக அல்ல, எனக்கு விசுவாசமாகவே நீங்கள் மனம்திரும்ப வேண்டும்.” என்றான்.
ஜனங்கள் குழப்பம் அடைந்தனர். யார் பரமபிதா? யார் தங்களை மீட்பர்? என்று புரியாமல் குழப்பத்தினால் ஜனங்கள் தத்தளித்தனர். ஜனங்களை மீட்கும் யுத்தம் தென்தேசத்து இராஜாவால் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிகளும், பீரங்கிகளும் முழங்க ஆரம்பித்தன. ஆகாயத்தினுடாக குண்டுகள்  வீசப்பட்டது ஆயிரக்கணக்கில் ஜனங்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பரமபிதாவின் சேனைகள் தென்சேனைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் பின்வாங்கி ஓடின. அப்போது ஜனங்களுக்கு பரமபிதாவினிடத்தில் இருந்த விசுவாசம் குறையலாயிற்று. அவர்கள் தமது உயிரைக்காக்க பரமபிதா வல்லமையற்றவர் என்பதை உணர்ந்தனர். குழந்தைகள் பசியால் வாடின, புசிப்பதற்கு ஏதுமின்றி மரணங்களும் சம்பவித்தன. பரமபிதாவின் சேனைகள் கூட தென்சேனைகளிடம் சரணடைய தொடங்கின.
இவற்றையறிந்த பரமபிதா நடுநடுங்கினார். ஜனங்கள் தென்சேனைகளை நோக்கி ஓடிப்போகிறதை நீங்கள் அறிந்திருந்தும் அதை ஏன் எனக்கு வெளிப்படுத்தவில்லை என்று தன் சீடர்களை கடிந்து கொண்டார்.
பரமபிதாவின் சீடர்கள் ஜனங்கள் தம்மை விட்டு ஓடி போகிறதை தடுக்க பலவழிகளிலும் முயன்றனர். அவர்களை நோக்கி இவ்வாறு கூறினர். “மகா ஜனங்களே பரமபிதாவிற்கு விரோதமாக மாத்திரம் எண்ணம் கொள்ளாதீர்கள். மாற்று தேசத்து சேனைகளுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. பரமபிதாவின் நிழல் உங்களோடு இருக்கிறது. அவர்களால் நமது சேனைகளை ஊடறுத்து உள்ளே வரமுடியாது. அப்படி அவர்கள் உள்ளே வருவது நிறைவேறி விட்டால் நமது பரமபிதா உள்ளே விட்டு அடிப்பார். அப்போது அவர்களெல்லாம் அழிவது திண்ணம். ஆகவே பயம் கொள்ளாதீர்கள். பரமபிதாவை மட்டும் விசுவாசியுங்கள்.”
இவ்வாறு அவர்கள் கூறியதை கேட்ட ஜனங்கள் எங்களிடம் புசிப்பதற்கு கூட ஏதுமில்லையே! நாங்கள் எப்படி பிழைப்போம் என்றனர். அதற்குசீடர்கள்
“மனிதன் உயிர்வாழ்வது போஜனங்களால் மட்டுமன்றி பரமபிதாவின் ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் உயிர்வாழ்வான் என்று சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் அறியவில்லையோ” என்று அதட்டினர்.
ஆனாலும் ஜனங்களை கட்டுபடுத்த முடியவில்லை. கூடவே பரமபிதாவின் முக்கிய சீடர்களும் கூட பரமபிதாவை கைவிட்டு  ஜனங்களோடு ஜனங்களாக கலந்து ஓடிப்போயினர். சில சீடர்கள் தென்சேனைகளிடம் சரணடைந்து பரமபிதாவை மறுதலித்து பரமபிதாவிற்கு விரோதமாக சாட்சி சொல்லத் துணிந்தனர். பரமபிதா இறுதியாகக் கட்டளையிட்டார். தம் இராட்சியத்தை விட்டு தப்பியொடும் அனைவரையும் கொல்லும்படிக்கு சீடர்களைப் பணித்தார். அதன்படியே பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி பலர் பரமபிதாவின் சீடர்களால் கொல்லப்பட்டனர். ஆனாலும் பரமபிதாவின் இராட்சியத்தில் இருந்த மூன்று லட்சம் ஜனங்களும் தென்சேனையை நோக்கி தப்பியோடியதை தடுக்கமுடியவில்லை.
தனக்கான இறுதிநாட்கள் நெருங்குவதை உணர்ந்தார் பரமபிதா. பரமபிதாவிற்கு தனது உயிர் குறித்தும் தனது வம்சம் குறித்தும் கவலை அதிகரித்தது. அப்போது அவர் தன் மனைவியை பார்த்து “நீ எழுந்து என் குமாரர்கள் மூவரையும் கூட்டி கொண்டு என்னை விட்டு விலகிப்போ. உன்னை பரமபிதாவின் மனைவியென்று யாரும் அறியாதபடிக்கு வேசம் தரித்து ஜனங்களோடு ஜனங்களாக போ. அங்கு ஏதாவது போஜனம் பண்ணுவீர்கள். அப்போதுதான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றார். அதற்கு அவள் பிரதியுத்தரமாக….
“என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்டாயிற்று.  “அடியே உனக்கல்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார்.
அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த  கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார்.
அவரது சீடர்கள் பரமபிதாவின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னார்கள். பரமபிதாவின் நெஞ்சிலும் ஈரம் இருப்பதை அவரது சீடர்கள் முதன்முறையாகக் கண்டார்கள். அவரது கண்கள் கலங்கின.
பரமபிதா தனது இராச்சியத்தின் பட்டணங்கள் ஒவ்வொன்றாக தோற்றுபோன போதும் கலங்காதவர், அவரது ஜனங்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கலங்காதவர், வெட்டி வீழ்த்தப்பட்ட சுடுகாடு போல் வெந்து தணியாத அந்தசுடுமணல் தரையெங்கும் ஒன்றின்மேல் ஒன்றாக பிணங்கள் வீழந்தபோதும் கலங்காதவர்,  ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் வீழ்ந்து கிடக்க அநாதரவான குழந்தைகள் பிணங்களின் மேல் தவழ்ந்து திரிந்த காட்சியை கண்டும் கலங்காதவர், சாவு அவரது அரண்மனை வாசற்படியை மிதித்தபோது கலங்கினார்.
“ஐயகோ என் வம்சம் அழிகிறதே” பரமபிதா பீறிட்டு கதறினார். அவரது கையாலேயே அவரது மனைவியையும் குமாரத்தியையும் புதைக்க சீடர்கள் ஏற்பாடு செய்தனர்.
தூரதேசத்தின் ஊடாக சமாதானம் கோரி அனுப்பிய செய்திகளுக்கு தகுந்த பதில் எதுவும் எட்டவில்லை. அதன் நிமித்தம் மீண்டும் தூரதேசத்தில் இருந்து சமாதானம் பண்ணுபவர்களுக்கும் இப்பபூமியின் நீதிமான்கள் அனைவருக்கும் அவசரமாக சமாதானம் கோரி செய்தி அனுப்புமாறு பரமபிதா கர்ச்சித்தார்.
“துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தின் நிமித்தமும் அறிவற்ற அக்கிரமக்காரனின் இரத்தவெறிகொண்ட சூதுகளின் நிமித்தமும் எம்ஜனங்கள் அழிகின்றார்கள். இதனை தடுத்து நிறுத்த இறுதியாக இம்முறையீட்டைச் செய்கின்றோம். அவர்கள் எம்மேல் பழிசாட்டி குரோதம் கொண்டு எங்கள் பிராணனை வாங்க விரும்பி எமது காலடிக்குள் வந்துவிட்டார்கள். எங்கள் இருதயங்கள் இயங்க மறுக்கின்றன. பரமபிதாவின் மேல் மரணத்தின் திகில் விழுகின்றது. பயமும் நடுக்கமும் அவரைப் பீடித்துவிட்டது. பலநாட்களாக நாங்கள் பாதாளத்துக்குள்ளேயே ஒழிந்துகிடக்கின்றோம். எங்கள் ஆத்மாக்கள் கொடிய சிங்கங்களின் நடுவே சிக்கித் தவிக்கும் ஆடுகள் போல் சஞ்சலப்படுகின்றன” என்று அவர்களுக்கு சொல்லக்கடவீர்கள் என்றார்.
இறுதியாக குளிர்தேசத்தில் இருந்து சமாதானம் பேசும் அந்த வெள்ளைச் சம்மனசு அவர்களோடு நேரடியாகப் பேசியது. தென்தேசத்து பட்டாளத்தின் அதிபதிகளுடன் பேசியாயிற்று. அவர்கள் உங்கள் அனைவருக்கும் மன்னிப்பளித்து உயிர்ப்பிச்சை தர சித்தம் கொண்டுள்ளனர். அதற்காக உங்கள் நிமித்தம் நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்றுள்ளது. அதாவது நீங்கள் உங்களிடமிருக்கும் படைக்கலங்கள் அனைத்தையும் கைவிட்டு கைகளை உயர்த்தியவண்ணம் பாதாளக்குழிகளை விட்டு வெளியே வாருங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றது.
இச்செய்தியை அறிந்த பரமபிதா தன்முதன்மைச் சீடன் ஒருவனை அழைத்து அப்படியே ஆகட்டும். சம்மனசு தெரிவித்ததைப்போலவே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார். அதன்படியே அவன் எழுந்துநின்று மற்றய சீடர்களையும், அவர்களது குடும்ப உறவினர்களையும், மற்றும் எழுநூறுபேரடங்கிய பரமபிதாவின்  விசுவாசச் சேனையையும் பார்த்துக் கூறியதாவது
“நம் தேவனாகிய பரமபிதா தம்முடையை மகிமையையும், தம்முடைய மகத்துவத்தையும் காண்பிக்கும் வண்ணம் நம் அனைவருக்கும் கட்டளையிடுகின்றார். அவரது தீர்க்கதரிசனம் நம் எல்லோரையும் இரட்சிக்கும் என்று நம்புவோமாக. அப்படியே நாமெல்லாம் எழுந்து படைக்கலங்களை வீசி எறிந்துவிட்டு வெள்ளைக்கொடிகளை உயர்த்திப்பிடித்தவண்ணம் பரமபிதாவை பின்தொடர்வோம். ஆமேன்.
பரமபிதா தம் மூத்த சீடனின் மனைவியாகிய அந்த ஸ்திரீயை நோக்கி இவ்வாறு சொன்னார்.  “நீ வேற்று மொழி பேசுகிறவளாய் இருப்பதனால் நாம் பாக்கியசாலிகளானோம். உன் நிமித்தம் எங்களுக்கு நன்மை உண்டாகும் படிக்கும், உன்னாலேயே எங்கள் உயிர் பிழைக்கும் படிக்கும் நீயே வெள்ளைக்கொடியுடன் முன்னே செல்லக்கடவாய் என்றார். அத்தோடு பரமபிதாவின் சீடர்களின் ஒருவன் எம்முடன் இருக்கும் தென் தேசத்து யுத்தகைதிகள் நால்வரையும் உன்னுடனேயே முன்னே கூட்டிச் செல்வாய் என்று அந்த ஸ்திரீக்கு மேலும் ஒரு கட்டளையிட்டார். அதன்படியே அந்த ஸ்திரீ வெள்ளைக் கொடியுடன் முன்னே செல்ல பரமபிதாவும் அவரது சீடர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
தென்தேச சேனைகள் இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். பரமபிதாவும் சீடர்களும் அவர்களை நெருங்கின மாத்திரத்திலயே தென்தேச சேனைகள் அவர்களை மகா சத்தமாய்க் கூப்பிட்டு உங்கள் படைக்கலங்களை மட்டுமல்ல வஸ்திரங்களையும் களைந்துவிட்டு வாருங்கள் என்றனர். பரமபிதா தன்னைத்தானே ஒப்புக்கொடுக்கும் நாள் நெருங்கிற்று. தென்சேனைகள் அவர்களைச் சுற்றிவளைத்து அவர்கள் கரங்களில் விலங்கிட்டனர். பின்னர் தங்களுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு நிற்குமாறு பரமபிதாவுக்கு கட்டளையிட்டனர். பரமபிதா தன் வாழ்நாளில் முதற்தடவையாக முழந்தாளிட்டு நின்றார். அவரது வலது பாரிசத்தில் அவரது இளைய குமாரனும், இடது பாரிசத்தில் முதன்மைச் சீடன் ஒருவனுமாய் அவ்வாறே முழந்தாளிட்டு நின்றனர். அப்போது தென்சேனைகளின் அதிபதி அவர்களைக் கொல்ல மனமின்றி நச்சுக்குப்பிகளை அவர்களிடம் கொடுத்து நீங்கள் இதனைப் புசியுங்கள், இது உங்களுக்காகவே உங்களால் தயார் செய்யப்பட்டவைதான் என்றான். அவர்கள் அதை புசிக்க மனமின்றி தலைகவிழ்ந்து நின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் மீதான பரியாசமும், ஆக்கினையும் அரங்கேறிற்று. சிலர் பரமபிதாவின் முகத்திலே துப்பினார்கள். சிலர் அவரது சிரசிலே குத்தினார்கள். வேறுசிலலோ அவரை கன்னத்தில் அறைந்தார்கள். பரமபிதா கடற்கரை மண்ணில் ஓடுமாறு கட்டளையிடப்பட்டார். வஸ்திரமற்ற அவரது உடம்புடன் தொந்தியைத் தூக்கிக்கொண்டு ஓட அவரால் முடியவில்லை. கடலோரத்து ஏரியின் கரை ஒன்றில் கால் இடறி பரமபிதா விழுந்தார். அப்போது தென்சேனையில் இருந்து ஒருவன் புறப்பட்டு ஓடிவந்து பரமபிதாவின் சிரசிலே கோடரியால் கொத்தினான். பரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.  அவரது வாயில் இருந்து “சர்வதேசமே சர்வதேசமே ஏன் என்னைக் கைவிட்டாய் என்ற முணுமுணுப்புடன் பரமபிதாவின் ஆவி பிரிந்தது. அப்போது வட கிழக்கு தேசத்தின் எந்தவொரு ஆலையத்திலும் திரைச்சீலை ஏதும் மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழியவில்லை.
»»  (மேலும்)

கலாசாரப் புரட்சி பேரழிவு?

கலாசாரப் புரட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவை அலட்சியப்படுத்திய பின்னர், சீன அரசு, இப்போது, பத்தாண்டுகள் நீடித்த கலாசாரப் புரட்சியால் விளைந்தவை பேரழிவு என ஏற்றுக்கொண்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய செய்தித்தாளாள பீப்பிள்ஸ் டெய்லியில் (மக்கள் நாளேடு) வெளிவந்துள்ள தலையங்கத்தில் கலாசாரப் புரட்சி உள்நாட்டில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




கலாசார புரட்சி தொடங்கிய 50வது ஆண்டு நிறைவு எவ்வித அதிகாரபூர்வ நினைவு கூர்தலும் கடைப்பிடிக்கப்படாமல் ஒரு நாள் கடந்த பின்னர் செவ்வாய்க்கிழமை இக்கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிசக் கட்சியின் தலைவர் மாசேதுங், கட்சியின் மீதான தனது அதிகாரத்தை மீண்டும் உறுதிபடுத்த முனைந்து நடத்திய போராட்டத்தால் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது
»»  (மேலும்)

5/16/2016

ஒண்ணுமே புரியல்லே ஒலகத்துல

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து நகர்ந்து விட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளார்.





  நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி நிகழ்வுக்காக நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.













»»  (மேலும்)

இலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து வைப்பு

எல்பிடிய, வத்துவில புத்த விகாரையைச் சேர்ந்த புண்ணிய பூமியில் 42 அடி உயரமுடைய, இலங்கையின் 2 ஆவது மிக உயரமான புத்தர் சிலையொன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது, இலங்கையைச் சேர்ந்த சிற்பியினால் நிர்மானிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு 19 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன் பின்னர், மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)