இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்
-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -
இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரையும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம்.அத்தோடு இந்த புதிய யாப்பு ஆனது எமது தேசத்தின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் முழுமையான உறுதிப்பாட்டினை வழங்குவதொன்றாக இருக்கவேண்டுமென்றும்,யாப்பு மாற்றத்தின் ஊடாக உருவாகும் புதிய குடியரசானது எம்தேசத்து பிரசைகள் அனைவரதும்அமைதியையும் சமாதானத்தையும்,சமத்துவத்தையும், சுய கெளரவத்தையும் நிலைநாட்ட வழிகோல வேண்டுமென்றும் வாழ்த்துகின்றோம்.

அந்த வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் வெற்றிக்கு எமது சார்பிலான சில ஆலோசனைகளையும்,வேண்டுகோள்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
1-இலங்கையை ஒரு மத சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.
இலங்கையானது சுமார் மூவாயிரம் ஆண்டுகால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றினைகொண்டிருப்பதோடு,சிங்களவர்,தமிழர்,சோனகர்,பறங்கியர்,
வேடுவர்,போன்ற பல்லினங்களின் கூட்டு வாழ்வினாலேயே கட்டியமைக்கப்பட்ட வரலாற்று தேசமாக உள்ளது.எனவே இன,மதம்,மொழி கடந்து அதன் பிரசைகள் ஒவ்வொருவரும் இலங்கையர்களாக மதிக்கப்படுவதற்கு அரசியல் யாப்பானது அனைவரையும் சமத்துவம் மிக்க பிரசைகளாக அங்கீகரிப்பது அவசியமாகும்.அந்தவகையில் குறித்த ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ மொழிக்கோ அரசியல் யாப்பின் ஊடாக விசேட அந்தஸ்துகள் வழங்கப்படுதல் ஏனைய பிரசைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்கும்.ஆகவே இந்த புதிய யாப்பானது பெளத்த மதத்துக்கு விசேட அந்தஸ்தை வழங்கிய 1978ல் உருவாக்கப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பிலுருந்து விடுபட்டு இலங்கையை ஒரு மத சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தல் வேண்டும் என கோருகின்றோம்.

2-தேசிய கொடியானது இனங்களின் அடையாளங்களை பிரதிநிதித்துவ படுத்தும் ஒன்றாக இல்லாது பொதுவான அடையாளமொன்றை கொண்டதாக மீள உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையிலுள்ள சிங்ககொடியானது தனியொரு இனத்தை முன்னிறுத்தி பிரதிபலிப்பதாக இருப்பதனாலும்,அதனை மாற்றியமைத்து ஏனைய இனங்களின் அடையாளங்களையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இனவாத அரசியல் அணிதிரட்டல்களுக்கு மட்டுமே காலத்துக்கு காலம் பயன்பட்டு வருவதாலும், தேசிய கொடிஎன்பது இனங்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்க அடிகோலிடக்கூடாது என்பதாலும், தேசியக்கொடியில் எவ்வித இன அடையாளங்களும் இல்லாதவாறு முழுமையாக மாற்றியமைக்கப்படவேண்டும்.எனவே தேசிய கொடியானது இனங்களின் அடையாளங்களை பிரதிநிதித்துவ படுத்தும் ஒன்றாக இல்லாது எமது தேசத்தின் பொதுவான அடையாளமொன்றை கொண்டதாக மீள உருவாக்க படவேண்டும்.
3-உள்ளுராட்சி மன்றங்களில் 50வீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த சபைகளில் 33வீதமும் இடம்பெறும் வண்ணம் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பை புதிய அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்.
எமது சமூகத்தில் ஏறக்குறைய சரிபாதியாக பெண்கள் உள்ளனர்.குடும்ப உழைப்பில் 90வீதம் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.ஆனால் பொருளாதாரரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெண்களின் தீர்மானிக்கும் சக்தி முழுமையாகவே ஆண் வர்க்கத்தால் சுரண்டப்பட்டே வருகின்றது.மேலும் கடந்தகால உள்நாட்டு யுத்தத்தால் மக்கள் மீது சுமத்தம்பட்டிருக்கும் குடும்ப சுமைகளில் பெரும்பகுதி பெண்களினாலேயே சுமக்கப்படுகின்றது.எனவே கலை,கலாசார,அரசியல்,சமூக ,கல்வி,மற்றும் பொருளாதார விடயங்களில் தீர்மான சக்திகளாக பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்யும்பொருட்டு -உள்ளுராட்சி மன்றங்களில் 33வீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த சபைகளில் 50வீதமும் இடம்பெறும் வண்ணம் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பை புதிய அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்.
4-சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்
*பல நூற்றாண்டு காலமாக சாதிரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுவரும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இன்றுவரை சமூகத்தின் அடிநிலையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.எமது நாட்டுமக்களின் அவசிய தேவைகளான குடிமை தொழில்களை செய்துவரும் இம்மக்களுக்கு நாட்டின் வளங்கள் உரிய முறையில் பங்கிடப்படுவதில்லை.குறிப்பாக தமிழ் சமூகத்தில் இன்னும் தீண்டாமை என்பது மறுசீரமைக்கப்பட்டு நவீன வடிவத்தில் இயங்கிக்கொண்டே இருக்கின்றது.வடமாகாணத்தில் அரசியல் தலைவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் உருவாகுவது மிகவும் திட்டமிடப்பட்டவகையில் மேட்டுக்குடிகளினால் தடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இந்த தலித் மக்களின் மேம்பாடுகருதி பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

*எமது தேசத்தின் பூர்வ குடிகளான வேடுவர் என்றழைக்கப்படும் வன சுதந்திர மனிதர்களின் வாழ்க்கை சூழலானது தற்போதைய நவீன உலகு முன்னிறுத்தும் அபிவிருத்தி, வளர்ச்சி, நாகரீகம் போன்ற செயல்பாடுகளினால் சீர்குலைக்கப்பட்டு வருகின்றது.எனவே இந்த பூர்வ குடிகளின் பூரண சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம் மூத்த குடிகளின் கெளரவம் கருதியும் வேடுவர்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
*வன்னிபிரதேசத்தில் வாழும் மலையக வம்சாவளி மக்கள் தென்னிலங்கையில் இடம்பெற்ற கடந்தகால இனக்கலவரங்களின் விளைவாக மலையகத்தில் இருந்து தமது உயிர் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தவர்களாகும்.கடந்தகால தமிழ் தலைமைகள் கொடுத்த நம்பிக்கையின் பெயரிலேயே மலையக மக்களின் வன்னி குடியேற்றங்கள் இடம்பெற்றன.ஆனால் இவர்கள் இன்றுவரை காணி மற்றும் வீட்டுவசதிகள் போன்றவற்றில் தமிழ் அதிகாரிகளினால் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகின்றார்கள்.யுத்த காலங்களிலும் பாரிய அவலங்களை இவர்கள் சந்திக்க நேர்ந்தது.யுத்தகால அரண்களாக இவர்கள் புலிகளால் பலியிட ப்பட்டார்கள்.
தற்போது தமிழ் தேசிய கட்சிகளும் இவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதை தவிர இவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை இன்றுவரை வழங்க மறுத்தே வருகின்றன.இந்நிலையில் சமூக பொருளாதார அரசியல் அனாதைகளாக வாழும் இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது அவசியமானதாகும் எனவே வன்னிபிரதேசத்தில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
5-முழு இலங்கை மக்களுக்குமான அதிகார பகிர்வு திட்டங்கள் ஏற்கனவே உள்ள மாகாண எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து பூரண சமஸ்டியை நோக்கி நகருவதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும்,அரசியல் தீர்வுகள் எதுவும் மக்களை இனரீதியாக கூறு போடுவதாக வடி வமைக்கப்படுதல் கூடாது என்பதோடு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதன் பல்லின ஐக்கியத்தையும்,இன ஒற்றுமையையும், பேணும் பொருட்டே வடிவமைக்கப்படவேண்டும்.
தேசிய இனபிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கமே புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அறிய முடிகின்றது. வடக்கு, கிழக்கில் நிலவுகின்ற தேசிய இன பிரச்சனை என்பது அதிகாரம் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும்.அதற்காகவே பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டன. அதேபோல தென்னிலங்கையிலும் அதிகாரம் பற்றிய கோரிக்கை நீண்டகாலமாக புரையோடிப்போய் கிடக்கின்றது. இதன்காரணமாகவே தென்னிலங்கை கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளாக இரண்டு தடவைகள் ஆயுத புரட்சிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.இந்த அதிகார போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்கள இளம் பராயத்தினரும் தம்முயிரை இழந்திருக்கின்றனர்.
எனவே இந்த அதிகார பகிர்வுக்கான கோரிக்கை என்பது தமிழர்களை அடிப்படையாக கொண்டதாக மட்டுமன்றி இலங்கைவாழ் முஸ்லிம்கள் மலையக மக்கள் போன்ற சிறுபான்மை மக்களினதும் ஒடுக்கப்படும் சிங்கள அடித்தட்டு மக்களினதும் ஒட்டுமொத்த கோரிக்கையாக வியாபித்து உள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய தலைமைகள் வலியுறுத்தும் "பூர்வீக கோட்பாடு" அடிப்படையிலான அதிகார பகிர்வு கோரிக்கையானது இங்கே பொருத்தப்பாடு அற்றதாகின்றது.காரணம் பூர்வீக கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்படும் அதிகார பகிர்வு கோரிக்கை இந்திய வம்சாவளிகளான மலையக தமிழர்களின் அதிகார பகிர்வு கோரிக்கையின் நியாயத்தன்மையை மறுக்கின்றது. இது சிங்கள இனவாத சக்திகளின் தலைமையில் செயல்படும் மலையக மக்களினதும் முஸ்லிம்களினதும் வாழ்வுரிமைக்கு எதிரான "சிங்கள பூமி புத்திர" கட்சிகளுக்கு நியாயப்பாட்டை வழங்குவதாகும்.
இந்நிலையில் குறிப்பிட்ட "இனத்துக்கான பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வு" என்பது சாத்தியமற்றதாகும். எனவே இலங்கைவாழ் பல்லின சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இன வரையில் அடிப்படையிலான அணுகு முறை பொருத்தப்பாடற்றதொன்றாகும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
எனவே
*அதிகார பகிர்வு சம்பந்தமான வரைபுகள் எதுவும் எந்த ஒரு இனத்தினதோ மொழியினதோ அடிப்படையில் உருவாக்கப்பட கூடாது என்றும்,
*முழு இலங்கை மக்களுக்குமான அதிகார பகிர்வு திட்டங்கள் ஏற்கனவே உள்ள மாகாண எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து பூரண சமஸ்டியை நோக்கி நகருவதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும்,
*வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து புதிய அதிகார அலகுகளை உருவாக்கும் கோரிக்கைகளை நாம் கடுமையாக நிராகரிப்பதோடு,.கிழக்கு மாகாணம் ஆனது தமிழ்,முஸ்லிம்,சிங்கள,பறங்கிய,மற்றும் பழங்குடி மக்களினதும் வாழ்விடம் என்பதை வலியுறுத்தி, கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தையும்,ஐக்கியத்தையும்,இன ஒற்றுமையையும், பேணும் பொருட்டே எந்த ஒரு அதிகார பகிர்வு முயற்சிகளும் வடிவமைக்கப்படவேண்டும் என கோருகின்றோம்.
*அதிகார பகிர்வு சம்பந்தமான மத்திய மற்றும் சுயாட்சி அலகுகளின் அதிகார நிரல்களில் தெளிவான வரையறைகள் உருவாக்கப்பட்டு,
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களையும் சுயாட்சி அலகுகளின் அதிகாரங்களையும் தாண்டிய இணைப்பு பட்டியல் முறைமை .முற்றாக நீக்கப்படவேண்டும் எனவும், எமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
வாவிக்கரை வீதி -மட்டக்களப்பு
தேசிய இனபிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கமே புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அறிய முடிகின்றது. வடக்கு, கிழக்கில் நிலவுகின்ற தேசிய இன பிரச்சனை என்பது அதிகாரம் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும்.அதற்காகவே பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டன. அதேபோல தென்னிலங்கையிலும் அதிகாரம் பற்றிய கோரிக்கை நீண்டகாலமாக புரையோடிப்போய் கிடக்கின்றது. இதன்காரணமாகவே தென்னிலங்கை கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளாக இரண்டு தடவைகள் ஆயுத புரட்சிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.இந்த அதிகார போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்கள இளம் பராயத்தினரும் தம்முயிரை இழந்திருக்கின்றனர்.
எனவே இந்த அதிகார பகிர்வுக்கான கோரிக்கை என்பது தமிழர்களை அடிப்படையாக கொண்டதாக மட்டுமன்றி இலங்கைவாழ் முஸ்லிம்கள் மலையக மக்கள் போன்ற சிறுபான்மை மக்களினதும் ஒடுக்கப்படும் சிங்கள அடித்தட்டு மக்களினதும் ஒட்டுமொத்த கோரிக்கையாக வியாபித்து உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட "இனத்துக்கான பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வு" என்பது சாத்தியமற்றதாகும். எனவே இலங்கைவாழ் பல்லின சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இன வரையில் அடிப்படையிலான அணுகு முறை பொருத்தப்பாடற்றதொன்றாகும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
எனவே
*அதிகார பகிர்வு சம்பந்தமான வரைபுகள் எதுவும் எந்த ஒரு இனத்தினதோ மொழியினதோ அடிப்படையில் உருவாக்கப்பட கூடாது என்றும்,
*முழு இலங்கை மக்களுக்குமான அதிகார பகிர்வு திட்டங்கள் ஏற்கனவே உள்ள மாகாண எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து பூரண சமஸ்டியை நோக்கி நகருவதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும்,
*வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து புதிய அதிகார அலகுகளை உருவாக்கும் கோரிக்கைகளை நாம் கடுமையாக நிராகரிப்பதோடு,.கிழக்கு மாகாணம் ஆனது தமிழ்,முஸ்லிம்,சிங்கள,பறங்கிய,மற்றும் பழங்குடி மக்களினதும் வாழ்விடம் என்பதை வலியுறுத்தி, கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தையும்,ஐக்கியத்தையும்,இன ஒற்றுமையையும், பேணும் பொருட்டே எந்த ஒரு அதிகார பகிர்வு முயற்சிகளும் வடிவமைக்கப்படவேண்டும் என கோருகின்றோம்.
*அதிகார பகிர்வு சம்பந்தமான மத்திய மற்றும் சுயாட்சி அலகுகளின் அதிகார நிரல்களில் தெளிவான வரையறைகள் உருவாக்கப்பட்டு,
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களையும் சுயாட்சி அலகுகளின் அதிகாரங்களையும் தாண்டிய இணைப்பு பட்டியல் முறைமை .முற்றாக நீக்கப்படவேண்டும் எனவும், எமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
வாவிக்கரை வீதி -மட்டக்களப்பு
0 commentaires :
Post a Comment