3/09/2016

மட்டக்களப்புக்கு சனி தோஷம்,வருகிறார் விக்கி

சீ.வி. விக்கினேஸ்வரன்வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எதிர்வரும் வாரத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சீ.வி. விக்கினேஸ்வரன் மட்டக்களப்புப்பு வருகை தரவுள்ளார்.

கடந்த மாதத்தில் தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரன் வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு அன்றைய தினம் மக்களுக்கு நிறைவேறாது போனது அந்த வகையில் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வடமாகாகண முதலமைச்சர் வருகை தருவார் என்று தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் 19/12/2015 அன்று இரவு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “தமிழ் மக்கள் பேரவை” என்ற மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரையில் பல்வேறு விடங்களுக்காக மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டாலும் முக்கியமாக புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான கருத்துக் கணிப்பே முக்கியமானதாகும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களாக: க.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாண அவை) , பி.லக்ஸ்மன் (மருத்துவர் – யாழ். போதனா மருத்துவமனை) , ரி.வசந்தராஜா (செயலாளர் – மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்). நடவடிக்கை குழு உறுப்பினர்களாக சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்), வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்), வண எஸ்.வி.பி மங்களராஜா சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி), நா.உ த.சித்தார்த்தன் (தலைவர் – புளட்), கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈபிஆர்எல்எப்) , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) > பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் – யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்), கலாநிதி கே.பிரேமகுமார் (மேனாள் தலைவர் – விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்), கே.சதாசிவம் (மட்டக்களப்பு) , எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்) , முரளீதரன் (திருகோணமலை), வி கோபாலபிள்ளை (அம்பாறை), மருத்துவர் ஜி.திருக்குமாரன் (தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்), மருத்துவர் ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்), வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்), சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் – தமிழ் சட்டவாளர்கள் சங்கம்) , என்.சிங்கம் (செயலாளர் – தமிழ் சிவில் சமூக அமையம்), என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்), எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) , தேவராஜ் (தலைவர் – வவுனியா சிவில் சமூக அமையம்) ஆகியோர் செயற்படுகின்றனர். ஏற்பாட்டு குழுவாக மருத்துவர் எஸ் சிவன்சுதன் , என் விஜயசுந்தரம், அலன் சதிதாஸ், எஸ் ஜனார்த்தனன் ஆகியோர் காணப்படுகின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் கீழ் அரசியல் துறை, கல்வித்துறை, நலத்துறை, சுற்றாடல் துறை , விவசாய துறை, மீன்பிடி துறை, மீள்குடியேற்ற துறை, புனர்வாழ்வு துறை. கலை துறை, பண்பாட்டு துறை உள்ளிட்ட உபகுழுக்கள் இயங்கவுள்ளன.

0 commentaires :

Post a Comment