2/24/2016

விசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.


ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இந்த நல்லாட்சி அரசு  ஜோசப் பரராஜசிங்கம்  கொலையை மட்டுமே குறிவைத்து சந்திரகாந்தனை கைது செய்தது.

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக வரலாற்றில் முதல் முறையாக எழுந்து நின்ற சந்திரகாந்தனின் அரசியலை அழித்தொழிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்தை ஈடேற்ற அவரை கைது செய்தாலும் அந்த வழ க்கை விசாரணைக்கு எடுக்க முடியாமல் அரசு பின்னடித்து வருகின்றது.

விசாரணை என்று வந்தால் எவ்வித ஆதாரமுமின்றி சோடிக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடியாவது நிச்சயமாகும்.அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் தமது பழிவாங்கும் அரசியல் அம்பலமாகி விடுமென்பதாலும் . விசாரணைகளின்றி,பிணையுமின்றி
சந்திர காந்தன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டார்.
.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.
இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரி,
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

0 commentaires :

Post a Comment