அமைச்சரொருவர் கொள்வனவு செய்யும் வாகனத்துக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இலங்கைப் பெறுமதியில், 700 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW 7-Series ரக வாகமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சர் பொன்சேகா தீர்மானித்துள்ள நிலையிலேயே, மேற்படி கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக, அமைச்சர் ஒருவருக்கு 350 இலட்சம் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. அந்தத் தொகையில், புதிய ரக பென்ஸ் கார் ஒன்றைக்கூட கொள்வனவு செய்ய முடியாது என்றும் வாகனக் கொடுப்பனவை 400 இலட்சமாக அதிகரிக்குமாறும் அமைச்சர் பொன்சேகா, இதன்போது கோரியுள்ளார். இதற்கான பதில் வழங்கும் பொறுப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4/11/2016
| 0 commentaires |
அமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வாகனம் -7 கோடி

0 commentaires :
Post a Comment