முன்பு தமிழீழம் கோரினோரும்; அதற்காக பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் பலியிட்டோரும் கூட நம்புகின்றனர், அறுபது ஆண்டு காலத் தேசிய பிரச்சினை புதிய இலங்கை அரசின் அரசியல் யாப்பு திருத்ததின் ஊடாக முடிவிற்குவருமென!
இது எந்த வகையிலும் எந்த மக்களினதும் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. பசி, பட்டினி, வறுமை, வேலை வாய்பின்மை, போர்க்காயங்கள், வடக்குக் -கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுகள், இயற்கை வள பாதிப்புகள், தரமான கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் எவற்றிக்கும் இத்திருத்தம் தீர்வைத் தரப்போவதில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான உரிமைகள் எவற்றையும் இந்த சீர்திருத்தம் வழங்கப் போவதில்லை.
மேற்கு நாடுகளினதும், ஏகாதிபத்தியங்களினதும் சுரண்டலை அதிகரிக்கவே தற்போதய அரசியல் யாப்புத் திருத்தும் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் லாபம் அடைப்போபவர்கள் ஒடுக்குமுறையாளர்களும், சர்வதே மற்றும் உள்ள நாட்டுக் கொள்ளைக்காரர்களும், சுரண்டல் வாதிகளுமே.
இதன் அடிப்படையில், ஒடுக்கப்படும் மக்கள் என்ன செய்யப் வேண்டும் என்பதை விவாதிக்கவே "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்" என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
0 commentaires :
Post a Comment