தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில்,
பெருந் தொகையான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலேயே இந்நிகழ்வு இடம்பெறும் என பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளதுடன்,
தமிழ் இனத்துக்கான அரசியல் தீர்வு குறித்த முன்வரைபு வெளியிடப்படும் இந் நிகழ்வில் பொதுமக்கள், ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment