4/12/2016

தீவிரவாதிகளாகும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள்

'கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்' என்று சொல்வார்கள். அரசியலில், ஒரே தன்மையுள்ள இரண்டாவது கட்சி உருவாகிவிட்டால், முதலாவது கட்சிக்காரர் தன்னுடைய செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையில், தேர்தல் காலங்களிலும் வேறு சில பருவ காலங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலை இந்த 'கீரைக்கடை அரசியல்' என்றும் சொல்லலாம்.   இதனால் மக்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது பலன் கிடைக்கின்றது. போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி பணிகளை நான் முந்தி நீ  முந்தி என்று முஸ்லிம் அமைச்சர்கள் செய்து வருகின்றார்கள்.


ஆனால் தமிழ் மக்கள் பாவம் போட்டி அரசியல் செய்த பிள்ளையான்,டக்லஸ் போன்றவர்கள் அமைச்சு பதவிகளில் இருக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு காரருக்கு வெறும் அட்டைக்கத்தி வீரர்களாக காலத்தை ஓட்ட முடியவில்லை.அதனால்தான் மாகாணசபைகளை பொறுப்பெடுத்து   மக்கள் பணிகளில் பங்கெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இப்போ டக்ளசுக்கு அமைச்சு கொடுக்க விடாது வெற்றி கண்ட கையோடு ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டும் விசாரிக்க சொல்லி பிள்ளையானையும் உள்ளே போட்டாயிற்று.

இப்போ "போட்டி இல்லை பொருதல் இல்லை எப்பவும் நான் ராஜா" என்று கூட்டமைப்புகாரர்கள் பழையபடி தூங்க தொடங்கிவிட்டனர்.அதிலும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் தீவிரமாக தூங்குகின்றனர். 

கிழக்கு மாகாணமுதலமைச்சராக பிள்ளையான்   பதவி வகித்த வேளையில் பாதுகாக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் இன்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக தமிழரான சி. தண்டாயுதபாணி பதவி வகிக்கும் காலத்தில் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.ஆணையத்துக்கும் காரணம் துரோகிகள் என்று தப்பித்துக்கொள்ளலாம்தானே.

0 commentaires :

Post a Comment