2/29/2016

கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி அமைப்பின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பிரேரணைகளை

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக மட்டக்களப்பில் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் தனது அமர்வுகளை மேற்கொண்டது. அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தனி நபர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். சென்ற 26ஆம் திகதிய அமர்வுகளில் கலந்து கொண்ட கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியும் தனது  அமைப்பின் சார்பில் தங்களின் பிரேரணைகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர். 

கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி சமர்ப்பித்துள்ள பிரேரணைகளில் அரசியல் அமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மாற்று யோசனைகளை பல முன் மொழியப்பட்டிருகின்றன. கிழக்கிலங்கையின் தனித்துவமான பல்லின , பல்சமய , பல மொழி பேசும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு பேணப்படல்  வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் மேலதிக அதிகாரங்களை சமூக நீதி மனித உரிமைகளின் அடிப்படையில் வழங்கி இப்போதுள்ள மாகாண சபை அமைப்பு பலப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் தங்களின் பிரேரணைகளில் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி வற்புறுத்தி உள்ளது.
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் பிரேரணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வண்ணம்
எஸ். ஏ . ரிஸ்வி
ஊடக செயலாளர்
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி


The Secretary
Public Representations Committee on Constitutional Reforms,
Staples Street,
Colombo 2
Email: constitutionalreforms@gmail.com
17th February 2016
Dear Sirs,
PROPOSAL FOR CONSTITUTIONAL REFORMS – SUBMITTED TO PRCCR ON 26th February 2016 AT Batticaloa District Secretariat
We understand that you are accepting proposals from the general public. In line with your open invitation we, a group of Muslims from the eastern province, believe that our political aspirations are distinct and they should be taken into account in the process of your consultation aiming at reforming the existing constitution.
We are a group of Muslims from the eastern Province of Sri Lanka from diverse backgrounds, occupations and affiliations who have in common a strong commitment to social justice and universal human rights. We come together in the belief that the broad spectrum of opinion among the Muslims population of the Eastern Sri Lanka is not reflected by national parties including the Muslim political parties which claim authority to represent the Muslim community as a whole. The non contiguous Muslims towns and villages are centre of coexistence and social cohesion. We further believe that individuals and groups within all communities should feel free to express their views on any issue of public concern without incurring accusations of disloyalty by those political parties and institutions with vested interest.
We have therefore resolved to promote the expression of alternative Muslims’ voices, particularly in respect of the grave situation in the North and the East of Sri Lanka, which threatens the future of the Muslims, the Tamils and the Sinhalese of the eastern Province as well as the stability of the whole region. We are guided by the following principles:
1. Human rights are universal and indivisible and should be upheld without exception.
2. Muslims, Tamils and Sinhalese alike have the right to peaceful and secure lives.
3. Peace and stability require the willingness of all parties to the conflict to comply with international law.
4. There is no justification for any form of racism in any circumstances.
5. The East is an ideal province for multi ethnic existence and replica of the rest of Sri
Lanka.
PREAMBLE
Whilst welcoming the Public Representations, we propose that the Sri Lankan State shall be a single secular nation-state, comprising of nine provinces. The resolution to the ethnic conflict should ensure that there should be an effective anti-discrimination legislation and mechanisms to challenge discrimination at all levels to uphold Constitutional provisions. This should be accompanied by special measures where minorities should have judicial protection and remedy as citizens of the country.
All communities, including the smallest and the most marginalized minorities, have a right to participate in public and political affairs, electoral systems and methods of governance.
To ensure accountability, there should be an effective and an accessible consultative and complaints mechanisms for all communities, allowing men and women a space to
voice their concerns. These may include consultative bodies, inspection panels on development projects and Ombudspersons. It is imperative and urgent that independent Muslim voices find a coherent and consistent way of asserting themselves on these and other issues of national concerns.
We believe that any divisions or formation of separate units of administration in the Eastern Province based on ethnicity is detrimental to the common interest , coexistence and community cohesion.We believe the numbers of local authorities with more devolved power and establishment of more Grama Sevaka areas or Koralai Pattu and other form of divisions based on the ethnic line are adequate to safeguard the interest of the community which is predominant in the specific Town or village or Grama Sevaka division.
As we observe that the proposals are invited in respect of wide range of issues we tend to limit our concerns to some aspect of constitutional reforms subject to the status quo of the people of the Eastern province.
Form of Government
1. Bicameral legislature bodies.
2. All legislative powers shall be vested in the Parliament but the legislature shall be approved by the majority votes of the Senate, like in the United Kingdom.
3. The central government shall be the Parliament of Sri Lanka.
4. The Senate members shall be elected by the members of the Provincial legislatures and each province shall elect one member from the seven provincial councils to be the representative of the provinces in the Senate. The North and eastern provinces shall elect two representatives from the Tamil and Muslim communities each. The senate members shall be a permanent inhabitants of that province for which he shall be chosen.
5. When vacancies happen in the Senate from any province, the Chief Executive of the Province (Chief Minister) shall invite nominations for elections to fill such vacancies. The chief of legislature of the province may make temporary appointments until the people fill the vacancies by elections as the legislature may direct.
6. The President shall be elected by the people by an election
7. The prime minister shall be elected by the people by an election (The election for the President and the Prime minister shall be held simultaneously
8. The executive powers of the President shall be delegated from the Parliament and the Senate.
9. The President shall act on the advice of the Prime minister, and the cabinet ministers and the members of Senate.
10. The vice president shall be President of the Senate.
11. The vice president shall be elected by the parliament and he shall be a member of either from the Tamil or Muslim communities.
12. The President shall have power , by and with the advice and consent of Senate , to make treaties and legislation affecting provincial councils and in case of disagreement two thirds of the Senators concur or approve of such treaties and legislation or any other matter of national interest.
13. The President of Sri Lanka, shall hold office during the terms of five years, and, together with the Vice president , chosen for the same term.
14. Sinhala and Tamil shall be the national languages and English language shall be a link language.
15. The constitution shall ensure secularism and protection of all religions alike.
ASYEMATRICAL POWER
1. The Northern and Eastern provincial councils shall be entitled to appoint a committee, vested with the power of making decisions to deal with the land disputes, such as settlement, re-settlement, allocation of state land, demarcation of new Koralai Pattu , GS divisions. However any major administrative divisions such as Pradeshiya Sabas , Divisional secretariat etc, shall be decided by the Central Government.
1. A regional WAKF Board (Islamic Trust) shall be instituted to deal with all the matters relating to Mosques in the region (Eastern Province).
2. A Board of Qazis , (Appellant authority ) shall be instituted to deal with the appeals from the Qazis of the region (Provinces) shall be instituted in the eastern Province to hear the appeals against the decisions of the Qazis in the region.
3. A Buddhist religious Order similar to that of Malwatta or Asgiriya shall be instituted in Ampara to deal with the Buddhist communities religious matters in the regions.
4. Hindu Mahasaba and Christian Religious Order shall be instituted separately for the Eastern Province.
We would be obliged if you would consider our proposal as a matter of discussion in the consultation.
Please acknowledge receipt of our information documents by post and or via our email address: info@-itech.com
We look forward to hearing to from you
Yours faithfully,
S.A.Risvy
Assistant Secretary
Eastern Muslim Front (EMF)
»»  (மேலும்)

2/28/2016

நாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வாழ்க ஐ.பி.சியின் தமிழ்பணி.

சாதி வெறி கொண்டலையும் அடங்க தமிழர்களின் தமிழ் தேசிய முகமாக அண்மையின் தன்னை வெளிக்காட்டியவர் செம்பியன் பற்று துரை ரெத்தினம்.தமிழக இலக்கிய அரசியல் பரப்பில் நீண்டகாலமாக செயல்பட்டுவரும் தலித் போராளி தோழர் ரவிக்குமார் அவர்களை "பற நாயே" என்று விழித்ததன் ஊடாக  துரை ரெத்தினம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தமிழ்தேசியத்துக்கு அவர் ஆற்றிவரும் பணிக்காக வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுக்க ஐ.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள்பரவலாக எழுந்தன.


ஆனாலும்
சமூக ஆர்வலர்களின் இந்த கோரிக்கைகளை அவமதித்து  "மிக சரியான மாந்தரை இந்த இடத்திலே மதிப்பளித்து இருக்கிறோம் என்கின்ற பெருமையோடு" என விழாவில் அழுத்தம் திருத்தமாக விழித்து குறிப்பிட்டு  ஐ.பி.சி நிறுவனம் தனது விருதினை அவருக்கு வழங்கியுள்ளது.

ஆமாம் ,நாம் அடங்கா தமிழர்கள் சாதி வெறி அடங்கா தமிழர்கள் வாழ்க ஐ.பி.சியின் தமிழ்பணி.

https://www.facebook.com/yogakumark/videos/10204587596489700/?hc_location=ufi
»»  (மேலும்)

2/27/2016

சுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோம். மன்னிப்புக் கோரும்வரை அவரது முகத்தில் காறி உமிழ்வோம்.- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன்

செம்பியன்பற்றைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுவிஸ்வாழ் இரா.துரைரத்தினத்தின் சாதி வெறியை சாடுவோம். மன்னிப்புக்
கோரும்வரை அவரது முகத்தில் காறி உமிழ்வோம்--.

*கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன்


ஈழத் தமிழர்களின் சார்பில் துரைரதினத்தினத்தின் இழி செயலுக்குக்கும் சொல்லுக்குமாக ஈழத் தமிழர்களின் தோழர் ரவிக்குமாரிடம் தலை பணிந்து மன்னிப்புக்கோருகின்றேன்.
*
ஈழத் தமிழருக்காக என்றும் வாழும் விடுதலைச் சிறுத்தைகளிடத்தும் உலக தமிழினத்தின் முக்கிய தலைவரான தோழர் திருமாவளவனிடத்தும் ஈழத் தமிழர் சார்பில் மன்னிப்புக் கோருகிறேன். ...
*
தன் இழி செயலுக்கு துரைரத்தினம் நிபந்தனையற்ற மன்னிப்புகோரவேண்டும். அதுவரைக்கும் ஐ.பி.சி,போன்ற தமிழ் ஊடக நிறுவனங்கள் சாதிவெறி கூச்சலிட்ட
துரைரத்தினத்தை பகிஸ்கரிக்க வேண்டுமென கோருகிறேன். மன்னிப்புக் கோரும் வரைக்கும் உலக தமிழர்கள் சுவிசில் வாழும் துரைரத்தினத்துக்கு சாதி வெறியைக் கண்டித்து எதிர்ப்பை ஹொடர்ந்து தெரிவிக்கும் வண்ணம் வேண்டுகிறேன். என அவரது முகனூலில் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்”

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ் ravikumar





இராமசாமி துரைரட்ணத்திற்கும் ரவிக்குமார் அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முகநூல் உரையாடலின்போது இராமசாமி துரைரட்ணம் அவர்கள் ரவிக்குமாரை சாதிப்பெயர் கூறி இழிவுபடுத்திய செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் எதுவாகவும் இருக்காலம். ஈழத் தமிழ் சமூகம் உருத்தரிரமூர்த்தி சேரன் போன்றவர்களைத்தான் நம்பி இருக்கின்றது எனும் தேசியவாதக் கருத்து நிலையில் தோழர் ரவிக்குமார் நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணங்களும் எதுவாகவும் இருக்கலாம். அவை வெறும் கருத்தியல் சார்ந்த ஒரு நிலைப்பாடு.

ஆனால் இவ்வாறு வெழிப்படையாக, பகிரங்கமா பொதுவெளியில்  சாதிப் பெயர் கூறி  இழிவுபடுத்தும் துணிவு இராமசாமி துரைரட்ணத்திற்கு வருகிறது என்றால் இதுதானா இவரது ‘சமூக சிந்தனை’! இந்த சாதிய மனநிலையை பாதுகாக்கும் இவரது சமூகப் பணிக்காகவா “வாழ்நாள் சாதனையாளர்” எனும் விருது வழங்கப்பட இருக்கிறது.  சாதியப் பெயர் சொல்லி இழிவுபடுத்துவதென்பது தூசண வார்த்தைப் பிரயோகத்தை மிஞ்சிய வல்லாதிக்கக் குறியீடாக சாதிய மேலாதிக்க மனநிலைகள் கருதிவருகின்றது.
இப்படியான  சாதிய மேலாதிக் மனிநிலை கொண்ட இராமசாமி துரைரட்ணம் மேற்கொண்ட பணிகள் எதுவாக இருப்பினும் அவை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவையாகும். இச்செயலை அலட்சியப்படுத்தி ஐ.பி.சி. ஊடக நிறுவனம் இவருக்கு வாழ்நாள் விருது வழங்குமாயின் எதிர்காலத்தில் ஐ.பி.சி. ஊடக நிறுவனத்தின் மீதான சமூக அக்கறைகளும் கேள்விக்குட்படுத்த நேரிடும் என்பதை நாம் வலியுறுத்த வரும்புகின்றோம்.
இந்த சம்பவமும், இதற்கான கண்டனங்களும் எமக்கு புதிதல்ல. எமது தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காகவும், அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவதாகவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் அயராது வியர்வை சிந்தி உழைத்து வருவதாக கூறும் அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களில் சிலர் தொடர்ச்சியாக இவ்வாறு பிறரை சாதிப் பெயர் கூறி இழிவு படுத்துவதை நாம் அறிந்திருக்கிறோம்.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் தொடர்ந்து கண்டித்தும் வருகின்றோம்.
27-02-2016
»»  (மேலும்)

நிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' தினகதிர் இரா. துரைரட்ணம் சாதி பெயரால் இழிவுபடுத்தினார்




நிறப்பிரிகை ரவிக்குமாரை 'ஊடகவியலாளர்' இரா. துரைரட்ணம் சாதி பெயரைக் குறிப்பிட்டு முகநூல் விவாதமொன்றில் திட்டியமை குறித்துக் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதற்காகத் துரைரட்ணம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன 



சாதியைச் சாடல்  என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.



ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும்  எனது தனிமையையும் மறக்க இயலாது.

இன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை  என்பதாலும் நாம் இது விடயத்தில் கண்டும் காணாது இருக்க முடியாது.

ரவிக்குமார் முகநூலில் பதிவு செய்திருந்த “இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்” என்கிற பதிவொன்றிற்கு கீழ் நடந்த உரையாடலில் பின்னூட்டமிட்ட துரைரட்னம் “பற நாயே” என்று மோசமாக சாதியத்தை கக்கியிருக்கிறார்.

ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் அதி கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச  ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது. அப்படிப்பட்ட வசவுகளில் பெண்ணுருப்பயையும், தாயையும் சாடி புண்படுத்தும் வசவுகள் தூசனங்களாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. அதற்கடுத்தபடியாக பெரும் பாத்திரம் வகிப்பது சாதிய அடையாள வசவுகள் தான். எப்படி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள பெண்ணாதிக்க சொல்லாடல்கள் ஆணாதிக்கத்துக்கான கருவிகளில் ஒன்றாக இருக்கிறதோ அது போல தான் சாதியாதிக்கத்தின் நிலைப்புக்கும் சாதிய வசவுகள் ஒரு முக்கியமான காரணியாக இருக்கின்றது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் இன்று ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.

கீழ்சாதி வெறுப்பு கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும்.  “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

உயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும்,  அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization)  என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.

சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயனிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது, தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.

எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.

இதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது. 

சக்கிலியர், பறையர் பள்ளர், நளவர் போன்ற சாதிய அடையாளங்கள் இன்று மற்றவர்களை இகழத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துரைரத்தினத்தை மன்னிப்பு கோரச்சொல்லி சேரன் போன்றவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட சற்றும் குற்ற உணர்யிRamasamy Thurairatnamல்லாமல் துணிச்சலுடன் தொடர்ந்து வம்பிழுதத்தை குறித்த விவாதத்திலிருந்து காணக் கூடியதாக இருந்தது. அப்படி என்றால் அவருக்கு போதிய அளவு நமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் கட்டாயம் பதிவு செய்து அவரை புறக்கணிப்பதும் புறக்கணிக்கச் செய்வதும் தேவையாக இருக்கிறது தோழர்களே.

-என்.சரவணன்

நன்றி  - நமது மலையகம்


அரசியல் விடுதலைக்கும் சமூக நீதிக்குமாகப் போராடும் ஈழத் தமிழர் சமூகம் இத்தகைய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும்.
அவர் மன்னிப்புக் கேட்கத் தவறும் பட்சத்தில் அவருக்கு நாளை (27.02.2016) சுவிஸில் I.B.C. நிறுவனம் நடாத்தும் விழாவில் வழங்கப்படவிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை I.B.C. மீளப்பெற வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்காத நிலையில் விருது வழங்கப்படுமாக இருந்தால் அது ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் அவமானமானதொரு விடயமாக இருக்கும். இக் கோரிக்கையை கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட தமிழ் மக்கள் கூட்டாக I.B.C. நிறுவனத்திடம் முன்வைக்க வேண்டும்
»»  (மேலும்)

2/26/2016

இதைக்கூட செய்யாமல்

வடக்கு மாகாண சபையின் கை விரிப்பு!
தாய்லாந்தில் கடந்த 20ம் திகதி நடைபெற்ற 100 கிலோ மீற்றர் சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்க வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட
வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த குமார் நவநீதன்,
...
தனக்கு பயிற்சிக்கும், பயணச் செலவுக்கும் உதவுமாறு
கோரி ஒரு மாதத்திற்கு முன்பே வடக்கு மாகாண சபையின் கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத் துறை அமைச்சுக்கு கடிதம் எழுதியும்,
இவருக்கு உதவ அந்த அமைச்சு முன்வரவில்லை என்றே தெரிய வருகிறது.
பின்னர,; இவர் தனிப்பட்ட முறையில் பலரிடமிருந்து பணம் சேகரித்து தனது பயணத்தை மேற்கொண்டு, போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளார்.
அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்தப் போட்டிக்கு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பேரில் ஒரே தமிழர் இவர்.
மாகாண அமைச்சு இவருக்கு உதவியிருக்க வேண்டும்.
»»  (மேலும்)

இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள் -தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -

இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு யோசனைகள்
-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -


இலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரையும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம்.அத்தோடு இந்த புதிய யாப்பு ஆனது எமது தேசத்தின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் முழுமையான உறுதிப்பாட்டினை வழங்குவதொன்றாக இருக்கவேண்டுமென்றும்,யாப்பு மாற்றத்தின் ஊடாக உருவாகும் புதிய குடியரசானது  எம்தேசத்து பிரசைகள் அனைவரதும்அமைதியையும் சமாதானத்தையும்,சமத்துவத்தையும்,  சுய கெளரவத்தையும் நிலைநாட்ட வழிகோல வேண்டுமென்றும் வாழ்த்துகின்றோம்.  

அந்த வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் வெற்றிக்கு  எமது சார்பிலான சில ஆலோசனைகளையும்,வேண்டுகோள்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.

1-இலங்கையை ஒரு மத சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.
                                                                                                                                     இலங்கையானது சுமார் மூவாயிரம் ஆண்டுகால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றினைகொண்டிருப்பதோடு,சிங்களவர்,தமிழர்,சோனகர்,பறங்கியர்,
வேடுவர்,போன்ற பல்லினங்களின் கூட்டு வாழ்வினாலேயே   கட்டியமைக்கப்பட்ட வரலாற்று தேசமாக உள்ளது.எனவே  இன,மதம்,மொழி  கடந்து  அதன் பிரசைகள் ஒவ்வொருவரும் இலங்கையர்களாக  மதிக்கப்படுவதற்கு அரசியல் யாப்பானது அனைவரையும் சமத்துவம் மிக்க பிரசைகளாக அங்கீகரிப்பது அவசியமாகும்.அந்தவகையில்  குறித்த ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ மொழிக்கோ அரசியல் யாப்பின் ஊடாக  விசேட அந்தஸ்துகள் வழங்கப்படுதல் ஏனைய பிரசைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்கும்.ஆகவே இந்த புதிய யாப்பானது பெளத்த மதத்துக்கு விசேட அந்தஸ்தை வழங்கிய 1978ல் உருவாக்கப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பிலுருந்து விடுபட்டு இலங்கையை ஒரு மத சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தல் வேண்டும் என கோருகின்றோம்.

 2-தேசிய கொடியானது இனங்களின் அடையாளங்களை பிரதிநிதித்துவ படுத்தும் ஒன்றாக இல்லாது பொதுவான அடையாளமொன்றை கொண்டதாக மீள உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள சிங்ககொடியானது தனியொரு இனத்தை முன்னிறுத்தி பிரதிபலிப்பதாக இருப்பதனாலும்,அதனை மாற்றியமைத்து ஏனைய இனங்களின் அடையாளங்களையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இனவாத அரசியல் அணிதிரட்டல்களுக்கு மட்டுமே காலத்துக்கு காலம் பயன்பட்டு வருவதாலும், தேசிய கொடிஎன்பது இனங்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்க அடிகோலிடக்கூடாது என்பதாலும், தேசியக்கொடியில் எவ்வித இன அடையாளங்களும் இல்லாதவாறு முழுமையாக மாற்றியமைக்கப்படவேண்டும்.எனவே தேசிய கொடியானது இனங்களின் அடையாளங்களை பிரதிநிதித்துவ படுத்தும் ஒன்றாக இல்லாது எமது தேசத்தின் பொதுவான அடையாளமொன்றை கொண்டதாக மீள உருவாக்க படவேண்டும்.

3-உள்ளுராட்சி மன்றங்களில் 50வீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த  சபைகளில் 33வீதமும் இடம்பெறும் வண்ணம் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பை  புதிய அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்.


எமது சமூகத்தில் ஏறக்குறைய சரிபாதியாக பெண்கள் உள்ளனர்.குடும்ப உழைப்பில் 90வீதம் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.ஆனால் பொருளாதாரரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெண்களின் தீர்மானிக்கும் சக்தி முழுமையாகவே ஆண் வர்க்கத்தால் சுரண்டப்பட்டே வருகின்றது.மேலும் கடந்தகால உள்நாட்டு யுத்தத்தால் மக்கள் மீது சுமத்தம்பட்டிருக்கும் குடும்ப சுமைகளில் பெரும்பகுதி  பெண்களினாலேயே சுமக்கப்படுகின்றது.எனவே கலை,கலாசார,அரசியல்,சமூக ,கல்வி,மற்றும் பொருளாதார விடயங்களில் தீர்மான சக்திகளாக பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்யும்பொருட்டு -உள்ளுராட்சி மன்றங்களில் 33வீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த  சபைகளில் 50வீதமும் இடம்பெறும் வண்ணம் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பை   புதிய அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்.

4-சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்

*பல நூற்றாண்டு காலமாக சாதிரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுவரும்  தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இன்றுவரை சமூகத்தின் அடிநிலையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.எமது நாட்டுமக்களின் அவசிய தேவைகளான குடிமை தொழில்களை செய்துவரும் இம்மக்களுக்கு நாட்டின் வளங்கள் உரிய முறையில் பங்கிடப்படுவதில்லை.குறிப்பாக தமிழ் சமூகத்தில் இன்னும் தீண்டாமை என்பது மறுசீரமைக்கப்பட்டு நவீன வடிவத்தில் இயங்கிக்கொண்டே இருக்கின்றது.வடமாகாணத்தில் அரசியல் தலைவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் உருவாகுவது மிகவும் திட்டமிடப்பட்டவகையில் மேட்டுக்குடிகளினால் தடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இந்த தலித் மக்களின் மேம்பாடுகருதி  பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

*எமது தேசத்தின் பூர்வ குடிகளான வேடுவர் என்றழைக்கப்படும் வன  சுதந்திர மனிதர்களின்  வாழ்க்கை சூழலானது  தற்போதைய நவீன உலகு முன்னிறுத்தும் அபிவிருத்தி, வளர்ச்சி, நாகரீகம்  போன்ற செயல்பாடுகளினால்  சீர்குலைக்கப்பட்டு வருகின்றது.எனவே இந்த பூர்வ குடிகளின் பூரண சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம் மூத்த குடிகளின் கெளரவம் கருதியும் வேடுவர்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

*வன்னிபிரதேசத்தில் வாழும் மலையக வம்சாவளி மக்கள் தென்னிலங்கையில் இடம்பெற்ற கடந்தகால இனக்கலவரங்களின் விளைவாக மலையகத்தில் இருந்து தமது உயிர் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தவர்களாகும்.கடந்தகால தமிழ் தலைமைகள் கொடுத்த நம்பிக்கையின் பெயரிலேயே மலையக மக்களின் வன்னி குடியேற்றங்கள்  இடம்பெற்றன.ஆனால் இவர்கள் இன்றுவரை காணி மற்றும் வீட்டுவசதிகள் போன்றவற்றில் தமிழ் அதிகாரிகளினால் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகின்றார்கள்.யுத்த காலங்களிலும் பாரிய அவலங்களை இவர்கள் சந்திக்க நேர்ந்தது.யுத்தகால அரண்களாக இவர்கள் புலிகளால் பலியிட ப்பட்டார்கள்.

தற்போது தமிழ் தேசிய கட்சிகளும் இவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதை தவிர இவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை இன்றுவரை வழங்க மறுத்தே வருகின்றன.இந்நிலையில்  சமூக பொருளாதார அரசியல் அனாதைகளாக வாழும் இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது   அவசியமானதாகும் எனவே வன்னிபிரதேசத்தில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பிரதிநிதித்துவங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

5-முழு இலங்கை மக்களுக்குமான அதிகார பகிர்வு  திட்டங்கள் ஏற்கனவே உள்ள மாகாண  எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகளின்  அதிகாரங்களை மேலும் அதிகரித்து பூரண சமஸ்டியை நோக்கி நகருவதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும்,அரசியல் தீர்வுகள்  எதுவும் மக்களை இனரீதியாக கூறு போடுவதாக வடி வமைக்கப்படுதல் கூடாது என்பதோடு,  குறிப்பாக   கிழக்கு மாகாணத்தில் அதன் பல்லின ஐக்கியத்தையும்,இன ஒற்றுமையையும், பேணும் பொருட்டே  வடிவமைக்கப்படவேண்டும்.

தேசிய இனபிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கமே  புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அறிய முடிகின்றது. வடக்கு, கிழக்கில் நிலவுகின்ற தேசிய இன பிரச்சனை என்பது அதிகாரம் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும்.அதற்காகவே பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டன. அதேபோல தென்னிலங்கையிலும் அதிகாரம் பற்றிய கோரிக்கை நீண்டகாலமாக புரையோடிப்போய் கிடக்கின்றது. இதன்காரணமாகவே தென்னிலங்கை கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளாக இரண்டு தடவைகள் ஆயுத புரட்சிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.இந்த அதிகார போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான சிங்கள இளம் பராயத்தினரும்  தம்முயிரை இழந்திருக்கின்றனர்.

எனவே இந்த அதிகார பகிர்வுக்கான கோரிக்கை என்பது   தமிழர்களை அடிப்படையாக கொண்டதாக மட்டுமன்றி இலங்கைவாழ் முஸ்லிம்கள் மலையக மக்கள் போன்ற சிறுபான்மை மக்களினதும் ஒடுக்கப்படும் சிங்கள அடித்தட்டு  மக்களினதும் ஒட்டுமொத்த கோரிக்கையாக வியாபித்து  உள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய தலைமைகள் வலியுறுத்தும் "பூர்வீக கோட்பாடு" அடிப்படையிலான அதிகார பகிர்வு கோரிக்கையானது  இங்கே பொருத்தப்பாடு அற்றதாகின்றது.காரணம் பூர்வீக கோட்பாட்டின்  அடிப்படையில் முன்வைக்கப்படும் அதிகார பகிர்வு கோரிக்கை இந்திய வம்சாவளிகளான மலையக தமிழர்களின் அதிகார பகிர்வு கோரிக்கையின் நியாயத்தன்மையை மறுக்கின்றது. இது சிங்கள இனவாத சக்திகளின் தலைமையில் செயல்படும் மலையக மக்களினதும்  முஸ்லிம்களினதும்   வாழ்வுரிமைக்கு எதிரான "சிங்கள பூமி புத்திர" கட்சிகளுக்கு நியாயப்பாட்டை வழங்குவதாகும்.
 
இந்நிலையில் குறிப்பிட்ட "இனத்துக்கான பிரதேசங்களை  அடிப்படையாக கொண்ட அதிகார பகிர்வு" என்பது சாத்தியமற்றதாகும். எனவே இலங்கைவாழ் பல்லின சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு இன வரையில் அடிப்படையிலான அணுகு முறை பொருத்தப்பாடற்றதொன்றாகும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.


எனவே
*அதிகார பகிர்வு சம்பந்தமான வரைபுகள் எதுவும் எந்த ஒரு இனத்தினதோ மொழியினதோ அடிப்படையில் உருவாக்கப்பட கூடாது என்றும்,

*முழு இலங்கை மக்களுக்குமான அதிகார பகிர்வு  திட்டங்கள் ஏற்கனவே உள்ள மாகாண  எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபைகளின்  அதிகாரங்களை மேலும் அதிகரித்து பூரண சமஸ்டியை நோக்கி நகருவதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும்,

*வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து புதிய அதிகார அலகுகளை உருவாக்கும் கோரிக்கைகளை நாம் கடுமையாக நிராகரிப்பதோடு,.கிழக்கு மாகாணம் ஆனது தமிழ்,முஸ்லிம்,சிங்கள,பறங்கிய,மற்றும் பழங்குடி மக்களினதும் வாழ்விடம் என்பதை வலியுறுத்தி, கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தையும்,ஐக்கியத்தையும்,இன ஒற்றுமையையும், பேணும் பொருட்டே  எந்த ஒரு அதிகார பகிர்வு முயற்சிகளும் வடிவமைக்கப்படவேண்டும் என கோருகின்றோம்.

*அதிகார பகிர்வு சம்பந்தமான மத்திய மற்றும் சுயாட்சி அலகுகளின் அதிகார நிரல்களில் தெளிவான வரையறைகள் உருவாக்கப்பட்டு,
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களையும் சுயாட்சி அலகுகளின் அதிகாரங்களையும் தாண்டிய   இணைப்பு பட்டியல் முறைமை .முற்றாக நீக்கப்படவேண்டும் எனவும்,  எமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியாகிய நாம்  கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
        வாவிக்கரை வீதி -மட்டக்களப்பு
»»  (மேலும்)

மாணவர்களுக்கு உடை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தற்போது அந்த உத்தரவை வாபஸ் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது

»»  (மேலும்)

2/24/2016

'வேட்டையாட சட்ட அங்கீகாரம் வேண்டும்': கிழக்கு ஆதிவாசிகள்



இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், தங்களின் வேட்டையாடும் உரிமைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் வாழும் ஆதிப் பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் வாழும் பிரதேச காடுகளில் வேட்டையாடுதற்கும் வேட்டையாடிய இறைச்சி உணவை சேமித்து வைப்பதற்கும் புதிய அரசியல் சாசனம் மூலம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறிவதற்கான அமர்வு நேற்று செவ்வாய்க் கிழமையும் இன்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதிவாசி பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்று தமது சமூகம் சார்ந்த சில யோசனைகளை முன்வைத்தனர்.
»»  (மேலும்)

விசாரணைகளின்றி,பிணையுமின்றி சந்திர காந்தன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.


ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன சம்பந்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இந்த நல்லாட்சி அரசு  ஜோசப் பரராஜசிங்கம்  கொலையை மட்டுமே குறிவைத்து சந்திரகாந்தனை கைது செய்தது.

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக வரலாற்றில் முதல் முறையாக எழுந்து நின்ற சந்திரகாந்தனின் அரசியலை அழித்தொழிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்தை ஈடேற்ற அவரை கைது செய்தாலும் அந்த வழ க்கை விசாரணைக்கு எடுக்க முடியாமல் அரசு பின்னடித்து வருகின்றது.

விசாரணை என்று வந்தால் எவ்வித ஆதாரமுமின்றி சோடிக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடியாவது நிச்சயமாகும்.அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் தமது பழிவாங்கும் அரசியல் அம்பலமாகி விடுமென்பதாலும் . விசாரணைகளின்றி,பிணையுமின்றி
சந்திர காந்தன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டார்.
.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.
இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரி,
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.
»»  (மேலும்)

2/22/2016

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ மரணமடைந்தார்


லகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ(84வயது) 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில் புற்றுநோயால் மரணமடைந்தார். 1980களின் மத்தியிலிருந்து தமிழின் இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும், கல்விப் புலத்திலும் அமைப்பியல், குறியியல் ஆகிய சிந்தனைத் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமும் விவாதிக்கப்பட்டு சிந்தனைத் துறை மாற்றங்களை விளைவித்துவந்தன. அதன் ஒரு பகுதியாக உம்பர்டோ ஈக்கோவின் சிந்தனைகளும் படைப்புலகமும் அறிமுகப்படுத்தப்பட்டன.
»»  (மேலும்)

போக்கிரிகளின் புகலிடம் கூட்டமைப்பு

erosதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,
இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உண்மையான அடையாளாம். அதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற முடியும். அதனால்தான் ஈரோஸ் மறுசீரமைப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியில் பயணத்தை மேற்கொளவதென முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அல்ல எந்தப் பேரவையாலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

லண்டனில் எதற்கடா மாவீரர் துயிலுமில்லம்?

(தமிழீழ வியாபாரம் செய்யும் பண முதலைகளால் பல கோடி ரூபாய்கள் முதலீட்டில் லண்டனில் உருவாக்கப்பட இருக்கும் மாவீரர் துயிலுமில்லம் குறித்த இந்த பதிவு ஜெயகுமார் சாந்தீபன்என்னும் ஒரு முகனூல் நண்பரின் ப்பக்கத்தில் இருந்து மீள் பிரசுரமாகின்றது.)


தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.
எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னாள் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை.


யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவியும் முன்னாள் போராளியே!
இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு???????????
இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு? என்றால் இவர்களின் தற்கொடைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இவர்களின் தற்கொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துபவர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு கோடி கோடியாய் செலவு செய்து மாவீரர்தினம் செய்பவபர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்து போராட்டத்தை நடத்துவதற்கு பணம் வழங்கியவர்களே புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணத்தை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கும் பிணாமிகளே நீங்கள் அனைவருமே இவர்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பானவர்கள்.


போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்தவர்களே, போராளிகளின் தியாகத்தால் பதவிவகித்தவர்களே போராளிகளின் தியாகத்தால் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே, ஒரு கனம் சிந்தியுங்கள்.


லண்டனில் மாவீரர் துயிலுமில்லம் அமைக்க பல லச்சம் பணம் பல வளிகளால் சேர்க்கப்பட்டது.இந்தப்பணங்களை சேர்ப்பவர்களே விடுதலைப்புலிகள் அமைப்பின் பெரும் தொகை பணத்தை சூறையாடி கள்ளர்கள் புலிகளின் பணத்தில்,ஒன்றுக்கு,ஐந்து,வர்த்தக நிலையங்களை திறந்து புலிகள் அமைப்பின் பணத்தில் சுபபோக வாழ்க்கை அனுபவித்து வருவதை நிறுத்து தமிழ் உறவுகளை காப்பாற்றுங்கள்
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன??????
புலம்பெயர் தேசத்தில் நீங்கள் எதற்காகவோ எல்லாம் ஒன்று கூடி பேசிய நீங்கள் இந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதார திட்டங்களுக்காக ஒருதடவையாவது ஒன்று கூடி பேசியுள்ளீர்களா???????????
ஆறு வருடங்களாக தங்களின் துன்பங்களையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் இந்த தியாகிகளின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செயற்திட்டங்களை உருவாக்கியுள்ளீர்களா??????????
நாங்கள் அறிந்தவகையில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக தாயகதேசத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ எவரும் ஒன்று கூடி ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
மூச்சுக்கு முன்நூறு தடவை விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் என்று கோசம்போடும் தலைவர்களே இந்த விடுதலைப்புலிகள் எங்கிருந்துவந்தவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று ஒருமுறையாவது சிந்தித்துள்ளீர்களா????????????
தமிழினம் மரணிக்க கூடாது என்பதற்காக இரவு பகலாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் எல்லையில் காவல்காத்த இந்த காவல் தெய்வங்கள் இன்று ஒரு பிடி உணவுக்கு வழியின்றி தற்கொலை செய்கின்ற அவலம் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றால்.
இனி இந்த தமிழ் சாதியை யார் காப்பாற்ற முடியும் பாவித்து விட்டு தூக்கியெறியும் குணம் கொண்ட தமிழினமே நீ விடுதலைபெற தகுதியான இனமா? என்பதை ஒருதடவை ஆய்வு செய்துபார்.
தமிழா விடுதலைக்கா உழைத்தவர்கள் பிச்சை எடுக்கையில், விடுதலைக்காக உழைத்தவர்கள் விபச்சாரம் செய்கையில், அவர்களைப்பற்றி சிந்திக்க தவறிய உனது விடுதலைக் கோசம் எந்தவகையில் நியாயமானது.


ஒரு விடுதலைப்போராளி தனது குருதியை சிந்தி விடுதலைபெறலாம். ஆனால் ஒரு விடுதலைப்போராளி விபச்சாரம் செய்து விடுதலைபெறலாமா? இன்று தமிழின விடுதலை விபச்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் சாபக்கேடு.
பிணங்களுக்கு பின்னர் உங்கள் பணங்களை கொண்டுவந்து என்ன செய்யப்போகின்றீர்கள். இறந்தவனுக்கு பணம் வழங்கும் பண்பாட்டில் வளர்ந்த இனம் எம் தமிழினம் அல்லவா?
ஒருவன் இறந்தால் ஒன்பதுபேர் வருவார்கள் உதவுவதற்கு அவன் உயிருடன் இருக்கும்போது ஒருவர் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.
மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். இனியொரு முன்னாள் போராளியின் தற்கொலை எம்தேசத்தில் இடம்பெறக் கூடாது. மரணங்களுக்கு மாலையிடுவதை நிறுத்திவிட்டு மரணங்களை தடுப்பதற்கு முயற்சிசெய்யுங்கள.
வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு. தியாகத்திற்கு பின்னால் இருக்கின்ற சொத்துக்களை சுருட்ட நினைப்பவர்களே நாளை உங்கள் பிள்ளைகளையும் வரலாறு தண்டிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு,
தேசப்புயல்களாக நின்று இன்று தமிழர்களுக்கு தேவையற்றவர்களாகிப்போன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக உதவ முன்வாருங்கள் இருப்பவர்களையாவது காப்பாற்ற முயற்சிசெய்யுங்கள்
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுக்கூட்டம் 22.02.2016 இன்று மட்டகளப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.கட்சி பிரதி தலைவர் யோகவேல் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் புதிய அரசியல் யாப்பு திருத்த யோசனைகளை பற்றியும் எதிர்வரும் மகளிர் தின நிகழ்வுகள் பற்றியும் உரையாடல்கள் இடம்பெற்றன.
»»  (மேலும்)

தொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்று 100வது நாள்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரி – ரணில் கூட்டணியினர் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் திரும்ப வந்து செயற்படலாம் என உறுதி அளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, மகிந்த அரசால் அரசியல் காரணமாக உயிராபத்தை எதிர் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வசித்த குமார் குணரத்தினம் நாட்டிற்கு திரும்பி வந்திருந்தார். மேலும் தனது இலங்கை பிராஜாவுரிமையினை மீளப்பெற குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்பித்திருந்தார். குடிவரவு திணைக்களம் அவரின் விண்ணப்பத்திற்க்கான பதிலை வழங்காது மௌனத்தை கடைப்பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது நோயுற்றிருந்த தாயாரை பார்வையிட சென்றிருந்த வேளையில் கேகாலை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மைத்திரி  - ரணில் கூட்டாட்சி தேர்தல் கால வாக்குறுதிக்கு மாறாக இன்று அவரை ஒரு அரசியல் கைதியாக சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது.
குமார் குணரத்தினத்தை கைது செய்ததனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்து அவரின் அரசியல் செய்யும் உரிமையினை உறுதி செய்யுமாறு கோரி மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெறும் தொடர் எதிர்ப்பு சத்தியாகக்கிரகப் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இன்றைய தினம் குமார் குணரத்தினத்தினை உடனடியாக விடுதலை செய்து, அரசு உறுதியளித்த ஜனநாயகத்தை நிலைநாட்ட கோரி இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு போராட்டம் சத்தியாகக்கிரக மேடையில் இடம்பெற்றது.
»»  (மேலும்)

2/21/2016

21.02.16- வித்தகரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கான ஆயத்த வேலைகள் மும்முரம்

அகிலம் போற்றும் மாபெரும் துறவி, ஈழத்தை தட்டி எழுப்பிய பாவேந்தன், காரைதீவின் தவப்புதல்வன் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான 12 அடி உயரமுள்ள தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் (காரைதீவு முச்சந்தியில்) பிரதிஸ்டை செய்யும் நிகழ்வானது கடந்த 20.12.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அதனையடுத்து இவ்வருடம் எதிர்வரும் பங்குனிமாதமளவில் அடிகளாரின் திருவுருவச் சிலையினை வெகு சிறப்பாக திறப்புவிழா செய்வதற்கான ஆயத்தவேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இடம்பெறவுள்ள வேலைகளுக்காக 500,000.00ம் ரூபாவும் திறப்புவிழாவன்று இடம்பெறவிருக்கின்ற உபசரனை. மற்றும் ஆவணப்படுத்தல் செலவுக்காக 200,000.00ம் ரூபாவும் மொத்தமாக 700.000.00ம் ரூபாவும் தேவைப்படுகின்றது.

எனவே வித்தகனின் அபிமானிகளிடமிருந்து நிதி உதவியை விரைவாக எதிர்பார்த்து நிற்கின்றோம்.  மேலதிக விளக்கம் தேவைப்படின் பின்வரும் தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


"உள்ளக்கமலமடிஉத்தமனார் வேண்டுவது"
 
சுவாமிவிபுலானந்தர்

                                                                                          கௌரவசெயலாளர்
   
                                                                                         
 மு.ஜெயராஜி   
                          
0779309257  
                       

கௌரவபொருளாளர்
ளு.சிவராஜா
           0778772786    
»»  (மேலும்)

எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளன



எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
uthumaan

• கிழக்கு மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் சிங்களப் பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க கோரும் தனிநபர் பிரேரனை:-
• கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பாடத்திற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் சிங்கள நூல்களை பயன்படுத்த முடியாத நிலமை தோன்றியுள்ளது. எனவே, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்
• வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை நிறைவு செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளக் கோரும் தனிநபர் பிரேரனை:-
• கடந்த 25 வருடங்களுக்கு முன் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் பல நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எனவே, யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு பல இன்னல்களை கடந்த 25 வருட காலமாக அனுபவித்து வரும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை அவசரமாக நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை ஏகமானதாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
• கிழக்கு மாகாணத்தில்; இயங்கி வரும் அரசாங்க மற்றும் தனியார் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை தொடர்ந்தும் இந்த மாவட்டங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனிநபர் பிரேரனைகளும் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளது.
• இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில்; அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை நகரங்களில் 04 அரசாங்க பயிற்சி நிலையங்களும், சில தனியார் பயிற்சி நிலையங்களும் இதுவரை இயங்கி வருகின்றன. இப்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று அன்னிய செலாவனியை ஈட்டித் தருகின்றவர்களுக்கான ‘ரட்ட விருவோ’ எனும் பெயரை வழங்கி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இவ்வலுவலகங்கள் ஊடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் திடீர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தவிசாளரினால் அனுப்பப்பட்டுள்ள 01/2016ம் இலக்க சுற்று நிருபத்தில் 20.01.2016ம் திகதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களையும் மூடி விட்டு இனிமேல், கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுச் செல்பவர்களுக்கான பயிற்சிகளை தங்கல்ல, மத்துகம, கண்டி, பணிப்பிட்டி, இரத்தினபுரி, மீகொட போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, கல்முனை, திருகோணமலை, மட்;டக்களப்பு நகரங்களில் இதுவரை இயங்கி வந்த பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளதால் டிகிழக்கு மாகாண மக்கள் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை நகரங்களில் இதுவரையும் இயங்கி வந்த அரசாங்க பயிற்சி நிலையங்களையும், தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது…..
மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தனிநபர் பிரேரனைகளும் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் முன்அறிவித்தல் செய்யப்பட்டு முன்வைக்கப்படவிருந்தது இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ஜெயந்த விஜயசேகர அவர்களினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பாக சமர்ப்;பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையின் போது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் திடீரென கிழக்கு மாகாண சபையின அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் மாதம் 23 திகதி நடைபெறும் என தவிசாளர் திரு.கலப்பதி; அவர்களினால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணத்தினாலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் கடந்த மாதம் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த தனிநபர் பிரேரனைகள் இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

»»  (மேலும்)

நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா?

நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா?

கொழும்பில் கடந்த 16ம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கக் கோரியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்ட பேரணியும் கவனஈர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விசேட கூட்டம் நடைபெற்றதுடன், அங்கிருந்து அரசடி சந்தி ஊடாக காந்திபூங்கா வரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

பின்னர், காந்திபூங்கா அருகில் விசேட கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அடிக்காதே அடிக்காதே பட்டதாரிகளை அடிக்காதே, வேலைகொடு வேலைகொடு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகொடு, ஏமாற்றாதே ஏமாற்றாதே வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றாதே, நல்லாட்சியின் வெளிப்பாடு நீதிகேட்கும் பட்டதாரிகளை தாக்குவதா போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

கடந்த ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இந்த ஆண்டு பெப்ரவரிக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் அந்த உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லையெனவும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி ஜனநாயக ரீதியில் கொழும்பில் வேலையற்ற பட்டதாரி மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் இதுதான் நல்லாட்சியின் தன்மையா எனவும் இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இலங்கையில் திணைக்களங்களில் 32,000 வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவற்றிற்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான எதுவித நடவடிக்கையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக புதிய அரசாங்கத்திடம் பட்டதாரிகள் தொடர்பில் எதுவித தேசிய கொள்கையும் இல்லையென தெரிவித்த அவர்கள், தேசிய கொள்கையொன்றை வகுப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டங்களைப்பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தேசிய கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்து வெளியேறுவோருக்கு உடனடியாக தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கம் மூன்று நான்கு வருடங்கள் கற்று பட்டங்களைப் பெற்றுச் செல்லும் தங்களை உதாசீனம் செய்து வருவதாகவும் ஆர்ப்பட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
»»  (மேலும்)

தோழர் புஸ்பராஜாவின் பத்தாண்டு நினைவுகள்





»»  (மேலும்)

2/19/2016

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்?

palali airport
இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபைதான் நிறைவேற்றியது.


ஆனால் இதுகுறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட தொடங்குகையில் இப்போது தனது எதிர்ப்பினை முதலமைச்சர் தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

»»  (மேலும்)

2/17/2016

சந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி -வரலாற்றில் முதன் முறையாக மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவி

பேத்தாளை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வரலாற்றில் முதன் முறையாக மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவியாக நா.ராஜிதா  சாதனை படைத்துள்ளார்.இப்பாடசாலை கடந்த போர் காலத்தில் சீர்குலைந்து வளர்ச்சியின்றி கிடந்தது.கிழக்கு மாகாணம் இயல்புநிலைக்கு திரும்பிய பின்னர் முதலமைச்சர் சந்திரகாந்தன் இப்பாடசாலையை தரமுயர்த்தி வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார்.

இதன்காரணமாக இங்கு உருவாக்கப்பட்ட மருத்துவ பிரிவு வளர்ச்சிகண்டது.தற்போது முதன் முறையாக பேத்தாளை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வரலாற்றில் முதன் முறையாக மருத்துவ பீடத்துக்கு  மாணவி நா.ராஜிதா தெரிவாகியுள்ளார்.
கிழக்குமாகாண முதலாவது முதலமைச்சர் சந்திரகாந்தனின் கல்விப் பணிக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி இதுவாகும்.
»»  (மேலும்)

கிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் சந்திக்கின்ற நிகழ்வுகள்

தமிழ் மிரர் பத்திரிகை கிழக்குமாகாண இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் சந்திக்கின்ற நிகழ்வுகள்
இம்மாதம்
20 ஆம் திகதி திருகோணமலை ஜமாலிய்யா முஸ்லிம் மஹாவித்யாலயம்
21 ஆம் திகதி ஞாயிறு மட்டக்களப்பு மாநகர பொதுவாசிகசாலை கேட்போர்கூடம்
22 ஆம் திகதி திங்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை கிறிஸ்டா இல்லம்...
காலை 09.00 மணிக்கு
»»  (மேலும்)

2/16/2016

இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும்

அகில இலங்கை  மக்கள் மகாசபை
அன்புள்ள தலைவர் மற்றும் குழாமிற்கும்
இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் சம்பந்தமான சந்திப்பில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் புதிய யாப்பில் இடம்பெறுமென நம்பி அகில இலங்கை மக்கள் மகாசபையின் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றேன்.
நாம் வைக்கும் கோரிக்கைகள் இலங்கையின் தேசிய பிரச்சனைகளைவிட சற்று வித்தியாசமானவை. தேசிய பிரச்சனைக்கு இந்நாட்டில் வாழும் சகல இன மொழி மத மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாக சேர்ந்து சகலருக்கும் பொருத்தமான நல்லதொரு தீர்வை கொண்டுவரவேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்துவதோடு அதற்கு மேலும் வடகிழக்கில் குறிப்பாக வடக்கில் புரையோடிப்போய் இருக்கும் சாதியமைப்பாலும்       தமிழ்த்தலைமைகளாலும் தமிழர்களாலும் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டு அதற்கும் ஒரு தீர்வை இந்த யாப்பில் இடம் பெறவேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின் வடமாகாண நிர்வாக கட்டமைப்பினுள் சாதி பார்த்து ஒடுக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. ஆயுதத்திற்கு முன்பு அமைதியாக இருந்த சாதியால் ஒடுக்கப்படும் நிலவரம் தற்போது அதிகாரத்தில் உள்ள மேட்டுக்குடியினரால் அதிகரித்துள்ளது. இன்று வடக்கில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தெரியப்படுத்தி எமது பிரேரணைகளை முன்வைக்கின்றோம். இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இன, மொழி, மத பிரிவினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் இப்- புதிய யாப்பு உருவாக்கத்தில் பல்லின சமூகங்களுக்கிடையேயான உறவுகளும், புரிதல்களும் வலுவடைவதற்கு சாதிய சமூக பின்புலங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நாம் கருதுகின்றோம்.

நீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியுரிமைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், தேர்தல் வேட்பாளர் நியமனங்கள் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு  வருகின்றனர். எமது மக்களது அடிப்படை உரிமைகள் யாவும் பேணப்பட்டு சகல பிரஜைகளுடனும் சமமாக மதிக்கப்படவேண்டும். உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வடபகுதியில் 50 வீதத்திற்கு மேலாக காணப்படுகின்ற போதிலும் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்மக்கள் சார்ந்து ஒருவர்கூட இல்லையென்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களின் போதாமையும் மத, கலாசார, பாரம்பரிய பேணுகைகளும் குறிப்பிட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கின்றது. இவற்றினை கருத்தில் கொண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்காக கீழ்வரும் பரிந்துரைகளை அகில இலங்கை மக்கள் மகாசபையினராகிய நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.
1) ஒற்றையாட்சிக்குள் இலங்கை மக்கள் யாவரும் இன மொழி மத சாதி பாகுபாடின்றி சகல மக்களும் இலங்கையர்களாக அவர்களது தனித்தன்மை அடையாளங்கள் மாறாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யப்படல் வேண்டும். ஒற்றையாட்ச்சிக்குள் நியாயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். பல்லின சமூகங்களைகொண்ட எமதுநாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வுக்குள்ளே பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களும் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுடனும் சமமான அந்தஸ்துகளுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
2) தேர்தலில் வட்டாரம் தொகுதி பிரிப்பதில் யாழ் மேட்டுக்குடி நிர்வாத்தினர் தங்களுக்கு ஏற்றமாதிரி தங்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாக பிரிப்பதற்குமுன் மக்களின் ஆணையை பெறல் வேண்டும். தற்போது இங்கே மேற்கொள்ளப்பட்ட எல்லை நி;ர்ணயங்கள் உயர்சமூக அதிகாரிகளினாலும் மேட்டுக்குடி அரசியல் தலைமைகளாலும் தமது தலைமையை தக்க வைப்பதன் அடிப்படையில் பெரும்பான்மைப் பலமுடைய மக்கள் சமூகங்களை இருகூறுகளாக பிரித்துள்ளனர்.
3) வடமாகாணத்தில் 50 வீதத்திற்கு மேல் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரச உள்ளுராட்ச்சி மாகாண தேசிய மட்டத்தில் இன மொழி சாதி விகிதாசாரப்படி தெரிவு செய்யக்கூடிய பொறிமுறை இயற்றப்படல் வேண்டும். ( பெண்களுக்கு 25 வீதமாக வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்படவேண்டும் என்றவரையறை போன்றது)
4) அரச நியமனங்களஇ; பல்கலைக்கழக ஆலோசகர்கள் திறமையுடன் கல்வித்தகமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வருபவர்களிற்கு விகிதாசாரப்படி முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
5) அரசாங்க பாடசாலைகளில் அரசு ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமை அடிப்படையில் ஆசிரியர்களாகஇ அதிபர்களாக நியமித்தாலும் யாழ் கட்டமைப்பு அதற்கு இடையூறாக இருப்பதுடன் ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து வருபவர்களை மேட்டுக்குடி பாடசாலைக்கு அனுப்பாமலஇ; 1970 களில் கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் 17 பாடசாலைக்கு போகும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 15 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமஇ; வடமாகாணத்தில் 5 மாவட்டங்களும் உள்ளன. ஆனால் 68 வருடங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்புமஇ; ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமையிருந்துமஇ; இதுவரை ஒருவரும் அரசஅதிபர்களாக நியமனம் பெற்றதில்லை. எப்போதாவது ஒருவர் உதவி அரச அதிபர் நியமனம்தான் கிடைக்கபெற்றது.
ஆகையால் இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட சமூகபாகுபாடு செயல் சட்டம் மீண்டும் தற்போதய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் திருத்தி எழுதப்பட்டு முற்றாக நடைமுறைக்கு வருமாறு அமுல்படுத்தப்படல் வேண்டும்.
6) வடக்கில் இருக்கும் தேசவழமை சட்டம் பெண்களிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களிற்கும் எதிராகவே உள்ளது. எனவே இந்த சட்டம் மீள் பரிசோதனைக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டு தேசிய சட்டங்களிற்குள் ஏற்றதாக மாற்றப்படவேண்டும்.
7) வடகிழக்கு பிரதேசங்களில் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமையுடன் அவர்களும் சமமாக சகல நாட்டின் வழங்களும் வழங்கப்பட வேண்டும். அதேநேரம் வடகிழக்கில் வசித்த வசிக்கின்ற முஸ்லீம் மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்.

8) தமிழர் தமிழ்த்தலைமைகள் இன்றுவரை மாறி மாறி சிங்கள தலைமைகளால் ஒடுக்கப்பட்டே வந்துள்ளதாக கூறிக்கொண்டே வருகின்றார்கள். ஆனால் ஒரே இனம் மொழி மதம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி என்ற அவமானச் சின்னத்தால் தொடர்ந்தும் இன்றுவரை தமிழ்த்தலைமைகளால் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்வி திறமையிருந்தும் அதிகாரங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிற்கு எட்டாத வகையில் எழுதப்படாத பொறிமுறை ஒன்றை கட்டிக்காத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தப் பொறிமுறையை உடைப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் மேட்டுக்குடியினரிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் அமையும் வகையில் உறுதிப்படுத்தும் முகமாக புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்;. அத்துடன் பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் செல்லக்கூடியவாறு தேர்தல் முறையும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அல்லது நியமனமுறையில் அல்லது தேசியப்பட்டியல் மூலம் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்க வழிவகை இருக்குமாறும் நீங்கள் தயாரிக்கும் யாப்பு அமையு வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம். தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும். மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்துவதோடு, மேலும் முஸ்லிம், சிங்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும். அனைத்து வேலைவாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடுகளில் வடமாகாணத்தில் வாழும் சகலசமூக பிரிவினர்களினதும் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஒதுக்கப்படக்கூடிய கோட்டா (இந்தியாவில் உள்ளதுபோல்) இருக்கவேண்டும். அதிகாரங்கள் கிராமத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். மத்திக்கோ மாகாணத்திற்கோ அல்ல.
9) காணி சம்மந்தமாக……….
- சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்
- வாழ்வாதாரங்களுக்கான தொழில்வளங்களுடைய முடிக்குரிய காணிகள் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
- கடந்த 25 வருடங்களாக முகாம்களில் வாழும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் 95 வீதமும் ஒடுக்கப்பட்டவர்களே. இவர்களின் காணிகள் சொத்துக்கள் மீள்அளிக்கப்பட்டு வாழ்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு கருதி இவர்களின் காணிகளை அரசு வைத்திருக்க விரும்பின் மாற்று நடவடிக்கைகளை அவர்களின் விருப்பத்திற்கு இணங்க உடனடியாக செயற்படுத்தப்படல் வேண்டும்.
10) பொலீஸ் அதிகாரம் சம்மந்தமாக……………..
- பொலிஸ் அதிகாரம் இலங்கை நாட்டின் அச்சுறுத்தலுக்கு பங்கம் ஏற்படாதவகையில் பகிர்ந்தளிக்கபடல் வேண்டும்.  தேசிய நலன்களுக்கு அமைவான மத்திய அரசின் பொலீஸ் பிரிவின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் மாகாண நிர்வாக கட்டமைப்பின் இறைமையைப் பேணுவதற்கும் மாகாண பொதுசன பாதுகாப்பிற்கான சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கான மாகாண பொலீஸ் பிரிவு அமைக்கப்படவேண்டும்.
- எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பொலீஸ் அதிகாரங்கள் யாழ் மேட்டுக்குடியினரிடம் கையளிப்பதை முற்றாக நிராகரிக்கின்றோம். மக்கள் விகிதாசாரப்படி இனம் மொழி சாதி அடிப்படையில் பொலிஸ் நியமனங்கள் நியமிக்கப்படல் என்பது முக்கியமான விடயம். உதாரணமாக பொலிஸ் கட்டமைப்பில் 50 வீதத்திற்குமேல் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அல்லது ஆட்சேர்ப்பு நடைபெறல் வேண்டும்.


உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்பு முன்வரைவில் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு இம்மக்கள் நலன்சார்ந்த தீர்வுகளையும் உள்ளடக்கும் வண்ணம் பரீசீலனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றிகள்.

என்.தமிழழகன்
கே. சின்னராஜா
»»  (மேலும்)

2/15/2016

ஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

வட மாகாண சபையின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்ச்சர் ரெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (14) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அவர், நாளைமறுதினம் (16) யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய எச்.எம்.எஸ். பளிஹக்கார தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே ரெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆளுநர் மாற்றம் வடக்கு மாகாண  சபையின் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
»»  (மேலும்)

2/13/2016

இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.

தோழர்கள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மையிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை1970.02.12 ஆகுதி ஆக்கி சாகாவரம் கொண்ட நாள்.
»»  (மேலும்)

2/12/2016

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினருக்கு அச்சுறுத்தல்

யாரப்பா இந்த ரமணிதரன்?


இலங்கையில் மிக விரைவில் புதிய அரசியல்அமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளிலும் மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கைகளும் மேலோங்கி வருகின்றது.
இத்தருணத்தில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் தலித் சமூக அரசியல்-சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டு  சில பரிந்துரைகளை  முன்வைத்துள்ளனர்.


இதுவிடயம் தொடர்பாக தமிழ் பாசிச நபர்கள் சிலர் முன்னணி உறுப்பினர்கள் மீது வன்முறை அச்சுறுத்தல்களை முகனூல்களில் பரப்பி வருகின்றனர்.கந்தையா ரமணிதரன் என்பவர் தனது முகனூல் உரையாடல் களத்தில் எழுதிவரும் வரிகளை பாருங்கள்



Ramanitharan
DO not ever connect any document for your facist agenda. You are one of the worst person ever live. Go and fuck Gnana Sara and Vasudea Nanayakara morn
Theva
Thumbs Up Sign
Ramanitharan
never ever send anything to me rogue fucer
you should be brought to world crimilan court with your paid masters
fuking moron
how dare you to spam mme fcist pig
apologist of genocide
Ramanitharan Kandiah left the conversation.

Sarawanan
Thumbs Up Sign
Chat Conversation End
Seen by Ramesh, Chinniah,
»»  (மேலும்)