3/09/2016

பிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால் வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை



தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மகிந்த 12000 புலிகளை விட்டார்,மைத்திரியால் 300 புலிகளை விடமுடியாதா? இதுவா நல்லாட்சி என்றெல்லாம் பொரிந்து தள்ளியுருக்கின்றார்.ஆக பிள்ளையானை பிடித்து அடைத்ததை தவிர ரணிலிடம் என்னால் வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.என்று புலம்பாத குறைதான்.இப்போது நல்லாட்சியும் கசந்து விட்டது.அடுத்த தேர்தலுக்கு என்ன ?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் கைதிகள் மற்றும் பலவந்தமாக காணாமற்போனோர் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“காணாமற்போனவர்கள் தொடர்பான விடயம் பாரிய மனிதாபிமான பிரச்சினையாக காணப்படுகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆணைக்குழுக்களின் முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக புதிய அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் உண்மை, நீதி நல்லிணக்கம், மீள் நிகழாமை மற்றும் இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இது தொடர்பிலான விடயங்கள் என்னவாகவுள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அதேநேரம் காணாமற்போனோர் தொடர்பில் காணாமற்போன சான்றிதழ் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
காணாமற்போன சான்றிதழ் என்பது மரணச் சான்றிதழ் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். காணாமற்போன சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் மற்றும் அவர்களுக்கு உரித்துடையவற்றை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
காணாமற்போனவர்கள் தொடர்பிலான திட்டம் என்னவென்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
அரசாங்கம் சரியான நோக்கத்துடன் தயக்கமின்றி செயற்படவேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்கள் திருப்தியடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலிருந்து தவறிவிடக் கூடாது.
சிறைகளில் தடுத்துவைக்கப்பட் டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டுக்களை கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் 90 வீதமானவர்கள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் கைதிகள் மீது மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்?
நாங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறோம். சமத்துவம் பேணப்படாத நிலைமை காணப்படுகிறது. இந்நிலைமை தொடர்ந்தால் நம்பிக்கை ஏற்படாது .நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்?
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வாறு தடுத்து வைக்க முடியும்? எவ்வாறு தண்டனை வழங்க முடியும்?
இதன் மூலம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கம் மீறுகிறது.
தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒரு சில தரப்பினர் கூச்சலிடுகிறார்கள். அவர்களின் கூச்சலுக்கு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தார். அவர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

0 commentaires :

Post a Comment