3/12/2016

தூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் 12 இயக்கத்தின்' ( M12M) ஓராண்டு பூர்த்தி

தூய அரசியலை முன்னெடுக்கும் வேலைத்திட்டமான 'மார்ச் 12 இயக்கத்தின்' ( M12M) ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். தூய அரசியலை முன்னெடுக்கும் அடுத்தகட்டத்தை முன்னகர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் அங்கத்தவர் என்ற வகையில் தமிழில் உறுதியுரையை வாசிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இளைஞர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தனர். நாளை சந்ததியினர் நலன் பெற இன்று தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றவேண்டியுள்ளது.

0 commentaires :

Post a Comment