3/02/2016

வடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூறி இன்னுமொரு கட்சி அறிக்கை சமர்ப்பித்துள்ளது



வடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என்று கூறி இன்னுமொரு கட்சி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் தமிழ் பேசும் மக்கள் சார்பான நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையுடன் முஸ்லிம்கள் "வேணாமப்பா"யாழ்ப்பாணத்தான் வாசம் என்று இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கனவில் இருந்து ஒதுங்கி கொண்டனர். பின்னர் 2004 வெருகல் படுகொலையுடன் கிழக்கு தமிழர்களும் வடக்கு கிழக்கு இணைப்பை வெறுக்க தொடங்கினர்.

இந்த நிலையில் இப்போது அரசியல் தீர்வு,மற்றும் யாப்பு மாற்ற யோசனைகளில் இந்த வரலாற்று நிகழ்வுகள் தந்த படிப்பினைகள் தாக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றது. தமிழர் அரசியல் வரலாற்றில் கிழக்கு தலைமையை கொண்ட ஒரே கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வடக்கு கிழக்கு இணைப்பை உறுதியாக எதிர்த்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அத்தோடு கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியும் கிழக்கிலங்கையின் தனித்துவமான பல்லின , பல்சமய , பல மொழி பேசும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு பேணப்படல் வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது

0 commentaires :

Post a Comment