4/25/2016

கிளிநொச்சி மாவட்டத்தில் 4284 சிறுவர்கள் தந்தை – தாயை இழந்து அவலம்.தமிழ் தேசியகூட்டமைப்பு திரும்பி பாக்கவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ...ஆயிரத்து 284 சிறுவர்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவர்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Résultat de recherche d'images pour "சிறுவர்கள்"2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 44 சிறுவர்கள் தந்தையையும், 764 சிறுவர்கள் தாயையும், 476 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனர்

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 569 சிறுவர்கள் தந்தையை இழந்த நிலையிலும், 411 சிறுவர்கள் தாயையும், 316 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கண்டாவளையில் 670 சிறுவர்கள் தந்தையையும், 138 சிறுவர்கள் தாயையும், 40 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 285 சிறுவர்களும், தாயை 71 சிறுவா்களும், இருவரையும் 38 சிறுவர்களும் இழந்துள்ளனர்
பூநகரி பிரதேச செயலக பிரிவில் 520 சிறுவர்கள் தந்தையையும், 144 சிறுவர்கள் தாயையும், 82 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்
கரைச்சி பிரதேசத்தில் அம்பாள்நகர்கிராம அலுவலர் பிரிவில் சாந்தபுரம் பிரதேசத்தில் 171 சிறுவர்களும், கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் 106 சிறுவர்களும், மலையாளபுரம் கிராமத்தில் 99 சிறுவர்களும், இரத்தினபுரம் கிராமத்தில் 95 சிறுவர்களும், செல்வாநகர் கிராமத்தில் 75 சிறுவர்களும், பொன்னகர்கிராமத்தில் 52 சிறுவர்களும், மாவடியம்மன் கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்களும், பாரதிபுரம் கிராமத்தில் 50 சிறுவர்களும் தந்தையை இழந்து அதிகளவில் தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது

பூநகரி பிரதேசத்தில் 128 சிறுவர்கள் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவிலும், 64 சிறுவர்கள் நல்லூர் கிராம அலுவலர்பிரிவிலும், 62 சிறுவர்கள் கரியாலைநாகபடுவான் கிராம அலுவலர்பிரிவிலும், 45 சிறுவர்கள் நாச்சிக்குடாவிலுமாக அதிகளவு தந்தையை இழந்த எண்ணிக்கையை கொண்ட பிரதேசங்களாக காணப்படுகிறன.
கண்டாவளையில் கோரக்கண்கட்டு 58 சிறுவர்கள்,புன்னைநீராவி 52 சிறுவர்கள், ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்கள், உமையாள்புரம் 50 சிறுவர்கள், முரசுமோட்டை 49 சிறுவர்கள், குமரபுரம் 48 சிறுவர்கள் தந்தையை இழந்து அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்கள் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளியில் அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாக முகாவில் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகிறது. இங்கு 36 சிறுவர்கள் தந்தையை இழந்துள்ளனர்
இந்த சிறுவர்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நேரடி பாதிப்பின் விளைவால் அதிகளவு சிறுவர்கள் பெற்றோரை இழந்து காணப்படுகின்றனர் அத்தோடு ஏனைய காரணகளாக நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களும் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment