4/29/2016

பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்-

Résultat de recherche d'images pour "பௌத்தத் துறவிகளாக"இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர்.
கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள்.
துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன தேரர் அங்கு சென்ற பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரிடம் கூறினார்.

0 commentaires :

Post a Comment