இஸ்லாம் குறித்த எதிர்மறையான புரிதல்களை மாற்றும் நோக்கில் இங்கு பிரிட்டனில் உள்ள எண்பதுக்கும் அதிகமான பள்ளிவாசல்களில் முஸ்லிம் அல்லாதவர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வை பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இஸ்லாமியவாத அமைப்புக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது, அந்த மதத்தின் மீதான எதிர்ப்புணர்வுக்கு காரணமாகி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக இஸ்லாமோபோபியா என்று கூறப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
மசூதிகள் இஸ்லாம் குறித்த ஒரு அறிமுகத்தையும், தொழுகையை பார்ப்பதற்கான வாய்ப்புக்களையும் அல்லது தேனீரையும் வழங்கும்.
0 commentaires :
Post a Comment