4/24/2016

கருணாநிதியை தோற்கடிக்க ஒன்று கூடும் பார்ப்பனர்கள்

தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில், அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவுள்ளதாக மதுரை ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன், மதுரை ஆதீன மடாதிபதிகள்
அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரியும், இளைய மடாதிபதியும் சந்தித்து பேசினர்.
இதன்பிறகு அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் எனும் செய்தி வெளியிடப்பட்டது.
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், அவருடன் வேறு சில மாவட்டத் தலைவர்களும் அதிமுகவில் இணைந்தனர்.
அதேபோல் திரைப்பட நடிகை நமீதா உட்பட தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் அக்கட்சியின் சேர்ந்துள்ளனர்.
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அவரோடு, குளித்தலை, முசிறி பகுதிகளைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.கவில் வெள்ளிக்கிழமையன்று இணைந்தனர்.

0 commentaires :

Post a Comment