4/30/2016

எஸ்.சபாலிங்கம் அவர்களின் 22 ஆவது நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.சபாலிங்கம் அவர்களின் 22 ஆவது நினைவு தினம் இன்று புகலிடத் தோழர்களால்  நினைவுகூரப்படுகின்றது. பிரான்சில்  விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இவர் பிரபல அரசியல் விமர்சகரும்  புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமாவார்.  
பாரிஸில் உள்ள  அவரது இல்லத்தில் வைத்து  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் “கட்டிடக்காட்டுக்குள்” என்கின்ற கவிஞர் செல்வம் அவர்களின் கவிதைத்தொகுதிஇ “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” எனும் கவிஞர் சேரனின் கவிதைத்தொகுப்பு போன்ற புகலிட எழுத்தாளர்களின் பல நூல்களை ஆசியா பதிப்பகம் மூலம்  வெளியிட்டு வந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே அந்நூல் வெளிவருவதன் ஊடாக பிரபாகரன் மீது கட்டியமைக்கப்பட்டிருந்த புனிதங்கள் எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும்இ பிரபாகரனது கொலைமுகம் அம்பலமாகும் என்று பயந்த விடுதலைப்புலிகளால் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டது.  

இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும்  கவிஞரும் கவிதைக்காக சர்வதேச விருதைப் பெற்றவருமான செல்வி விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும்  விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் விடுதலைப்புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நூல் வெளியீடுகளை மட்டும் அல்ல தமிழ் சமூகத்தின் அரும்பெரும் பொக்கிசங்களான பழம்பெரும் நூல்களை மீளப் பதிப்பித்து பாதுகாக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்ட அவர் யாழ்ப்பாண வைபவமாலையின் மீள் பதிப்பினையும் கூட செய்திருந்தார்.
சமூக சிந்தனையும் முற்போக்கு எண்ணங்களும் கொண்ட இப்பெருமனிதனின் இருப்பினை அழித்தொழித்த புலிகளை நோக்கி தமிழ் சமூகம் அன்று மனித உரிமைக் குரல் எழுப்பவில்லை. மாற்றுக்கருத்துகளுக்காக போராடிய அவர் சார்ந்த இலக்கியச் சந்திப்பு நண்பர்கள் போன்ற ஒருசிலர் மட்டுமே தனித்துநின்று இக்கொலையினை எதிர்த்து குரல் கொடுத்தனர்
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாபெரும் மேதின கூட்டம்- மட்டக்களப்பு

  வழமைபோல இம்முறையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாபெரும் மேதின கூட்டம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற உள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
»»  (மேலும்)

4/29/2016

பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்-

Résultat de recherche d'images pour "பௌத்தத் துறவிகளாக"இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர்.
கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள்.
துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன தேரர் அங்கு சென்ற பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரிடம் கூறினார்.
»»  (மேலும்)

4/28/2016

சுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்










கிழக்கு உதயம் அமைப்பினர் மாகாண இளையோரை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக செயற்பட்டுவரும் மேற்படி அமைபினர் தமது எதிர்கால நடவடிக்கைகளை விஷ்தரிக்கும் நோக்கில் இத்திட்டத்தினை தீட்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
எதிர்வரும் மே 1ம் திகதி Gemeinschaftszentrum Telli, Girixwe...g 12, Aarau எனுமிடத்தில் ஓழுங்கு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலுக்கு சுவிட்சர்லாந்து வாழ் கிழக்கிலங்கையின் இளையோருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அவ்வமைப்பினர் , அன்றைய தினம் இளையோர் தமது தாயகத்திற்கு எவ்வாறு உதவலாம் என எடுத்துரைக்கவுள்ளதுடன் , சின்னா பின்னாமாக சிதறிக்கிடக்கும் கிழக்கிலங்கை மக்கள் ஒன்று சேரவேண்டியதன் முக்கியத்தையும் எடுத்துரைக்கவுள்ளனர் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக றிமீஸ்அப்துல்லா: பல்கலை 20வருட வரலாற்றில் முதலாவது பேராசிரியர்

!
   





தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 20வருடகால வரலாற்றில் முதலாவது பேராசிரியராக தமிழ்த்துறைத்தலைவராகவிருந்த றமீஸ் அப்துல்லா என பிரபலமாக அழைக்கப்படும் கலாநிதி.எம்.எ.எம்.றமீஸ் தெரிவாகியுள்ளார்.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதலாவது முழுமையான பேராசிரியராகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி றமீஸ்அப்துல்லா சம்மாந்துறையைச் சேர்ந்தவராவார். அவருக்கு வயது 47 ஆகும். சிறந்த திறனாய்வாளரும் கவிஞருமாவார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநதிகள் மற்றும் பல்கலைக்கழக உயர்நிருவாகிகள் பங்கேற்ற நேர்முகப்பரீட்சையினடிப்படையில் மெரிட் அடிப்படையில் முழுமையான முதல் பேராசிரியராக றமீஸ்அப்துல்லா தெரிவாகியுள்ளார். இவர் மேலும் 10வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக சேவையாற்ற வாய்ப்புள்ளதால் வாழ்நாள் பேராசிரியராக மிளிரவாய்ப்புள்ளது.
தமிழத்துறை சிரேஸ்ட்ட விரிவுரையாளராகவிருந்த கலாநிதி றமீஸ்அப்துல்லா இனிமேல் பேராசிரியராக சேவையாற்றுவார்.
அம்பாறை மாவட்டத்தின் 3வது தமிழ்த்துறைப்பேராசிரியர்!
அம்பாறை மாவட்டத்தின் மூன்றாவது தமிழ்த்துறைப் பேராசிரியராக றமீஸ்அப்துல்லா விளங்குகிறார்.
அம்பாறை மாவட்டத்தின் முதலாவது தமிழத்துறைப்பேராசிரியராக காரைதீவைச்சேர்ந்த உலகின் முதல் தமிழத்துறைப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்தர் திகழ்கிறார். இவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் இலங்கை பல்கலைக்கழகத்திலும் தமிழத்துறைப்பேராசிரியராக சேவையாற்றியவராவார்.
இரண்டாவதாக கல்முனையைச்சேர்ந்த கலாநிதி எம்.எ.நுகுமான் தமிழத்துறைப்பேராசிரியராக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் விளங்கினார்.
தற்போது மூன்றாவதாக சம்மாந்துறை மண்ணைச்சேர்ந்த கலாநிதி றமீஸ்அப்துல்லா பேராசிரியராகத் தெரிவாகியுள்ளார்.


நன்றி-காரைதீவு நிருபர் சகா
»»  (மேலும்)

4/27/2016

நானும் ரவடிதான் சம்பந்தரின் நகர்வு வெற்றியளித்தது

தமிழ் மக்களின் பாரிய நம்பிக்கையின் பெயரில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசைக்கொண்டு எவ்வித கருமங்களையும் சாதிக்க முயலாது  காலம்கடத்தி வருகின்றனர் கூட்டமைப்பினர்.அண்மைக்காலமாக இதுபற்றிய விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.இந்த கையாலாக தனத்தை மறைக்க சம்பந்தர் நானும் ரவுடிதான் வேஷமிட்டு அண்மையில் ஒரு நிகழ்வை நடத்தினார்.அது அவருக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல பலனை தந்துள்ளது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் அலுவலகம் சிங்கள தேசியவாத அமைப்புகளால் இன்று முற்பகல் சுற்றிவளைக்கப்பட்டது.
கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமொன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர இரா. சம்பந்தன் பலவந்தமாக புகுந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் இந்த செயலுக்கு பிரதான கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி, இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு உட்பட பல சிங்கள தேசிய வாத அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பந்தன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்துக் குரல் எழுப்பினர்.
குறிப்பாக தான் இராணுவ முகாமுக்கள் இருந்திருந்தால் சம்பந்தனை வெளியேவர விட்டிருக்கமாட்டார் என்றும், சுட்டுவீழ்த்தியிருப்பார் என்றும்  முன்னாள் இராணுவ சிப்பாயான சரத் மனமேந்திர குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

4/26/2016

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்து

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக, இருவரும் தங்களது வேட்புமனுவில் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா தேவியிடம் தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவுடன் தனது சொத்து பற்றிய விபரங்களை ஜெயலலிதா இணைத்துள்ளார்.
இதன்படி,
ஜெ.,வுக்கு ரூ118.58 கோடி சொத்து உள்ளது. ரூ.41.63 கோடி அளவுக்கு அசையும் சொத்துக்களும்,
ரூ.76.95 கோடி அளவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ரூ.2.04 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.






தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு, துணைவி ராசாத்தி ஆகியோர் பெயரில் ரூ.62.99 கோடி சொத்து உள்ளது
இதன்படி தயாளு, ராசாத்தி ஆகியோர் பெயர்களில் ரூ.58.77 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லை எனவும், தயாளு மற்றும் ராசாத்தி பெயர்களில் ரூ. 4.63 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. தவிர ராசாத்தி பெயரில் ரூ.11.94 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும், கருணாநிதி பெயரில் கார், வேளாண், வங்கிக்கடன் ஏதும் இல்லை. இவ்வாறு கருணாநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

4/25/2016

கிளிநொச்சி மாவட்டத்தில் 4284 சிறுவர்கள் தந்தை – தாயை இழந்து அவலம்.தமிழ் தேசியகூட்டமைப்பு திரும்பி பாக்கவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ...ஆயிரத்து 284 சிறுவர்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவர்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Résultat de recherche d'images pour "சிறுவர்கள்"2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 44 சிறுவர்கள் தந்தையையும், 764 சிறுவர்கள் தாயையும், 476 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனர்

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 569 சிறுவர்கள் தந்தையை இழந்த நிலையிலும், 411 சிறுவர்கள் தாயையும், 316 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கண்டாவளையில் 670 சிறுவர்கள் தந்தையையும், 138 சிறுவர்கள் தாயையும், 40 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 285 சிறுவர்களும், தாயை 71 சிறுவா்களும், இருவரையும் 38 சிறுவர்களும் இழந்துள்ளனர்
பூநகரி பிரதேச செயலக பிரிவில் 520 சிறுவர்கள் தந்தையையும், 144 சிறுவர்கள் தாயையும், 82 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்
கரைச்சி பிரதேசத்தில் அம்பாள்நகர்கிராம அலுவலர் பிரிவில் சாந்தபுரம் பிரதேசத்தில் 171 சிறுவர்களும், கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் 106 சிறுவர்களும், மலையாளபுரம் கிராமத்தில் 99 சிறுவர்களும், இரத்தினபுரம் கிராமத்தில் 95 சிறுவர்களும், செல்வாநகர் கிராமத்தில் 75 சிறுவர்களும், பொன்னகர்கிராமத்தில் 52 சிறுவர்களும், மாவடியம்மன் கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்களும், பாரதிபுரம் கிராமத்தில் 50 சிறுவர்களும் தந்தையை இழந்து அதிகளவில் தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது

பூநகரி பிரதேசத்தில் 128 சிறுவர்கள் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவிலும், 64 சிறுவர்கள் நல்லூர் கிராம அலுவலர்பிரிவிலும், 62 சிறுவர்கள் கரியாலைநாகபடுவான் கிராம அலுவலர்பிரிவிலும், 45 சிறுவர்கள் நாச்சிக்குடாவிலுமாக அதிகளவு தந்தையை இழந்த எண்ணிக்கையை கொண்ட பிரதேசங்களாக காணப்படுகிறன.
கண்டாவளையில் கோரக்கண்கட்டு 58 சிறுவர்கள்,புன்னைநீராவி 52 சிறுவர்கள், ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவில் 52 சிறுவர்கள், உமையாள்புரம் 50 சிறுவர்கள், முரசுமோட்டை 49 சிறுவர்கள், குமரபுரம் 48 சிறுவர்கள் தந்தையை இழந்து அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்கள் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளியில் அதிகளவு தந்தையை இழந்த சிறுவர்களை கொண்ட பிரதேசமாக முகாவில் கிராம அலுவலர் பிரிவு காணப்படுகிறது. இங்கு 36 சிறுவர்கள் தந்தையை இழந்துள்ளனர்
இந்த சிறுவர்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நேரடி பாதிப்பின் விளைவால் அதிகளவு சிறுவர்கள் பெற்றோரை இழந்து காணப்படுகின்றனர் அத்தோடு ஏனைய காரணகளாக நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களும் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

புகலிட தமிழர்களிடையே தலைவிரித்தாடும் சாதிப்பேய்

தலித்துகளை அரசியல் நீக்கம் செய்வதற்கான சமகால முனைப்புகள் - என்.சரவணன் *நன்றி நமது மலையகம்


Résultat de recherche d'images pour "என்.சரவணன்"
சமீப காலமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்குபவர்கள், எழுதுபவர்கள், பேசுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் என்போருக்கு எதிராக சாதி ஆணவம் தலைதூக்கி வருகிறது.

அதாவது தலித்தியம் குறித்து பேசுபவர்களை பேசவிடாது அவர்களை வெவ்வேறு வடிவங்களில் தாக்கி புறமொதுக்கி, பயம்கொள்ள வைத்து, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தி வைக்கும் கைங்கரியங்கள் ஒப்பேற்றப்பட்டு வருகின்றன.

அறியாமையின் காரணமாக இந்த ஆணவத்தை வெளியிடுபவர்களை எம்மால் விளங்கிக்கொள்ள முடியும், ஏன் அவர்களை ஓரளவு மன்னிக்கவும் முடியும். ஆனால் சாதியாதிக்க மனநிலையுடனும், சாதி ஆணவத்துடனும் எம்மைத் தாகுபவர்களில் பலர் சமூக செயற்பாட்டுத் தளத்தில் அறியப்பட்டவர்கள் என்பது தான் வேதனையையும், ஆத்திரத்தையும் தரும் செய்தி. பலர் தாமாகவே இந்த நாட்களில் அம்பலப்பட்டு வருகிறார்கள்.

ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தலித்தியம் பற்றி கதைப்பது எங்களுக்கு வசதியானது அல்ல. எமது அடையாளங்களை நாம் வெளிப்படையாகவே அறிவித்து இயங்குவதை எவர் கௌரவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கொடிய அவமானங்களை தாங்கிக் கொண்டு தான் இந்த பணியை நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

எமக்காக ஆதரவளிக்க முன்வரும் ஆதிக்க சாதிய பின்னணியைக் கொண்ட பலரும் கூட தம்மையும் தலித்தாகப் பார்த்து விடுவார்களோ என்கிற அச்சத்துக்கு உள்ளாகியிருகிறார்கள். சிலர் அதனாலேயே தூர நிற்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து சக சாதி சமூகத்தினரிடமிருந்தும் நிர்ப்பந்தங்களும் வந்திருக்கின்றன. சிலர் நேரடியாகவே நான் உயர் சாதியாக இருந்தாலும் தலித்திய ஆதரவாளன் தான் என்று அதற்குள்ளும் தப்பி தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தமது “உயர்” சாதியை எந்த விதத்திலும் வெளிப்படுத்தாது எம்மோடு கரம்கோர்த்து பணியாற்றியுமிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் எம்மில் இருந்து பிரித்தாளும் பணி நுட்பமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது.

நாங்கள் தலித் மக்கள் எதிர்கொள்ளும் புது வடிவிலான பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்டு அதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் போது இவர்கள் மீண்டும் மீண்டும் “எங்கே இப்போது சாதி இருக்கிறது? தலித் என்றால் என்ன? ஏன் சாதிப் பிரசினையத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டு எம்மை கடுபேத்திக்கொண்டிருக்கிரார்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை பொதுத்தளத்தில் வேறெங்கும் கிடைக்கவில்லையா என்ன. எம்மை நேரடியாக சீண்டும் நோக்கத்துடனும், எம்மை அந்த கேள்விகளுக்குள் மாத்திரம் சுழற வைத்துக்கொண்டும் இருப்பது அவர்களுக்கு வசதியானது. சாதியம் பற்றி நாங்கள் கதைப்பது சாதியத்தை ஒழிப்பதற்காகத் தான். சாதியத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல.

அதுமட்டுமன்றி இந்த கேள்விகள் அவர்களுக்கு “உடனடி – நேரடி பதிலாகவும்” வேண்டுமாம். இன்ஸ்டன்ட் நூடில்ஸ் போல. அப்படியும் மேலோட்டமாக விளங்கப் படுத்துவதற்கு எளிமையான விளக்கத்தை சராசரி மனிதர்களுக்கு விளங்கப்படுத்தினால் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு இவ்வளவு தானா. இது தானா என்று அதற்குள் குற்றம் தேடிக் கண்டுபிடித்து இதோ இவர்களின் தலித்தியம் பற்றிய அறிவு என்று நகையாடுகின்றனர். எவ்வளவு எளிமையான வேலை இந்த சாதி ஆணவக்காரர்களுக்கு. சமீபத்தில் தோழர் முரளி அளித்த ஒரு விளக்கத்துக்கு இது தான் நேர்ந்தது. முரளியிடம் நான் கேட்டுக்கொண்டது என்னவென்றால் அவர்களின் சீண்டலுக்குள் விழுந்து விடவேண்டாம். சாதி வெறியர்களின் வம்பிழுத்தல் என்பது எமது நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும் பறிக்கும் நோக்கிலானது. எல்லாவற்றையும் விட நமது மனஉறுதியை (“மோரலை”) பறிக்கும் சதி உடையவை. அதற்குள் நாம் அகப்பட்டு சிக்கவேண்டாம். அவர்களுக்கு அந்த வெற்றியைக் கொடுத்து விடவேண்டாம். கடந்த சில நாட்களாக புஷ்பராணி அக்காவுக்கும் எதிராக மோசமான வசவுகள் வெளியிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அனுபவ முதிர்ச்சியுள்ள அவர் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். 

சாதி ஆணவக்காரர்களுக்கு இது தமது சாதி மேதாவித்தனத்தை வெளிக்காட்டுவதற்கான வழி மட்டுமே. அவர்களுக்கு இது அவர்களின் அரசியல் / தனிப்பட்ட பழிவாங்கலை செய்வதற்கான ஒரு நுட்பமே. ஆனால் எமக்கோ இது அன்றாட வாழ்க்கை. எமது எதிர்கால சந்ததியை விடுவிப்பதற்கான அவமானம் நிறைந்த போராட்டம். இந்த அவமானங்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். இந்த அவமானங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் நாங்கள் எங்களை விலை கொடுக்க எப்போதோ உறுதியெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த வசவுகளுக்கும், ஏளனத்துக்கும் எங்களை பலியாக்குவதாக என்றோ நாங்கள் முடிவெடுத்துக் கொண்டு தான் இந்த பணியில் இறங்கியிருக்கிறோம். இந்த பணி எங்களுக்கு வசதியானது இல்லை தோழர்களே.

ஆதிக்க சாதியினர் பெருமிதத்துடன் தமது சாதியை அறிவித்துக்கொண்டு பணியாற்றுவதைப் போல அல்ல எங்கள் பணி. ஒடுக்கும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும், ஒடுக்கப்படும் சாதி தன்னை அறிவித்து பணியாற்றுவதும் மிகப் பெரிய வேறுபாடு உடையவை. துருவமயமான சிக்கல் நிறைந்தவை.

***
கடந்த சனிக்கிழமை நோர்வே தமிழ் சங்கத்தின் 37வது ஆண்டு விழாவில் இம்முறை சிறப்பு விருந்தினாராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். மண்டபம் நிறைந்த அந்த மேடையிலிருந்து நான் உரையாற்றி வந்ததன் பின்னர் பலர் கை குலுக்கி, தோளில் தட்டி வரவேற்றார்கள். வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களில் கணிசமான நண்பர்கள் என்னிடம் கூறினார்கள் எங்கே நான் சாத்தியம் குறித்து மேலும் விரிவாக கதைத்து அங்கே அவமானப்பட்டு விடுவேனோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் நான் கவனமாகத்தான் கதைத்தேன் என்றார்கள். எனக்கு கிடைக்கும் மேடைகளை நான் உச்சபட்சம் சமூக ஒடுக்குமுறைகளை விளங்க வைப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே எப்போதும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். கூடியிருந்தவர்கள் கலப்பான கூட்டம். வழங்கப்பட்ட 7 நிமிடத்திற்கும் நான் கூறவேண்டியதை எழுதித்தான் சுருக்கவேண்டியிருந்தது. உரையில் சாதிய சிக்கல்களையும் மிகவும் நுட்பமாகத்தான் முன்வைக்கவேண்டியிருந்தது. ஆனால் என்னை அறிந்தவர்கள் பலர் என்னுரையிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்ததை அறிந்த போது சற்று கலங்கித்தான் போனேன்.

தளத்திலும், புலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே நேரடியாக இன்று “...எம்மை அடையாளம் காட்டிவிடாதீர்கள். நாங்கள் இப்படியே ஒளிந்து வாழ்ந்து கடந்து போய்விடுகிறோம். இவர்கள் எங்களையும் எமது சந்ததியனரையும் விட மாட்டார்கள்...” என்று எம்மிடம் கேட்கும் நிலை தோன்றியிருக்கிறது. ஒடுக்கப்படுவோர் தமது உரிமைக்காக குரல் கொடுக்காதீர்கள் என்று கோரும் நிலைக்கு அவர்களைத் தள்ளியதில் இந்த சாதி ஆணவக்காரர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படி கோரும் எம்மக்கள் பெரும்பாலும் ஓரளவு மத்திய தர வர்க்க நிலையை எட்டியவர்கள். அதேவேளை அடிமட்ட வாழ்க்கையை வாழும் பலர் இன்றும் வெவ்வேறு வடிவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கியபடி தான் உள்ளனர். இந்த சூழலுக்குள் தான் நாங்கள் இயங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எமது பணி இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எமது பணியானது வெறுமனே நடைமுறையில் அவர்களைத் தூக்கி நிலைநிறுத்துவது மட்டுமல்ல. சாதியாதிக்க சித்தாந்தத்தை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியும் பணியே முதன்மையானது. அது அனைத்து ஜனநாயக சக்திகளுடனான கைகோர்ப்பின் மூலம் தான் சாத்தியம்.

சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் நாங்கள் முன்னிற்கிறோம். எதிர்த்து நிற்கின்றோம். எமக்கான தார்மீகத்தை நாம் பெற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆனால் ஏனைய அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பலர் தலித்தியம் என்று வந்தால் மாத்திரம் விலகி நிற்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் வேறு உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கான தார்மீக உரிமையை இழந்திருப்பது இதனால் தான். எமது அரசியல் நிகழ்ச்சிநிரலில் தலித் மக்களின் விடுதலையும் ஒன்று. ஆனால் உங்கள்  நிகழ்ச்சி நிரலில் தலித் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுவது ஏன்.

எம்மீது நிகழ்த்தப்படும் அவதூறுகள், காயப்படுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்தும் அரசியல் உரையாடல் தளத்திலிருந்து எம்மை அரசியல் நீக்கம் செய்யும் ஒரு கைங்கரியமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எம்மைப் பொறுத்தளவில் எமக்கும் எமது முன்னோர்களுக்கும் நடைமுறையில் கிடைக்கப்பெற்ற சாதிய வடுக்களை விட இது ஒன்றும் பெரிய காயங்கள் இல்லை. நீங்கள் தோற்றுப்போய்விடுவீர்கள். எங்களுக்கு இதுவும் கடந்து போகும். எமக்கு முன் இருக்கும் பணிகள் இவை எல்லாவற்றையும் விட பாரியது. 

நன்றி நமது மலையகம்
»»  (மேலும்)

4/24/2016

கருணாநிதியை தோற்கடிக்க ஒன்று கூடும் பார்ப்பனர்கள்

தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில், அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவுள்ளதாக மதுரை ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன், மதுரை ஆதீன மடாதிபதிகள்
அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரியும், இளைய மடாதிபதியும் சந்தித்து பேசினர்.
இதன்பிறகு அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் எனும் செய்தி வெளியிடப்பட்டது.
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், அவருடன் வேறு சில மாவட்டத் தலைவர்களும் அதிமுகவில் இணைந்தனர்.
அதேபோல் திரைப்பட நடிகை நமீதா உட்பட தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் அக்கட்சியின் சேர்ந்துள்ளனர்.
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அவரோடு, குளித்தலை, முசிறி பகுதிகளைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.கவில் வெள்ளிக்கிழமையன்று இணைந்தனர்.
»»  (மேலும்)

பழிவாங்க படும் அருந்ததிய மக்களின் உரிமை செயல்பாட்டாளர் கவிஞர் ...மதிவண்ணன்

Résultat de recherche d'images pour "கவிஞர் ...மதிவண்ணன்"

தமிழ் கவிதை சூழலில் தலித் கவிதைகளின் வழியாகவும் மேலும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களின் உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்பவராகவும் உள்ள செயல்பாட்டாளர் கவிஞர் ...மதிவண்ணன். இவரின் இயற்பெயர் ம.மோகன்ராஜ் மாணிக்கராஜ் என்பதாகும். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை,அரசு போக்குவரத்து கழகத்தின் ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ் ரே பிரிவில் பணிபுரிந்து வருகின்றார்.

அருந்ததிய மக்களின் அரசியல் உரிமைக்களை முன்னெடுத்த காரணத்தால் இவர் மீது உள்ளூர் ஆளும் கட்சி மந்திரி வகையறாக்களுக்கு கோபம் இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக இவரை எப்படியாவது பழி வாங்கி பணியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற ஒரு பகை உணர்ச்சி உருவாக்கப்பட்டடிருக்கின்றது. தற்போது மேற்கண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகஉள்ள டாக்டர். ராஜேந்திரன் என்பவர் உள்ளுர் ஆளும் கட்சியினரின் பாசத்தைப்பெறவேண்டும் என்பதற்காக கவிஞர் மதிவண்னனை ஏதாவது செய்து தேர்தலுக்குள் பணியிடை நீக்கம் செய்துவிடவேண்டும் என துடிதுடித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாக தினமும் அவர் பணி புரியும் பகுதிக்கு சென்று அவருடன் வேலை செய்யும் ஊழியர்களை கடுமையாக பேசுகின்றார். மேலும் கடந்த பத்து வருடத்திற்கு முன் மதிவண்ணன் சக ஊழியரிடம் சப்தம் போட்டதாக ஒரு மெமோ கொடுத்து விளக்கம் கேட்டுள்ளார். எக்ஸ்ரே பிரிவு ஊழியர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த ஏழு மணி நேர பணி காலத்தைக்காட்டிலும் கூடுதலாக பணி செய்யவேண்டும் என நிர்பந்தித்துள்ளார். நாள் தோறும் ஒரு மெமோ என்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட மெமோக்களை கொடுத்துள்ளார். மேலும் கவிஞர் மதிவண்ணன் தன்னிடம் வந்து மன்னிப்புக்கேட்டு மன்றாடினால் அவரை பணி நீக்கம் செய்யாது வேறு ஊருக்கு மாற்றி விடுவதாக தூது அனுப்பியும் உள்ளார். இதன் தொடர்ச்சியாக வரும் திங்கள் கிழமை விசாரனை என்ற பெயரில் ஒரு கட்டபஞ்சாயத்து செய்ய ஒரு கூட்டத்தை தயார் செய்துள்ளதாகவும், சிலரை பொய் சாட்சி சொல்ல நிர்பந்திப்பதாகவும் தெரிகின்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் தன்னை ஒரு ஆதிக்க சாதி பிரதிநிதி என காட்டிக்கொள்வதற்காக தாழ்வு மனப்பான்மையுடன் இது போல செயல்படுவதாகவும் அறிய முடிகின்றது. மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள ஒரு டாக்டர் தனது தகுதியை மறந்து ஆளும் கட்சி ஜால்ராக்கள் மற்றும் சாதிய சக்திகளுக்காக அருந்ததிய மக்களின் பிரதிநிதியாக நின்று அறிவுசார் செயல்பாட்டினை முன்னெடுக்கும் கவிஞர் மதிவண்னனை தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராகவும், சாதி பாகுபாட்டுடனும் , காழ்புணர்வுடன் செயல்படும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜேந்திரன் என்பவர் அந்த பதவி வகிக்க தகுதியற்றவர் என்பது மட்டுமல்ல சனநாயக விரோத செயல்களில் ஈடுபடுபவராகவும் உள்ளார். இந்த தாக்குதலிலிருந்து கவிஞர் மதிவண்னனை பாதுகாப்பது மட்டுமல்ல அவருக்கு பக்கபலமாக நிற்பதும் சனநாயக சமூகத்தின் கடமையாகும்.
»»  (மேலும்)

4/23/2016

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது


வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார்.
சனிக்கிழமை அக்கரைப்பற்று நகரில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. வரும் தேர்தலில் பெரும் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று அவர் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டினார்.
இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைவரும் பங்கேற்றனர்.
சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மரக்காணம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
திங்கட்கிழமையன்று திருவாரூரில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கருணாநிதி, 28ஆம் தேதிவரை தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.
அதன் பிறகு மே 1ஆம் தேதியன்று பிரச்சாரத்தை மீண்டும் துவங்கும் கருணாநிதி 14ஆம் தேதிவரை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
»»  (மேலும்)

4/12/2016

தீவிரவாதிகளாகும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள்

'கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்' என்று சொல்வார்கள். அரசியலில், ஒரே தன்மையுள்ள இரண்டாவது கட்சி உருவாகிவிட்டால், முதலாவது கட்சிக்காரர் தன்னுடைய செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையில், தேர்தல் காலங்களிலும் வேறு சில பருவ காலங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலை இந்த 'கீரைக்கடை அரசியல்' என்றும் சொல்லலாம்.   இதனால் மக்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது பலன் கிடைக்கின்றது. போட்டி போட்டுக்கொண்டு அபிவிருத்தி பணிகளை நான் முந்தி நீ  முந்தி என்று முஸ்லிம் அமைச்சர்கள் செய்து வருகின்றார்கள்.


ஆனால் தமிழ் மக்கள் பாவம் போட்டி அரசியல் செய்த பிள்ளையான்,டக்லஸ் போன்றவர்கள் அமைச்சு பதவிகளில் இருக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு காரருக்கு வெறும் அட்டைக்கத்தி வீரர்களாக காலத்தை ஓட்ட முடியவில்லை.அதனால்தான் மாகாணசபைகளை பொறுப்பெடுத்து   மக்கள் பணிகளில் பங்கெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இப்போ டக்ளசுக்கு அமைச்சு கொடுக்க விடாது வெற்றி கண்ட கையோடு ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டும் விசாரிக்க சொல்லி பிள்ளையானையும் உள்ளே போட்டாயிற்று.

இப்போ "போட்டி இல்லை பொருதல் இல்லை எப்பவும் நான் ராஜா" என்று கூட்டமைப்புகாரர்கள் பழையபடி தூங்க தொடங்கிவிட்டனர்.அதிலும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் தீவிரமாக தூங்குகின்றனர். 

கிழக்கு மாகாணமுதலமைச்சராக பிள்ளையான்   பதவி வகித்த வேளையில் பாதுகாக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் இன்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக தமிழரான சி. தண்டாயுதபாணி பதவி வகிக்கும் காலத்தில் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.ஆணையத்துக்கும் காரணம் துரோகிகள் என்று தப்பித்துக்கொள்ளலாம்தானே.
»»  (மேலும்)

4/11/2016

பௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்கம்



  பௌத்தமத ஸ்தானங்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பௌத்த மறுமலர்ச்சி நிதியமொன்று உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 12,150 விகாரைகள் இருப்பதோடு, அவற்றில்  750 பிரிவெனாக்களும் 150 துறவி மடங்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன
»»  (மேலும்)

அமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வாகனம் -7 கோடி

Résultat de recherche d'images pour "top luxury cars"

அமைச்சரொருவர் கொள்வனவு செய்யும் வாகனத்துக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இலங்கைப் பெறுமதியில், 700 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW 7-Series ரக வாகமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சர் பொன்சேகா தீர்மானித்துள்ள நிலையிலேயே, மேற்படி கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக, அமைச்சர் ஒருவருக்கு 350 இலட்சம் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. அந்தத் தொகையில், புதிய ரக பென்ஸ் கார் ஒன்றைக்கூட கொள்வனவு செய்ய முடியாது என்றும் வாகனக் கொடுப்பனவை 400 இலட்சமாக அதிகரிக்குமாறும் அமைச்சர் பொன்சேகா, இதன்போது கோரியுள்ளார். இதற்கான பதில் வழங்கும் பொறுப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

4/10/2016

வெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்" 2016 சித்திரை 10

கிழக்கு மண்ணின் விடுதலைக்காக வித்தான வீரமறம்.வர்களின் 

நினைவுநாளை, விளக்கேற்றி எழுச்சியுடன் நினைவு கூருவோ"-வெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்"
---2016 சித்திரை 10----

Afficher l'image d'origine
வெருகல் படுகொலை நினைவு தூபி-வாகரை  



பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.
Afficher l'image d'origine2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் இருந்த பிரதேச ரீதியான பிரச்சனைகள் அம்பலத்துக்கு வந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் கிழக்கு பிளவு நிகழ்ந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுமார் ஆறாயிரம் போராளிகளைக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின்  சிறப்புத் தளபதியான கேணல் கருணா மார்ச் மாதம் 03 ஆம் திகதி இந்த கிழக்குப் பிரிவனை பகிரங்கமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்காக நியமிக்கப்பட்ட 32 துறைச் செயலாளர்களிலும் ஒருவர் கூட கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பது  முதற்கொண்டு கிழக்கு மாகாணத்து போராளிகளும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுகின்றன எனும் பல அதிருப்திகள் கேணல் கருணாவால் முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள மறுத்த புலிகளின் தலைமை கேணல் கருணாமீது துரோகப்பட்டம் சூட்டி கிழக்கு மாகாணப் போராளிகள் மீது படைகொண்டு ஏவியது. வன்னியில் இருந்து சொர்ணம்,பானு, தலைமையில் திருகோணமலையை வந்தடைந்த புலிகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றினை கடந்து மட்டக்களப்பு மண்ணில் நிகழ்திய கொலைவெறியில் சுமார் 210 கிழக்கு போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த படுகொலையே வெருகல் படுகொலை என இன்றுவரை கிழக்குமாகாண மக்களால் நினைவுகூரப்படுகின்றது.
எதிரி இராணுவம் கூட செய்யத் தயங்குகின்ற முறையில் இந்த வெருகல்படுகொலை நிறைவேற்றப்பட்டது. பாலியல் கொடூரங்களை நிகழ்த்தி கிழக்குமாகாண பெண்போராளிகள் மீது வன்னிப்புலிகள் அரங்கேற்றிய இப்படுகொலையானது எழுத்துகளால் விபரிக்கத்தக்கனவல்ல. வெருகல் ஆற்றுப்படுக்கைகளில் கரையொதுங்கிய சடலங்களையும் கதிரவெளிக் கடற்கரையின் வெந்தமணற்பரப்பில் வெம்பிக்கிடந்த வெற்றுடல்களையும் கூட எடுத்து அடக்கம் செய்யக்கூடாதென்று அக்கிராமவாசிகளை துரத்தியடித்தனர் சொர்ணம்பானு  தலைமையிலான புலிகள். இந்த துயர நினைவுகளின் ஒன்றிப்பாகவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் நாள் கிழக்கு மாகாணத்தின் கரிநாளாக நினைவுகூரப்படுகின்றது.
அன்றைய காலகட்டத்தில் இந்த படுகொலையை பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் மூடி மறைத்தன.விதியே விதியே இத்தமிழ் சாதியை என செய்ய நினைத்தாய் என்று நொந்து கொண்ட என்னால் ஒரு கவிதை மட்டுமே எழுத முடிந்தது அதை தேனீ இணையத்தளம் மட்டுமே பிரசுரித்து தன கடமையை செய்தது  பின்னர் தோழர் மனோரஞ்சன் தனது நிர்மாணம் இதழில் அதனை பிரசுரித்தார்
மீன்பாடும் தேனாடான்.
»»  (மேலும்)

செலவீனங்களை குறைக்கும் நல்லாட்சி அரசில் 100ஐ தாண்டும் அமைச்சர்களின் எண்ணிக்கை

  அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

92 அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக அரசாங்கம்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இதில் அடங்குவதாகத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியிலிருந்து வரும் உறுப்பினர்களுக்கு மேலும் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

4/09/2016

ஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக சந்திரகாந்தன் செயல்பட்டார்

ஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக சந்திரகாந்தன் செயல்பட்டார்
  (நன்றி தேனீ இணையம்) 
- மீன்பாடும் தேனாடான்
கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது யுத்தம் முழுமையாக முடிந்திருக்க வில்லை.கிழக்கு மாகாணத்தில் மட்டுமே அப்போதுதான் யுத்தம் ஓய்ந்திருந்தது.எனவே சுமார் முப்பது வருட யுத்த வடுக்களுடன் கல்வித்துறை சImage2ீரழிந்து கிடந்தது.  கிராமப்புற பாடசாலைகளில் பல ஒற்றை ஆசிரியர்களுடனேயே இயங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக வெருகல் பட்டிபளை, வாகரை, வெல்லாவெளி, வவுணதீவு, திருக்கோவில் போன்ற பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. அதிலும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர். யுத்தகால இடப்பெயர்வுகள் காரணமாக வாகரை, கதிரவெளி புணானைஇகரடியனாறு போன்ற எல்லைகிராமங்களில் காணப்பட்ட பல  பாடசாலைகள்ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்கு அப்பால் போதிய மாணவர்களின் வரவு இன்றி இன்றோ நாளையோ மூடப்படும் நிலையில் இருந்தன.

அதேவேளை பல நகர்புற பாடசாலைகளில் தேவைக்கும் மேலதிக ஆசிரியர்கள் காணப்பட்டனர்.யுத்தகால வன்முறை சூழலையும் சோதனை சாவடிகள்இதடுப்புகள்இகைதுகள் போன்றவைற்றையும் காரணமாக கொண்டு பல ஆசிரியர்கள் தத்தமது பிரதேசங்களை அண்டிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்றிருந்தனர். இதற்கு பல அமைச்சர்களின் சிபார்சுகள் வாய்ப்பளித்திருந்தன. குறிப்பாக கல்முனைஇமட்டக்களப்பு -மத்தி போன்ற கல்வி வலையங்களின் பாடசாலைகளில் தேவையற்ற நிலையில் பல ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்பட்டனர்.

இந்த நிலையில் மாற்றம்கொண்டுவர வேண்டியதன் அவசியம் முதலமைச்சரால் உணரப்பட்டது. கிழக்குமக்களின் கல்வியை வளர்த்தெடுப்பதே எமதுமக்களின் அடிமைத்தனங்களை அழித்தொழிக்க சரியான வழி என்பதில் முதல்வர்  திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.  கிடைத்த சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்த உறுதி பூண்டார்.

பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பட்டியல் நீளமாக இருப்பினும் அவற்றில் உண்மையிலேயே தடையின்றி கையகப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் மிக சிலவாகவே இருந்தன. மாகாண சபைகள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்பாத   மத்திய அரசுஇ ஆளுனர் போன்றோரின் இரும்பு பிடிகள் மலையாக எழுந்து நின்றன. மறுபுறம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ் இமுஸ்லிம்இசிங்கள இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சக அமைச்சர்கள் போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுடே காரியங்களை சாதிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை   வரலாறு எவ்வித முன்னனுபவங்களும் இன்றிய  சந்திரகாந்தனின் மீது சுமத்தியது.

பல்கலைகழகம்இ பயிற்சி கல்லூரிகள் மற்றும் பட்டபடிப்பு நிறுவனங்கள் தவிர்ந்த  ஏனைய கல்விசார் நிறுவனங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய அதிகாரங்களின்கீழ் வருபவை இதன் அடிப்படையில் ஆரம்ப பாடசாலைகள் தொடக்கம் கனிஸ்டஇஉயர்தர வகுப்புக்களை கொண்ட கல்லூரிகள் வரை மாகாண கல்வியமைச்சின் ஆளுகைக்கு கீழ் வருபவையாகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள்  தத்தமது  மாகாண கல்வித்துறையில் பாரிய தாக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இதன் காரணமாக கிடைக்காத காணிஇ போலிஸ் அதிகாரங்களுக்காக ஒப்பாரிவைத்து மத்திய அரசுடன் முரண்படுவதையோ வாய் வீரம் பேசி  காலத்தை வீணடிப்பதையோ அவர் விரும்பவில்லை. எனவே  மாகாண சபைக்குரிய கல்வியதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தாலும் ஏழு   ஆசனங்களை கொண்ட அவரது கட்சியImage4ான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்தே கிழக்குமாகாண சபையின் ஆட்சியை தலைமை ஏற்று இருந்தது. இதன் காரணமாக மாகாண சபையின் கல்வியமைச்சு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிறி லங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான விமலவீர திசநாயக்க என்பவருக்கே வழங்கப்பட்டடிருந்தது.

எனினும் விமலவீர அவர்களுடன் முதலமைச்சர்  ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வின் காரணமாக தமிழ் பிரதேசங்களின் கல்வி பிரச்சனைகளை கையாளும் பொறுப்பினை முழுமையாகவே முதலமைச்சரிடம் கல்வியமைச்சர் பொறுப்பளித்தார். இந்த வாய்ப்பினை சந்திரகாந்தன் திறம்பட பயன்படுத்திக்கொண்டார்.

முதற்கட்டமாக மாவட்ட பாடசாலைகளிடையே உள்ள ஆசிரிய வளங்களை சமனாக பங்கிடுவது என்கின்ற வேலைத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.

மேலதிக ஆசிரியர்களை கொண்ட பாடசாலைகளில் இருந்து  பின்தங்கிய பிரதேசங்களுக்கு முடிந்தவரை தேவையான ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர்.போக்குவரத்து தடைகளையும்இஅலைச்சல்களையும் காரணமாக காட்டி பல ஆசிரியர்கள் இந்த தொலைதூர இடமாற்றங்களை ரத்து செய்ய கோரினர். ஆனால் இடமாற்றங்களை எவ்வித காரணங்களை முன்னிட்டும் ரத்து செய்வதில்லை என்பதில் முதலமைச்சர் உறுதியை கடைப்பிடித்தார்.(அப்போ நீங்கள் அங்கே வாகரைக்கும் திகிலிவட்டைக்கும்  போய் படிப்பிக்காவிடில் அந்த பிள்ளைகளுக்கு படிப்பிப்பது யார்? என்னும் கேள்வியை இடமாற்றத்தை ரத்து செய்ய கோரிவந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டார்).கை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களை அவரவர் விரும்பிய இடங்களில் கற்பிக்க அனுமதித்து மாணவர்களுக்கு துரோகம் செய்துவந்த அரசியல் கலாசாரத்துக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் முற்றுப்புள்ளி வைத்தார்.

 அதேவேளை தூர இடத்து ஆசிரியர்களின் சிரமங்களை புரிந்து கொண்டு வசதிகருதி முடிந்தவரை அதிகாலையிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்துவதற்கு உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிகளவான ஆசிரியர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதியின் மையமான களுவாஞ்சிக்குடியிலிருந்து வாழைச்சேனைஇவாகரைஇ கதிரவெளி பிரதேசங்கள் வரை விசேட பஸ் சேவைகள் சீரமைக்கப்பட்டன. ஆங்கிலஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக அம்முயற்சி கைகூடவில்லை.

யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு  கைவிடப்பட்டநிலையிலும் அழிவின் விளிம்பிலும்   பல எல்லை கிராமங்கள் கிடந்தன. அவற்றையிட்டு தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.  யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்ற திட்டங்கள் ஒருபுறமிருக்க சுயமாக மக்களை மீள குடியமர செய்ய தடையாயிருந்த ஒருசில கட்டுமான வசதிகளை செய்து கொடுப்பதனூடாக அப்பிரதேச பாடசாலைகளை மீள இயங்க செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டது.குறிப்பாக தென்னமரவாடி தொடங்கி புனானை, கரடியனாறு, பாலையடிவட்டை, வளத்தாப்பிட்டி  வரையான  இடங்களில் கைவிடப்பட்டபோக்குவரத்துக்கள், கோவில்கள் கடைகள், சந்தைகள் என்பன மீள அமைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.இதற்காக தனது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வளங்களையும் சந்திரகாந்தன் பயன்படுத்த தீர்மானித்தார். குறிப்பாக புனானை பிரதான வீதியோரத்தில் ஒரு    கடைத்தொகுதிகூட  கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஊடாக  உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பின் எட்டு பிரதேச சபைகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஆட்சியில் இருந்தன  என்பதால் அந்த வாய்ப்புக்களை தனது மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு சரியாக பயன்படுத்தினார்முதலமைச்சர். இன்றுவரை இயங்குகின்ற த்திட்டத்தின் பலனாக புணானை மீண்டும் புதுபொலிவு பெறஅடிகோலிடப்பட்டது .போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு தொலை தூர குக்கிராமங்களில் இருந்து புணானை பாடசாலைக்கு வரும் மாணவர்களில் வரவை உறுதிப்படுத்த வாழைச்சேனை போக்கு வரத்து சபை டிப்போவில் இருந்து விசேட சேவை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல முப்பது வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களான  தென்னமரவாடிக்கான பஸ் சேவை,பாலையடிவட்டை சந்தை கட்டிடம் வளத்தாப்பிட்டி கோவில் புனரமைப்பு என்று அனைத்தும் சீரழிந்து கிடந்த கல்வித்துறையின் மீள் நிர்மாணம் நோக்கியே திட்டமிடப்பட்டன. இதுபோன்று பல்வேறு பிரதேசங்களில் கல்வித்துறை புனரமைக்கப்பட்டது.Image3
இரண்டாம் கட்டமாக பாடசாலைகளை தரமுயர்த்துவதன் ஊடாக அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேலதிக வளங்களையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுவது என்பது திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டமாக உருவாக்கப்பட்டது.

பல ஆரம்ப பாடசாலைகள் கனிஸ்ட பாடசாலைகளாகவும் பல கனிஸ்ட பாடசாலைகள் உயர்தர பாடசாலைகளாகவும் தரமுயர்த்தப்பட்டன. இதனூடாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக க.பொ.த.சாஃதரம் மற்றும் உயர்தரம்கொண்ட  வகுப்புக்கள் ஆரம்பிக்க ஏதுவாயின. கிழக்கு மாகாணமெங்கும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் தரமுயர்த்தப்பட்டன. இவற்றில் அதிகமானவை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவையாகும். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு பிரதேச அலகுகளில் ஒன்றான வெல்லாவெளி பிரதேசத்தில் மட்டும் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் இக்கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் கீழே தரப்படுகின்றது..
1.40ம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சாஃதரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
2.சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சாஃதரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
3.கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சாஃதரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
4.சங்கர் புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் (க.பொ.த.சாஃதரத்திலிருந்து க.பொ.த.உயர் ஃதரமாக தரமுயர்த்தப்பட்டது)
5.பாலையடிவட்டை நவகிரி வித்தியாலயம் (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
6.பாலமுனை  அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை  (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
7.ஆனைகட்டிய வெளி மலைமகள் வித்தியாலயம்(7 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
8.13ஆம் கொலனி விக்கினேஸ்வரா வித்தியாலயம்   (க.பொ.த.சாஃதரத்திலிருந்து க.பொ.த.உயர் ஃதரமாக தரமுயர்த்தப்பட்டது)
9.திக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சாஃதரம் வரை தரமுயர்த்தப்பட்டது).
இத்தகைய பாடசாலைகளுக்கு மத்திய அமைச்சுகளில் இருந்து போதிய வளங்களை பெற்று விநியோகிப்பதில் முதலமைச்சர் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்திய தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பயனாக ஆயிரம் கம்பியூட்டர்களையும் பத்து பஸ் வண்டிகளையும் பெற்று கொள்ள முடிந்தது.கிழக்குமாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கும் கல்வி வலையங்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.பல்லாயிரம் மாணவர்கள் முதன்முதலாக கம்பியூட்டர் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அவ்வரிய பணி கால்கோலிட்டது.  போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்பட்ட தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் ஆயிரக்கணக்கான துவிசக்கரவண்டிகள் இலவசமாக கொடுக்கபட்டன.

மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலைகளையும் புதிய கல்வி வலையங்களையும் உருவாக்குதல் ஊடாக மாகாணத்தின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்தல்

யுத்தகாலங்களில்  குழந்தைகளுக்கான முன்பள்ளிகள் மத நிறுவனங்களாலும் அரசுசார்பற்ற அமைப்புகளினாலுமே நிர்வகிக்கப்பட்ட வந்தன.அவற்றினை சட்டரீதியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட முறையில் மாற்றியமைப்பதும் நெறிப்படுத்துவதும் அவசியமாயிருந்தது. இதனடிப்படையில் பாலர்பாடசாலை நியதி சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி காணப்பட்டது.இச்சட்டமானது கல்வி சார்ந்து 13வது சட்டத்திருத்தத்தின் ஊடாக  மாகாண சபைகளுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

அதேபோன்று சுமார் முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன.குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது.அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலைஇருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் உருவாக்கப்பட்டன.

.மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் இ பட்டிருப்பு கல்வி வலயதImage1்தில் இருந்து  18 பாடசாலைகளும் இ மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து   7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட   பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் வரபிரசாதமாகும்.

அடுத்ததாக கல்வி வளர்ச்சி என்பது பாடசாலை கல்வியை  மட்டும் அடிப்படையாக கொண்டிருக்க கூடாது என்னும்நோக்கில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக பல நூல் நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டத்தினை முதலமைச்சர் உருவாக்கினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் இலங்கையிலேயே மிக பெரியதான ஒரு நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதன் நிர்மாண வேலைகள் பூர்த்தியாக முன்னர் (ஒரு வருடத்துக்கு முன்னதாகவே) கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் காரணமாக இந்த பிரமாண்டமான நூலக பணிகள்  பூர்த்தியாக முடியவில்லை. ஆனாலும் அரசியல் காழ்ப்புணர்வுகளை கடந்த  தேசப்பற்றுமிக்க ஒரு அரசியல் வாதியின்றி   இன்றுவரை இந்த நூலகத்தின் இறுதிக்கட்ட பணிகள்  காத்துக்கிடக்கின்றன.

   அடுத்து பேத்தாளை பொது நூலகம் மட்டக்களப்பில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் விட பெரியதாக அமைக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட நூலகத்தில்  18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள்இ 03 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பௌதிக வளம்  என்பன காணப்படுகின்றன.இணையதள வசதிகளுடன் காணப்படும் இந்த நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  2014 ம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பிரிவும் இணைந்து நடாத்திய தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கான நூலகங்களின் இந்த பேத்தாழை   பொது நூலகம்  ஆண்டு நாடளாவிய ரீதியில்   முதலாவது சுவர்ண புரவர  விருதுதை  பெற்று கொண்டது. 


2008ஆம் ஆண்டு தொடக்கம் 20012 ஆம் ஆண்டு வரையான சந்திரகாந்தனின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திகளின் பலனை கிழக்கு மாகாண மாணவர் சமுதாயம் தற்போது முதல் அனுபவிக்க தொடங்கியுள்ளன.கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரஃஉயர்தர பரீட்சைகளில் பல பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரத்துக்கும்இபல்கலைகழகத்துக்கும் நுழையும் வண்ணம் தமது மாணவர்களை வெற்றியீட்ட செய்துள்ளன.அவற்றில் பல பிற்படுத்தப்பட்ட எல்லைகிராமங்க பாடசாலைகள் என்பது மாபெரும் சாதனையாகும்.

சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்ணுக்கு   நல்லையா மாஸ்டர் என்னும் அரசியல் பெருமகன் ஆற்றிய கல்விப்பணிக்கு பின்னர் மட்டக்களப்பின் கல்வித்துறையை மேம்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளின் வரிசையில்   சந்திரகாந்தனின் பெயரை தவிர்த்து யாதொரு வரலாறும்எழுதப்படமுடியாது.

இத்தகையதொரு  கல்வி வளர்ச்சியை நோக்கி கிழக்கு மாகாணத்தை வழிநடத்துவதற்கும் உத்வேகம் கொண்டு செயல்படுவதற்கும்  முதலமைச்சர் சந்திரகாந்தன் மாபெரும் அரசியல் மேதையாக  காலடி எடுத்து வைத்தவரல்ல. ஆனால் தன்னைப்போன்றே இளமையில் கல்வியை தொலைத்துநின்ற ஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக அவர் செயல்பட்டார் என்பதை காரணமாகும்.

மீன்பாடும் தேனாடான்  (நன்றி தேனீ இணையம்) 




»»  (மேலும்)

4/08/2016

பன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு - சீரெப்

பன்மைத்துவம் தொடர்பான கருத்தரங்கு - சீரெப் 


பன்முகத்தன்மை சகவாழ்விற்கான செழுமை என்ற கருப்பொருளில் இன்டர் கல்சர் டயலாக் பெளண்டேசன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஓருநாள் அமர்வொன்றை ஏற்பாடு செய்தது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் இவ்வமர்வில் கலந்து கொண்டனர். ஜுனைட் நளீமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி டீ. ஜெயசிங்கம் கலந்து கொண்டதுடார். அத்துடன் இன்டர் கல்ச்சர் டயலாக் பவுண்டேஷனின் பணிப்பாளர்களான கெரிம் எக்டமிர், உகூர் புலூசி ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதம பேச்சாளர்களாக இந்து கலாச்சார நாகரீக சிரேஷ்ட்ட விரிவுரையாளர் திருமதி எஸ். கேசவன், இஸ்லாமிய கற்கை நெறிகள் துறைத்தலைவர் எம்.ரீ.றிஸ்வி, கிரிஸ்தவ பீட இணைப்பாளரும் சிரேஷ்ட்ட விரிவுரையாளருமான அருட் தந்தை நவரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர். சர்வமத ஆசிகளை சுவாமி பிறப்பு பிரமானந்தா, மெளலவி தாஜுதீன், அருள் தந்தை அலக்ஸ் ராபட் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் விஷேட ஜாபகார்த்த சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உப வேந்தர் அவர்கள் நாடு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றது. இக்காலத்துக்கு தேவையான தலைப்பினை படித்த மக்கள் தரப்பிற்கு கொண்டு செல்ல இன்டர் கல்ச்சர் டயலாக் பெளண்டேசன் முன்வந்தமைக்காக பாராட்டுகளை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் இத்தகைய சமாதான சகவாழ்வு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு பல்கலைக்கழக சமூகம் எப்போதும் உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.






»»  (மேலும்)

4/05/2016

வானமழை மேகத்துக்கு மண்ணின் மரியாதை !

வானமழை மேகத்துக்கு
மண்ணின் மரியாதை !
மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவ செல்வங்கள் 2015ல் முதன்முறையாக நடைபெற்ற க.பொ.த (உ/த) தொழினுட்பவியல் பிரிவு பரீட்சையில் மாவட்டத்தின் முன்னணி நிலைகளை கைப்பற்றியுள்ளனர் என்பதை மிகவும் மகிழ்வோடு நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

பல சவால்களுக்கு மத்தியில் இப்பிரிவை கொண்டுவந்து சேர்த்தவர் எமது கிழக்கின் முதலாவது முதல்வர். அவரே உத்தியோகபூர்வமாக 15-07-2015 அன்று காலை 6.30 மணிக்கு இப்பிரிவை ஆரம்பித்து வைத்தார். கௌரவ சி.சந்திரகாந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள் !

மாவட்டத்தின் 2nd, 3rd, 4th, 5th, 6th, 8th, 9th நிலைகளும் 60க்கு உட்பட்ட மேலும் பல நிலைகளும் இப்பாடசாலைக்கு கிடைக்கப்ப்ற்றுள்ளன.
ஆசிரியர்கள் கிடைக்கப்பெறாதிருந்த போதும் பாடசாலையில் இருந்த ஆசிரியர்களுடன் ஆசிரியர்கள் அல்லாத எனது நண்பர்களும் சகோதரர்களும் எம்மோடு இணைந்து கற்பித்து இச்சதனையை நிலை நாட்ட உதவினர்.அவர்களுக்கும் எனது நன்றிகள் !!

நன்றி
*முகனூல் Ravi Thinakaran
»»  (மேலும்)

4/03/2016

விசாரித்தால் தள்ளுபடியாகும் என்பதால் பிணையுமின்றி விசாரணையுமின்றி பிள்ளையானின் வழக்கில் ஒத்திவைப்பு நாடகம்


Résultat de recherche d'images pour "chandrakanthan"ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு சதியில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக இன்று வெள்ளிக்கிழமை அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இது தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி  வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.
»»  (மேலும்)